பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தலித்துகளின் போராட்டத்தால் ஸ்தம்பித்தது மும்பை
தலித் இளைஞர்கள் செய்த போராட்டத்தினால் மும்பை மாநகரமே செய்வாய்க்கிழமையன்று ஓரளவு ஸ்தம்பித்தது. 'பீமா கோரேகான்'சண்டையின் 200வது ஆண்டை நினைவுக்கூர்வதற்காக புனே நகரில்நேற்று ஆயிரக்கணக்கான தலித்துகள் திரண்டபோது வெடித்த மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமுற்றனர். ஆதிக்க சாதியான பேஷ்வாவின் படைகள் பிரிட்டிஷ்காரர்களால் தோற்கடிக்கப்பட்டதை இந்நாளில் தலித் தலைவர்கள் நினைவுக்கூர்கின்றனர். ஏனெனில், பேஷ்வாவுக்கு எதிராக சண்டையிட்ட…
பீமா கோரேகான் யுத்த வெற்றியை கொண்டாட எதிர்ப்பு- புனேயில் இந்துத்துவா…
மும்பை: 200 ஆண்டுகளுக்கு முந்தைய பீமா கோரேகான் யுத்த வெற்றியைக் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா அமைப்புகள் தாக்குதல் நடத்தியதில் புனேவில் தலித் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடுவதால் பதற்றம் நிலவுகிறது. வீர சிவாஜிக்கு பின்னர் மகாராஷ்டிராவை…
தமிழ்நாடு முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட மதுபான பார்கள் ‘சீல்’ வைக்கப்பட்டன
சென்னை, புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி டாஸ்மாக் கடைகளில் அனைத்து வகையான மது பாட்டில்களும் தேவையான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக ‘பீர்’ வகைகள் அதிக அளவு இருப்பு வைக்கப்பட்டிருந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மது விற்பனை 31-ந்தேதியன்று பிற்பகலுக்கு பின்னர் களை கட்டத்தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல டாஸ்மாக் கடைகளில்…
சினிமாவில் நடித்து வந்தால், தலைவனாக்கி நாட்டை ஆள வைப்பார்கள் என்று…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்ற கொள்கை முடிவு எடுத்து உள்ளோம். திருக்குறள் இதைத்தான் கூறுகிறது. ரஜினி, படங்களில் நடிப்பதில் பிரச்சினை இல்லை. தலைவராக, முதல்- அமைச்சராக எங்களை ஆளுவதில்தான் சிக்கல் உள்ளது.…
ரஜினி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்- இயக்குநர் கௌதமன்…
சென்னை : ரஜினி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று இயக்குநர் கௌதமன் சவால் விடுத்துள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரசிகர்களுடனான சந்திப்பின் போது அவர் நேற்று அறிவித்தார். அப்போது அவர் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து இயக்குநர்…
பாலியல் வன்புணர்வை தடுக்கும் உள்ளாடை: 19 வயது மாணவியின் கண்டுபிடிப்பு
உலகம் முழுவதும் உள்ள பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாவதை தனது கண்டுபிடிப்பு தடுக்கும் என்று நம்புகிறார் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம்பெண். சீனூ என்ற இளம் பெண் உருவாக்கியிருக்கும் பெண்களுக்கான உள்ளாடையில் பொருத்தப்பட்டிருக்கும் ஒருவிதமான பூட்டு அமைப்பு பெண்கள் பாலியல்ரீதியாக வன்புணர்வு செய்யப்படுவதை தடுக்கும். தனது கண்டுபிடிப்புக்கு…
தெருக்களில் ரோந்து பணிக்கு, ரோபோ போலீஸ் நியமனம்.. எங்கு தெரியுமா..?
‘ரோபோ’ எனப்படும் எந்திர மனிதனின் செயல்பாடு அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் அதிக அளவில் உள்ள இவற்றின் செயல்பாடு தற்போது இந்தியாவிலும் நடைமுறைப்படுத்தும் பணி தொடங்கி விட்டது. தற்போது உலகிலேயே முதன் முறையாக தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் ‘ரோபோ’ போலீஸ் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. அங்கு…
2017 சீமானுக்கு எப்படி இருந்தது? ஒரு சிறப்பு நேர்காணல்..
நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு செயல்பாடும் அரசியல் தளத்தில் புதிய விவாதத்தை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில் ஒரு சதவீத வாக்குகளை வாங்கினாலும், அடுத்து வந்த நாள்களில் புதிய உற்சாகத்தோடு களப்பணியில் இறங்கினார்கள் நாம் தமிழர் தொண்டர்கள். அதன் விளைவாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 3,800 வாக்குகளைப் பெற்று…
மக்களவையில் அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் குறிப்பிட்ட குல்அஃப்ஷான் யார்?
முத்தலாக் விவாகரத்து முறை சட்ட விரோதமானது என்பதை உறுதிப்படுத்தும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் வியாழக்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டு, கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. வரைவு மசோதாவில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், குரல் வாக்கெடுப்புமூலம் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இனி மாநிலங்களவையில் மசோதா முன்வைக்கப்பட்டு அங்கு…
பிரான்சில் இந்திய சிறுவர்கள் 22 பேர் மாயம்: வழக்குப்பதிவு செய்து…
புதுடெல்லி, ரக்பி விளையாட்டு பயிற்சி அளிப்பதாக கூறி மூன்று போலி டிரவல் ஏஜென்சிகளால் பிரான்சுக்கு அனுப்ப பட்ட 22 இந்திய பதின்ம வயது மாணவர்கள் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்துள்ள சிபிஐ, இந்த விவகாரம் குறித்து விசாரணையை துவங்கியுள்ளது. சிபிஐ தரப்பில் இது குறித்து…
‘முத்தலாக்’ தடை மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது
புதுடெல்லி, முஸ்லிம் கணவர் மனைவியை விவாகரத்து செய்ய பின்பற்றப்படும் முத்தலாக் நடைமுறை சட்ட விரோதமானது என்று கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, முத்தலாக் நடைமுறைக்கு எதிராக 6 மாதங்களுக்குள் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது. இதைத்தொடர்ந்து, உள்துறை…
2016-17-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிவு: மக்களவையில் நிதி அமைச்சர்…
புதுடெல்லி, மக்களவையில் இன்று பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது:‘‘இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை குறிக்கும், ஜிடிபி என அழைக்கப்படும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், 2015 -2016 நிதியாண்டில் 8 சதவீதமாக இருந்தது. 2016 -17 நிதியாண்டில் இது, 7.1 சதவீதமாக குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டான, 2017…
மும்பை: தீ விபத்தில் 15 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர்…
மும்பையில் லோயர் பரேல் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். அதில் 11 பேர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கமலா மில்ஸ் வளாகத்தில் உள்ள கட்டடத்தில் இருக்கும் விடுதி ஒன்றில், நள்ளிரவுக்குப் பின் சுமார் 12.30 மணிக்கு இவ்விபத்து ஏற்பட்டது. விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள், கே…
கேரளாவில் 10 வருடங்களில் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை…
திருவனந்தபுரம், இந்தியாவில் 100 சதவீத கல்வியறிவு பெற்ற மாநிலம், முன்னேற்ற நிலை மற்றும் உயர் சமூக வளர்ச்சி குறியீடு ஆகியவற்றை கொண்டது என்ற பெருமையை பெற்றது கேரளா. இந்த நிலையில், கேரள போலீசார் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 2007ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான 10 வருட…
கூடங்குளம் அணு உலை: தாமதத்தால் பல நூறு கோடி இழப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணு உலையை கட்டுவதிலும் செயல்படுத்துவதிலும் ஏற்பட்ட தாமதத்தாலும் மின்சார விற்பனையில் சரியான வழிமுறைகளைப் பின்பற்றாததாலும் பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதாக இந்திய தலைமை கணக்காளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் என்ற இடத்தில் அணு உலைகளைக் கட்டிவருகிறது.…
அனிதாவின் சகோதரருக்கு அரசுப்பணி! ஆணையை வழங்கினார் முதல்வர்!
அரியலூரில் தற்கொலை செய்த அனிதாவின் சகோதரருக்கு சுகாதாரத்துறையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. அரசுப்பணிக்கான ஆணையை சகோதர் சதீஷ்குமாரிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். மேலும், 7 லட்சத்திற்கான நிவாரணத்தை அனிதாவின் தந்தையிடம் வழங்கினார் முதல்வர் பழனிச்சாமி. சென்னை தலைமைச்செயலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் குழுமூர்…
வீட்டுக் கதவைத் தட்டி, லஞ்சப் பணத்தை திருப்பி அளிக்கும் அதிகாரிகள்
அரசுத்துறை சார்ந்த அலுவலகங்களில் தங்களது வேலை உடனடியாக நடக்க வேண்டும் என்பதற்காகவும் பணி நியமனம், பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றுக்காகவும் லஞ்சம் அளிக்கப்படுவது நாடு முழுவதும் வழக்கத்தில் உள்ளது. இவற்றில், லஞ்சம் கொடுத்தும் காரியம் சாதிக்க முடியாமல் ஏமார்ந்தவர்களும் உள்ளனர். அவ்வகையில், அனைத்து துறைகளிலும் லஞ்சம்…
கர்நாடகாவில் கடந்த 5 ஆண்டுகளில் 3,515 விவசாயிகள் தற்கொலை
புதுடெல்லி, கர்நாடகாவில் கடந்த 2013 முதல் 2017 வரை 5 ஆண்டுகளில் 3, 515 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அம்மாநில வேளாண் துறை அமைச்சகம் கூறியுள்ளது. கர்நாடகாவில் கடந்த 5 வருடங்களில் தற்கொலை செய்துகொண்ட 3,515 விவசாயிகளில் வறட்சி மற்றும் பயிர் மகசூல் குறைபாடு காரணமாக 2,525 விவசாயிகள்…
பெண்கள் பாதுகாப்பாக வசிக்கும் நகரில் நம்பர் 1 சென்னை!
டெல்லி : நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் பெருநகரங்களில் சென்னை முதலிடம் வகிப்பதாக மத்திய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரத்தில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. நாட்டில் உள்ள 6 பெருநகரங்களில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய குற்ற…
2017: தமிழகத்தை அதிரவைத்த 6 போராட்டங்கள்
இந்த ஆண்டு (2017) ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் பல போராட்டங்கள் நடந்தன. அதில் பலரின் கவனத்தையும் ஈர்த்த சில போராட்டங்கள் குறித்த தொகுப்பு. 1. ஜல்லிக்கட்டு போராட்டம் சமீபத்தில், தேடுதல் தளமான கூகுள் 2017-இல் இந்தியாவில் அதிக முறை தனது தளத்தில் தேடப்பட்ட வார்த்தைகள்…
பாகிஸ்தானில் மரண தண்டனை பெற்ற இந்தியர்: குடும்ப சந்திப்பு நிகழ்ந்த…
பாகிஸ்தானில் உளவு பார்த்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டு இஸ்லாமாபாத் சிறையில் உள்ள இந்திய கடற்படை அதிகாரி குல்புஷன் ஜாதவை அவரது தாய் மற்றும் மனைவி ஆகியோர் சந்தித்துப் பேசினர். பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு விதித்த மரண தண்டனைக்கு, இந்தியாவின் மேல்முறையீட்டை ஏற்று சர்வதேச நீதிமன்றம் இடைக் காலத் தடை…
எல்லையை தாண்டி பாகிஸ்தானுக்குள் புகுந்த இந்திய ராணுவம்.. அதிகாலையில் அதிரடி…
காஷ்மீர்: இந்திய ராணுவம் இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இந்திய ராணுவத்தை…
நாம் தமிழர் கட்சிக்கு வளர்ச்சி.. பாஜகவுக்கோ மாபெரும் தளர்ச்சி!
சென்னை: நாம் தமிழர் கட்சி, நோட்டா ஆகிவற்றுடன் ஒப்பிடுகையில் கடந்த 2016 பொதுத் தேர்தலின்போது பாஜக நிலைமை ஆர்.கே.நகரில் ஏதோ பரவாயில்லை என்றுதான் இருந்தது. ஆனால் இந்த முறை பயங்கர மோசம் என்றாகியுள்ளது. நோட்டாவுக்கு கடந்த தேர்தலை விட இந்த முறை வாக்குகள் குறைந்துள்ளன. அதை விட பாஜகதான்…























