பினாங்கு டிஏபி நடத்திய கூட்டத்துக்கு பெருந்திரளாக மக்கள் திரண்டனர்

தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் உட்பட பல இந்தியர் பிரச்னைகளை விவாதிப்பதற்காக நேற்று பினாங்கில் டிஏபி ஏற்பாடு செய்த கூட்டத்தில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். ஜார்ஜ் டவுனில் உள்ள பினாங்கு சீனர் நகர மண்டபத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கு கொண்டனர். மாநில டிஏபி தலைவரும்…

பக்காத்தானின் ‘பரம்பரை’ அரசியலை மசீச சாடுகின்றது

'பரம்பரை அரசியலுக்கு' எதிராக பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறியுள்ள கருத்துக்கள் காகம் குயிலைப் பார்த்து கறுப்பு எனச் சொன்ன கதையைப் போன்று இருப்பதாக மசீச சாடியுள்ளது. "அந்த எதிர்க்கட்சிகளுக்குள் குடும்ப பிணைப்புக்கள்" மலிந்திருப்பதை அது சுட்டிக் காட்டியது. "பிகேஆர்-கட்சியின் தேர்வு செய்யப்படாத மூத்த தலைவர், இறைவனுடைய…

தேர்தலில் பக்காத்தான் பொது அடையாளச் சின்னத்தைப் பயன்படுத்த முடியாது

பக்காத்தான் ரக்யாட் ஒரு கூட்டணியாக சங்கப் பதிவதிகாரியால் இன்னமும்  ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதால் 13வது பொதுத் தேர்தலில் அது ஒரு பொதுவான அடையாளச் சின்னத்தைப் பயன்படுத்தவியலாது என்பதைத் தேர்தல் ஆணையம்(இசி) உறுதிப்படுத்துகிறது. அதனால், குறிப்பிட்ட ஒரு தொகுதியில் அங்கு போட்டியிடும் கட்சியின் கொடிகளை மட்டுமே பறக்கவிடலாம்;பங்காளிக் கட்சிகளின் கொடிகளைப  பறக்கவிட…

1,000 Indians voice support for Pakatan

Hindraf splinter group Malaysian Indian Voice (MIV) today held their first Hindraf-inspired rally, dubbed Indian Rights Action Force (Indraf) 2.0 in Brickfields today, with more than 1,000 packing a hall to voice support for Pakatan…

பக்காத்தான் நாடற்ற இந்தியர் பிரச்னை மீது செயல்படத் தொடங்கியுள்ளது

பக்காத்தான் ராக்யாட் இந்திய சமூகத்துக்கு உதவி செய்யத் தவறி விட்டதாக ஹிண்ட்ராப் தொடர்ந்து குறை கூறி வந்த போதிலும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் இந்த நாட்டில் பிறந்தும் நாடற்றவர்களாக இருக்கு நூற்றுக்கணக்கான மக்களை பதிவு செய்யும் நடவடிக்கையை இன்று  தொடங்கியது. "அந்தப் பிரச்னை இனிமேலும் இந்தியர் பிரச்னை அல்ல.…

‘நாடற்ற இந்தியர்கள்’ பக்காத்தான் முன்னுரிமை கொடுக்கும் விஷயங்களில் அடங்கும்

பக்காத்தான் ராக்யாட் ஆட்சிக்கு வந்தால் அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் விஷயங்களில் நாடற்ற இந்தியர்கள் பிரச்னை ஒன்றாக இருக்கும் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று வாக்குறுதி அளித்துள்ளார். அவர் இன்று பிற்பகல் நடைபெற்ற இண்ட்ராப் 2.0 பேரணியில் பேசிய போது அந்த வாக்குறுதியை அளித்தார். இந்த நாட்டில்…

நஜிப்பை எதிர்க்கட்சி தலைவராக்க சிலாங்கூர் இந்தியர்களிடையே பலத்த ஆதரவு!

வரவிருக்கும் தேர்தலில் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிகளின் தலைவராக்க வேண்டும் என்ற வகையில் சிலாங்கூர் இந்தியர்களின் கருத்துக்கணிப்பு அமைந்துள்ளது. இவ்வாண்டு மார்ச் 31-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரையில் மலாயா பல்கலைக்கழகத்தின் சனநாயக தேர்தல் ஆய்வு மையம் மேற்கொண்ட…

முன்னாள் ஐஜிபி: பெர்சே 3.0 இரத்தம் சிந்தப்படுவதைக் காண பக்காத்தான்…

பக்காத்ததன் ராக்யாட், புத்ராஜெயாவைச் சட்டப்பூர்வமான வழிகளில் கைப்பற்ற முடியும் என்பதில் நம்பிக்கை இல்லாததால் பெர்சே 3.0 ஆர்ப்பாட்டத்தின் போது ரத்தம் சிந்தப்படுவதற்கு முயற்சி செய்ததாக முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் அப்துல் ரஹிம் முகமட் நூர் கூறுகிறார். தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு பெர்சே 3.0 ஆர்ப்பாட்டத்தை…

அஸ்மின்: 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தானுக்கு மும்முனைப் போட்டி இல்லை

பக்காத்தான் ராக்யாட், 2008ல் பின்பற்றிய அதே வெற்றி வழிமுறையை எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் கடைப்பிடிக்கும். கடந்த தேர்தலில் பக்காத்தான் உறுப்புக் கட்சிகள் பிஎன் -னுடன் ஒன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் மோதின. டிஏபி, பாஸ் ஆகியவற்றுடன் தொக்தி ஒதுக்கீட்டுப் பேச்சுக்களை பிகேஆர் முடித்துக் கொண்டுள்ளதாகவும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளுக்கான…

ஹிண்ட்ராப் அழைப்பை அன்வார் ஏற்க வேண்டுமா ?

உங்கள் கருத்து: "மக்கள் சக்தி பற்றி மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஹிண்ட்ராப் துணிச்சலாக ஏதோ ஒன்றைச் செய்துள்ளது. ஆனால் பக்காத்தான் காலம் காலத்துக்கு ஹிண்ட்ராப்புக்கு நன்றிக் கடன் பட்டுள்ளது என எண்ணக் கூடாது." ஹிண்ட்ராப்-பை சந்திப்பது பற்றி அன்வார் இன்னும் முடிவு செய்யவில்லை. ஜிம்னி ரிக்கெட்: ஒரு காலத்தில்…

பக்காத்தான் சபா சரவாக் மீது நம்பிக்கை வைத்துள்ளது

மூன்று கட்சிகளைக் கொண்ட கூட்டணியான பக்காத்தான் சபாவிலும் சரவாக்கிலும் கூடுதலாக பத்து முதல் 20 இடங்களை வெல்ல முடியுமானால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவைக் கைப்பற்ற முடியும் என டிஏபி சோஷலிச இளைஞர் பிரிவுத் தலைவர் அந்தோனி லோக் நம்பிக்கை கொண்டுள்ளார். அவர் நேற்றிரவு கெப்போங்கில் டிஏபி நிதி…

மாநிலத் தேர்தல்களை நடத்துவது பற்றி முடிவு செய்ய பக்காத்தான் கூடுகிறது

பொதுத் தேர்தலுடன் ஒரே சமயத்தில் தங்கள் கட்டுக்குள் இருக்கும் மாநிலங்களிலும் தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதை முடிவு செய்ய எதிர்த்தரப்பு பக்காத்தான் ராக்யாட் கூட்டணித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை சந்திக்கின்றனர். அந்தக் கூட்டம் கோலாலம்பூரில் நிகழும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அறிவித்தார். 1.3 மில்லியன்…

மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை உறுதி, சிலாங்கூர் எம்பி நம்பிக்கை

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடக்காதிருக்கலாம், ஆனால், பக்காத்தான் ரக்யாட் சிலாங்கூரில் ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்வதுடன் கூடுதல் இடங்களையும் கைப்பற்றும் என்ற நம்பிக்கை மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் நெஞ்சு நிறைய நிரம்பியுள்ளது. “எங்களுக்குக் கிடைத்த ஆய்வுத் தகவல்கள் பக்காத்தான் இப்போதிருப்பதைவிட கூடுதல் இடங்களைக் கைப்பற்றும்…

குவான் எங்,அம்பிகா ஆகியோரை வெறுக்கத் தூண்டும் சுவரொட்டிகள் அகற்றப்பட்டன

தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் ஒட்டப்பட்டிருந்த (டிடிடிஐ) பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பொதுப் பிரமுகர்களான அம்பிகா ஸ்ரீநிவாசன், ஏ.சமட் சைட் ஆகியோர்மீது  வெறுப்பைத் தூண்டும் சுவரொட்டிகள் நேற்று அகற்றப்பட்டன. ஆயிரக்கணக்கான சுவரொட்டிகளை அகற்றுவதில் பக்காத்தான் கட்சிகளின் உறுப்பினர்கள், செகாம்புட் குடியிருப்பாளர்கள் கோலாலம்பூர் மாநகராண்மைக் கழக ஊழியர்கள்…

ராஜா நொங் சிக்கின் சவாலை ஏற்றனர் பக்காத்தான் எம்பிகள்

ஊழியர் சேமநிதிப் பணத்தைக் குறைந்த-விலை வீடுகளுக்கான கடனுதவித் திட்டத்துக்குப் பயன்படுத்துவதுமீது கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நொங் சிக்குடன் விவாதமிட பக்காத்தான் எம்பிகள் மூவர் முன்வந்துள்ளனர். பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் (படத்தில் வலம் இருப்பவர்), டிஏபி தேசிய விளம்பரப் பிரிவுச் செயலாளர்…

கோயில் போராட்டத்தில் விவேகமற்ற வீரம்!

[சமூகநலன்விரும்பி : க] 25 ஆண்டுகளுக்கு முன் ம.இ.காவால் கைவிடப்பட்ட கோயில் பிரச்னையைத் தீர்த்து வைத்துள்ள இன்றைய பக்காத்தான் மக்கள் கூட்டணி அரசுக்கும் குறிப்பாக டாக்டர் சேவியர் சட்டமன்ற உறுப்பினர் ரோசியா, நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் மற்றும் மந்திரி புசார் காலிட் இப்ராஹிம் அவர்களுக்கும் இப்பகுதி வாழ் மக்கள் சார்பில்…

“அம்னோவுக்கு பக்காத்தான் பதிலடி”

பக்காத்தான் கட்டுக்குள் உள்ள மாநிலங்களை மீண்டும் கைப்பற்றப் போவதாக சூளுரைக்கப்பட்டு போர் முரசு கொட்டப்பட்ட அம்னோ பொதுப் பேரவை முடிந்த மறு நாள், எதிர்க்கட்சிகளும் பதில்  தாக்குதலை தொடங்கியுள்ளன. சிலாங்கூரைப் பக்காத்தான் தக்க வைத்துக் கொள்வதோடு அந்த மாநிலத்தில் தேர்தலில் கூடுதல் இடங்களையும் பெறும் என ஷா அலாமில்…

புதிதாக பதிவு செய்ய பக்காத்தான் முயன்றதா? மறுக்கிறது ஆர்ஓஎஸ்

பக்காத்தான் ரக்யாட் அக்கூட்டணியைப் பதிவுசெய்ய அதன் பிரதிநிதியை அனுப்பி வைத்ததாகச் சொல்லப்படுவதை சங்கப் பதிவக(ஆர்ஓஎஸ்) தலைமை இயக்குனர் அப்துல் ரஹ்மான் ஒத்மான் மறுத்துள்ளார். உத்துசான் மலேசியாவுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், பக்காத்தான் தலைவர்களான பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன், பாஸ் தேர்தல் இயக்குனர் டாக்டர் ஹத்தா ரம்லி,…

பக்காத்தான் ஹுடுட் மீது இணக்கம் காணத் தவறியது

ஹுடுட் சட்டத்தைப் பொறுத்த வரையில் கூட்டரசு அரசியலமைப்பை தான், நிலை நிறுத்தப் போவதாக பக்காத்தான் ராக்யாட் அறிவித்துள்ளது. ஆகவே அந்தச் சட்டம் அமலாக்கப்படுவதற்காக அது அரசியலமைப்புத் திருத்தங்களை நாடாது என்பது அதன் அர்த்தமாகும். என்றாலும் கிளந்தானிலும் திரங்கானுவிலும் ஹுடுட் தொடர்பாக நடப்பில் உள்ள சட்டங்கள் மீது இணக்கமில்லை என்பதை…

ஐஎஸ்ஏ-க்குப் பதில் மாற்றுச் சட்டங்களை பக்காத்தான் ஏற்காது

அரசு ரத்துச் செய்யப்போவதாக உறுதிகூறியுள்ள உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்துக்குப் பதிலாக மாற்றுச் சட்டம் எதுவும் கொண்டுவந்தால் பக்காத்தான் ரக்யாட் அதனை ஏற்காது. “எங்கள் நிலைப்பாடு தெளிவானது: ஐஎஸ்ஏ-யை முற்றாக ரத்து செய்யுங்கள்;அதற்குப் பதிலாக வேறு எதுவும் வேண்டாம்”, என்று பிகேஆர் உதவித் தலைவர் அஸ்மின் அலி கூறுகிறார். நேற்றிரவு…

சீரமைப்புகள்: நஜிப் பக்காத்தானைப் பின்பற்ற வேண்டும்

இன்றிரவு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பல்வேறு சீரமைப்புகளை அறிவிப்பார் என்று சொல்லப்படுகின்ற வேளையில் அவர் சீரமைப்பில் உண்மையிலேயே அக்கறை கொண்டவராக இருந்தால் தங்களை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று பக்காத்தான் எம்பிகள் கூறுகின்றனர். “மலேசிய மக்களுக்குப் பயனான மாற்றங்களைச் செய்ய பிரதமர் விரும்பினால் அவர் எங்கள் பரிந்துரைகளைப்…