சபா மீது கலந்துரையாடல் தொடங்க வேண்டும் என ஐநா தலைமைச்…

சபாவில் வன்முறைகள் நிற்க வேண்டும் என்றும் மலேசியப் படைகளுக்கும் சுலு சுல்தான் ஆதரவாளர்களுக்கும் இடையில் மூண்டுள்ள பூசலை தீர்க்க கலந்துரையாடல் தொடங்க வேண்டும் என்றும் ஐநா தலைமைச் செயலாளர் பான் கி மூன் கேட்டுக் கொண்டுள்ளார். சபா நிலவரத்தை பான் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் வன்முறைகள் பொது மக்கள்…

செம்போர்ணாவில் சடலங்கள் சிதைக்கப்பட்டதை போலீஸ் உறுதி செய்தது

செம்போர்ணாவில் மார்ச் 2ம் தேதி கம்போங் சிமுனுலில் கொல்லப்பட்ட ஆறு போலீஸ் அதிகாரிகளுடைய சடலங்கள் சிதைக்கப்பட்டதை போலீஸ் முகநூல் பதிவில் உறுதி செய்துள்ளது. சபா நெருக்கடி நிகழ்வுகளை வெளியிட்ட அந்தப் பதிவில் தென் பிலிப்பின்ஸைச் சேர்ந்த ஊடுருவல்காரர்கள் நடத்திய மறைவுத் தாக்குதலில் கொல்லப்பட்ட தங்கள் சகாக்களுடைய சடலங்களை மீட்கவும்…

லஹாட் டத்துவில் புதிதாக மூண்ட சண்டையில் ஓர் ஊடுருவல்காரர் கொல்லப்பட்டார்

லஹாட் டத்து, கம்போங் தண்டுவோ-வில் நேற்று ஆகாய, தரைத் தாக்குதல்கள் நடத்தபட்ட பின்னர் இன்று காலை புதிதாக சண்டை மூண்டது. "இன்று காலை மணி 6.45 வாக்கில் நமது பாதுகாப்புப் படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதனால் பாதுகாப்புப் படைகள் திருப்பிச் சுட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.…

‘டாவ்லாட் நடவடிக்கை (Ops Daulat) தொடருகிறது, நிலைமை கட்டுக்குள்’

பெல்டா சஹாபாட் 17க்கு அருகில் உள்ள கம்போங் தண்டுவோ-விலிருந்து ஆயுதமேந்திய பிலிப்பினோ பயங்கரவாதிகளைத் தேடித் துடைத்தொழிக்கும் நடவடிக்கை தொடருகின்றது. லஹாட் டத்துவிலும் செம்போர்ணாவிலும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக பெர்னாமா கூறியது. கம்போங் தண்டுவோ-வைச் சுற்றிலும் 10 கிலோ மீட்டார் சுற்றளவுக்கு Ops Daulat (டாவ்லாட் நடவடிக்கை)  மேற்கொள்ளப்படுகின்றது. அதனால்…

தப்பிச் சென்றவர்களைக் கண்டு பிடிக்கும் நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டுள்ளது

சில ஊடுருவல்காரர்கள் கம்போங் தண்டுவோ-விலிருந்து சுற்றியுள்ள பகுதிகளுக்குத் தப்பியிருக்கலாம் எனத் தெரிய வந்த பின்னர் பாதுகாப்புப் படைகள் தங்களது நடவடிக்கைப் பகுதியை விரிவுபடுத்தியுள்ளன. "நாங்கள் அந்த நடவடிக்கையின் போது எதிரிகளுடைய நடமாட்டத்தைச் சில பகுதிகளில் கண்டு பிடித்தோம். அதனால் தொடக்கத்தில் தேடும் பணி மேற்கொள்ளப்பட்ட பகுதியை விரிவு செய்ய…

சூலு பிரதிநிதி: அஸ்ஸிமுடி உயிருடன் இருக்கிறார்

இன்று காலை லாஹாட் டத்துவில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையில், ஆயுதம் தாங்கிய கும்பலுக்குத் தலைமைதாங்கும் அஸ்ஸிமுடி கிராம் கொல்லப்பட்டதாகக் கூறும் மலேசிய ஊடகங்களின் செய்திகளை சூலு சுல்தானின் அலுவலகம் மறுத்துள்ளது. பிலிப்பின் தொலைக்காட்சியான டிவி5--இன் இணையத்தளமான  InterAksyon.com, இன்று பிற்பகல் மணிலாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் சூலு சுல்தான்…

ஐஜிபி: பாதுகாப்புப் படைகள் எதிரிகளைக் கவனத்துடன் தேடி வருகிறார்கள்

இன்று காலை சாபா, லாஹாட் டத்துவில் மேற்கொள்ளப்பட்ட இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படைகள் “எதிரிகளைக் கவனத்துடன் வேட்டையாடி” வருவதாக இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் இஸ்மாயில் ஒமார் கூறினார். “இந்தத் தேடும் நடவடிக்கை 4 சதுர மைல் பரப்பளவில் நடந்து வருகிறது. அப்பகுதியில் பகைவர்கள் இன்னும் பதுங்கி இருக்கிறார்கள்”.…

மணிலாவில் ஆர்ப்பாட்டங்கள், நஜிப் படம் எரிக்கப்பட்டது

மணிலா மக்காத்தி சிட்டியில் உள்ள மலேசியத் தூதரகத்துக்கு வெளியில் பிலிப்பினோ போராளிகள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். சபாவில் சுலு சுல்தானுக்கு ஆதரவான ஆயுதமேந்தியக் குழுக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறையை நிறுத்துமாறு அவர்கள் கோரினர். அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பிலிப்பின்ஸ் அதிபர் பெனிக்னோ அக்கினோவுடன் கைகுலுக்கும் படம்…

‘சபாவில் மோரோ போராளிகளும் தாக்குவர் என்பதற்கு ஆதாரமில்லை’

MNLF எனப்படும் மோரோ தேசிய விடுதலை முன்னணி போராளிகள், சபா லஹாட் டத்துவில் "அரச சுலு இராணுவத்துடன்" தொடரும் இழுபறியை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ள மலேசியப் படைகளுடன் சண்டையிடுவதற்கு உதவக் கூடும் எனக் கூறப்படுவதை தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி நிராகரித்துள்ளார். "நாம் அதனைப்…

‘சுலு படையெடுப்பாளர்களுக்கு மலேசியாவில் பயிற்சி பெற்ற மோரோ போராளிகள் உதவுவர்’

சபா நெருக்கடியில் மொரோ தேசிய விடுதலை முன்னணியும் (MNLF) சேர்ந்து கொண்டுள்ளது. மலேசியாவில் பயிற்சி பெற்ற அதன் போராளிகள் சபாவில் போராடிக் கொண்டிருக்கும் சுலு சுல்தான் படைகளுக்கு உதவி செய்வர் என அந்த முன்னணியின் முன்னாள் தலைமைப் பிரச்சாரப் பிரிவுத் தலைவர் ஹாட்ஜி அக்மட் பாயாம் அறிவித்துள்ளார். MNLF…

சிவப்புப் பகுதிகளில் கடும் பாதுகாப்பு, லஹாட் டத்து நகரம் அமைதியாக…

லஹாட் டத்துவுக்கு அருகில் உள்ள கம்போங் தண்டுவோ-வில் ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து சிவப்புப் பகுதிகள் எனப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள சண்டை நிகழ்ந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளனர். கம்போங் தண்டுவோ, லாபியான், தஞ்சோங் பத்து ஆகியவற்றின் நுழைவாயில்களுக்கு அருகே 'இடைப்பட்ட பகுதிகள்' ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொது…

‘செம்போர்ணா பாதுகாப்பாக உள்ளது, நேற்றிரவு துப்பாக்கிச் சூடுகள் ஏதும் இல்லை’

கடலோரத்தில் உள்ள செம்போர்ணா நகரத்தில் நேற்றிரவு துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக சொல்லப்படுவதை அந்த மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் பிராடுஸ் அப்துல்லா நிராகரித்துள்ளார். அந்தப் பகுதியில் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் இன்று தொடர்பு கொள்ளப்பட்ட போது சொன்னார்.…

கம்போங் தண்டுவோவில் வான் தாக்குதலில் போர்விமானங்கள்

சாபாவின் லாஹாட் டத்துவில், கம்போங் தண்டுவோவில் பாதுகாப்புப் படைகள் தாக்குதலில் இறங்கியுள்ளன. இன்று காலை ஏழு மணிக்கு முதல்கட்டமாக வான் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தக் கடலோர கிராமப்பகுதி பக்கம் மூன்று வெடிப்பொலிகள் செவிமடுக்கப்பட்டன. எஃப்/ஏ-18,  ஹோக் ரக போர்விமானங்கள் வான் தாக்குதலில் ஈடுபட்டன.  அதனை அடுத்து குழிபீரங்கிகள் குண்டுகள்…

கம்போங் தண்டுவோ-வில் குண்டு வீச்சு தொடங்கியுள்ளது, கிராமவாசிகள் அந்தப் பகுதியிலிருந்து…

கடந்த மூன்று வாரங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிக்காரர்கள் பதுங்கியுள்ள கம்போங் தண்டுவோ-விலிருந்து அந்நிய ஊடுருவல்காரர்களை அகற்றுவதற்கான நடவடிக்கை இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. அந்தத் தகவலை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று காலை அறிவித்தார். அந்தப் பகுதியில் பதுங்கியுள்ள ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்களைப் பிடிப்பது அந்த நடவடிக்கையின்…

செம்பூர்னாவில் ஒரு போலீஸ்காரரின் தலை துண்டிக்கப்பட்டதா?

சனிக்கிழமை, செம்பூர்னா, கம்போங் ஸ்ரீ ஜெயா சிமுனுலில் ஆயுதம் தாங்கிய கும்பலுடன் நிகழ்ந்த மோதலில் ஒரு போலீஸ் அதிகாரியின் தலை துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுவதை போலீசார் மறுக்கவோ உறுதிப்படுத்தவோ இல்லை. இன்று லாஹாட் டத்துவில் செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் இஸ்மாயில் ஒமார், தாம் இன்னமும் பிண ஆய்வு அறிக்கையைப்…

பாதுகாப்புப் படைகள் நடமாட்டம் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம் என…

சபா, செம்போர்ணாவிலும் லஹாட் டத்துவிலும் ஆயுதமேந்திய பிலிப்பினோ படையெடுப்பாளர்களுடைய ஊடுருவலை முறியடிக்க Read More

சூலு நெருக்கடிக்குத் தீர்வுகாணும் நடவடிக்கை ஆமை வேகத்தில் நடப்பதாக கீர்…

முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் கீர் தோயோ, லாஹாட் டத்துவில் பாதுகாப்புக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ள ஒரு விவகாரத்துக்குத் தீர்வுகாண அரசாங்கம் நீண்ட காலம் எடுத்துக்கொண்டிருப்பதைச் சாடியுள்ளார். லாஹாட் டத்துவுக்குள் அடக்கி வைத்திருக்கப்பட வேண்டிய ஊடுருவல் இப்போது அக்கம்பக்கப் பகுதிகளுக்கும் பரவிவிட்டது. “ஆயுதம் தாங்கிய உள்நாட்டு வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் …

சபாவில் தலையிடுமாறு ஒஐசி-க்கும் ஐநா-வுக்கும் வேண்டுகோள்

சபா இழுபறியில் தலையிட்டு கோலாலம்பூருக்கும் சுலு சுல்தானுக்கும் இடையில் பேச்சுக்கள் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு மொரோ தேசிய விடுதலை முன்னணி (MNLF), ஒஐசி என்ற இஸ்லாமிய மாநாட்டு நிறுவனத்தையும் ஐநாவையும் கேட்டுக் கொண்டுள்ளது. அந்த பேச்சுக்களில் மணிலா சேர்க்கப்படக் கூடாது என்றும் MNLF கூறியது. அந்தத் தகவலை இன்று…

சபா இழுபறி தொடர்பில் நாடாளுமன்றம் கூட வேண்டும் என பக்காத்தான்…

அண்மையில் கிழக்கு சபாவில் நிகழ்ந்துள்ள பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சம்பவங்கள் பற்றி விவாதிப்பதற்காக சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என பக்காத்தான் ராக்யாட் தலைவர்கள் அறைகூவல் விடுப்பதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். அத்துடன் பக்காத்தான் ராக்யாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் "அந்த விவகாரம் மீது புரிந்துணர்வு ஏற்படுவதற்கு"…

இயல்புநிலைக்குத் திரும்பத் தடுமாறுகிறது லாஹாட் டத்து

அதன் கடற்கரைப் பகுதிகளில் சூலு அரச இராணுவம் ஊடுருவல் செய்ததால் நிலைகுலைந்துபோன லாஹாட் டத்து வழக்கநிலைக்குத் திரும்பத் தடுமாறிக்கொண்டிருக்கிறது. 130கிலோ மீட்டர் தொலைவில் கம்போங் தண்டுவோவில் 17-நாள்களுக்குமுன் வந்திறங்கிய ஊடுருவல்காரர்களுக்கும் மலேசியப் பாதுகாப்புப் படைகளுக்குமிடையில் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்ததை அடுத்து சாரிசாரியாக இராணுவ ஊர்திகள் வரத் தொடங்கியதைக் கண்டு…

ஐஜிபி: அதிகமான ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் தரையிறங்கியுள்ளனர்

மலேசியப் பாதுகாப்புப் படைகளுக்கு சுலு சுல்தான் ஆதரவாளர்களுக்கும் இடையில் நிகழ்ந்த மோதல்களைத் தொடர்ந்து மேலும் அதிகமான அதிகமான ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் தரையிறங்கியுள்ளனர். செம்பொர்ணாவுக்கும் லஹாட் டத்து-வுக்கும் இடையில் உள்ள குனாக் நகரத்தில் இரண்டு கிராமங்களில் ஊடுருவல்காரர்கள் ஊடுருவியுள்ளதை தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் இன்று உறுதிப்படுத்தினார்.…

மலேசியப் படைகளை எச்சரிக்க பிலிப்பினோ கும்பல் துப்பாக்கிச் சூடு

மூன்றாவது வாரமாக லஹாட் டத்துவில் பதுங்கியுள்ள பிலிப்பினோ கும்பல் ஒன்று 24 மணி நேரத்துக்கு முன்பு துப்பாக்கிச் சூடுகளைக் கிளப்பியதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கூறின. மலேசிய பாதுகாப்புப் படைகளை எச்சரிப்பதற்காக தாங்கள் அவ்வாறு சுட்டதாக பின்னர் அந்தக் கும்பலைச் சார்ந்தவர்கள் தெரிவித்தனர். ஆறு மலேசிய வீரர்கள் லஹாட் டத்து…