வர்த்தகத் தகராறுக்கு மத்தியில், முன்னாள் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் (Steven Sim), தான் எப்போதும் தொழிலாளர்களின் பக்கமே நிற்பேன் என்று வலியுறுத்தினார். அரசாங்கத்தில் தனது செயல்பாடுகள் அந்த அணுகுமுறையைத் தொடர்ந்து பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார். அவர் அமைச்சராக இருந்த காலத்தில், முதலாளிகளிடமிருந்து அவர் "தொழிலாளர்களுக்கு மிகவும் சாதகமாக…
குப்பைத் தொட்டிக்குள் மாண்ட ஐந்து ஏழைச் சிறார்கள்; சீனாவில் மனதை…
சீனாவின் தென்மேற்கே வீடின்றி வீதியில் வாழ்ந்து வந்த சிறார் ஐந்து பேர் பெரிய குப்பைத் தொட்டி ஒன்றுக்குள்ளிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. குளிர் தாங்கமுடியாமல் கதகதப்புக்காக குப்பைத் தொட்டிக்குள் இறங்கிய இந்தச் சிறார் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்று காவல்துறையினர் நம்புகின்றனர். சுமார் பத்து வயதுடைய இந்த…
காசா மீதான இராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் விரிவுபடுத்தும் : இஸ்ரேல்…
மத்திய கிழக்கின் காசாவில் ஹமாஸ் ஆயுததாரிகளுக்கு எதிரான தமது இராணுவ நடவடிக்கைகளை கணிசமான அளவில் விரிவுபடுத்த தான் தயாராக இருப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜெமின் நெதன்யாஹு கூறுகிறார். காசாவில் இருந்து இஸ்ரேலிய நிலப்பரப்பில் ராக்கெட் குண்டுகளை ஹமாஸ் ஆயுததாரிகள் தொடர்ந்து வீசிவரும் அதேவேளை, காசா மீதான இஸ்ரேலின் வான்…
Education blueprint offers opportunity to unite students
Educationist Kua Kia Soong today opined that revival of the local education authorities and the government’s fresh idea to set-up education precincts would help to forge unity among students under the multi-stream education system. He…
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை மலேசியா புறக்கணிக்கவேண்டும்
தமிழர்களின் நீதிக்காக அடுத்த ஆண்டு இறுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வேண்டும் என்று சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம் கேட்டுக்கொண்டார். இலங்கையில் 2009-ஆம் ஆண்டு இடம் பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது நான்கு இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதை நவம்பர்…
இலங்கை இராணுவத்தில் தமிழ்ப் பெண்களை சேர்க்கும் சிங்கள அரசு
ராஜபக்சே தலைமையிலான சிங்கள அரசு யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் பெண்கள் 100 பேரை இலங்கை இராணுவத்தில் இணைக்கவுள்ளது. இராணுவத்தில் சேர விண்ணப்பித்தவர்களின் தகுதிகள் உறுதிசெய்யப்பட்டு 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூர்ய தெரிவித்தார். இராணுவத்தில் சேரவுள்ள தமிழ் பெண்கள், இலங்கை இராணுவத்தின் பெண்களுக்கான படைப்…
தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றத் தீர்மானம் தவறானது : ஐநா…
இலங்கையில் தலைமை நீதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தால் கொண்டு வரப்பட்டுள்ள குற்றத் தீர்மானம் குறித்த நடைமுறைகள் சர்வதேச நியமங்களுக்கு எதிராக உள்ளதாக நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரத்துக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவர் கப்ரியல்லா நவுள் கூறியுள்ளார். இந்தக் குற்றத் தீர்மானம் நடைமுறைகள் நிறுவனங்களுக்கு இடையில் அதிகாரத்தை பிரிப்பதற்கான…
ஜப்பான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது; பொதுத் தேர்தல் அறிவிப்பு
ஜப்பானின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இருந்த நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடியும் முன்பாகவே அது கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தேர்தல் தேதி வெளியாகவில்லை. இருந்தாலும் அடுத்த ஒரு மாதத்துக்குள் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ளத் தேர்தலில், முன்னாள் வலதுசாரி பிரதமர் மீண்டும்…
ஹமாஸ் இராணுவ தளபதி இஸ்ரேலிய வான் தாக்குதலில் படுகொலை
பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸின் இராணுவத் தலைவர் அஹ்மட் ஜபாரி அவர்கள் காசாவில் வைத்து இஸ்ரேலிய வான் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். காசாவுக்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ தாக்குதல்கள் 4 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கொல்லப்பட்ட மிகவும் உயரிய ஹமாஸ் தலைவர் ஜபாரி ஆவார். அவரது சகா…
ஐ.நாவின் இரகசிய அறிக்கை கறுப்பு மையினால் அழிப்பு!
இலங்கையில் 2009-ஆம் ஆண்டு இடம் பெற்ற இறுதிக்கட்டப் போர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் இரகசிய அறிக்கையில் பல பகுதிகள் கறுப்பு மையினால் அழிக்கப் பட்டுள்ளதாக தெரியவருகிறது. பிபிசிக்கு கசிந்ததாகக் கூறப்படும் இறுதிக் கட்டப் போரின்போது தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா மன்றம் தவறியது குறித்து அறிக்கையை ஐ.நா பொதுச்…
இந்தியாவிற்கு எதிராக வங்கதேசத்தில் 55 தீவிரவாத முகாம்கள்
அகர்தலா: இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத செயல்களில் ஈடுபடும், 55 வங்கதேச தீவிரவாத முகாம்கள் பட்டியலை, வங்கதேச இராணுவ அதிகாரியிடம் வழங்கிய இந்திய அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர். இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம், மிகவும் ஏழ்மை நாடு. இந்தியாவின், திரிபுரா, மேகாலயா, மிசோரம் மற்றும் அசாம் ஆகிய…
இந்திய பிரஜைகளில் ஒருவராக உணர்கிறேன்: ஆங் சாங் சூச்சி
புதுடில்லி: இந்தியாவில் இருக்கும் போது, இந்திய பிரஜைகளில் ஒருவராக உணர்வதாக மியான்மர் எதிர்க்கட்சித்தலைவர் ஆங் சாங் சூச்சி தெரிவித்துள்ளார். டில்லி வந்துள்ள மியான்மர் எதிர்க்கட்சித்தலைவர் ஆங் சாங் சூச்சி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று காலை டில்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில்…
ஐநா அதிகாரிகளை மிரட்டியதான குற்றச்சாட்டை இலங்கை மறுத்துள்ளது
இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் (2009) ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்களை பயமுறுத்தி பணிய வைத்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் முற்றாக மறுத்திருக்கிறது. பிபிசிக்கு கசிந்த ஒரு ஐநா அறிக்கையில் அந்தக் குற்றச்சாட்டுக்கள் இடம்பெற்றிருந்தன. பொதுமக்களை பாதுகாக்க ஐநா தவறியது என்று தன்னைத் தானே ஐநா குற்றஞ்சாட்டிக்…
மின்னல் FM – மதம் மாற்றும் பிரச்சாரம்; சட்டத்திற்குப் புறம்பானது
தமிழகத்திலிருந்து சிறப்பு வருகைப் புரிந்திருந்த மெளலானா இராஜகுரு முகமது சாதிக் (பூஜ்யசிரீ இராஜகுரு வானமாமலை பார்த்தசாரதி ஐயங்கார்) கடந்த வியாழன்று மின்னல் வானொலியில் நேர்காணல் செய்யப்பட்டிருந்தார். அந்த நிகழ்வு முடிந்த பிறகு செம்பருத்திக்கு அழைப்புகள் வரத் தொடங்கின. அடுத்த நாள் காலை இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டதாக ப்ரி மலேசியா…
இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க ஐநா தவறியது: ஐநா மீதான ஆய்வறிக்கை
இலங்கையில் மூன்றரை ஆண்டுக்கு முன் போரின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களை அழிவிலிருந்து பாதுகாக்க ஐநா மன்றம் மோசமாகத் தவறியுள்ளது என்று ஐநாவுக்குள் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை ஒன்று கூறுகிறது. ஐநாவுக்குள் உள்ளளவில் நடத்தப்பட்ட ஆய்வுடைய அறிக்கையின் வரைவு பிரதி ஒன்று பிபிசியிடம் கசியவிடப்பட்டுள்ளது. தாங்கள் பாதுகாக்க வேண்டிய மக்களை…
தீபாவளி தினத்தில் கிலியேற்படுத்திய சிங்கள போர் விமானம்
தீபாவளி நாளன்று முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் குண்டு வீச்சு விமானம் ஒன்று வட்டமடித்து, தாழப் பறந்து குண்டு வீசுவதைப்போல திடீரென வந்துசென்றிருக்கிறது. இதனால் அந்தப் பகுதி மக்களிடையே அச்சமும் பதட்டமும் ஏற்பட்டிருந்தது. இந்த விமானம் என்ன காரணத்திற்காக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இவ்வாறு வட்டமடித்துப் பறந்து சாகசம் காட்டிச்…
வெலிக்கடைச் சிறை மோதல் : சிறையில் விசாரணை நடத்திய இந்திய…
கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையின் வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற போலீஸ்-கைதிகள் மோதல் சம்பவத்தையடுத்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக இந்திய அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டுள்ளனர். இச் சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்ததோடு 40-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். அத்துடன் இச் சிறைச்சாலையில் இந்தியாவைச் சேர்ந்த 33 கைதிகள் உள்ளனர். மேலும் 5…
பர்மிய எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூச்சி இந்தியா வருகை
பர்மிய எதிர்க்கட்சித் தலைவியும், நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூச்சி, ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியத் தலைநகர் டில்லிக்கு வந்திருக்கிறார். புதன்கிழமையன்று அவர்நேரு நினைவு உரையாற்றுகிறார். அரசியல் தலைவர்களையும் அவர் சந்தித்துப்பேசுகிறார். இந்தியா, பர்மிய இராணுவ அரசாங்கத்துடன் உறவாட 1990-களில் முடிவெடுத்த பின்னர், இந்திய அரசுக்கும்,…
பெண்ணுக்கு “முறையற்ற” மின் அஞ்சல்: அமெரிக்க தளபதி மீது விசாரணை
ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படைகளின் தலைமைத் தளபதியான ஜெனரல் ஜான் அல்லென் மீது அமெரிக்க பாதுகாப்புத் துறை விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது. அமெரிக்க உளவுத்துறையான சிஐஏவின் தலைவர் பதவியில் இருந்து டேவிட் பெட்ரேயஸ் அண்மையில் விலக காரணமான விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருந்த ஜில் கெல்லி, பெண்ணுடன் முறையற்ற தொடர்பாடல்களை ஜெனரல் ஜான்…
செம்பருத்தியின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
செம்பருத்தி இணையத்தளம் அதன் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. தீபத் திருநாளில் எல்லோர் வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும். “தீமை எனும் இருளைப் போக்க வேண்டும்” என்பதில் உடன்பட்டு அனைவரும் தீபத்திருநாளை கொண்டாடுவோம். -செம்பருத்தி
தீபாவளி வாழ்த்தில் பிரதமரின் சாயம் வெளுத்தது
வணக்கம். கோமாளியின் தீபாவளி வாழ்த்துக்கள். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பும் பின்பும் நாம் நாட்டுக்காக உழைத்துள்ளோம். இரத்தத்தை வியர்வையாக்கி, உடல் பொருள் ஆவியென அர்ப்பணம் செய்துள்ளோம். நள்ளிரவில் சுதந்திரம், இன்னமும் விடியவில்லை என்பதுதான் ஏக்கமாக உள்ளது. இந்த நாடு நமக்கும் சொந்தம் என்பதிலும் நமக்கு சம உரிமை உண்டு…
ஈழத் தமிழரின் இன்னல்களை ஐ.நா.விடம் சிறப்பாக விளக்கியுள்ளோம்- ஸ்டாலின்
ஈழத் தமிழரின் இன்னல்கள் மற்றும் வாழ்க்கைத் தரம் குறித்து ஐ.நா.விடமும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடமும் சிறப்பாக விளக்கியுளள்ளோம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஐ.நா. சபையிடமும், ஐ.நா. மனிதஉரிமை ஆணையத்திடமும் டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை அளித்து விட்டு நேற்று சென்னை திரும்பினார் ஸ்டாலின். விமான நிலையத்தில்…
நல்லிணக்க செயற்பாடுகளை விரைந்து அமுல்படுத்துங்கள் : பான் கீ மூன்…
இலங்கை அரசாங்கம் காலதாமதமின்றி நல்லிணக்க செயற்பாடுகளை மேற்கொண்டு அங்குள்ள தமிழ் மக்களின் மனித உரிமைகள் மற்றும் பாதுகாப்பை விரைந்து உறுதிப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் தோன்றியுள்ள பல பிரச்னைகள் மற்றும் முரண்பாடுகள்…
ஆயுத மோதலில் தொடர்புபடாத கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனரா?
இலங்கையில் வெலிக்கடை சிறைச்சாலையில் வெள்ளிக்கிழமை நடந்த ஆயுதமோதல்களில் கொல்லப்பட்டதாக அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட கைதிகளில் சிலர், மோதல் முடிந்த பின்னர் சிறைக்கூடத்துக்கு வெளியில் அழைத்துவரப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர். மோதல்களில் சம்மந்தப்படாது சிறைக்கூடங்களுக்குள் ஒதுங்கியிருந்த சில கைதிகள் காலை 4 மணிக்குப் பின்னர் வெளியில் கூட்டிவரப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பிபிசி…


