நஜீப் எனும் நல்லவர்…!

"நானும் மாற்றம் வேணுமுன்னு நினைக்கிறேன்... ஆனா நஜீப் நல்லவர். அதனால் பாரிசானுக்கு வாக்களிக்கிறேன்" கோழைகளின் ஆகக் கடைசியான சமரசக் கூற்று இதுவாகத்தான் இருக்கும். இவர்கள் 'நல்லவர்' எனச் சொல்ல மிக முக்கியக் காரணி பாரிசான் அரசாங்கம் கொடுத்த 500 ரிங்கிட். நன்றி உணர்ச்சிக்குப் பெயர் பெற்ற நமது இந்தியர்களின்…

‘இலங்கை மாநாட்டில் ஆஸ்திரேலியா கலந்துகொள்ளும்’

ஆஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக இலங்கை பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டை இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடத்துவதை தாம் ஆதரிப்பதாக தெரிவித்துள்ள ஆஸ்திரேலியா அதில் தாம் கலந்துகொள்வோம் என்றும் கூறியுள்ளது. ஆஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமை அமைச்சரான பிரண்டன் ஓ கொன்னர் அவர்கள் தற்போது இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இலங்கையின்…

உதட்டுச்சாயத்தில் உலோகங்களால் ஆபத்து – ஆய்வு

அமெரிக்காவில் பரவலாக விற்கப்படும் 30க்கும் மேற்பட்ட உதட்டுச்சாயங்களில் விஷத்தன்மை வாய்ந்த உலோகங்கள் இருப்பதைக் காட்டுவதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கலிபோர்னியா பல்கலைக்கழகதின் பார்க்லி பொதுச்சுகாதாரப் பள்ளியினால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, இந்த உதட்டுச்சாயத்தில் காட்மியம், க்ரோமியம் மற்றும் அலுமினியம் போன்ற உலோகங்கள் இருப்பதைக் காட்டியது. சராசரியாக நாளொன்றுக்கு இரண்டு…

‘மகிந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் தினத்திலேயே தமிழர்களுக்கு விமோசனம்’

மகிந்த தலைமையிலான இன்றைய அரசாங்கம் என்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றதோ அன்றைய தினத்தில்தான் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என அனைத்துப் பகுதி மக்களுக்கும் விமோசனம் கிடைக்கும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் முன்னணி, நவ சமசமாஜ கட்சி மற்றும்…

சிங்கப்பூரில் மக்கள் தொகையை உயர்த்தும் திட்டத்துக்கு எதிர்ப்பு

சிங்கப்பூரில் மக்கள் தொகையை உயர்த்த அரசு வகுத்துள்ள திட்டத்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு அசாதாரணமான எதிர்ப்பு போராட்டத்தில் சுமார் 3000 பேர் பங்குபெற்றுள்ளனர். வெளிநாட்டினரைக் கொண்டு சிங்கப்பூரின் மக்கள் தொகையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ஒரு நகரத்தை மட்டுமே நாடாகக் கொண்டுள்ள…

தாய்லாந்து துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி

தாய்லாந்தின் தென்பகுதியில் பட்டாணி என்னும் கிராமத்தில் ஒரு ஆயுததாரி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 3 வயது சிறுவன் ஒருவன் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். கிராமக் கடை ஒன்றின் முன்பாக எழுந்தமானமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்த அந்த துப்பாக்கிதாரி, பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பி ஓடியதாக…

வடக்கில் தேர்தல் நடத்தினால் தனிநாடு உருவாகிவிடும்: விமல் வீரவன்ச

கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதியில் மாகாண சபை தேர்தலை நடத்தக் கூடாது என்று ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழர்கள் வாழும் வடமாகாணத்தில் செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே அறிவித்திருக்கிறார். இந்தியா, அமெரிக்கா…

பாகிஸ்தான் சிறையில் தாக்குதலுக்கு உள்ளான சரப்ஜித் சிங் மரணமானார்

பாகிஸ்தான் சிறையில் கைதிகளால் தாக்கப்பட்ட நிலையில் மரணமான சரப்ஜித் சிங்கின் கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார். 1990 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக நடந்த குண்டுவெடிப்புகளில் 14 பேர் பலியானமை குறித்து பாகிஸ்தானிய நீதிமன்றம் ஒன்றினால்…

இராமதாஸ் கைது எதிரொலியாக தொடரும் வன்முறைகள்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் இராமதாஸ் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் ஆங்காங்கே வன்முறைகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் உள்ள பாலம் ஒன்றில் புதனிரவு வெடிகுண்டு வெடித்ததில், பாலத்தில் ஒரு மீட்டர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் இருந்து மேலும்…

செம்பருத்தி இணையத்தளம் தாக்கப்பட்டது!

மலேசியகினியுடன் இணைந்து நேரடி செய்தி ஊடகமாக பங்காற்றி வரும் செம்பருத்தி.காம் மீது கடந்த சில நாட்களாக இணைய தாக்குதல் (Cyber attack) மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கடந்த 28-ஆம் தேதி மாலை விசமிகளால் மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதலில் எமது இணையத்தளம் காலை மணி 10.41 தொடக்கம் மாலை மணி 6.27 வரை…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு?

இலங்கையில் தமிழ் மக்களின் முக்கிய அரசியல் அணியாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனியான அரசியல் கட்சியாக பதிவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி உடன்பட வேண்டும் என்று அந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய நான்கு தமிழ்க் கட்சிகளும் இரண்டு வார காலக்கெடு விதித்துள்ளன. அடுத்துவரும் இரண்டு வார…

இனவாதப் போக்கை எதிர்த்து கொழும்பில் பேரணி

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடந்த இனவாத எதிர்ப்பு பேரணியில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டுள்ளனர். சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து அண்மைக்காலமாக கடும்போக்கு பௌத்த அமைப்புக்கள் முன்னெடுத்துவரும் இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்தப் பேரணி நடந்துள்ளது. இந்த இனவாதத்துக்கு எதிரான ஊர்வலத்தை ''சர்வதேச சதி'' என்று கூறி ஒரு இடத்தில் ஒரு…

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இலங்கை அகதி தற்கொலை முயற்சி

செங்கல்பட்டு சிறப்பு முகாமிலிருந்து விடுதலை பெற எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில் சசிதரன் (21) என்ற இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். அவர் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனிடையே, செங்கல்பட்டு முகாமிலுள்ள மூன்றுபேர் தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த…

செம்பருத்தியின் ‘கொலைவெறி’ தேர்தல் காணொளிக்கு அமோக வரவேற்பு

13-வது பொதுத்தேர்தலுக்காக செம்பருத்தி இணையத்தளம் மாற்றியமைத்த 'சேஞ் திஸ் கவர்மெண்டு கவர்மெண்டுலா' என்ற கொலைவெறி பாணியிலான பாடல் காணொளி செம்பருத்தியில் பதிவேற்றம் கண்ட முதல் நான்கு நாட்களில் சுமார் 70,000-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். மக்கள் உண்மையிலேயே தேசிய முன்னணியின்மீது கொலைவெறியில்தான் இருக்கின்றனர் என்பதையே இது காட்டுகிறது. இணைய ஊடகம்…

இந்திய சினிமா விழா – தமிழ் சினிமா புறக்கணிப்பு

இந்திய மத்திய அரசு சார்பில் கொண்டாடப்படும், "இந்திய சினிமா' விழாவில், தமிழக சினிமா துறையின் பங்களிப்பு, முற்றிலுமாக இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, பிரதமரிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டுள்ளது. பிரமாண்டமான இந்திய சினிமாவை போற்றும் வகையில், டில்லியில், மத்திய அரசின் சார்பில், பிரமாண்டமான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த,…

‘இலங்கையில் காமன்வெல்த் மாநாடு’: கனடா அதிர்ச்சியும் கவலையும்

காமன்வெல்த் அமைப்பிலுள்ள நாடுகளுடைய தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு இவ்வாண்டின் பிற்பகுதியில் இலங்கையில் நடப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் தருகின்ற ஒரு முடிவு என கனடாவின் வெளியுறவு அமைச்சர் ஜான் பேர்ட் கூறியுள்ளார். காமன்வெல்த் அமைப்பு என்பது அடிப்படையில் சட்டத்தின் மாட்சிமை, ஜனநாயகம், நல்லாட்சி போன்ற விழுமியங்கள் சார்ந்த…

‘பணம் வாங்கிக் கொண்டு மனித உரிமை பேசுகிறார்கள்’

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்று கோரிக்கை விடுக்கும் கனடா மற்றும் மனித உரிமை அமைப்புகள் முன்னாள் புலிகளிடமும் புலம்பெயர் தமிழர்களிடமும் பணம்வாங்கிக் கொண்டு வேலை செய்வதாக இலங்கை அரசாங்கம் சார்பில் பேசவல்ல அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார். தம்மீதான மனித உரிமைக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் காமன்வெல்த் மாநாட்டை…

‘போர் காலத்தை விட அதிக பயத்துடன் வட- இலங்கை மக்கள்’

வட-இலங்கை மக்கள் யுத்த காலத்தைவிட தற்போது பயப் பீதியுடன் வாழ்வதாக அங்கு பயணம் செய்துள்ள நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மக்களின் உரிமைகளையும் காணிகளையும் அபகரிக்கும் வேலையில் அரசாங்கம் இறங்கியிருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். தேசியப் பாதுகாப்பை போலவே நாட்டு மக்களின் வாழ்க்கையையும்…

மஇகா இடத்தை, ஹிண்ட்ராப் நிரப்புகிறது!

வழக்கறிஞர் கா. ஆறுமுகம், செம்பருத்தி.காம் இந்தியர்களின் ஏங்கங்களை ஏந்தி வேதமூர்த்தி பிள்ளையார்தான் பிடிக்கிறார் என்று நம்பியபோது அது குரங்காக மாறியது எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றாகவே அமைந்துள்ளது. கடந்த மார்ச் 10—ஆம் தேதி முதல், உயரிய நோக்கத்திற்காக தன் உடலை வருத்தி உண்ணாவிரதமிருந்த வேதமூர்த்தி, தன்னைப் பார்க்க வந்த மக்கள் கூட்டணி…

ஊழ்வினை (ஓவியா)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நல்ல முன்னேற்றம்: இந்திய தூதரகம்

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த அரசு உதவியுடன் நடந்து வரும் வீடு கட்டும் பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 40,000…

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது : கனேடிய பிரதமர்

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை (காமன்வெல்த் மாநாடு) இலங்கையில் நடத்தக் கூடாது என கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் மீண்டும் கோரியுள்ளார். இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இம்முறை பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு வேறு ஒரு நாட்டில் நடைபெறுவதனையே விரும்புவதாகத்…