ஐபிஎப் தேர்தல் விளம்பரம், நம்மை அழ வைக்கிறது!

விடுதலை புலி இயக்கத் தலைவர் பிரபாகரனின்  மகன் பாலச்சந்திரன் படத்துடன் “ இந்நிலை யாருக்கும் வேண்டாம்” என்ற தலைப்புடன் ஐபிஎப் கட்சி நாளிதழ்களில் வெளியிட்ட விளம்பரம் பலரின் மனதை நோகடித்துள்ளது. இந்த விளம்பரத்தை மு.வீ. மதியழகன் செய்துள்ளதாகத் தெரிகிறது. அந்த நிலை யாருக்கும் வரக் கூடாதுதான். ஆனால் இந்த…

முறைகேடான தேர்தலுக்கு எதிராக முகநூலில் அணிசேரும் இளைய சமுதாயம்

முறைகேடான முறையில் 13-வது பொதுத் தேர்தல் நடந்துள்ளதாக கூறி மலேசியர்கள் குறிப்பாக இளைஞர்கள் பலர் முகநூல் (Facebook) வழி தங்களது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திவருகின்றனர். அவர்கள் பொதுத்தேர்தல் முடிவுகளை புறக்கணிக்கும் வண்ணம் முகநூலில் தங்களது சுயவிபர படங்களையும் (Profile Pictures) கருப்பு நிறத்தில் மாற்றியுள்ளனர். இதனால் முகநூல் எங்கும்…

“அசாத் சாலி கைது, இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மோசமடைவதைக் காட்டுகிறது”

தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய அசாத் சாலி அவர்கள் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணக்கு உட்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மோசமாகியிருப்பதாக கூறுகிறார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம். இலங்கை அரசாங்கத்தில் நீதியமைச்சராக இருந்துகொண்டு இவ்வாறு ரவூப்…

வௌ்ளத்தில் மூழ்கியது இலங்கையின் தலைநகர் கொழும்பு

இலங்கையில் தொடரும் பலத்த மழையினால் அந்நாட்டின் கொழும்பு நகரின் பல பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன. வெலிகடை, தெஹிவளை மற்றும் பேலியகொடை உள்ளிட்ட சில பகுதிகளின் வீதிகள் பல நீரில் மூழ்கியுள்ளதாக போலிஸ் அவசர அழைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் குறிப்பிட்ட வீதிகளில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் நிலவுதாக…

அர்த்தமுள்ள வகையில் உறவுகள் பேணப்பட வேண்டும் – அமெரிக்கா

சிவில் சமூகத்துடன் அசராங்கம் அர்த்தமுள்ள வகையில் உறவுகளைப் பேண வேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் போன்றன தொடர்பில் இன்னமும் பல விடயங்கள் செய்ய வேண்டியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் தெரிவித்துள்ளார். போர் வலயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள உட்கட்டுமான வசதி…

அமிலத் தன்மை கொண்டதாக மாறுகிறது ஆர்டிக் கடல்

கரியமில வாயுக்களின் வெளியேற்றம் காரணமாக ஆர்ட்டிக் கடற்பகுதி விரைவாக அமிலத் தன்மை கொண்டதாக மாறி வருகிறது என்று நார்வே நாட்டினர் நடத்தியுள்ள ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆர்ட்டிக் கடலின் பல பகுதிகளில் குறிப்பிடத்தகுந்த அளவில் அமிலத்தன்மை காணப்பட்டதாக சர்வதேச அளவில் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான நார்வேஜிய ஆய்வு…

கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி

கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்படுவதற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மேலும் Read More

‘Zul helped Pakatan retain Selangor’

Perkasa leader Zulkifli Noordin’s candidacy for the Shah Alam parliamentary seat played a role in helping Pakatan Rakyat to win big in Selangor, said DAP today. “We believe that Zulkilfi’s candidacy in Shah Alam played…

Najib faces limited future after polls losses

Malaysian Prime Minister Najib Razak may have to step down by the end of the year, ruling party sources said on Monday, after his coalition extended its 56-year rule but recorded its worst-ever election performance.…

‘பாதிக்கும் மேற்பட்ட மலேசியர்கள் பிஎன்-னை நிராகரித்துள்ளனர்’

உங்கள் கருத்து : "நகர்ப்புற-கிராமப்புற பிளவு தெளிவாகத் தெரிகிறது. நகரங்களில் வசிக்கும் எல்லா இனங்களையும் சமயங்களையும் சார்ந்த மக்களுடைய வாக்குகளை பக்காத்தான் பெற்றுள்ளது. அதே வேளையில் பிஎன் கிராமப்புறங்களில் உள்ள எல்லா இனங்களையும் சமயங்களையும் சார்ந்த மக்களுடைய வாக்குகளை வென்றுள்ளது. பிஎன் புத்ராஜெயாவை தக்க வைத்துக் கொண்டது அடையாளம்…

சிலாங்கூரில் பக்காத்தான் மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றது

பிகேஆர்-டிஏபி-பாஸ் கூட்டணியான பக்காத்தான் ரக்யாட், சிலாங்கூரில் 56 சட்டமன்ற இடங்களில் 46-ஐக் கைப்பற்றி ஆட்சியை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. இந்த 13வது பொதுத் தேர்தலில் பிஎன்னால் 12 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. அம்மாநிலத்துக்கான முழு முடிவும் வெகு நேரம் கழித்துத்தான் தெரிய வந்தது. ஆகக் கடைசியாக அறிவிக்கப்பட்டது சுங்கை பினாங்…

பேராக் பக்காத்தான்: ‘ஆவி வாக்காளர்களே’ தோல்விக்குக் காரணம்

பேராக்கில் குறுகிய தோல்விகண்டு பக்காத்தான் ரக்யாட், மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து வழக்கு தொடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறது. மாநில பக்காத்தான் தலைவர் முகம்மட் நிஜார் ஜமாலுடின் ‘ஆவி வாக்காளர்களும்'   வாக்காளர்கள் தொகுதி மாற்றம் செய்யப்பட்டதும்தான் தங்கள் தோல்விக்கு முக்கிய காரணம் என்றார். பேராக் சட்டமன்றத்தின் 59 இடங்களில்…

நஜிப் இஸ்தானா நெகாராவில் பிரதமராகப் பதவி உறுதி மொழி எடுத்துக்…

நஜிப் அப்துல் ரசாக் இஸ்தானா நெகாராவில் உள்ள பாலாய் ரோங் ஸ்ரீ-யில் யாங் டி பெர்துவான் அகோங் துவாங்கு அப்துல் ஹலிம் முவாட்ஸாம் ஷா முன்னிலையில் இன்று மாலை மணி 4.07க்கு பிரதமராக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார். அந்தச் சடங்கின் போது ராஜா பரமைசுரி அகோங்…

அன்வார்: என்னுடைய வேலை இன்னும் முடியவில்லை

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அரசியலிலிருந்து ஒய்வு பெறுவது குறித்து இன்னும் சிந்திக்கத் தொடங்கவில்லை. காரணம் நேற்றைய சர்ச்சைக்குரிய தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் தோல்வி கண்ட பின்னர் மலேசிய அரசியல் களத்தில் தமது வேலை 'இன்னும் முடியவில்லை' என அவர் கருதுகிறார். பொதுத் தேர்தலுக்கான தேர்தல் ஆணைய…

சொய் லெக் கட்சித் தேர்தலில் மீண்டும் போட்டியிட மாட்டார்

விரைவில் நடைபெறவிருக்கும் மசீச கட்சித் தேர்தலிலிருந்து தாம் ஒதுங்கியிருக்கப் போவதாக அதன் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் அறிவித்துள்ளார். இன்று வெளியிட்ட பத்திரிக்கை குறிப்பில் அதனைத் தெரிவித்த சுவா, தமது பதவியைத் தக்க வைத்துள்ள போட்டியிடாததற்கான காரணத்தைக் கூறவில்லை. அவர் தேர்தலில் மோசமான அடைவு நிலைக்கு மசீச…

பாலாவின் மனைவி : ஒரு மறைக்கப்பட்ட உண்மை…

அல்தாந்துயா விவகாரத்தில் பதினைந்து மாதங்கள் காணாமல் போன தனியார் துப்பறிவாளர் பாலசுப்ரமணியம் மீண்டும் வெளிவந்து பல உண்மைகளை வெளியிடத்தொடங்கினார் என்பது நாம் அறிந்தது.. அண்மையில் தனது முன்னாள் வழக்குரைஞர் அமெரிக் சிங் மூலம் நேர்காணல் ஒன்றை நடத்தியதன் மூலம் 15 மாதங்கள் பேசப்படாமல் இருந்த பாலாவின் கதை மீண்டும்…

13வது பொதுத் தேர்தல் : தற்போதைய அதிகாரப்பூர்வமற்ற நிலவரம்

இரவு மணி 2.30: நாடாளுமன்ற இருக்கைகள் பாரிசான் 129, பக்கத்தான் 80. பேராக் மற்றும் திரங்கானு மாநிலங்கள் இரவு மணி 2.03: மிகக் குறைவான பெரும்பான்மையில் பாரிசான் பேராக்  மாநில ஆட்சியை தொடரும் (பிஎன் 31, பக்கத்தான் 28).  திரங்கானு மாநிலத்தில் அதற்கு  இரண்டு பக்கத்தானைவிட இரு கூடுதல் இருக்கைகள் மட்டுமே கிடைத்துள்ளன (பிஎன் 17, பக்கத்தான் 15).  மஇகா வேட்பாளர்கள்…

‘சந்தேகத்துக்குரிய வாக்காளர் வாக்களித்த பின்னர் பணம் கோரினார்’

வாக்களித்த பின்னர் தங்கள் சாவடியில் பணம் கேட்ட சபாவைச் சேர்ந்த சந்தேகத்துக்குரிய வாக்காளர் ஒருவரை சிலாங்கூர் பண்டானில் உள்ள பக்காத்தான் ராக்யாட் தேர்தல் ஊழியர்கள் விசாரித்துள்ளனர். Taski Abim Taman Mawar வாக்குச் சாவடிக்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த பிகேஆர் சாவடியில் பிற்பகல் ஒரு மணி வாக்கில் மஸ்லான் சுல்கிப்லி…

தேர்தல் ஆணையம் : வாக்காளர் பட்டியலில் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் யாருமில்லை

வாக்குச் சாவடிகளில் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் காணப்பட்டதாக புகார்கள் கொடுக்கப்பட்ட போதும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களைக் கொண்ட அனைவரும் குடிமக்கள் என்றும் அதனால் அவர்கள் சட்டபூர்வ வாக்காளர்கள் என்றும் தேர்தல் ஆணையத் தலைவர் (இசி) வலியுறுத்துகிறார். "எங்கள் பட்டியலில் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் யாரும் இல்லை. நாங்கள் எங்கள் வாக்காளர்…

‘வாக்களிக்கும் என் உரிமையை யாரோ திருடி விட்டார்கள்’

கூலாயிலும் கிள்ளானிலும் பல வாக்காளர்கள் தங்கள் பெயரில் யாரோ ஒருவர் வாக்களித்து விட்டதால் தாங்கள் வாக்களிக்க முடியாமல் போய் விட்டதாக கூறிக் கொண்டுள்ளனர். அவர்கள் இசி என்ற தேர்தல் ஆணையத்தில் புகார் செய்கின்றனர். கூலாயில் வாக்களிப்பதற்காக காலை 10 மணிக்கு SJK(C) Batu வாக்குச் சாவடிக்கு 42 வயதான…

பண்டானில் சந்தேகத்துக்குரிய வாக்காளரை பிகேஆர் முறியடித்தது

சிலாங்கூர் பண்டானில் பிகேஆர் தேர்தல் ஏஜண்டுகள் ஆட்சேபித்ததைத் தொடர்ந்து சந்தேகத்துக்குரிய வாக்காளர் ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டார். அந்தத் தகவலை பிகேஆர் பண்டான் வேட்பாளர் ராபிஸி இஸ்மாயில் வெளியிட்டார். சியோக் லியிங் இயூ என்ற பண்டான் வாக்காளர் ஒருவர்,  பதிவு செய்யப்பட்ட தமது முகவரியில் சந்தேகத்துக்குரிய வாக்காளர் ஒருவர் இருப்பதாக…

சிலாங்கூரில் பிற்பகல் ஒரு மணி வரையில் 58.95 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்

சிலாங்கூரில் பிற்பகல் ஒரு மணி வரையில் 1.2 மில்லியன் அல்லது 58.95 விழுக்காடு வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். அந்த விவரத்தை இசி என்ற தேர்தல் ஆணையம் பெர்னாமாவிடம் தெரிவித்தது. நெகிரி செம்பிலானில் பிற்பகல் ஒரு மணி வரையில் மொத்தமுள்ள 555,982 வாக்காளர்களில் 58.35 விழுக்காட்டினர் வாக்களித்து விட்டனர்.…

புல்லைக் கொண்டு கூட அழியா மையை நீக்கி விட முடியும்!

13வது பொதுத் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் அழியா மை உண்மையில் அழிக்க முடியாது என தேர்தல் ஆணையம் வாக்குறுதி அளித்த போதிலும் நாடு முழுவதும் வாக்காளர்கள் அதனை எளிதாக அகற்றியுள்ளனர். சிலர் புல்லைப் பயன்படுத்திக் கூட அந்த மையை அழித்துள்ளனர். சபா பெனாம்பாங்கில் வாக்குச் சாவடிகளிலிருந்து வெளியில் வந்த வாக்காளர்கள்…