நான் தமிழ் பையன், எனக்கும் தமிழுணர்வு உள்ளது: நடிகர் சிம்பு…

சென்னை: இலங்கை விவகாரம் தொடர்பாக உண்ணாவிரதம் இருந்து வரும் சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களை நடிகர் சிம்பு சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம்…

இலங்கை மனித உரிமை மீறல்: புதிய ஆவணம் வெளியீடு

இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவம் இழைத்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து புதிய வீடியோ மற்றும் புகைப்படங்களை உலகத்தமிழர் பேரவை ஊடகங்களுக்கு வெளியிட்டிருக்கிறது. புதிய புகைப்படத்தில், கீழ் உள்ளாடை மட்டும் அணிந்த தமிழ் இளைஞர்கள், கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் உட்கார வைக்கப்பட்டிருப்பது காட்டப்படுகிறது. இந்தக்…

இரு துளி கண்ணீர்! (நாச்செல்)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

நீரழிவு நோய் வரும்முன் காத்தல் – காணொளி வழி மருத்துவ…

அன்றாட வாழ்க்கை முறைகளில் ஏற்படும் மாற்றங்களினால் இந்தியர்களை தற்போது அதிகமாக பாதிக்க கூடிய நோய்களாக நீரழிவு நோய் மற்றும் இரத்த அழுத்தம் காணப்படுவதாக கூறுகிறார் மருத்துவர் ம. சண்முக சிவா. இந்த இரு நோய்களும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளாக இருப்பதாக கூறும் அவர், சிலருக்கு…

‘தமிழர்களை குழப்பும் செயற்பாட்டை முரளி நிறுத்திகொள்ளவேண்டும்’

ஈழத்தமிழர்களுக்காக மலேசிய அரசாங்கம் வழங்கிய 32 இலட்சம் வெள்ளி மீதான காவல்துறையினரின் விசாரணை முடியும்வரை பூச்சோங்க முரளி சுப்பிரமணியம்  அமைதி காக்க வேண்டும். காவல்துறையில் புகார் செய்த பிறகு அமைதியாக இருப்பதை விட்டு தினசரி பத்திரிக்கைகளில் சுய விளம்பரம் தேடிக்கொண்டிருக்கிறார். தமிழீழ இலட்சியத்தை நோக்கிய ஆயுதப் போராட்டம் இலங்கையில்…

ஜனநாயக லீக் கட்சி தலைவராக அவுங் சாங் சூச்சி மீண்டும்…

யாங்கூன்: மியான்மரில், தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவராக, அவுங் சாங் சூச்சி, மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மியான்மர் நாட்டில், பல ஆண்டுகளாக இராணுவ ஆட்சி நடக்கிறது. அந்நாட்டின் ஜனநாயக தலைவரான அவுங் சாங் சூச்சி, 90ம் ஆண்டு நடந்த ஜனநாயக தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். ஆனால்,…

புலிகள் என்று சொல்லி உள்ளே தள்ளிடுவோம் – மாணவர்களை மிரட்டிய…

'இலங்கையில் நடந்தது இன படுகொலையே... ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணை வேண்டும்' என்ற கோரிக்கையோடு சேலம் அரசு கலை கல்லூரி மாணவர்கள் காலையிலேயே வகுப்பு புறக்கணிப்பு செய்து உள்ளிரிப்பு போராட்டத்தை தொடங்கினர். ஆனால் கல்லூரி முதல்வர் ராஜாமணி 'எவனோ எங்கயோ செத்தான்னா…

‘இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் செயற்பட்டவர்கள் நாடு திரும்ப முடியாதாம்’

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமை கூட்டத் தொடரின்போது இலங்கைக்கு எதிராக செயற்பட்ட யாரும் மீண்டும் நாட்டிற்குள் வர முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகச் செயாலாளர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார். தேவையென்றால் இந்தியாவில் தமிழீழம் ஒன்றை அமைத்துக் கொள்ளலாம். இலங்கையில் அந்த பேச்சுக்கே இடமில்லை…

மாலுமிகளை திருப்பி அனுப்பாத இத்தாலி; கோபத்தில் இந்தியா!

இந்தியாவில் ஒரு கொலை வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தனது கடற்படையினர் இருவரை இந்தியாவுக்குத் திரும்ப அனுப்ப முடியாது என்று இத்தாலி அறிவித்துள்ளது இந்தியாவில் கடுமையான எதிர்ப்புக்களை தோற்றுவித்துள்ளது. இத்தாலியின் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் தம்மிடம் தெரிவித்ததாக அவரை செவ்வாய்…

முகநூல் “விருப்பங்கள்” ஒருவரை அடையாளம் காட்டிவிடும் என ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

பேஸ்புக் எனப்படும் முகநூலில் ஒருவர் விரும்பும் விஷயங்களை வைத்து, அவரது பாலினம், அரசியல் சார்பு நிலை, புத்திசாலித்தனம் வரை அவரது அனைத்து குணாம்சங்களையும், முழுமையான ஆளுமையையும் கணிக்கமுடியும் என ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு. இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் பேஸ்புக் என்பது மனிதர்களின் இன்றியமையாத அடிப்படை அடையாளமாக மாறிவருகிறது. இந்த…

இலங்கைக்கு எதிராக பிரித்தானியா செயற்படவேண்டும் : டேவிட் மில்லிபேன்ட்

பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் நடத்தப்படக்கூடாது என்று முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு பிரித்தானிய Read More

டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கிட்டு தற்கொலை!

டில்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டபேருந்து சாரதி ராம் சிங், திகார் சிறையில் இன்று (11) அதிகாலை 5 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். டிசம்பர் 16ம் திகதி‌ ஓடும் பேருந்தில் தனது நண்பருடன் சென்ற போது 23 வயது…

ஈழத் தமிழருக்கு ஆதரவு- தமிழகத்தில் பற்றி எரியும் மாணவர்கள் போராட்டம்!

சென்னை: ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் பற்றி எரிந்து வருகிறது. இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை, தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச…

கென்யாவின் அதிபராகத் துடிக்கும் ஒபாமாவின் அண்ணன்

நைரோபி: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் அண்ணனான மாலிக் ஒபாமா கண் நிறையக் கனவுகளுடன் வலம் வந்து கொண்டுள்ளார். கென்யாவின் அதிபராவதே தனது லட்சியம் என்று அவர் கூறுகிறார். டெய்லி மெய்லுக்கு அவர் ரொம்பவே மனம் திறந்த பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். தனது தம்பி அமெரிக்க அதிபரானது போல…

ஈழத் தமிழருக்காக 3வது நாளாக மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம்

வெள்ளிக்கிழமை காலை முதல் சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி மாணவர்கள் அய்கப் வளாகத்தில் இலங்கை அரசை கண்டித்தும், இந்தியாவை கண்டித்தும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை மீது சர்வதேச போர்குற்ற விசாரணை நடத்தப் பட வேண்டும், ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், சிங்கள தூதரகத்தை தமிழகத்தில் இருந்து…

சிரியா உள்நாட்டுப் போரில் இந்திய வம்சாவளி போராளிகள்

டெல்லி: சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் இந்திய வம்சாவளிப் போராளிகளும் போராடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிரிய அதிபர் ஆசாத் ஆட்சியை எதிர்த்து அங்கு உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்நிலையில் சிரியா நாட்டு போரில் இந்திய வம்சாவளி போராளிகளும் போராடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா வந்த ஆசாத்தின் அரசியல் ஆலோசகர் ஷாபான்…

தமிழக மீனவர்கள் கடற்படையினர் தாக்குதல்: மீனவருக்கு எலும்பு முறிவு

காரைக்கால் மீனவர்கள் 6 பேர் மீது இலங்கைக் கடற்படையினர் வெள்ளிக்கிழமை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். கடந்த இரு நாட்களில் மீனவர்கள் தாக்கப்படுவது இது மூன்றாவது முறை என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமன்(53). அவருக்குச் சொந்தமான விசைப்படகில் அவரும், அதே பகுதியைச் சேர்ந்த…

‘அனைத்துலக பொறிமுறையின் அவசியத்தை இணைத்திருக்கலாம்’

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மன்ற மனித உரிமைகள் ஆணையத்தில் தற்போதைய அமர்வில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தின் வரைவை புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் அமைப்பான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஓரளவு வரவேற்றிருக்கிறது. இந்தத் தீர்மானங்களின் மூலம் இலங்கை தமிழர்களின் பிரச்னையை…

இலங்கை மீது சுதந்திரமான, நம்பத்தகுந்த விசாரணை வேண்டும் : அமெரிக்கா

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை சமர்பித்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியாவின் நிலைப்பாடு பற்றி இன்னும் முடிவு செய்யப்பட்வில்லை. இந்த நிலையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமை ஆணையம் நேற்று (07) ஒரு அறிக்கை…

இசைப்பிரியாவை கொலை செய்தமை மன்னிக்க முடியாத குற்றம்: ரணில்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இசைப்பிரியா என்ற பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்தமை மன்னிக்க முடியாத குற்றமாகும் என எதிர்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். போர்க் காலப் பகுதியில் வடக்கில் பெண்களுக்கு எதிராக மிக மோசமான…

உள்ளடக்கங்களைக் கொண்டே முடிவெடுக்க முடியும் – மன்மோகன் சிங்

மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தில் உள்ளடக்கப்படும் Read More