சுயேச்சை மத போதகர் சம்ரி வினோத் மற்றும் சமூக ஆர்வலர் அருண் தோரசாமி ஆகிய இருவரும் தங்களது தனித்தனி குற்றச்சாட்டுகளில் தாங்கள் குற்றமற்றவர்கள் என வாதிட்டுள்ளனர். 41 வயதான சம்ரி (மேலே, இடது), இன்று காலை கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், குற்ற்வியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505(b)-ன் கீழ்…
பேரணிக்கு வந்தவர்கள் தடுக்கப்பட்டது குறித்து அமெரிக்கா அதிருப்தி
காணாமல் போனவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் கொழும்பிற்கு வராமல் வவுனியாவில் தடுக்கப்பட்டமை குறித்து Read More
திமுக-வை பாரட்டியதாக வெளிவந்த தகவலை மறுக்கிறார் ‘சனல் 4’ கெலம்…
இலங்கை தமிழர்களின் விடயத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்காக, அதன் துணைத் தலைவர் மு.க.ஸ்டாலினை, சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெல்லம் மெக்ரே பாராட்டியதாக, திமுக பிரசாரம் செய்து வந்தது. தி.மு.கவின் இந்த போலி பிரசாரத்தை சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளரும், இலங்கையின் கொலைக்களம் காணொளியின் தயாரிப்பாளருமான…
காணாமல் போன ரஷ்ய வீரர் 33 ஆண்டுக்கு பிறகு ஆப்கனில்…
மாஸ்கோ: காணாமல் போன, ரஷ்ய படை வீரர், 33 ஆண்டுகளுக்கு பின், ஆப்கானிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டார். கடந்த, 1979ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் நவீன சோஷலிச அரசை உருவாக்கும் நோக்கத்தில், அங்குள்ள முஜாகிதீன் அமைப்பினருடன் போரிட, ரஷ்யா தனது செஞ்சேனை படைகளை, அந்நாட்டுக்கு அனுப்பியது. தொடர்ந்து பத்து ஆண்டுகள் நடந்த போரில்,…
மாலி சண்டையில் 10 பிரான்ஸ் வீரர்கள் பலி
பாரீஸ்: மாலியில் கிளர்ச்சியாளர்களுக்கும், மாலி இராணுவம், பிரான்ஸ் கூட்டுப்படைக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டயில் 10 வீரர்கள் கொல்லப்பட்டனர். மாலியில், அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய மெக்ரூப் என்ற கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு கெதிராக போர் தொடுத்து வருகின்றனர். மாலி இராணுவத்திற்கு கடந்த ஜனவரி முதல் பிரான்ஸ் உதவிசெய்து வருகிறது. மாலியின் வடகிழக்கே…
‘காணாமல் போனோரின்’ உறவினர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்கள் தங்களது உறவுகளை கண்டுபிடித்துக் கொடுக்கக் கோரியும், அரசால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் காணாமல் போனோரை விடுதலை செய்யக்கோரியும், தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வடக்கிலிருந்து வந்த பலரை வவுனியாவில் போலிசார் தடுத்து நிறுத்திய நிலையில், கொழும்பில் நடந்த…
இலங்கையில் இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது : விக்கிரமபாகு
இலங்கையில் சுதந்திரம் என்பது கிடையாது, இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். கொழும்பு அசாத் சாலி மன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;…
ராஜபக்சேவை காப்பாற்ற அமெரிக்கா சென்ற சுப்பிரமணிய சாமி
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி அவசரமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். ஜெனிவாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து அமெரிக்கா சார்பில் தாக்கல் செய்யப்படும் தீர்மானத்தை நீர்த்துப்போக வைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், வாஷிங்டனில் அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் சுப்பிரமணியசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். சுப்பிரமணியசாமியின் பூர்வீகம் மதுரைஅருகே உள்ள சோழவந்தான். …
மதுரையிலுள்ள இலங்கை பணிமனை மீது கடும் தாக்குதல்
மதுரையில் செயல்படும் ட்ரான்ஸ்லங்கா எனும் விமானப் பயணிகள் சேவை நிறுவன பணிமனை நேற்று பிற்பகலில் தமிழ் உணர்வாளர்களால் தாக்கப்பட்டு கடும் சேதத்திற்குள்ளானது. குண்டாந்தடிகளை ஏந்தி வந்த அவர்கள், பணிமனையில் இருந்தவர்களிடம், தமிழர்கள் தொடர்ந்து இலங்கையில் தாக்கப்பட்டுவரும் வேளையில் நீங்கள் பயணிகளை அங்கே அனுப்புவதா எனக்கேட்டு மிரட்டிவிட்டு கணினி, நாற்காலி,…
மாலைதீவின் முன்னாள் அதிபர் நஷீட் மீண்டும் கைது
மாலைதீவின் முன்னாள் அதிபர் மொஹமட் நஷீட் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டு தலைநகரான மாலேவில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் இதன் போது பெருந்தொகையான போலிஸார் அங்கிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நீதிமன்ற உத்தரவுக்கமையவே அவர் கைது செய்யப்பட்டதாகவும் இன்னும் சில நாட்களில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும்…
புரட்சியாளரும் வெனிசுலா அதிபருமான சவேஸ் காலமானார்
கார்கஸஸ்: புற்றுநோயால் அவதியுற்ற வெனிசுலா அதிபர் ஹுவே சவேஸ் இன்று காலையில் காலமானார். தென்அமெரிக்க நாடான வெனிசுலா நாட்டின் அதிபராக கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார் சவேஸ் (58). புற்றுநோய் தாக்கியதன் காரணமாக கடந்த 2011-ம் ஆண்டு ஜுன்…
காணமல் போனோரின் உறவினர்கள் தடுத்து வைப்பு
இலங்கையின் தலைநகர் கொழும்பில்இன்று நடைபெறவுள்ள காணாமல் போனோர் மற்றும் தடுப்பில் உள்ளவர்களின் உறவினர்கள் பங்குபெறவுள்ளவுள்ள பேரணியில் கலந்து கொள்வதற்காக வடக்கில் இருந்து செல்லவிருந்த மக்களை போலிசார் வவுனியாவில் தடுத்து வைத்திருப்பதாக இந்தப் பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இன்று காலை 9 மணிக்கு கொழும்பில் ஒன்று கூடுவதற்காக இவர்கள் யாழ்பபாணம்,…
இலங்கை மீதான தீர்மானம் திருப்தி அளிக்கவில்லை : சுரேஷ் பிரேமசந்திரன்…
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரமைகள் பேரவையில் அமெரிக்காவால் கொண்டுவரப்படும் தீர்மானத்தில் தற்போது இடம்பெற்றுள்ள வாசகங்கள் தமக்குத் திருப்தி அளிக்கவில்லை என்று ஜெனிவா சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். இலங்கை தொடர்பான தீர்மானத்தின் வாசகங்கள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. இந்த முறை…
படகுப் பயணங்களைத் தவிர்க்குமாறு தமிழர்களுக்கு ஆஸ்திரேலியா வலியுறுத்தல்
இலங்கையிலிருந்து படகுகள் மூலம் புகலிடம் கோரி தமது நாட்டிற்குள் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு ஆஸ்திரேலியா அரசாங்கம் மீண்டும் பகிரங்கமாக அறித்துள்ளது. படகுகள் மூலம் புகலிடம் கோரி சென்றவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கும் பணிகளை சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்துள்ள போதிலும் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கான சட்ட விரோத பயணங்கள்…
என்ன பெயரோ? (ஓவியா)
வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
விஸ்வரூப நாயகனுக்குப் பாலபிசேகம்!
அண்மையில் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் Read More
அனைத்துலக விசாரணையினைக் கோரும் தபால் அட்டைகள் வெளியீடு
ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான அனைத்துலக விசாரணையினைக் வலியுறுமாறு புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வாழுகின்ற நாடுகளது அரசுகளை கோருமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. இக்கோரிக்கையினை வலிறுத்தும் பொருட்டு அனைத்துலக விசாரணையினை கோரும் தபால் அட்டைகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டு வைத்துள்ளது.…
இலங்கையில் மேலும் இரு பள்ளிவாசல்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்
இலங்கையில் மேலும் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளதாக முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர். நேற்று திங்கட்கிழமை கம்பஹா மாவட்டத்திலுள்ள மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீதும், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள ஒப்பநாயக்க பள்ளி வாசல் மீதும் அடையாளந் தெரியாத நபர்கள் கல்வீச்சு தாக்குதல்களை…
ராஜபக்ச மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈழ ஆதரவாளர் தீக்குளித்து…
போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்சே மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடலூர் அருகே உள்ள நல்லவாடு கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 44 ) என்பவர் தீக்குளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீக்குளித்த மணி, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இரவு…
கறையான் போல் நாட்டை அரிக்கிறது காங்கிரஸ்; மோடி ஆவேசம்
காங்கிரஸ் கட்சி, கமிஷன் ஆட்சி நடத்துகிறது. தொடர்ச்சியான ஊழல்களால் கறையான் போல் நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கிறது. பிரதமர் பதவியில் இருக்கும் மன்மோகன் சிங், சோனியா குடும்பத்தின் இரவு காவலாளி போல் செயல்படுகிறார் என பா.ஜ., மூத்த தலைவர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசினார். பா.ஜ., தேசிய கவுன்சில்…
‘இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் குற்றச்சாட்டுகள்’ : இராணுவத் தளபதி
இலங்கைக்கு அபகீர்த்தி எற்படுத்தவும், ஓர் ஆட்சி மாற்றத்தையும் கொண்டு வருவதற்காகவே ஜெனீவாவில் மனித உரிமைகளை நாங்கள் மீறியிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் நாங்கள் குற்றமற்றவர்கள்; எமது இராணுவத்தினர் ஒழுக்கமானவர்கள். அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள் என்று இலங்கையின் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய கிளிநொச்சியில் கூறியிருக்கின்றார்.…
வெ. 32 லட்சம் என்ன ஆனது? கா. ஆறுமுகம் விளக்கம்
இலங்கையில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு உதவ மலேசிய அரசாங்கம் வழங்கிய நிதி என்ன ஆனது? அந்த நிதி எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பது பற்றி கா. ஆறுமுகத்தை போலிஸ் விசாரிக்க வேண்டும் என்று முரளி சுப்பிரமணியம் போலிஸ் புகார் செய்திருந்தார். இது குறித்து வழக்கறிஞர் கா.…
தமிழர் தாகமும் தமிழீழத் தாயகமும்
(ஒரு பார்வையாளரான தமிழினியின் பதிவுகள்:- மார்ச் 3, 2013 - கண்டனப் பேரணி, பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூர்.) உன்னைச் சுட்டு எலும்பை எடுத்துப் பாதையில் வீசினர் பாதைகள் மூடப்படுமென... சாம்பலை எடுத்து காற்றில் எறிந்தனர் காற்றும் மெளனமாய் இருக்கட்டுமென. மெளனத்துக்கு அப்பாலும் வாழ்வுண்டு மரணத்தை மீறியும் போராட்டம் உண்டு... புரிந்து…
இலங்கை தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும்; மலேசியா அதை முன்னெடுக்க…
இன்று காலை 11.00 மணியளவில் கோலாலம்பூரின் பிரிக்பீல்ட்ஸ் வளாகத்தில் கருப்பு உடை கண்டன ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. செம்பருத்தி இணையத்தளம் எற்பாடு செய்திருந்த இந்த கண்டன ஊர்வலத்தில் சுமார் 800-க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர். இதில் ஜொகூர், பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா, பகாங், கேமரன் மலை, சிலாங்கூர் மற்றும்…


