துணைக் கல்வி அமைச்சர் : பள்ளிக்கூடங்கள் அனைவருக்கும் உரியது!

தேசியப் பள்ளிகள் உட்பட, அனைத்து பள்ளிகளும் இன, மதப் பேதமின்றி அனைத்து மாணவர்களுக்குமானது எனத் துணைக் கல்வி அமைச்சர் செனட்டர் சோங் சின் வூன் கூறினார். உலு லங்காட்டில் உள்ள ஒரு தேசியப் பள்ளியில், ‘இஸ்லாம் மாணவர்’ மற்றும் ‘இஸ்லாம் அல்லாத மாணவர்’ எனக் குடிநீர் குவளைகளில் எழுதி…

நூர் ஜஸ்லான் : யூ.என்.எச்.சி.ஆர். திட்டத்தினால், ‘ஆவிகளாக’ அலையும் வெளிநாட்டவர்கள்

அகதிகளுக்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் (யூ.என்.எச்.சி.ஆர்.) சலுகைத் திட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி, நாட்டில் பல வெளிநாட்டினர் ‘ஆவிகளாக’ திரிவதைத் தடுக்க மலேசியா நோக்கம் கொண்டுள்ளது என உள்துறைத் துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகமட் கூறினார். அகதிகளும் புலம்பெயர்ந்த பலரும், தங்கள் சொந்த நாட்டின் அடையாளங்களை அழித்துவிட்டு,…

குவான் எங் : அருள் கந்தா கூறியதைப் பாஸ் புரிந்துகொண்டதா?

1எம்டிபி  ‘கடன் தீர்வுத்  திட்டங்கள்’  குறித்து  அருள் கந்தா கந்தசாமி அளித்த விளக்கம், பாஸ் மத்திய செயலவையினருக்கு உண்மையில் விளங்கியதா என்பது தனக்கு ஆச்சரியமாக உள்ளது என லிம் குவான் எங் கூறியுள்ளார். 1எம்டிபி தொடர்பான ஜசெக-வின், குறிப்பாக, பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவாவின் பல கேள்விகளுக்கு, அருள் கந்தா இன்னும்…

வேலையிழப்பு காப்பீட்டுத் திட்ட மசோதாவை அமைச்சரவை ஒத்திவைத்தது

வேலையிழப்பு காப்பீட்டுத் திட்டம் 2017 (இ.ஐ.எஸ்.) மசோதா விவாதத்தை அமைச்சரவை நேற்று ஒத்தி வைத்தது. பங்குதாரர்களின் நலனையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது என, நேற்று அமைச்சரவைக் கூடியபோது, சில அமைச்சர்கள் கவலை தெரிவித்ததாக ஆதாரங்கள் கூறுகின்றன. இ.ஐ.எஸ். மசோதாவின் இரண்டாம் வாசிப்பு, அக்டோபர் நாடாளுமன்ற அமர்வுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதை இரண்டாம்…

கட்கோ நிலப் பிரச்சனை இன்னும் தீரவில்லை, உரிமை போராட்டம் தொடர்கிறது!

அண்மையில், கட்கோ நிலப் பிரச்சனை ஒரு தீர்வை நாடியது என்று நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் முகமட் ஹசான் அறிவித்திருந்தார். ஆனால், வாக்குறுதி அளித்ததுபோல் தங்களுக்கு 8 ஏக்கர் நிலம் வழங்கப்படவில்லை எனக் கட்கோ குடியேறிகள் கூறியுள்ளனர். பலமுறை நீதிமன்றம் சென்ற இவ்வழக்கை, மத்திய நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.…

கட்கோ குடியேறிகள் பிரச்சனை: சுவாராம் ஐநா சபையில் புகார்

நெகிரி செம்பிலான், கட்கோ குடியேறிகளுக்கு நேர்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐக்கிய நாட்டு சபையின் உயர் ஆணையாளரிடம் சுவாரா ரக்யாட் மலேசியா (சுவாராம்) புகார் செய்துள்ளது. கடந்த ஜூலை 18-ல், இப்புகார் செய்யப்பட்டதாகவும், ஐநா அதிகாரிகள் அப்புகார் குறித்து கருத்தும் தெரிவித்துவிட்டதாக சுவாராமின் நிர்வாக இயக்குநர் சிவன்…

அஷாலினா : நாடாளுமன்றத்தின் நற்பெயருக்கு எதிர்க்கட்சியினர் கலங்கம் விளைவிக்கின்றனர்

பெட்டாலிங் ஜெயா செலாத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஹீ லோய் சியன், அவைத் தலைவர் பண்டிகார் அமினுக்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த நடவடிக்கையானது, நாடாளுமன்றத்தின் நற்பெயருக்குக் கலங்கம் விளைவிப்பதாக உள்ளது என அமைச்சர் அஷாலினா ஒத்மான் கூறியுள்ளார். “இந்நடவடிக்கையானது கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள நாடாளுமன்ற…

பகடிவதையைத் தெரிவிக்கத் தவறினால் கடுமையான நடவடிக்கை

பள்ளியில் நடக்கும் ஒழுக்கச் சீர்கேடுகள், குறிப்பாக  பகடிவதைகளை மறைக்க முற்படும் பள்ளி நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சு கூறியுள்ளது. பள்ளியின் முதல்வர்கள் அல்லது தலைமையாசிரியர்கள், தங்கள் பள்ளியில் ஒழுக்கச் சீர்கேடுகள் ஏதேனும் நடந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டுமெனக் கல்வி அமைச்சின் இயக்குநர்…

பி.எஸ்.எம். : வேலையிழப்பு காப்புறுதி திட்டத்தை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும்!

வேலையிழந்த தொழிலாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, வேலையிழப்பு காப்புறுதி திட்ட (இ.ஐ.எஸ்.) மசோதாவை விரைவுபடுத்த வேண்டுமென, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்  ரிச்சர்ட் ரியோட் ஜயிம் அச்சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இச்சட்ட மசோதாவை முதல் வாசிப்புக்குக்…

நஜிப் : 3.7 மில்லியன் மலேசியர்கள் இன்னும் வாக்காளராக பதியவில்லை

14-வது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், 3.7 மில்லியன் மலேசியர்கள் இன்னும் வாக்காளராகப் பதியாமல் இருப்பதாக பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்தார். நாட்டின் எதிர்காலம் வாக்காளர்களின் கைகளில் இருப்பதால், உடனடியாக வாக்காளராகப் பதியும்படி நஜிப் அவர்களைக் கேட்டுக்கொண்டார். “உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வாய்ப்பை மற்றவர்களுக்குக் கொடுத்துவிடாதீர்கள். அவர்களின்…

மாணவி வளர்மதியை விடுதலை செய்க, ‘சிறகுகள்’ மாணவர் அமைப்பு கோரிக்கை

கடந்த ஜூலை 12-ல் கைது செய்யப்பட்ட, தமிழ்நாடு, பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ‘சிறகுகள்’ மாணவர் அமைப்பு கேட்டுகொண்டது. வளர்மதிக்கு ஆதரவாக, அமைதி ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்று சற்றுமுன் சுங்கை சிப்புட்டில் நடந்தது. சமூக விழிப்புணர்வுக்கான மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த…

ஹிஷாமுடின் : மகாதீருக்கு சிந்தனை வறட்சி ஏற்பட்டுவிட்டது

நஜிப் பிரதமர் பதவியிலிருந்து விலகினாலும், தான் அம்னோவில் இணையப்போவதில்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் கூறியுள்ளது, அவருக்குச் சிந்தனை வறட்சி ஏற்பட்டுள்ளதையேக் காட்டுகிறது என ஹிஷாமுடின் உசேன் கூறினார். அம்னோவிலிருந்து பதவி விலகுவதும், மீண்டும் சேர்ந்துகொள்வதும் மகாதீருக்குப் புதியதல்ல. இதற்கு முன் பலமுறை இது நிகழ்ந்துள்ளது என…

ஜசெக-விடம் ஏமாறாதீர்கள், சீன வாக்காளர்களுக்குத் துணைப் பிரதமர் அறிவுரை

ஜனநாயக செயற்கட்சியினால் (ஜசெக) தொடர்ந்து ஏமாற்றப்படுவதிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும்படி, துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஷாஹிட் ஹமிடி சீன வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார். கடந்த 12 மற்றும் 13-ம் பொதுத் தேர்தல்களில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத சூழ்நிலையில், இன்னும் அக்கட்சியைத் தொடர்ந்து நம்பியிருக்க வேண்டாமென அம்னோ…

சரவாக்கில் நுழைய, ‘லிசன்’ கே.எஸ்.பவானிக்குத் தடை!

இன்று காலை, மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்) தேசியத் துணைச் செயலாளர் பவானி கன்னியப்பன் சரவாக் விமான நிலையத்தில், குடிநுழைவுத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். சரவாக் மாநிலத்தினுள் நுழைய அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவ்வதிகாரிகள் தெரிவித்ததாக கே.எஸ்.பவானி கூறினார். பேராக் , கம்பாரிலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக தனது போக்குவரத்து…

சுஹாகாம் : ஜி25-ன் இஸ்லாமியப் புத்தகத்தின் தடையை அகற்றுக

மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்), ஜி25 வெளியிட்டுள்ள ‘மௌனத்தை உடைப்போம் : மிதவாதக் குரல்கள் - அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இஸ்லாமியம்’ (Breaking the Silence: Voices of Moderation - Islam in a Constitutional Democracy) எனும் புத்தகத்தின் தடையை அகற்றும்படி உள்துறை அமைச்சைக் கேட்டுக்கொண்டது.…

2013 இல் பேராக் சட்டமன்றப் பேரவையில் அளித்த வாக்குறுதி என்னவானது?

துரோனோவில் தங்கமீன்கள் வளர்க்கும் 39 விவசாயிகள், தாங்கள் எதிர்நோக்கும் நிலப் பிரச்சனைக்குத் தீர்வு காண, இரண்டாவது முறையாக பேராக் முதல்வருக்கு மகஜர் வழங்கியுள்ளனர். பத்துகாஜா தொகுதியில் உள்ள துரோனோ, கம்போங் பாலி எனும்  கிராமத்தின் அருகிலுள்ள அரசு நிலத்தில், 1980-ஆம் ஆண்டு முதல்,  தங்கமீன்கள் வளர்த்து வரும் இவ்விவசாயிகளின்…

ஜி25-ன் புத்தகம் தடைசெய்யப்பட்டது

‘ஜி25’ எனும் நாடறிந்த மலாய் குழுவினர் வெளியிட்ட ஒரு புத்தகத்தை அரசாங்கம் தடைசெய்துள்ளது. அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இஸ்லாமியம் தொடர்பான பல விவாதக் கட்டுரைகள் அப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. ‘மௌனத்தை உடைப்போம் : மிதவாதக் குரல்கள் - அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இஸ்லாமியம்’ (Breaking the Silence: Voices of…

உபர் & எஎம்பி; கிரேப்கார் மின்-போக்குவரத்துச் சேவை சட்டப்பூர்வமானது

கிரேப்கார் மற்றும் உபர்  மின் - போக்குவரத்துச் சேவையைச் சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடாக மலேசியா விளங்குகிறது என்று பிரதமர் துறை அமைச்சர் நான்சி ஷுக்ரி கூறியுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில், நிலப் பொது போக்குவரத்து (திருத்தம்) 2017 மற்றும் வணிக வாகனங்கள் உரிமம் வழங்கும் சபை (திருத்தம்) 2017 ஆகியவை…

காவல்துறை லோட்டஸ் நிறுவனத்தின் கைக்கூலியா, பி.எஸ்.எம். இளைஞர் பிரிவு கேட்கிறது

கட்கோ குடியேறிகள் 30 பேரைக் கைது செய்த அரச மலேசியக் காவல்துறையின் போக்கை, மலேசிய சோசலிசக் கட்சியின் இளைஞர் பிரிவு கண்டிப்பதாக, அதன் துணைத் தலைவர் சரண் ராஜ் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார். கடந்த ஜூலை 18-ம் தேதி, லோட்டஸ் நிறுவனம் தங்கள் நிலத்தில் அத்துமீறி நுழைந்து,…

தி.சி.பி. சிமெண்ட் தொழிற்சாலைக்கு எதிராக, தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்

முறையான காரணங்கள் ஏதும் கூறாமல், தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்த, தாசேக் சிமெண்டு பெர்ஹாட் (தி.சி.பி.) குழுமத்திற்கு எதிராக, தீபகற்ப மலேசியா சிமெண்டு தொழிற்சாலை தொழிலாளர் சங்க (கே.பி.பி.பி.எஸ்.) , தாசேக் கிளையினர் உதவியுடன் தொழிலாளர்கள் இன்று காலை ஒரு மறியலில் இறங்கினர். ஈப்போ, தாசேக் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள…

வான் ஷாம் ஷைடி : தொழிலாளர் காப்புறுதி திட்டத்தை உடனடியாக…

இன்று  தொடங்கவிருக்கும் இரண்டாம் தவணை நாடாளுமன்றக் கூட்டத் தொடரில்  அரசாங்கம் முன்மொழிந்துள்ள தொழிலாளர் காப்புறுதித் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) மத்திய செயலவை உறுப்பினர் வான் ஷாம்ஷைடி வான் ஷாஹிட் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார். “பி.எஸ்.எம். கோரும் வேலை இழப்பு நிதி, அரசாங்கத்தின்…

பினாங்கு மாநிலத்திற்குப் பாரிசானின் சிறப்பு தேர்தல் அறிக்கை

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலுக்கு, பினாங்கு மாநிலத்திற்குத் தனியாக ஒரு தேர்தல் அறிக்கையைத் தேசிய முன்னணி தயாரிக்குமென, தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறுகிறார். பாரிசான் அல்லது பக்காத்தான் ஹராப்பான் ஆகிய இரு கூட்டணி கட்சிகளுக்கிடையே எதைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து முடிவெடுக்க, மாநில…

குடும்ப வதைச் சட்டத்தில் புதிய மாற்றங்கள் தாக்கல், மலேசிய சோசலிசக்…

எதிர்வரும் திங்கட்கிழமை கூடவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், குடும்ப வதைச் சட்டத்தில் சில புதிய சட்டத் திருத்தங்கள் செய்யப்படவிருப்பதை, தாம் வரவேற்பதாக மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்) தேசியத் துணைத்  தலைவர் மு.சரஸ்வதி  கூறியுள்ளார். மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் முயற்சியில், இரண்டாவது முறையாக நாடாளுமன்ற வாசிப்பில்,…