பழைய எதிரிகள், இன்று மாலை ஒரே மேடையில், மகாதீர் –…

அவர்களிடையிலான கடுமையான யுத்தத்தினால், ஒருமுறை அம்னோ இரண்டாகப் பிரிந்தது; ஆனால், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டும் குவா மூசாங் எம்.பி. தெங்கு ரஸாலீயும் அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையற்ற இந்நேரத்தில், ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாக்டர் மகாதிர் மற்றும் தெங்கு ரஸலீ இருவரும்,…

நஜிப், ரொஸ்மா சொத்துகளைக்கு உரிமை கோரி எந்த மூன்றாம் தரப்பினரும்…

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் மற்றும் 16 பேரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், கைக்கடிகாரங்கள் மற்றும் 27 கார்கள் உட்பட பல்வேறு <em>பிரேண்டுகள்</em> கொண்ட நூற்றுக்கணக்கான கைப்பைகளைக் கோரி, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு மூன்றாம் தரப்பினர் யாரும் இன்று வரவில்லை. இந்த வழக்கில்…

கோவிட் -19 : மலேசியா இன்னும் சில நாட்களில் சீனாவை…

கருத்து | மலேசியாவில் புதிய கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கையில் தினசரி அதிகரிப்பு தற்போதுள்ளது போல் இருந்தால், டிசம்பர் 17 அல்லது 16-ம் தேதி மக்களவையை ஒத்திவைக்கும்போது, ​​மலேசியா சீனாவின் எண்ணிக்கையை முறியடிக்கும். இது பெருமைப்பட வேண்டிய ஒன்றல்ல. மலேசியாவுடன் (32 மில்லியன்) ஒப்பிடும்போது சீனாவின் மொத்த மக்கள்…

`டோப் கிளவ்` கையுறை தொழிற்சாலை பாதுகாவலர் மரணம், கோவிட்- 19…

கடந்த சனிக்கிழமையன்று, கோவிட் -19 தொற்றின் விளைவாக கிள்ளான் மேருவில் உள்ள டோப் கிளவ் தொழிற்சாலையின் நேப்பாள பாதுகாவலர் ஒருவர் இறந்தார் என நம்பப்படுகிறது. இறப்பதற்கு முன்னதாக, நவம்பர் 21-ம் தேதி, யாம் நாராயண் சவுத்ரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சுமார் மூன்று வாரங்களுக்குச் சிகிச்சை பெற்றார் என்று வைப்ஸ்…

கோவிட் 19 : இன்று 1,229 புதியத் தொற்றுகள், 5…

சுகாதார அமைச்சு இன்று, 1,229 புதிய கோவிட்-19 தொற்றுகளைப் பதிவாக்கியுள்ளது, அவற்றில் பெரும்பாலானவை சிலாங்கூர் மற்றும் சபாவிலிருந்து வந்தவை. கோலாலம்பூர், ஜொகூர் மற்றும் பேராக் மாநிலங்களில் இன்று 100-க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மறுபுறம், 1,309 பேர் அந்நோயிலிருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளனர், இது இன்றையப் புதிய தொற்றுகளைவிட…

நீர் விநியோகத்தை நிறுத்த சனுசி’க்கு தைரியம் இருக்கிறதா?

பி இராமசாமி | கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி, தவறான பல தகவல்களைப் பரப்பியதன் காரணமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இரண்டு இந்து கோவில்கள் இடிக்கப்பட்டதற்கான காரணத்தை நியாயப்படுத்திய பின்னர் - ஒன்று மோட்டார் சைக்கிள் பூங்காவிற்கும், மற்றொன்று ஃபுட்சால் அரங்கம் அமைக்க – தற்போது அவர்…

பி.கே.ஆர். எம்.பி : 113 எம்.பி.க்களின் ஆதரவைக் காட்ட அன்வருக்கு…

பிரதமராக நியமிக்கப்பட, 113 எம்.பி.க்களின் ஆதரவு தனக்கு உள்ளது என்பதை நிரூபிக்க பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமுக்கு உரிமை உண்டு என்று பாசீர் கூடாங் எம்.பி. ஹசான் கரீம் தெரிவித்தார். "போர்ட்டிக்சன் எம்.பி.யான அன்வர், எதிர்காலத்தில் 113 எம்.பி.க்களின் ஆதரவை (அகோங்கிற்கு) காண்பிப்பார் என்ற செய்தி உண்மையாக இருந்தால்,…

கெடா எம்பி : பினாங்கிற்கு நிரந்தர இலவச நீர் –…

1985-ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தில், பினாங்குக்கு நிரந்தரமாக இலவச நீர் விநியோகிக்க வேண்டும் எனக் கூறப்படவில்லை என்று கூறி, கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி நோர், பினாங்கு மாநில அரசு ஆண்டுதோறும் RM50 மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அம்மாநில அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். 1985-ம்…

`எதிர்பார்ப்பை நிறுத்திவிட்டு, முன்னேறிச் செல்லுங்கள்` – `ஓத்தாய் ரீஃபோர்மாசி` அன்வரைக்…

புதிய அரசாங்கத்தை அமைக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை எதிர்பார்த்து நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று, அன்வர் இப்ராஹிம்முக்கு ஓத்தாய் ரீஃபோர்மாசி அறிவுறுத்தியுள்ளது. அதைவிடுத்து, ஒவ்வொரு மாநிலக் கட்சித் தலைவர்களையும் அன்வர் சந்திக்க வேண்டிய நேரம் இது என்று பி.கே.ஆர். தலைவரின் தீவிர ஆதரவு குழுவின் செயலாளரான அப்துல் ரசாக்…

சபாவின் கல்வி மற்றும் சமூக-பொருளாதாரச் சமத்துவமின்மைக்கு, பள்ளிக்கு மட்டம் போடும்…

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை உள்ளடங்கிய ஆர்வலர்கள் குழு ஒன்று, சபாவில் தீவிரமடைந்துள்ள ஆசிரியர் வருகை பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் பிரச்சாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. “தியாடா குரு” (ஆசிரியர் இல்லை) என்று அழைக்கப்படும் அப்பிரச்சாரத்தின் வழி, நீண்டகால பிரச்சினையாக இருக்கும் ஆசிரியர்கள் வருகை பற்றிய…

தேசிய முன்னணியும் கூட்டணியும், ஜிஇ தொகுதி பங்கீடு குறித்து அடுத்த…

அடுத்த வாரம், தேசிய முன்னணியும் தேசியக் கூட்டணியும் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து, பல விஷயங்களைப் பற்றி விவாதிக்கும்; குறிப்பாக, அடுத்தப் பொதுத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேசும் என்று தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் அன்னுவார் மூசா தெரிவித்தார். தலைநகரில் நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்தில், இரு தரப்பைச்…

கோவிட் 19 : இன்று 1,937 புதியத் தொற்றுகள், 55…

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,937 கோவிட் -19 புதியத் தொற்றுகளும் 9 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் கிள்ளான் பள்ளத்தாக்கிலும் (54.8 %), சபாவிலும் (22.1 %) பதிவாகியுள்ளன. ஜொகூரில் இன்று, பாதிப்புகள் எண்ணிக்கை மூன்று இலக்கங்களை எட்டியுள்ளது. அதேவேளையில், 911…

அன்னுவார் : அன்வர், டிஏபிக்கு எதிரான அம்னோவின் நிலைப்பாட்டை மாற்ற…

பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் மற்றும் டிஏபி ஆகியோருடன் ஒத்துழைக்க வேண்டாம் என்ற அம்னோவின் நிலைப்பாட்டை மாற்றும் முயற்சிகள் நடப்பதாக தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அன்னுவார் மூசா தெரிவித்தார். இந்த நிலைப்பாட்டை அம்னோ கூட்டாளிகளும் ஏற்றுக் கொண்டனர், ஆனால் சில தரப்பினர் மெதுவாக இந்த நிலைப்பாட்டை துடைத்தொழிக்க…

ரீனா: அடுத்த ஆண்டு ஜே.கே.எம்.-இல் 8,000 ஒப்பந்த வேலைகள் திறக்கப்படும்

மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு, அடுத்த ஆண்டு 8,000 ஒப்பந்த பதவிகளை சமூக நலத்துறையில் (ஜே.கே.எம்.) இணைக்கவுள்ளதாக அதன் அமைச்சர் ரீனா மொஹமட் ஹருண் தெரிவித்தார். இந்நடவடிக்கையானது ஜே.கே.எம். மறுசீரமைப்பிற்கு ஏற்ப அமைந்துள்ளதோடு, மக்களுக்கான சேவைகளை வலுப்படுத்துவதை உறுதி செய்யும் ஊழியர்களின் சுமையையும் எளிதாக்கும். "அதே…

அரசு ஊழியர்கள் அந்தந்த நிறுவனங்களில் நடக்கும் முறைகேடுகளைப் புகாரளிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்

ஒரு நிறுவனத்தில் நிகழும் முறைகேடுகளைத் தடுக்கும் முயற்சியாக, குறிப்பாக அவர்களின் நிலையைப் பொருட்படுத்தாமல் பல்வேறு மட்டங்களில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகள் மீது, அந்தந்த அமைச்சுகள் அல்லது துறைகளில் நடக்கும் முறைகேடுகளைப் புகாரளிக்க அரசு ஊழியர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு தவறான நடத்தை குறித்தும் அரசாங்கம்…

கோவிட் 19 : இன்று 1,810 புதியத் தொற்றுகள், 6…

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,810 கோவிட் -19 புதியத் தொற்றுகளும் 6 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளையில், 937 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கிள்ளான் பள்ளத்தாக்கில் 53.2 விழுக்காடு பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், சபா (29.4 %) மற்றும் பஹாங் (5.3 %)…

எஸ்.எம்.இ.-க்கள் கோவிட்-19 நெருக்கடியிலிருந்து தப்பிப்பிழைக்க வாடகை நிவாரண நிதி வேண்டும்…

கோவிட் -19 தொற்றினால் பாதிப்புக்குள்ளான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எஸ்.எம்.இ.) பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பிப்பிழைக்க, வாடகை செலவுகளுக்கு அரசாங்கம் மானியம் வழங்க வேண்டும் என்று கிள்ளான் எம்.பி. சார்லஸ் சாண்டியாகோ முன்மொழிந்தார். இதை "வாடகை நிவாரண நிதி" என்று அழைத்த அவர், போராடும் ஒவ்வொரு எஸ்.எம்.இ.-க்கும் இதுபோன்ற…

ரோஸ்மா வழக்கு : வழக்கு விசாரணை முடிவடைகிறது, நீதிமன்றம் வாதத்தை…

சரவாகில் உள்ள 369 கிராமப்புற பள்ளிகளில், சூரிய ஆற்றல் வழங்கல் மற்றும் நிறுவல் திட்டங்களுக்கான நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது தொடர்பில், முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் மனைவி, ரோஸ்மா மன்சோருக்கு எதிரான குற்றச்சாட்டின் வழக்கு விசாரணை, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று முடிவடைந்தது. RM187.5 மில்லியன் கேட்டது மற்றும்…

‘நாட்டின் எல்லைகளில் அதிக ஊழல்’ – ஐ.ஜி.பி.

அண்மையில் எல்லையில் நடந்த கடத்தல் நடவடிக்கைகளில், ஊழல் சம்பந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணையை நடத்த, புக்கிட் அமானின் நேர்மை மற்றும் தரநிலை இணக்கத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குநர் அப்துல் ஹமீத் படோர் தெரிவித்தார். பல குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும், பெறப்பட்ட…

சிறைச்சாலைகள் சீர்திருத்தம் – எம்.பி.க்களும் செனட்டர்களும் ஒன்றிணைகின்றனர்

அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் செனட்டர்கள் அடங்கிய குழு ஒன்று, நெரிசலான சிறைச்சாலைகள் மற்றும் தடுப்புக்காவல் மையங்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிகளை ஆய்வு செய்ய நிறுவப்பட்டுள்ளது. நெருக்கமான சூழல்களினால், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத நிலையில், இதுபோன்ற மையங்கள் கோவிட் -19 தொற்றுப் பரவலின் மையமாக…

ஜுரைடா : ஹைலெண்ட் டவர்ஸ் தளத்தில் நினைவுச்சின்னம் எழுப்ப அரசு…

கடந்த 27 ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்ட நிலையில், இடிந்து விழுந்த ஹைலேண்ட் டவர்ஸ் கொண்டோமினிய இடத்தில் ஒரு நினைவுச்சின்னம் கட்ட வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைச்சு திட்டமிட்டுள்ளது. 1993-ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி, 48 குடியிருப்பாளர்களைக் கொன்ற சோகமான சம்பவத்தை நினைவுகூரும் வகையில் இந்த நினைவுச்சின்னம், பூங்கா…

மாணவர்கள் குறைந்த தமிழ்ப்பள்ளியைக் கெட்டிக்கார மாணவர் தங்கிப் படிக்கும் பள்ளியாக…

இரா குமரன் வேலு | நமது கல்விமுறையில் பல்வேறு வகையான பள்ளிகள் இருக்கின்றன. மொழிவாரியாக தேசியமொழி, சீனமொழி, மற்றும் தமிழ்மொழித் தொடக்கப் பள்ளிகள், மழலையர்ப் பள்ளிகள் இருக்கின்றன. அரசாங்க இடைநிலைப் பள்ளிகளில் கூட, தங்கிப்படிக்கும் பள்ளிகளான முழு உறைவிடப் பள்ளிகள் (Sekolah Berasrama Penuh), அன்றாடப் பள்ளிகள் (Sekolah…

கோவிட் 19 : இன்று 2,234 புதியத் தொற்றுகள், கிள்ளான்…

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 2,234 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 70 விழுக்காடு கிள்ளான் பள்ளத்தாக்கில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சிலாங்கூர் சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, சிலாங்கூரில் மிகப்பெரிய பாதிப்பு, செருலிங் பணியிடத் திரளை சம்பந்தப்பட்டது. புதிய வழக்குகள் முக்கியமாக காப்பார் மற்றும்…