DAP சட்டமன்ற உறுப்பினர் இயோ பீ யினை அம்னோ பொதுச் செயலாளர் அசிரஃப் வாஜ்டி துசுகி கடுமையாக விமர்சித்துள்ளார், மடானி அரசாங்கத்தில் உள்ள கூட்டாளிகளுடனான தனது உறவுகளை BN மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது என்று கூறியுள்ளார். முன்னாள் அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கின் வீட்டுக்காவல்…
முகிரிஸ் பல்டி அடித்ததைத் தொடர்ந்து கெராக்கான் தேர்தல் பரப்புரைக்கு உதவும்
சுங்கை லிமாவ் இடைத் தேர்தலில். கெராக்கான் இளைஞர் பகுதி மதில்மேல் பூனை போல் இருக்கும் வாக்காளர்களைக் கவர்ந்திழுக்க கெடா மந்திரி புசாருக்கு உதவும். சுமார் 100 கெராக்கான் இளைஞர்கள், சுங்கை லிமாவ் சென்று, அங்கு“எந்தத் தரப்பிற்கு ஆதரவளிப்பது என்று முடிவெடுக்காதிருக்கும் வாக்காளர்களைக் கவரும்” நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என கெராக்கான்…
மலேசியா நாடாளுமன்றம் பிரிட்டீஷ் காமன்ஸ் அவையைவிட மேலானது, காசிம்
பிரிட்டீஷ் காமன்ஸ் அவையைவிட மலேசிய நாடாளுமன்றம் மேலானது ஏனென்றால் "சொரசொரப்பற்ற விவாதங்கள்" நடத்தப்படுவதற்கான வசதிகள் தரப்பட்டுள்ளன என்று பிரதமர் துறை அமைச்சர் ஷகிடான் காசிம் கூறினார். நாடாளுமன்ற விவகாரங்களுக்கு பொறுப்பான ஷகிடான் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் இதனைக் கூறினார். பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் "மேஜைகள் கூட இல்லை", என்றாரவர். "அவர்களது…
சீனர்களுக்கு உதவப் போவதாக முக்ரீஸ் இப்போது சூளுரைக்கிறார்
சீனப்பள்ளிகளுக்கு உதவமாட்டேன். சீனர்கள் பாரிசானை ஆதரிக்கிறார்கள் என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டும் என்றெல்லாம் சீன சமூகத்திற்கு சவால் விட்ட கெடா மந்திரி புசார் முக்ரீஸ் மகாதிர் இப்போது வேறொரு தொனியில் அவர் அச்சமூகத்திற்கு உதவப் போவதாக உறுதியளித்தார். சுங்கை லிமாவ் டாலம், மசீச இடைத்தேர்தல் நடவடிக்கை மையத்தில் நடைபெற்ற…
என்ஆர்டி: போலி ஐசி வைத்துள்ள வெளிநாட்டவர் பாதுகாப்பு நிறுவனங்களில் வேலை…
பல பாதுகாப்பு நிறுவனங்கள் போலி அடையாள அட்டை(ஐசி) வைத்துள்ள வெளிநாட்டவர்களை வேலைக்கு வைத்திருப்பதைத் தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி) அடையாளம் கண்டிருக்கிறது. எனவே, போலி ஐசி வைத்துள்ள வெளிநாட்டவர், வங்கிகளின் பாதுகாப்புப் பிரிவுகளில் வேலை செய்வது தமக்கு ஆச்சரியமளிக்கவில்லை என என்ஆர்டி விசாரணை, அமலாக்க இயக்குனர் வான் சக்கரியா வான்…
பள்ளிகளில் குர்பான் -அமைச்சர்களிடையே முரண்பாடு
இரண்டாம் கல்வி அமைச்சர் இட்ரிஸ் ஜூஸோ, பள்ளிகளில் மாடுகள் அல்லது மற்ற விலங்குகள் குர்பான் செய்யப்படுவதை அமைச்சு தடை செய்யாது என்று கூறுகிறார். ஆனால், அதைச் செய்யும்போது பள்ளி நிர்வாகம் மற்ற இனத்தவர் உணர்வுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றவர் வலியுறுத்தினார். “அப்படிப்பட்ட நிகழ்வுகளை நடத்தும்போது மற்றவர்களையும் மதிக்க…
அஸ்மின்: சிலாங்கூர் மந்திரி புசார் பதவியிலிருந்து காலிட்டை அகற்ற முயலவில்லை
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமை பதவியிலிருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபடுவதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார். காலிட்டைப் பதவியிலிருந்து தூக்க வேண்டிய அவசியமில்லை என்றாரவர். “எதனால் இவ்விவகாரம் அடிக்கடி தலைநீட்டுகிறது என்று தெரியவில்லை. நாங்கள் கருத்துச் சொல்லக் கூடாதா, என்ன?”, என்றவர்…
பிகேஆர்: உதவித்தொகை அகற்றப்பட்டதால் சீனி உற்பத்தியாளர்களுக்கு 1பில்லியனுக்கு மேல் ஆதாயம்
அரசாங்கம் சீனிக்கான உதவித்தொகையை இரத்துச் செய்ததால் முக்கிய சீனி உற்பத்தியாளர்கள், நல்ல அரசியல் தொடர்புகளைக் கொண்டுள்ள செண்ட்ரல் சுகர் நிறுவனத்தின் சைட் மொக்தார் அல் புஹாரி போன்றோர் ரிம 1பில்லியன் ஆதாயத்தை அள்ளிக் குவிப்பார்கள் என்று மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். “உதவித்தொகை இரத்தாவதற்குமுன்பு அந்…
மகாதிர்: அம்னோவில் தகுதியற்றவர்கள் வெற்றிபெற பண அரசியலே காரணம்
அண்மையில் நடந்து முடிந்த அம்னோ தேர்தலில் வெற்றிபெற தகுதியற்ற பலர் வென்றார்கள் என்றால் அதற்கு, அவர்கள் பணத்தை வாரி இறைத்ததுதான் காரணமாகும் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். “அம்னோ தேர்தலில் ஊழலை ஒழித்துவிட்டதாகத் தெரிவித்தார்கள், நான் நம்பவில்லை. “நிறைய பணம் செலவிடப்பட்டதாக நினைக்கிறேன். வெற்றிபெற முடியாதவர்கள்…
இனி கோயில் உடைப்பை அனுமதியோம்: குழு சூளுரை
செப்டம்பர் மாதம் கோலாலும்பூரில் 101ஆண்டு பழைமையான ஸ்ரீமுனீஸ்வரர் காளியம்மன் ஆலயத்தை உடைக்கும் முயற்சி நடைபெற்றதைத் தொடர்ந்து வருங்காலத்தில் கோயில் உடைப்புகளைத் தடுப்பதற்காக இந்து பாதுகாப்புப் படை ஒன்று அமைக்கப்படும் என தெலுக் இந்தான் முன்னாள் எம்பி, எம். மனோகரன் கூறினார். அதில் இளைஞர்கள் சேர்க்கப்பட்டு அவர்கள் ஆலயங்களைப் பாதுகாக்கவும் …
பரிசோதனைக்காக’ ஹெரால்ட் பறிமுதல் செய்யப்பட்டதாம்: அரசாங்கம் கூறுகிறது
‘கிறிஸ்துவ இதழான த ஹெரால்ட் பறிமுதல் செய்யப்பட்டதைத் தற்காத்துப் பேசியுள்ளது உள்துறை அமைச்சு. அண்மையில் மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்த வார இதழ் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று தீர்ப்பளித்ததைச் சுட்டிக்காட்டிய அமைச்சு, அதில் அச்சொல் பயன்படுத்தப்படாதிருப்பதை உறுதிசெய்வதற்காகவே அவ்வாறு செய்யப்பட்டது என விளக்கமளித்தது. “பரிசோதனையில் அதில் ‘அல்லாஹ்’…
“ரொம்ப நன்றி” ஒரு பட்ஜெட் நாடகம்
மலேசிய பிரதமர் நஜிப் 2014-ஆம் ஆண்டுக்கான ஒரு பொறுப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் என்பதை ஏற்றுக் கொள்வதாகவும் ஆனால், அது இரண்டு அடிப்படை பிரச்சனைகளுக்குத் தீர்வு காண தவறி விட்டது என சாடுகிறார் கா. ஆறுமுகம். குறைந்த சம்பளக் கொள்கையில் மாற்றமில்லை என்பதால் இந்த பட்ஜெட் உண்டாக்கும் விலைவாசி…
த ஹெரால்ட் தடுத்து வைக்கப்பட்டது: பிரதமரின் வாக்குறுதி என்னவாயிற்று?
கடந்த வெள்ளிக்கிழமை கோத்தா கின்னாபாலு விமானநிலையத்தில் உள்துறை அமைச்சின் அதிகாரிகளால் மலேசிய ரோமன் கத்தோலிக்க வார வெளியீடான த ஹெரால்ட்டின் 2,000 பிரதிகள் தடுத்து வைக்கப்பட்டன. இந்தத் தடுத்து வைக்கும் நடவடிக்கை "அல்லாஹ்" என்ற சொல் சாபா மற்றும் சரவாக்கில் பயன்படுத்தலாம் என்று பிரதமர் நஜிப் அளித்திருந்த வாக்குறுதி…
கட்சி பிஎன்னிலிருந்து வெளியேற வேண்டும், கெராக்கான் பேராளர்கள்
கட்சி கடந்த 13 ஆவது பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியுற்றதைத் தொடர்ந்து கட்சி தொடர்ந்து பாரிசான் பங்காளியாக இருப்பது குறித்து நேற்று நடைபெற்ற கெராக்கான் தேசிய மாநாட்டில் பல பேராளர்கள் கேள்வி எழுப்பினர். கெராக்கன் அதற்குரிய மரியாதையைப் பெறவில்லை என்று ஜொகூர் மாநில பேராளர் டான் லாய் சூன்…
பிரதமர் துறைக்கு மிக அதிகமான நிதி ஒதுக்கீடு
நாட்டின் நிதி பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு மக்கள் வாயையும் வயிற்றையும் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தும் பிரதமர் நஜிப் ரசாக், அவரது அமைச்சின் செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி இதற்குமுன் இல்லாத அளவிற்கு பெருத்துள்ளது. பிரதமர் துறையின் அடுத்த ஆண்டிற்கான செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ரிம16.45 பில்லியன் ஆகும். நடைமுறைச் செலவுக்கு…
மா கெராக்காரன் தலைவராக தேர்வு பெற்றார்
பாரிசான் பங்காளிக் கட்சியான கெராக்கான் அதன் நடப்பு இடைக்கால தலைமைச் செயலாளர் மா சியு கியோங்கை அக்கட்சியின் 2013- 2016 தவணைக்கான தலைவராக தேந்தெடுத்துள்ளது. மா 1086 வாக்குகளைப் பெற்று அவரை எதிர்த்து போட்டியிட்ட பினாங்கு மாநில கெராக்கான் தலைவர் தெங் சாங் இயோவை தோற்கடித்தார். தெங் 577…
தமிழ்ப்பள்ளிகளுக்கான 2000 ஏக்கர் நில ஒப்பந்தம் குறித்த முழு விபரம்…
-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், அக்டோபர் 26, 2013. கடந்த புதன்கிழமை, 23 ஆம் தேதி ஈப்போவில் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கமும் பேராக் இந்திய மேம்பாட்டு கல்வி வாரியமும் 2000 ஏக்கர் நிலத்தை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டதாக தமிழ் நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. …
நஜிப்: சீனி உதவித் தொகை இரத்தானது தாம்பத்திய உறவுக்கு நல்லது
சீனிக்கான உதவித் தொகையை அரசாங்கம் இரத்துச் செய்ததைத் தற்காத்துப் பேசிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அதிக சீனி ஒருவரின் புணர்ச்சித்திறனைப் பாதிக்கும் என்று எச்சரித்தார். இன்று காலை கெராக்கான் ஆண்டுக்கூட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது நஜிப் இவ்வாறு கூறினார். நேற்று, அவர் தம் பட்ஜெட் உரையில்,…
மாடுவெட்டிய விவகாரம் தொடர்பில் கமலநாதனைச் சாடியது பெர்காசா
கல்வி அமைச்சு பள்ளிகளில் மாடுவெட்ட அனுமதித்ததில்லை என்று அறிக்கை வெளியிட்டதன்வழி கல்வி அமைச்சர் II பி.கமலநாதன் இஸ்லாத்தை அவமதித்து விட்டார் என பெர்காசா சாடியுள்ளது. “பள்ளிகளில் குர்பான் செய்ய அனுமதி இல்லை என்று பி.கமலநாதன் அறிக்கை வெளியிட்டது மலாய்க்காரர்களையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும் செயலாகும்”, என பெர்காசா அமைப்பின் இளைஞர்…
கமலநாதன், பிரச்னையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்
உங்கள் கருத்து ‘அவ்வப்போது அறிவுரை கூறுவோம் என்கிறீர்களே, அதன் பொருள் என்ன? ஒவ்வோர் ஆண்டும் இது தொடர்வதற்கு இடமளித்து அதன்பின்னர் செய்தித்தாள்களில் நாடகமாட போகிறீர்களா? கமலநாதன்: பள்ளிகளில் குர்பானுக்கு இடமில்லை ஆரிஸ்46: பாவம் கல்வி துணை அமைச்சர் II, பி.கமலநாதன். அமைச்சின் விதிமுறைகளை மீறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு எதிராக…
ஜிஎஸ்டி கூடுதலான வரியல்ல, முகைதின் யாசின்
நேற்று அறிவிக்கப்பட பொருள் மற்றும் சேவைகள் வரி கூடுதலான வரியல்ல. இவ்வரி நீண்ட காலமாக அமலில் இருந்து வரும் விற்பனை மற்றும் சேவைகள் வரிக்கு மாற்றாகும் என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறினார். ஏன் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு பல அறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன என்றும் அவர்…
புதிய வரி விதிப்பின் மூலம் அரசாங்கம் மக்களைத் தண்டிக்கிறது, அன்வார்
பிரதமர் நஜிப் அறித்த 2014 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு அறிக்கையில் பொருள்கள் மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது "மக்களைத் தண்டிக்க" உதவுகிறது என்று எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். இந்த வரி ஏழை மற்றும் செல்வந்தர்களுக்கிடையிலான பிளவை மேலும் விரிவாக்க உதவும் என்று கூறிய அன்வார்,…
நாளை உதவித் தொகை இரத்தாவதால் சீனி விலை உயரும்
சீனிக்கு வழங்கப்பட்டுவரும் 34சென் உதவித்தொகை நாளை தொடக்கம் இரத்துச் செய்யப்படுவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அறிவித்தார். இப்போது சீனியின் விலை ஒரு கிலோகிராம் தீவகற்ப மலேசியாவில் ரிம2.50 ஆகவும் கிழக்கு மலேசியாவில் ரிம2.60 ஆகவும் உள்ளது. இந்நடவடிக்கை நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் செய்யப்பட்டதாக…
ஜிஎஸ்டி 2015-இல் அமலாக்கப்படும்
மிகுந்த சர்ச்சைக்குள்ளான பொருள், சேவைகள் வரி(ஜிஎஸ்டி), 6 விழுக்காடு என்னும் விகிதத்தில் 2015, ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அமலாக்கம் காணும். இன்று நாடாளுமன்றத்தில் 2014 பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இதனைத் தெரிவித்தார். அது அமலாக்கம் காணும்போது விற்பனை, சேவை வரி இரத்தாகும். அரிசி,…


