குவாந்தான் எம்பி: இசி, வாக்காளர் பட்டியலைச் சீர்படுத்தும் வேலையை முறையாகச்…

தேர்தல் ஆணையம்,  வாக்காளர் பட்டியலில் செய்யப்படும் திருத்தங்களை முன்கூட்டியே தெரியப்படுத்துவதில்லை என்று பிகேஆர் கூறுகிறது. குவாந்தான் எம்பி பவுசியா சாலே, குவாந்தானில் மட்டும் 155 பெயர்கள் திடீரென்று முளைத்துள்ளன, 433 பெயர்கள் அகற்றப்பட்டுள்ளன என்றார். “பல பெயர்கள் காரணமின்றி காணாமல்போய்விட்டன, பலரின் பெயர்கள் (மறுப்புத் தெரிவிப்பதற்கு வசதியாக) முதலில்…

ஜைட்: “பெக்கானில் போட்டியிட நானே பொருத்தமான வேட்பாளன்”

கித்தா கட்சியின் முன்னாள் தலைவர் ஜைட் இப்ராகிம், பெக்கானில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை எதிர்த்துப் போட்டியிட தாமே பொருத்தமான வேட்பாளர் என்று கூறிக்கொள்வது ஏன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். அதேவேளை, தம்மை அங்கு பக்காத்தான் ரக்யாட் வேட்பாளராக நிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்போவதில்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார். “சிலர் கூறுவதுபோல்…

புதல்வர் பற்றி வினவப்பட்ட போது மகாதீர் ஆத்திரமடைந்தார்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், தாம் ஆலோசகராகப் பணியாற்றும் பெட்ரோனாஸ் அண்மையில் வழங்கிய குத்தகையில் சுயநலன் சம்பந்தப்பட்டுள்ள சாத்தியம் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது ஆத்திரப்பட்டார். அவரது புதல்வர் மொஹ்சானி மகாதீர் உதவித் தலைவராக இருக்கும் SapuraKencana Petroleum Sdn Bhdக்கு 836 மில்லியன் ரிங்கிட்…

நிக் அஜிஸ் உத்துசானை கேலி செய்கிறார், நுருல் மீது கருத்துரைக்க…

சமயச் சுதந்திரம் மீது பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் விடுத்துள்ளதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய அறிக்கை மீது பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் கருத்துறைக்க மறுத்துள்ளார். அந்த அறிக்கையை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள உத்துசான் மலேசியா நம்பிக்கைக்குரிய வெளியீடு அல்ல என்பதே…

‘இஸ்லாத்தை களங்கப்படுத்தியதாக நுருல் மீது குற்றம் சாட்டப்படலாம்’

இஸ்லாத்தை விட்டு வெளியேறுமாறு முஸ்லிம்களை ஊக்குவிக்கும் அறிக்கையை பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் வெளியிட்டார் என்பது உண்மை என்றால் 'இஸ்லாத்தை'  களங்கப்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்படலாம். இவ்வாறு பிரதமர் துறை துணை அமைச்சர் மாஷித்தா இப்ராஹிம் இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது தெரிவித்துள்ளார்.…

சுவாராம் விசாரணையில் ஆர்ஒஎஸ் விசாரணையில் அழைப்பாணையை மூவர் மீறுவர்

மனித உரிமைகளுக்குப் போராடும் அரசு சாரா அமைப்பான சுவாராம் மீது நடத்தப்படும் விசாரணை தொடர்பில் ஆர்ஒஎஸ் என்ற சங்கப்பதிவதிகாரி அலுவலகம் அழைப்பாணை அனுப்பிய ஏழு மனித உரிமைப் போராளிகளில் மூவர் தங்கள் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்கு மறுத்துள்ளனர். பத்து எம்பி தியான் சுவா, மலேசிய சோஷலிசக் கட்சி தலைமைச்…

லியூ: சிலாங்கூர் பத்துமலை ‘கொண்டோ’ அங்கீகாரத்தை ரத்துச் செய்யக் கூடும்

சிலாங்கூர் மாநில சுற்றுச் சூழல் துறை தெரிவித்த ஆட்சேபங்களை அலட்சியம் செய்ததற்காக பத்து மலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள டோல்மைட் பார்க் அவினியூ கொண்டோமினியம் திட்டத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை மாநில அரசாங்கம் ரத்துச் செய்யக் கூடும். அந்தத் தகவலை இன்று மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ வெளியிட்டார்.…

பெட்ரோனாஸ் விளம்பரம் தீபாவளி உணர்வை வெளிப்படுத்தத் தவறி விட்டது

உங்கள் கருத்து: 'யாரோ ஒருவர் அடுத்த காங்னாம் பாணி ஆட்டத்தை வழங்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரது வேலை மிக மோசமானது' பெட்ரோனாஸ் தீபாவளி விளம்பரம் கண்டிக்கப்படுகின்றது சின்ன அரக்கன்: கடந்த காலத்தில் பெட்ரோனாஸ் பல நல்ல தீபாவளி விளம்பரங்களைத் தயாரித்துள்ளதை நாம் பாராட்ட வேண்டும். ஆனால் இந்த…

ஊடகங்கள் மோசமானவை என்கிறார் சைட் மொக்தார்

தம்மை மோசமானவராகச் சித்திரித்துக் காட்டுவதே ஊடகங்களுக்கு வாடிக்கையாக போய்விட்டது என்று பிரபல தொழில் அதிபர் சைட் மொக்தார் அல்புகாரி முதன்முதலாக வெளிவந்திருக்கும் அவரது வாழ்க்கை வரலாற்று நூலில்  கூறியுள்ளார். நூலின் ஆசிரியர் பிரமீளா மோகன்லால். நூலாசிரியரின் பிவிஎம் கம்முனிகேசன்ஸ் நிறுவனமே அதை வெளியிட்டிருக்கிறது. “எத்தனையோ பேர் அதிகார அமைப்பை…

முன்னாள் போலீஸ்காரர்: குகன் மரணத்துக்கு நான் பலிகடாவாக்கப்பட்டேன்

போலீஸ் கைதியான ஏ குகனுக்கு காயத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் போலீஸ்காரர் ஒருவர், தமக்கு விருப்பமில்லாமல் இருந்தும் தம்மை முன்னாள் சுபாங் ஜெயா ஒசிபிடி பலிகடாவாக்கி விட்டதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார். குகனின் தாயார் தொடுத்துள்ள 100 மில்லியன் ரிங்கிட் போலீஸ் தடுப்புக் காவல் மரண…

ROS நடத்தும் விசாரணையில் தாம் இழுக்கப்பட்டதை புவா ஆட்சேபிக்கிறார்

மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் மீது  ஆர்ஒஎஸ் என்ற சங்கப் பதிவதிகாரி அலுவலகம் போலீஸ் துணையுடன் விசாரணைக்கு அழைத்துள்ள நபர்களில் பெட்டாலிங் ஜெயா எம்பி டோனி புவா கடைசியாக அழைக்கப்பட்டுள்ளார். அது குறித்து ஆத்திரமடைந்துள்ள புவா," இது மென்மேலும் அபத்தமாகி வருகின்றது. சுவாராமை விசாரிக்கும் துறையில் மூளையில்லாதவர்கள்…

மலேசியாகினி, இன்சைடர் ஆகியவற்றுக்கு எதிராக ஜோகூர் போலீஸ் புகார்

முகநூலில் ஜோகூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் பதிவிட்டிருந்த ஓர் ஆடவர் கைது செய்யப்பட்டது தொடர்பில் செய்தி வெளியிட்டிருந்த இணைய செய்தித்தளங்களான மலேசியாகினி, மலேசியன் இன்சைடர் ஆகியவற்றுக்கு எதிராக ஜொகூர் போலீஸ் இரண்டு புகார்களைச் செய்துள்ளது. 27-வயதுடைய அளவு மதிப்பீட்டாளரான அவ்வாடவர் விசாரணைக்கு உதவியாக கோலாலும்பூர், வங்சா மாஜுவில் வெள்ளிக்கிழமை…

ஜயிஸ் உத்துசானையும் விசாரிக்க வேண்டும் என நுருல் இஸ்ஸா விருப்பம்

ஜயிஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை தம்மை விசாரிப்பதற்கு முடிவு செய்தால் மலாய் மொழி நாளேடான உத்துசான் மலேசியாவையும் விசாரிக்க வேண்டும் என பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் கூறியிருக்கிறார். "ஆம் ஜயிஸ் உத்துசான் மலேசியாவையும் விசாரணைக்கு அழைக்கும் என நான் நம்புகிறேன். காரணம்…

பிகேஆர் தலைமைத்துவ மன்ற உறுப்பினர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது

தடை செய்யப்பட்டுள்ள அல் அர்ஹாம் அமைப்பின் முன்னாள் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சி ஒன்றின் தொடர்பில் பிகேஆர் தலைமைத்துவ மன்ற உறுப்பினர் பத்ருலாமின் பாஹ்ரோன் மீதும் மற்றும் 16 பேர் மீதும் ஜயிஸ் எனப்படும் இஸ்லாமிய விவகாரத் துறை டிசம்பர் 20ம் தேதி குற்றம் சாட்டவிருக்கிறது. தடை…

அஹ்மட் இரண்டாம் தடவை கைது செய்யப்பட்டது நீதிமன்ற நடைமுறையை அவமதிக்கும்…

முகநூலில் ஜோகூர் அரச குடும்பத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் வெள்ளிக்கிழமை தடுத்து வைக்கப்பட்ட அஹ்மட் அப்ட் ஜாலில், நேற்று விடுவிக்கப்பட்டு மறுபடியும் கைது செய்யப்பட்டார். இரண்டாவது தடவை அவர் கைது செய்யப்பட்டது, “ஒரு மிரட்டல் என்பதுடன் நீதிமன்ற நடைமுறைகளை அவமதிக்கும் செயலுமாகும்” என்று அவரின் வழக்குரைஞர் பாடியா நட்வா…

ஜைட் பக்காத்தான் வேட்பாளரா? ஆச்சரியத்தில் பிகேஆர்

பார்டி கித்தா தலைவர் ஜைட் இப்ராகிம் எதிர்வரும் போட்டியில் பக்காத்தான் ரக்யாட் சார்பில் போட்டியிட விருப்பம் கொண்டிருப்பது அறிந்து ஆச்சரியமடைகிறார் பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில்.  அத்துடன் ஜைட், ஈராண்டுகளுக்குமுன் தாமே நிறுவிய கித்தா கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகியது ஏன் என்பதும் சைபுடினுக்குப் புரியவில்லை.…

மலேசிய இந்தியர்களுடைய நிலை பற்றி ஒர் எம்பி துணை அமைச்சருடன்…

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியர்களுடைய நிலையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் தவறி விட்டதாகக் கூறி மலேசிய இந்திய எம்பி ஒருவர் மக்களவையில் பிஎன் துணை அமைச்சர் ஓருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். "இந்தியர்கள் ஒரங்கட்டப்பட்டுள்ளனர். அவர்கள் மூன்றாம் தரக் குடி மக்களாகியுள்ளனர்," என ஈப்போ பாராட் எம்பி எம் குலசேகரன் இன்று…

பாலா அவர்களே உங்கள் விஷயத்தை எம்ஏசிசி புலனாய்வு செய்யும் என…

"உங்களிடம் ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள். பிஎன் கட்டுக்குள் இருக்கின்ற ஒர் அமைப்பு பிஎன் -னில் உள்ளவர்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு எதுவும் செய்யாது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே." "எம்ஏசிசி மௌனமாக இருந்தால் தனிப்பட்ட துப்பறிவாளர் பாலா எல்லாவற்றையும் வெளியிடுவார் தாய்கோதாய்: தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம் அவர்களே, பிஎன்…

‘நாம் டப்பாங் செய்வோம்’ : பெட்ரோனாஸ் தீபாவளி விளம்பரம் கண்டிக்கப்படுகிறது

இவ்வாண்டு பெட்ரோனாஸ் இந்துக்களுக்கு 'மகிழ்ச்சியான தீபாவளி' என வாழ்த்துக் கூறும் விளம்பரம் கண்டனத்துக்கு இலக்காகியுள்ளது. காலஞ்சென்ற திரைப்படத் தயாரிப்பாளர் யாஸ்மின் அகமட், பாச உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரித்த விளம்பரங்களுக்கு நேர்மாறாக அது அமைந்துள்ளது. மூன்று நிமிடங்களுக்கு ஒடும் அந்த விழாக் கால விளம்பரத்தின் தலைப்பு 'நாம் டப்பாங்…

அம்னோ உலாமா: பெரும்பான்மையினர் சரி என்றால் சுவா ஹுடுட்டை ஒப்புக்…

ஹுடுட் சட்டத்தை அமலாக்கும் பாஸ் யோசனையை மசீச எதிர்ப்பதாக அதன் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் அடிக்கடி அறிக்கைகள் விடுத்த போதிலும் பெரும்பான்மை மக்கள் இஸ்லாமிய கிரிமினல் சட்டத்தை ஏற்றுக் கொண்டால் அதனை ஏற்றுக் கொள்ள அவர் தயாராக இருப்பதாக அண்மையில் அவரைச் சந்தித்த அம்னோ தலைவர்…

சுவாராம் விசாரணையில் உதவ பெர்சே ஆர்வலருக்கு ஆர்ஓஎஸ் அழைப்பாணை

சங்கப் பதிவாளர் அலுவலகம் (ஆர்ஓஎஸ்), மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாராம் மீதான விசாரணையில் உதவ சமூக ஆர்வலர் மரியா சின் அப்துல்லாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது, அந்த அமைப்புடன் எவ்வித தொடர்பும் கொண்டிராத அவருக்குப் பெரும் திகைப்பைத் தந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை அழைப்புக்கடிதம் தம் அலுவலகத்துக்கு…

பிகேஆர்: AES குத்தகையாளர் ஜோகூர் அம்னோவுடன் தொடர்புடையவர்

சர்ச்சைக்கு இலக்காகி உள்ள போக்குவரத்துக் குற்றங்களுக்கான இயல்பான அமலாக்க முறைக்கு (AES) குத்தகை கொடுக்கப்பட்டுள்ள இரண்டு நிறுவனங்களில் ஒன்று ஜோகூர் அம்னோவுடன் தொடர்புடையது என்பது மலேசிய நிறுவன ஆணையப் பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக எதிர்க்கட்சியான பிகேஆர் கூறுகின்றது. "அந்த  AES குத்தகை நிறுவனங்களில் ஒன்றின் பெரிய பங்குதாரர்…

‘கிறிஸ்துவ சார்புடைய அன்வார்’ துண்டுப் பிரசுரங்கள் காணப்பட்டன

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் பல்வகை சமயத்தன்மையை நம்புகின்றவர், கிறிஸ்துவத் தலைவர்களுடன் அணுக்கமான உறவுகளைக் கொண்டுள்ளவர் எனக் கூறிக் கொள்ளும் பல மர்ம துண்டுப் பிரசுரங்கள் சிலிம் ரிவரில் இன்று விநியோகம் செய்யப்பட்டுள்ளன. நாளை அன்வார் அங்கு செராமா ஒன்றில் பேசவிருக்கும் வேளையில் அவை விநியோகம் செய்யப்பட்டுள்ளன.…