போக்குவரத்துத் துறை அமைச்சர் லோக் சியூ ஃபூக், இது சரக்குந்து மற்றும் தளவாடத் துறைகளில் நிலவும் ஓட்டுநர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உதவும் என்று கூறுகிறார். இராணுவ முன்னாள் வீரர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்கள் தங்களின் கனரக வாகன ஓட்டுநர் உரிமங்களை (Heavy Vehicle Driving Licences), 'கிளாஸ் E'…
சுல்தான்களுடன் நெருங்கிப் பழக உதவும் என்பதால் எம்பி ஆக ஆசைப்படுகிறார்…
ஆட்சியாளர் மன்றத்தில் சுல்தான்களிடமும் அதிகாரம் படைத்த மற்ற வட்டாரங்களுடனும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால்தான் அன்வர் இப்ராகிம் மந்திரி புசார்(எம்பி) ஆக விரும்புகிறார். அன்வரின் முன்னாள் தோழர் சந்த்ரா முஸாபார் , பெரித்தா ஹரியான் நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார். “எம்பி பதவி மட்டுமே அன்வரின் நோக்கம் என்று …
அஜிஸ் பாரி: சுல்தான் அறுதி அதிகாரம் படைத்தவரல்ல
சுல்தான்கள் அரசமைப்பைப் பின்பற்ற வேண்டிவர்கள். அந்த வகையில் மந்திரி புசார்களை நியமனம் செய்வதில் அவர்களுக்கு அறுதி அதிகாரம் ஒன்றும் கிடையாது என்கிறார் அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அஜீஸ் பாரி. முன்னாள் நீதிபதி முகம்மட் நூர் அப்துல்லா, சிலாங்கூர் மாநில அரசமைப்புப்படி மந்திரி புசார்களை நியமனம் செய்வதில் சுல்தானுக்கே …
ரபீஸி: அன்வார் விவகாரத்தில் விளையாடுகிறோம் என்று எண்ணினால், பிகேஆரை நிராகரியுஙகள்
கட்சி ஜனநாயக நடைமுறைகளை தவறாக பயன்படுத்துகிறது என்று மக்கள் கருதினால், காஜாங் இடைத் தேர்தலில் அத்தொகுதி வாக்காளர்களால் நிராகரிக்கப்படுவதை பிகேஆர் ஏற்றுக்கொள்ள தயார் என்று அக்கட்சியின் வியூக இயக்குனர் ரபீஸி ரம்லி கூறுகிறார். "நமது முடிவு ஜனநாயக நடைமுறைகளுடன் விளையாடுவதாகும் என்று சிலர் வர்ணிக்கின்றனர். இல்லை. நாங்கள் ஒரு…
மகாதிர்: காஜாங்கில் மசீசதான் போட்டியிட வேண்டும்
காஜாங் இடைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மசீசவுக்குத்தான் கொடுக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். “மசீச மீண்டும் தலையெடுக்கப் பார்க்கிறது. அதனால்தான் அதற்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டும்”. அத்தொகுதியில் சீனர்கள் அதிகம் இருந்தால் அங்கு மசீச போட்டியிடுவதுதான் முறையாகும் என்று மகாதிர் …
காஜாங் இடைத் தேர்தல்: தவறு செய்துவிட்டது பிகேஆர்
மசீச தலைவர் லியோ தியோங் லாய், காஜாங்கில் இடைத் தேர்தல் நடத்த பிகேஆர் செய்த முடிவு “தப்பு”என்று கூறியுள்ளார். “மக்கள் வாழ்க்கைச் செலவினம் கூடியிருப்பதாலும் பொருளாதாரப் பிரச்னைகளாலும் ஏற்கனவே சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். “அவர்களும் (பிகேஆர்) பொருளாதாரத்தை உயர்த்த கவனம் செலுத்த வேண்டுமே தவிர சுய விருப்பத்துக்காக இடைத் தேர்தலை …
இவ்வாண்டு கூட்டரசு பிரதேச தினக் கொண்டாட்டம் இல்லை
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சிக்கனத்தை வலியுறுத்தி இருப்பதால் அரசாங்கம் இவ்வாண்டு கூட்டரசு தினத்தை விமரிசையாகக் .கொண்டாடப் போவதில்லை. கொண்டாட்டத்துக்குச் செலவிடும் பணத்தைத் தேவைப்படுவோருக்குக் கொடுத்து உதவப்போவதாக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறினார். “கொண்ட்டாட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகையை ரிம7 மில்லியனை ரிம1.5 மில்லியனாகக் …
பதவி துறக்கும் அரசியல்வாதிகளைத் தண்டிக்க சட்டம் தேவை
தகுந்த காரணமின்றி தொகுதிகளைக் காலி செய்யும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் தண்டிக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என தலைமைத்துவ, மேம்பாட்டு ஆய்வுக் கழகம்(லீட்) பரிந்துரைத்துள்ளது. “தேவையற்று பதவிதுறப்பதைச் சட்டப்படி தடுப்பது அவசியம்”, என அதன் நிறுவனரும் இயக்குனருமான அமின் அஹ்மட் கூறினார். இடைத் தேர்தல் செலவில் ஒரு பகுதியைப் பதவிதுறக்கும் …
முருகேசன், மஇகா தலைமைப் பொருளாளராக நியமனம்
மஇகா மத்திய செயலவை உறுப்பினர் எஸ். முருகேசன் மஇகா தலைமைப் பொருளாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கட்சித் தலைவர் ஜி.பழனிவேல் இன்று இதை அறிவித்தார். சிவில் வழக்கைத் தொடர்ந்து ஆர். ரமணன் பொருளாளர் பதவியிலிருந்து விலகியதால் முருகேசன் (வலம்). 47, அதற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். முன்னாள் தலைமைச் செயலாளரும் ஒரு வழக்குரைஞருமான முருகேசன், …
தி கியாட்: லியோ அன்வாரை எதிர்த்து போட்டியிடலாமே
முன்னாள் மசீச தலைவர் ஒங் தி கியாட், காஜாங் இடைத் தேர்தலில் அன்வாரை எதிர்த்து மசீச தலைவர் லியோ தியோங் லாய் களமிறங்குவதே பொருத்தமாக இருக்கும் என்று மொழிந்துள்ளார். காஜாங்கில் தேசிய எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் போட்டியிடுவதால் அவரை லியோ போன்ற உயர் தலைவர் எதிர்ப்பதுதான் பொருத்தமாக …
எம்பி கட்சிக்காகக் கூடுதல் நேரத்தை ஒதுக்குவார்
சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், நிறுவனத் துறையிலிருந்து வந்தவர் என்பதால் எப்போதும் மாநில நிர்வாகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்கே முக்கியத்துவம் கொடுப்பார். “சிலாங்கூரைச் சீரமைப்பதுதான் என் குறிக்கோள். ஆதரவு வேண்டும் என்பதற்காக மக்களைத் திருப்திப்படுத்துவது இரண்டாம் பட்சம்தான்”, என்றவர் சொல்வார். ஆனால், இதுவே பலரும்…
காஜாங்கில் போட்டியிடுவது ஏன்? அன்வார் விளக்கமளிப்பார்
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் தாம் காஜாங்கில் போட்டியிடுவது ஏன் என்று கேள்வி எழுப்பும் பக்காத்தான் பங்காளிகளையும் வழக்குரைஞர் அம்பிகா ஸ்ரீநிவாசன் போன்ற நண்பர்களையும் பெர்சே 2.0 அமைப்பு போன்றவற்றையும் சந்தித்து விளக்கமளிக்க முடிவு செய்துள்ளர். அவர்கள் கேள்வி எழுப்புவது நியாயம்தான் என்று கூறிய மக்களுக்கு விளக்கமளிக்கும் …
மசீச: பெருந் தலைவருக்கு சாத்தே நகரில் என்ன வேலை?
அன்வார் இப்ராகிம் “உலகப் பெருந் தலைவராக”வே இருக்கட்டும் அந்த உலகப் பெருந் தலைவர் எதற்காக ஐயா, சிறிய சாத்தே விற்கும் நகருக்கு வருகிறார் என்று மசீசா வினவியுள்ளது. “அவரைப் பெருந் தலைவர் என்கிறீர்கள்.....பிறகு எதற்காக சாத்தே நகரில் வந்து போட்டியிடுகிறார்? இதில் இன்னும் வேடிக்கை என்னவென்றால், மந்திரி புசாராகவும் …
பள்ளிவாசலில் ஆர்ப்பாட்டம் செய்தோரிடம் போலீஸ் விசாரணை
பினாங்கு பாயான் பாரு பள்ளிவாசல் தாக்கப்படும் சாத்தியம் இருப்பதாகக் கூறிக்கொண்டு நேற்றிரவு ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம் என்ஜிஓ-க்ளிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. ஆர்ப்பாட்டம் செய்த சுமார் 150 பேர், 2012 அமைதிப்பேரணிச் சட்டத்தின்கீழ் விசாரிக்கப்படுவதாக தென்மேற்கு போலீஸ் மாவட்ட தலைவர் சுப்பிரெண்டெண்ட் லாய் பா ஹின் கூறினார். …
பிஎன் உணர்வை மதிப்பீர்: கைரிக்கு மசீச இளைஞர்கள் அறிவுறுத்தல்
காஜாங்கில் பிஎன்-னைப் பிரதிநிதித்து மசீசதான் போட்டியிடும். அதை அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் ஏற்க வேண்டும் என மசீச இளைஞர் தலைவர் சொங் சின் வூன் கூறினார். “காஜாங்கைக் வெல்வது நம் ஒருமித்த குறிக்கோளாகும். (அப்படி இருக்க) வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் பழைய முறையைப் பின்பற்ற வேண்டியதில்லை என்றவர் …
தமிழ் மலர் அலுவலகம் தாக்கப்பட்டது
பாராங் கத்தி ஏந்திய மூவர், கோலாலும்பூர் தமிழ் மலர் அலுவலகத்துக்குள் புகுந்து அடித்து நொறுக்கினர். தலைக்கவசம் அணிந்து முகத்தை மறைத்த அவர்கள் காலை மணி 11-க்கு ஜாலான் ஈப்போவில் உள்ள தமிழ் மலர் அலுவலகத்துக்குள் நுழைந்ததாக நிர்வாக ஆசிரியர் எஸ்.எம்.பெரியசாமி கூறினார். அங்கிருந்தவர்களிடம் பெரியசாமி எங்கே என்று கேட்டிருக்கின்றனர். …
சபரி: பிகேஆரின் அரசியல் விளையாட்டுகளில் பிஎன் ஏமாறக் கூடாது
மாற்றரசுக் கட்சியான பிகேஆரின் அரசியல் விளையாட்டுகளில் பிஎன் சிக்கிக்கொள்ளக்கூடாது எனத் தொடர்பு, பல்லூடக அமைச்சர் அஹமட் சபரி சீக் எச்சரித்துள்ளார். உள்கட்சி விவகாரங்களுக்குத் தீர்வுகாணும் விவேகமற்ற பிகேஆர் தலைவர்கள், கவனத்தைத் திசைதிருப்புவதற்காக இப்படிப்பட்ட அரசியல் ஆட்டங்களை ஆடத் தொடங்கியுள்ளனர் என்றாரவர். லீ சின் செ காஜாங் சட்டமன்றத் தொகுதியைத் …
சிலாங்கூர் டிஏபி பிகேஆருக்கு துரோகமிழைக்காது
பாஸ், காஜாங் இடைத் தேர்தலைப் புறக்கணிப்பது பற்றி அலோசித்தாலும் டிஏபி தன் நண்பனைக் கைவிடாது. “பக்காத்தான் ரக்யாட் பங்காளி என்ற முறையில் சிலாங்கூர் டிஏபி, இடைத்தேர்தலில் பிகேஆர் வெற்றிபெற தேவையான ஆதரவையும் உதவிகளையும் வழங்கும். தேவையான நேரத்தில் அதைக் கைவிடாது, அதற்குத் துரோகம் இழைக்காது. “இடுக்கண் வரும்போது உதவுவதுதானே …
அம்பிகா: பிகேஆர் விளக்கமளிக்கக் கடமைப்பட்டுள்ளது
பிகேஆரின் தகிடுதத்தங்கள் அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள முன்னாள் பெர்சே.2 இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், காஜாங் தொகுதி காலிசெய்யப்பட்டு அங்கு ஒரு இடைத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் என்னவென்பதை அது பொதுமக்களுக்கு விளக்கக் கடமைப்பட்டுள்ளது என்றார். அது கட்சிக்குள் நிலவும் பூசலுக்குத் தீர்வுகாணும் முயற்சிபோன்று தோன்றுகிறது என்று …
பள்ளிவாசல் தாக்கப்படும் ‘சாத்தியம்’ இருப்பதை எதிர்த்து மலாய் என்ஜிஓ-கள் ஆர்ப்பாட்டம்
நேற்றிரவு பினாங்கு பாயான் பாரு பள்ளிவாசலில் திரண்ட மலாய் என்ஜிஓ-களைச் சேர்ந்த சுமார் 150 பேர், சில தரப்பினர் பள்ளிவாசலைத் தாக்கத் திட்டமிடுவதாகக் கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களுக்கு வெளியில் கண்டெடுக்கப்பட்ட பதாதைகளில் ‘அல்லாஹ்’ என்னும் சொல் இருந்ததையும் அவர்கள் கண்டித்தனர். அல்லாஹ் என்னும் சொல் முஸ்லிம்களுக்கு …
பாபாகோமோவின் வழக்கை ஒத்திவைக்கும் முயற்சி நிராகரிக்கப்பட்டது
வான் முகம்மட் அஸ்ரி வான் டெரிஸ் அல்லது பாபாகோமோ, பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் தமக்கு எதிராக தொடுத்துள்ள ரிம100மில்லியன் அவதூறு வழக்கை ஒத்திவைக்க செய்துகொண்ட விண்ணப்பத்தை கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் ஒரு சாட்சியைக் கொண்டுவருவதற்காக வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டிருந்தார். “வான் …
காஜாங்கில் பிஎன் போட்டியிடும்- முகைதின்
காஜாங் இடைத் தேர்தலில் போட்டியின்றி வெல்லலாம் என எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் நினைத்தால் அது நடக்காது. பிஎன் வேட்பாளர் அங்கு களமிறக்கப்படுவார். துணைப் பிரதமர் முகைதின் யாசின் அதை அறிவித்ததாக த ஸ்டார் கூறியது. “நாங்கள் வழக்கம்போல் ஒரு வேட்பாளரை நிறுத்துவோம். “எதிர்த்துப் போட்டியிடுபவர் யாராக இருந்தாலும் …
அஸ்மின்: காஜாங் தேர்தலுக்குப் பின்னே முக்கிய நோக்கமுண்டு
காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் செ பதவி துறந்தது, காலியான தொகுதிக்கு இடைத் தேர்தல் நடப்பது எல்லாமே எதிர்கால பலனைக் கருத்தில் கொண்ட ஒரு “தந்திர நடவடிக்கை” என்கிறார் சிலாங்கூர் பிகேஆர் தலைவர், அஸ்மின் அலி. “அன்வார் இப்ராகிம் அங்கு போட்டியிடுவது நாங்கள் சிலாங்கூருக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தையும்…
பினாங்கு தேவாலய விவகாரத்தைக் கவனிக்க தனி போலீஸ் படை
பினாங்கில் தேவாலயங்களுக்கு வெளியில் “ஏசுநாதர் அல்லாவின் பிள்ளை” என்று வாசகம் பொறிக்கப்பட்ட பதாதைகள் காணப்பட்டதன் தொடர்பிலும் அஸ்ஸம்ஷன் தேவாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பிலும் போலீஸ் இதுவரை 16 புகார்களைப் பெற்றுள்ளது. “நேற்றிரவு அசம்பாவிதம் எதுவும் இல்லை. அதற்கு இறைவனுக்கு நன்றி”, என மாநில போலீஸ் தலைவர் அப்துல்…


