பத்துமலை: தீங்கு இழைத்த பாரிசான் நிபந்தனை விதித்து மக்களைத் தூண்டக்கூடாது

-சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர், நவம்பர் 14, 2012. குற்றவாளி திருந்துவதற்கு நிபந்தனை விதிப்பதா? பத்துமலைக்கு தீங்கிழைத்த பாரிசான் மக்களை பக்கதானுக்கு எதிராகத் தூண்டிவிட முயற்சிப்பதா? இதனைச் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளவர் பிரதமர் நஜிப். அவர் பத்துமலையை காப்பாற்ற புதிய நிபந்தனை விதிக்கிறார். நிபந்தனை விதிக்கும் அருகதை…

‘பிரச்னையை ஏற்படுத்திய பிஎன்; இப்போது அதனைத் தீர்க்கப் போவதாக பாசாங்கு…

உங்கள் கருத்து: "நீங்கள் இந்தியர்களிடமிருந்து எதையாவது பிடுங்கிக் கொண்டு பின்னர் அதனை எடுத்துக் கொள்ளப் போவதில்லை என வாக்குறுதி அளிப்பது அடுத்து அதற்காக இந்தியர்கள் நன்றியுடன் இருக்க வேண்டும் !" பிரதமர்: சிலாங்கூரை பிஎன் வென்றால் பத்துமலை "கொண்டோ" ரத்துச் செய்யப்படும் சின்ன அரக்கன்: சிலாங்கூர் பிஎன் ஆட்சியில்…

இரண்டு முன்னாள் பிரதமர்களை ஜயிஸ் விசாரிப்பதற்கும் போலீஸ் உதவுமா ?

"அப்துல்லாவின் அறிக்கையை விசாரிப்பதற்கு நமது மிகத் திறமையான போலீஸ் படை எப்போது உதவப் போகின்றது என்பதை அறிந்து கொள்ள நான் மிக ஆவலாக இருக்கிறேன்" வலைப்பதிவுகள்: முஸ்லிம்கள் சமயத்தை விட்டு வெளியேறலாம் என பாக் லா சொன்னார் பார்வையாளன்: "முஸ்லிம்கள் சமயத்தை விட்டு விலகலாம். ஆனால் முதலில் அந்த…

நஜிப்: பிஎன் வென்றால், பத்துமலை “கொண்டோ” குப்பையில் எறியப்படும்

பாரிசான் மீண்டும் சிலாங்கூர் மாநில ஆட்சியைக் கைப்பற்றினால், சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் பத்துமலை 29 மாடி கொண்டோ திட்டத்தை குப்பையில் எறியும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று உறுதியளித்தார். அதோடு மட்டுமல்ல. பத்துமலை யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தளம் என்ற தகுதி பெறுவதற்கு உலக பாரம்பரிய ஆணையத்தில் மலேசியாவின்…

அம்னோவே ! நீங்கள் தூய்மையாக இருந்தால் மறைப்பதற்கு என்ன இருக்கிறது…

"நீங்கள் தூய்மையாக இருந்தால் சிலாங்கூரிலும் பினாங்கிலும் ஆட்சி மன்ற உறுப்பினர்கள் சொத்துக்களை அறிவித்தது போல  செய்ய நீங்கள் ஏன்  பயப்பட வேண்டும் ?" சொத்துக்களை அறிவிப்பது பற்றி அம்னோ இதேர்தலுக்கு முன்னர் இன்னும் முடிவு செய்யவில்லை என்ன நடக்கிறது: புதிய அம்னோ உறுப்பினர்கள் மட்டும் சொத்துக்களை அறிவிக்க வேண்டுமா…

செம்பருத்தியின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

செம்பருத்தி இணையத்தளம் அதன் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அனைத்து  மலேசியர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. தீபத் திருநாளில் எல்லோர் வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும். “தீமை எனும் இருளைப் போக்க வேண்டும்” என்பதில் உடன்பட்டு அனைவரும் தீபத்திருநாளை கொண்டாடுவோம். -செம்பருத்தி

தீபாவளி வாழ்த்தில் பிரதமரின் சாயம் வெளுத்தது

வணக்கம். கோமாளியின் தீபாவளி வாழ்த்துக்கள். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பும் பின்பும் நாம் நாட்டுக்காக உழைத்துள்ளோம். இரத்தத்தை வியர்வையாக்கி, உடல் பொருள் ஆவியென அர்ப்பணம் செய்துள்ளோம். நள்ளிரவில் சுதந்திரம், இன்னமும் விடியவில்லை என்பதுதான் ஏக்கமாக உள்ளது. இந்த நாடு நமக்கும் சொந்தம் என்பதிலும் நமக்கு சம உரிமை உண்டு…

வலைப்பதிவுகள்: முஸ்லிம்கள் சமயத்தை விட்டு வெளியேறலாம் என பாக் லா…

இஸ்லாத்தை விட்டு வெளியேற விரும்புகின்றவர்கள் அவ்வாறு செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி சொன்னதாக கூறும் செய்தி நறுக்குகள் இப்போது பல பக்காத்தான் ஆதரவு வலைப்பதிவுகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கட்டுரையை 2007ம் ஆண்டு ஜுலை மாதம் 10ம் தேதி சானல்…

தீபாவளி தினத்தில் இடியுடன் மழை பெய்யும்

நாளை தீபாவளியன்று பரவலாக இடியுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது. பினாங்கு, கிளந்தான், திரங்கானு ஆகியவற்றில் மழை பெய்யும் என ஆரூடம் கூறப்பட்டுள்ளது. கெடா, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், சபா ஆகியவற்றின் கடலோரப்பகுதிகளில் காலையில் மழை பெய்யும். மற்ற மாநிலங்களில் காலையில் வெயில்…

சிலாங்கூரில் ஏஇஎஸ் கேமிராக்களை அகற்ற 14 நாள் காலக் கெடு

சிலாங்கூர் மாநிலத்தில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு தானியங்கி அமலாக்க முறை (ஏஇஎஸ்) கேமிராக்களை அகற்றுவதற்கு மாநில அரசாங்கம் போக்குவரத்து அமைச்சுக்கு இன்று தொடக்கம் 14 நால் காலக் கெடுவை மாநில அரசாங்கம் வழங்கியுள்ளது. அமைச்சு அதனைச் செய்யத் தவறினால் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத்தின் 'துணையுடன்' அந்த கேமிராக்கள் அகற்றப்படும் என…

நுருலை பொது மக்கள் மதிப்பீடு செய்யட்டும் என்கிறார் பாஸ் உலாமா…

'சமயத்தில் கட்டாயம் இல்லை' என பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் கூறியுள்ள கருத்துக்கள் மீது அவரைப் பொது மக்கள் மதிப்பீடு செய்ய விட்டு விடுவதாக பாஸ் கட்சியின் உலாமாப் பிரிவுத் தலைவர் ஹருண் தாயிப் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய அந்தக் கருத்துக்காக நுருலை ஏற்கனவே கண்டித்துள்ள அவர்,…

போலீஸ் நுருல் மீதான விசாரணையில் ‘உதவி மட்டுமே’ செய்கின்றது

பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் விடுத்துள்ள 'சமயத்தில் கட்டாயம் இல்லை' என்னும் கருத்து குறித்து ஜயிஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை நடத்தும் விசாரணையில் போலீசார் 'உதவி மட்டுமே' செய்து வருகின்றனர். "அது எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல. ஏனெனில் அது சமயம் சம்பந்தப்பட்ட விஷயமாகும்,"…

வேதமூர்த்தி வந்தபிறகுதான் இண்ட்ராப் சரியான பாதைக்குத் திரும்பியுள்ளது

உங்கள் கருத்து: “பக்காத்தான் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.இண்ட்ராபால் மட்டுமே இந்தியர் வாக்குகளை பக்காத்தானுக்குக் கொண்டுவர முடியும்”. இந்தியர்களின் ஏழ்மையை ஒழிக்க இண்ட்ராபின் ஐந்தாண்டு செயல்திட்டம் மகிழும் மலேசியன்: விடாதீர்கள். இண்ட்ராபுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கச் சொல்லுங்கள். நாடற்றவர்களாகவுள்ள 350,000 இந்தியர்களுக்குக் குடியுரிமை கொடுக்கச் சொல்லுங்கள்.…

தேர்தலுக்குமுன் சொத்து அறிவிப்பா? அம்னோ இன்னும் முடிவு செய்யவில்லை

புதிய தேர்தல் வேட்பாளர்களின் சொத்துகளை அறிவிக்கச் செய்வது பற்றி அம்னோ இன்னும் முடிவு செய்யவில்லை என அதன் தகவல் தலைவர் அஹ்மட் மஸ்லான் கூறினார். “அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் அவர்களின் சொத்துகளை அறிவிக்கும் பாரங்களைப் பூர்த்திசெய்து பிரதமர்துறையிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களும் அப்படியே செய்துள்ளனர்.”, என்றாரவர். “ஆனால்,…

நோங் சிக்: வாக்குகளை கவருவதே நுருல் அறிக்கையின் நோக்கம்

"சுபாங் ஜெயாவில் நிகழ்ந்த கருத்தரங்கு ஒன்றில் சமயச் சுதந்திரத்தை ஆதரித்து நுருல் இஸ்ஸா அன்வார் விடுத்துள்ள அறிக்கை வாக்குகளைக் கவரும் நோக்கத்தைக் கொண்டது. மக்களுக்கு அவர் உண்மையாகச் சேவை செய்யவில்லை என்பதை அது காட்டுகின்றது." இவ்வாறு கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வுத் துறை அமைச்சர் ராஜா நோங் சிக்…

துணை அமைச்சர்: பிரதமரைச் சந்திக்கும் போது பிரச்னைகளைச் சொல்லுங்கள்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்திப்பதற்கு ஒப்புக் கொள்ளும் முன்னர் ஹிண்டராப் 'முன் நிபந்தனைகளை விதிக்கக் கூடாது'. ஏனெனில் அதன் எந்தக் கோரிக்கையும் பேச்சுக்களின் போது எழுப்பப்பட முடியும் எனப் பிரதமர் துறை துணை அமைச்சர் அகமட் மஸ்லான் கூறினார். "உண்மையில் நிபந்தனைகளை விதிக்க வேண்டிய அவசியமே இல்லை.…

‘சமயத்தில் கட்டாயம் இல்லை’ என்பது சமய நம்பிக்கையற்றவர்களுக்கு மட்டும் தானா…

"திருக்குர் -ஆனில் 'சமயத்தில் கட்டாயம் இல்லை' எனத் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் நசாருதின் அவர்களே அது 'முஸ்லிம் அல்லாதாருக்கு மட்டுமே பொருந்தும்' என எந்த இடத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதை எனக்குச் சொல்லுங்கள்." நசாருதின்: நுருல் சொல்வது தவறு முஸ்லிம்களுக்குத் தேர்வு இல்லை முகமூடி: முன்னாள் பாஸ் துணைத் தலைவர்…

தீபாவளி திருநாளன்று யார் முக்கியம்: போய் ஃபிரண்டா அல்லது நஜிப்பா?

தீபாவளி ஒரு சமயத் திருநாள். இந்துக்கள் தங்களுடைய உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் இருளை அகற்றி அனைவரும் நல்வாழ்வு வாழ தீப ஒளி ஏற்றும் நாள். அதனை முறையாக, நெறி தவறாமல் செய்வதற்கு மரபுகளையும் வழிமுறைகளையும் வகுத்து பின்பற்றி வருகின்றனர். தீபாவளி திருநாளன்று அதிகாலையில் எழுந்து முறைப்படி குளித்த பின்னர் குடும்பத்தோடு…

நசாருதின்: நுருல் சொல்வது தவறு, முஸ்லிம்களுக்குத் தேர்வு இல்லை

'சமயத்தில் கட்டாயம் இல்லை' என லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் விடுத்துள்ள அறிக்கை மலாய் முஸ்லிம்களுக்கு சமயச் சுதந்தரத்தை வழங்குவதற்கு ஒப்பாகும் என முன்னாள் பாஸ் துணைத் தலைவர் நசாருதின் மாட் ஈசா கூறுகிறார். அந்த வாசகம் முஸ்லிம் அல்லாதவருக்கு மட்டுமே பொருந்தும் என அவர்…

தேசியக் கல்விப் பெருந்திட்டக் குறைபாடுகளை விளக்கி டோங் ஜொங் கையேடு…

தேசியக் கல்விப் பெருந்திட்டத்தில் உள்ள (2013-2025)  குறைபாடுகளை விளக்கி டோங் ஜொங் எனப்படும் மலேசிய ஐக்கிய சீனப் பள்ளிக்கூட குழுக்கள் சங்கம் கையேடு ஒன்றை விநியோகம் செய்துள்ளது. அந்த பெருந்திட்டத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் அந்தச் சீனக் கல்விப் போராட்ட அமைப்பு நவம்பர் 25ம்  ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு…

13வது பொதுத் தேர்தல் எந்த வழியிலும் போகலாம் என்கிறார் லிம்…

அடுத்த பொதுத் தேர்தல் முடிவுகள் எந்த வழியிலும் போகலாம் என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் கூறியிருக்கிறார். பிஎன் சிலாங்கூரை மீண்டும் கைப்பற்றுமோ என்றோ நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் என்றோ அம்னோ தலைவர்கள் உட்பட யாரும் நம்பவில்லை என்றும் அவர்…

சுவா சொய் லெக்: மிதவாத பிஎன் மற்றவர்கள் மீது நம்பிக்கைகளை…

பிஎன் மற்றவர்களுடைய உரிமைகளைப் பாதிக்கின்ற நம்பிக்கைகளை திணிக்காத மிதவாத சக்தி என மசீச தலைவர் சுவா சொய் லெக் கூறுகிறார். "சமயம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றில் தனி நபர்களுடைய உரிமைகளை மதிக்கின்ற இணக்கமான, மிதவாத அணுகுமுறையைப் பின்பற்றுகின்றது. இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் மலேசியா பல இனங்களை கொண்டதாகும்."…

மஇகா பத்து மலையில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை நடத்துவதை…

பத்துமலைக் கோயிலில் மஇகா தனது திறந்த இல்ல உபசரிப்பை நடத்துவதை அதன் தலைவர் ஜி பழனிவேல் தற்காத்துப் பேசியிருக்கிறார். அது அனைத்து இந்தியர்களும் வருகையாளர்களும் கொண்டாடுவதற்கான மகிழ்ச்சிகரமான விழா ஆகும் என்றார் அவர். அரசியல் ஆதாயம் பெற எதிர்க்கட்சிகள் அந்த விஷயத்துக்கு அரசியல் சாயம் பூசுவதாக அவர் குற்றம்…