ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான நீதியை அரசாங்கம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, எந்தவொரு இனக்குழு மக்களையும் ஒடுக்குவதை பொறுத்துக்கொள்ளாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். "சமீபத்தில் மூன்று இந்திய ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, ஒரு விசுவாசியாக, நான் ஏற்றுக்கொள்வது அல்லது மன்னிப்பது கடினம்" என்று அவர் இன்று மலேசிய…
டிஏபி: DEIA அறிக்கைக்கு ஒப்புதல் இல்லாமலேயே ஜோகூர் அணைக்கட்டு வேலைகளைத்…
ஜோகூரில், கஹாங் அணைக்கட்டு மீதான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (DEIA) அறிக்கைக்கு ஒப்புதல் கிடைப்பதற்கு முன்பே கட்டுமான வேலைகள் தொடங்கப்படுவது குறித்து மெங்கிபோல் சட்டமன்ற உறுப்பினர் டான் ஹொங் பின் கவலை தெரிவித்தார். அந்த அறிக்கை ஆகஸ்ட் 25-இல் குளுவாங், ஜோகூர் பாரு, புத்ரா ஜெயா ஆகிய இடங்களில்…
குளுவாங் எம்பி தீபாவளி சந்தைக்குள் நுழையவிடாமல் தடுக்கப்பட்டார்
இவ்வாண்டு தீபாவளிக்கு முந்திய நாள் (நவம்பர் 1) குளுவாங், ஜாலான் ஸ்டேசனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீபவளி பசாருக்கு வருகை மேற்கொண்டு அங்கு சென்ற குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் லியுவ் சின் தோங், மெங்கிபோல் சட்டமன்ற உறுப்பினர் டான் ஹோங் பின் மற்றும் வழக்குரைஞர் கே.சீலதாஸ் ஆகியோர் அச்சந்தைக்குச் சென்ற போது…
மாசிங்: மலேசியா உருவான விதத்தை அறியாதிருப்பது வருத்தமளிக்கிறது
தீவகற்ப மலேசியர்கள், மலேசியக் கூட்டரசு உருவாக சாபாவும் சரவாக்கும் எவ்வாறு உதவின என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம் என்கிறார் பார்டி ரக்யாட் சரவாக் (பிஆர்எஸ்) தலைவர் ஜேம்ஸ் மாசிங். அது, தப்பெண்ணம் உருவாவதைத் தவிர்க்க உதவும் என்றவர் நினைக்கிறார். மாசிங், மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில், கிழக்கு மலேசிய மாநிலங்களின்…
சைபுடின்: அம்னோ வலச்சாரிக் கட்சியாக மாறிவருகிறது
நஜிப் அப்துல் ரசாக், 2009-இல் பிரதமர் பொறுப்பு ஏற்றதிலிருந்து நாட்டின் மிகப் பெரிய அரசியல் கட்சியான அம்னோவை மிதவாதப் பாதையில் செலுத்தவே முயன்று வந்திருக்கிறார். ஆனால், கட்சியில் இப்போது வலச்சாரிகளின், மலாய்க்காரர்களின் சிறப்புரிமைகளின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்வோரின் குரலே ஓங்கி ஒலித்து வருகிறது. அண்மைய பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு…
எம்பி: செந்தூல் காங்கிரீட் ஆலையின் பாதுகாப்பு மறுஆய்வு செய்யப்பட வேண்டும்
செந்தூலில் உள்ள சிமிண்டையும் காங்க்ரீட்டையும் கலக்கும் ஆலையை மூடி அதனால் சுகாதாரக் கேடு இல்லை என்பது உறுதியான பின்னரே திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கட்டுமானப் பகுதிகளுக்கு அனுப்புவதற்காக காங்க்ரீட்டை உருவாக்கிக் கொடுக்கும் அந்த ஆலையிலிருந்து வெளிப்படும் சிறுசிறு துகள்கள் உடல்நலனுக்குத் தீங்கு செய்யக்கூடியவை என பத்து எம்பி…
மாட் சாபு:: வாத்துகளும் மாடுகளும் வந்தன; ஆனால் பாஸ் வெற்றி…
சுங்கை லீமவ் இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஸ் வேட்பாளர் முகமட் அஸ்சாம் சாமாட் எதிர்வரும் 18 ஆம் தேதி கெடா மாநில சட்டமன்ற உறுப்பினராகப் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்வார். ஆயிரக்கணக்கான பாஸ் ஆதரவாளர்கள் தங்களுடைய புதிய சட்டமன்ற உறுப்பினரைச் சந்தித்து வாழ்த்துக் கூற டூலாங் கெச்சிலில் குழுமியிருந்தனர்.…
சுங்கை லிமாவ்: பாஸ் கட்சியின் முகமட் அஸாம் சாமாட் வெற்றி…
சுங்கை லீமாவ் இடைத் தேர்தலில் வாக்களிப்பு முடிவுற்று, வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் முடிவின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இரவு மணி 10.00 அளவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடைத் தேர்தலில் பிஎன்னின் அஹ்மட் சொகைமி லாஸி, 53, மற்றும் பாஸ்சின் முகமட் அஸாம் சாமாட், 37, ஆகிய இருவருக்கிடையிலான…
பிரதமரே! இரண்டு நாள் வேணும்!
தீபாவளியை மலேசிய இந்தியர்கள் மகிழ்வுடன் கொண்டாட வாழ்த்திய பிரமருக்கு நன்றி என்கிறார் மருத்துவர் சுபா. ஆனால், பிரதமருக்கு நன்றி கூறிய ம இ கா தலைவர் பழனிவேல் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும் என கேட்டது வியப்பாகவுள்ளது என்கிறார். “பல நிலைகளில் சரிவு கொண்டுள்ள நிலையிலும், அரசாங்கம்…
லண்டனில் ஹோட்டல் வாங்கியதைத் தற்காத்துப் பேசுகிறார் பெல்டா தலைவர் இசா
கூட்டரசு நில மேம்பாட்டு வாரியம் (பெல்டா )லண்டனில் ஹோட்டல் வாங்கியதைத் தற்காத்துப் பேசிய அதன் தலைவர் இசா சமட், அதற்குக் கொடுக்கப்பட்ட விலை அதிகம் என்று சொல்லி டிஏபி மட்டுமே அதைக் குறை கூறுகிறது என்றார். தாபோங் ஹாஜி, தொழிலாளர் சேமநிதி வாரியம் போன்றவைகூட லண்டனில் சொத்து வாங்கி…
மகளிர் அணித் தலைவர் தாக்கப்பட்டார்; அமைதிகாக்கும்படி எம்பி வேண்டுகோள்
சுங்கை லிமாவ் இடைத் தேர்தலில் வாக்களிப்பின்போது அம்னோ மகளிர் பகுதித் தலைவர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் வருத்தம் தெரிவித்தார். அச்சம்பவத்துக்கு எதிராக ஆத்திரப்பட்டு எதுவும் செய்ய வேண்டாம் என அவர் ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்டார். “ஆத்திரப்பட வேண்டிய அவசியமில்லை. இப்போதுதான் பொறுமை…
பிரதமரின் மறுப்பைச் சர்ச்சைக்குள்ளும் அம்பிகாமீது சாடல்
13 ஆவது பொதுத் தேர்தலில் 40,000 வங்காளதேசிகள் வாக்களித்ததாகக் கூறப்படுவதை பிரதமர் மறுப்பது கவனத்தைத் திசை திருப்பும் நாடகம் என்று பெர்சே இணைத் தலைவர் அம்பிகா கூறியது “தவறு”. ஏனென்றால், அது எதிரணியினர் கட்டிவிட்ட கதை என்று இரண்டு என்ஜிஓ-கள் கூறியதாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது. “இன்று எதிரணிப்…
பழுதுபார்த்ததாகக் கூறப்பட்ட பின்னரும் வருமான வரிக் கட்டிடத்தில் வெள்ளப் பெருக்கு…
அரசாங்கம், வருமான வரி வாரிய (LHDN) கட்டிடத்தில் பழுதுபார்க்கும் வேலைகள் செய்து முடிக்கப்பட்டதாகக் கூறினாலும் உண்மை நிலவரம் வேறு விதமாக உள்ளது. கடந்த வியாழக்கிழமை, பாங்கியில் உள்ள LHDN தகவல் சேகரிப்புத் துறைக்குச் சென்ற செர்டாங் எம்பி ஒங் கியான் மிங் மழை பெய்த பின்னர் அக்கட்டிடத்தில் வெள்ளம்…
ஜிஎஸ்டி தாக்கம் பணக்காரர்கள்மீதுதான் அதிகமிருக்கும்
விமர்சகர்கள் கூறுவதுபோல் அல்லாமல், பொருள், சேவை வரி)ஜிஎஸ்டி)யால் அதிகம் பாதிக்கப்படுவோர், பொருள்களை அதிகம் வாங்கும் பணக்காரர்களாகத்தான் இருப்பார்கள் என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் இட்ரிஸ் ஜாலா. அத்தியாவசிய பொருள்களுக்கு ஜிஎஸ்டி-இலிருந்து விலக்களிக்கப்பட்டிருப்பதால், ஏழை மக்கள்மீது அதன் “தாக்கம் மிகக் குறைவாகத்தான் இருக்கும்” என்றவர் தம் வலைப்பதிவில் கூறி இருந்தார். “இது…
சுங்கை லிமாவில் வேட்பாளர்கள் வாக்களித்தனர்
சுங்கை லிமாவ் இடைத் தேர்தலில் நேரடிப் போட்டியில் குதித்துள்ள வேட்பாளர்கள் இருவரும் இன்று காலை வாக்களிக்க வாக்களிப்பு மையங்களுக்குச் சென்றார்கள். பாரிசான் நேசனல்(பிஎன்) வேட்பாளர் அஹ்மட் சொஹாய்மி லாஸிம் காலை மணி 8.47க்கு அவரின் மனைவியுடன் சென்று ஸ்கோலா கெபாங்சான் டூலாங்கில் வாக்களித்தார். பாஸ் கட்சியின் முகம்மட் அசாம்…
சுங்கை லிமாவில் இன்று வாக்களிப்பு
12 நாள் பிஎன், பாஸ் பரப்புரைகளை இடைவிடாது கேட்டு வந்த சுங்கை லிமாவின் 27,222 வாக்காளர்கள் இன்று யாரை அத்தொகுதியின் பிரதிநிதியாக சட்டமன்றத்துக்கு அனுப்பி வைப்பது என்பதைத் தீர்மானிப்பர். அத்தொகுதியின் உறுப்பினராக இருந்த முன்னாள் கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக் செப்டம்பர் 26-இல் காலமானதை அடுத்து…
அரண்மனை மொழி மாற்றம் பெற வேண்டும்: சைட் ஹுசின் அலி
ஜனநாயகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அரண்மனை மொழி சீரமைப்புச் செய்யப்படுவது அவசியமாகிறது என்று பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் செனட்டர் சைட் ஹுசின் அலி கூறினார். இன்று பிற்பகல், பெட்டாலிங் ஜெயாவில் அவர் எழுதிய "The Malay Rulers: Regression or Reform", என்ற புதிய நூல் வெளியிடப்பட்டது. அந்நிகழ்ச்சியில்…
சிறைச்சாலை இருட்டறையில், தனிமையில் உதயகுமாரின் தீபாவளி
மலேசிய இந்துக்கள் நேற்றிரவு தீபாவளியை கொண்டாடினர். ஆனால், ஹிண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் காஜாங் சிறையில் தனிமைப்படுத்தப்பட்டு, இருட்டறையில் அடைக்கப்பட்டிருந்தார். அக்டோபர் 31 ஆம் தேதியிட்ட ஒரு கடிதத்தில் குற்றவாளிகள் தூக்கிலிடப்படும் இடத்திற்கு அருகில் இன்னும் தனி அறையில் அடைக்கப்பட்டிருப்பதாக உதயகுமார் தெரிவித்துள்ளார். "தூக்குமேடையின் கதவு திறந்துவிடப்படும் சத்தத்தை…
அம்பிகா: நஜிப் “40,000 வங்காளதேசி வாக்குகள்” என்று கூறிக் கொண்டிருப்பது…
கடந்த 13 ஆவது பொதுத் தேர்தலில் 40,000 வங்காளதேசிகள் வாக்களித்திருந்தனர் என்பதை மீண்டும் மீண்டும் பிரதமர் நஜிப் மறுத்து வருவது பொதுத் தேர்தலின் போது நடந்த இதர தேர்தல் மோசடிகள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதைத் தவிர்ப்பதற்காக அவர் நடத்தும் திசை திருப்பும் நாடகம் என்று பெர்சே இணைத்…
மலேசிய இந்துக்கள் நாடுதழுவிய அளவில் இன்று தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர்
பத்துமலை வளாகத்தில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் பிரதமர் நஜிப்பும் அவரது துணைவியார் ரோஸ்மாவும் கலந்து கொண்டனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு அங்கிருந்தனர். மஇகா ஏற்பாடு செய்திருந்த இந்த திறந்தவெளி தீபாவளி கொண்டாட்டத்தில் சுற்றுப்பயணிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். காலை மணி 10.15 க்கு…
அம்னோ மலாய்க்காரர்களை ஏழையாக வைத்திருப்பதை அவர்களுக்கு நினைவூட்டுறார் அன்வார்
நேற்று சுங்கை லீமாவ் இடைத் தேர்தல் ஈடுபட்டுள்ள எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் அத்தொகுதியில் சென்ற இடங்களில் எல்லாம் ஜிஎஸ்டி வரி குறித்து அவர் முன்பு கூறியிருந்ததைத் தற்காத்து பேசினார். நேற்றிரவு நடந்த செராமாவில் பேசிய அன்வார் டிவி3 இல் கூறப்பட்டதை நம்பிக் கொண்டு இருப்பவர்களிடம் "ஏன் இந்த…
த ஹெரால்ட் மேல்முறையீட்டை ஆதரிக்கக் கூடாது என்று வழக்குரைஞர் மன்றத்திற்கு…
"அல்லாஹ்" என்ற சொல் மீதான சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக த ஹெரால்ட் மேல்முறையீடு செய்தால், அதனை ஆதரிக்கக் கூடாது என்றும் ஆதரித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முஸ்லிம் வழக்குரைஞர்கள் கூட்டம் ஒன்று வழக்குரைஞர் மன்றத்தை எச்சரித்துள்ளது. வழக்குரைஞர் மன்றம் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத அனைத்து…
கெடா மாநில ஆட்சிக்குழுவில் இடம் பெற மசீச தீவிரம்
கெடா மாநில ஆட்சிக்குழுவில் கெராக்கானுக்கு உரிய இடம் காலியாக இருக்கிறது. அதன் மேல் மசீச குறிவைத்துள்ளது. மசீச தலைவர் டாக்டர் சுவா சோய் லெக் அந்த இருக்கை மசீசவுக்கும் வேண்டும் என்கிறார். மாநில ஆட்சிக்குழுவில் இன்னும் நிரப்பப்படாத இரு இருக்கைகள் இருக்கின்றன. அவை கெராக்கான் மற்றும் மசீச ஆகிய…
நஜிப்புக்கு லண்டனில் தீபாவளி பரிசு!
லண்டனில் கடந்த இரண்டு நாள்களில் பிரதமர் நஜிப் இரண்டாவது எதிர்ப்பு ஆர்பாட்டத்தை எதிர்கொண்டார். லண்டனில் உலக இஸ்லாமிய பொருளாதார கருத்தரங்கில் (டபுள்யுஐஇஎப்) பங்கேற்க வந்திருக்கும் நஜிப்புக்கு இது அவர் எதிர்பாராத ஒரு தீபாவளி வரவேற்பாகி விட்டது. அப்பொருளாதார கருத்தரங்கு நடைபெறும் இடத்திற்கு வெளியில் ஆர்பாட்டக்காரர்கள் ஊழல்கள் மற்றும் நன்னெறியற்ற…


