மக்கள் சக்தி தலைவர் ஆர்.எஸ். தானேந்திரன், பாரிசான் நேசனலில் (பிஎன்) மஇகாவை மாற்றும் எண்ணம் தனது கட்சிக்கு இல்லை என்று வலியுறுத்தியுள்ளார். மஇகா மற்றும் பாரிசான் இடையே நடந்து வரும் உள் பதட்டங்களை கட்சி பயன்படுத்திக் கொள்ளாது என்றும், இந்திய சமூகத்தின் நலன்களை முன்னேற்றுவதற்காக மஇகாவுடன் இணைந்து பணியாற்ற…
மசீச: செயல்திட்டத்தை விளக்கும் பொறுப்பு இட்ரிசுக்கு உண்டு
கல்வி செயல்திட்டம் பிடிக்காத பெற்றோர் அவர்களின் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைக்கலாம் என்று கருத்துரைத்த கல்வி அமைச்சர்,II, இட்ரிஸ் ஜூஸோவைச் சாடுவோர் வரிசையில் மசீச-வும் சேர்ந்து கொண்டிருக்கிறது. செயல்திட்டம்மீது நிபுணர்களும், அரசுசாரா அமைப்புகளும் பொதுமக்களும் 55,000-க்கு மேற்பட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர் என மசீச இளைஞர் கல்விப் பிரிவு …
கழிவறை கேமிராக்களை அகற்றுமாறு அமைச்சு உத்தரவு
எஸ்எம்கே ஸ்ரீ செந்தோசா கழிவறைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்களை உடனடியாக அகற்றுமாறு கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது. “கழிவறையில் அது இருப்பது சரியல்ல. அதை எடுத்துவிடுமாறு கூறியுள்ளோம்”, என கல்வி அமைச்சர் (II), இட்ரிஸ் ஜூஸோ, புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்பள்ளி அமைச்சின் அனுமதியின்றி ரிம100,000 செலவில் 64 கேமிராக்களைப்…
சிலாங்கூரின் நீர் விநியோகத் தொழில் ஆண்டு இறுதிக்குள் திருத்தி அமைக்கப்படும்
மாநில நீர் விநியோகத் தொழிலைத் திருத்தி அமைக்கும் விவகாரம் டிசம்பர் 31-க்குள் முடிவு செய்யப்படும் எனக் கூட்டரசு அரசாங்கம் சிலாங்கூர் அரசுக்கு உறுதி அளித்துள்ளது. அதன் தொடர்பில் மாநில அரசு முன்வைத்த வாதங்களும் உண்மைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டிருப்பதாக எரிபொருள், பசுமைத் தொழில்நுட்பம், நீர்வள அமைச்சர் மெக்சிமஸ் ஒங்கிலி செப்டம்பர்…
குடியிருப்பாளர்கள் சபாஷை நீதிமன்றத்துக்கு இழுக்கிறார்கள்
அம்பாங்கையும் பாண்டானையும் சேர்ந்த 15 குடியிருப்பாளர்கள், நீர் விநியோகத் தடையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு சபாஷ் நிறுவனத்திடம் இழப்பீடு கோரி பயனீட்டாளர் நீதிமன்றத்தில் மனுச் செய்திருக்கிறார்கள். கடந்த டிசம்பரிலும் இவ்வாண்டு ஆகஸ்டிலும் நீர் விநியோகத்தில் பெருமளவு தடங்கல் ஏற்பட்டதாக அவர்கள் கூறிக்கொண்டனர். 1999ஆம் ஆண்டு பயனீட்டாளர் சட்டத்தின்கீழ் அவர்கள் இழப்பீடு…
‘எச்எம் மன்னிப்பு கேட்கவில்லை என்பதை ஒலிப்பதிவு உறுதிப்படுத்துகிறது’
தலைமையாசிரியருக்கும் பெற்றோருக்குமிடையில் நடந்த சந்திப்பின் ஒலிப்பதிவு ஒன்றில் மன்னிப்பு கேட்டதாக எதுவும் பதிவாகவில்லை என்று எஸ்கே பிரிஸ்தானா பள்ளிப் பணியாளர்கள் கூறுகின்றனர். “செய்தித்தாள்களில் வந்திருக்கும் அவ்வளவும் தப்பு”, என்று கூறிய ஒருவர்- அவர் தம் பெயரைத் தெரிவிக்க விரும்பவில்லை- “தலைமையாசிரியர் மன்னிப்பு கேட்கவில்லை என்பதை அந்த ஒலிப்பதிவு நிரூபிக்கும்”,…
அமைச்சர்: சில தரப்புகள் இன விவகாரங்களைத் தூண்டி விட முயல்கின்றன
சில தரப்புகள், பள்ளிகளில் நடப்பனவற்றையெல்லாம் இன விவகாரங்களாக மாற்ற முயல்கின்றன என்று கல்வி அமைச்சர் II இட்ரிஸ் ஜூஸோ குற்றம் சாட்டியுள்ளார். எஸ்கே பிரிஸ்தானா குளியலறை விவகாரம் பற்றியும் ரவாங்கில் ஒரு இந்திய மாணவனை ஆசிரியர் அடித்ததாகக் கூறப்படும் விவகாரம் பற்றியும் கருத்துரைத்த அமைச்சர், சமுதாயத்துக்கு மன்னிக்கும் மனம்…
உதயகுமாரைச் சந்திக்க விரும்புகிறார் குவான் எங்
பினாங்கு முதலமைச்சரும் டிஏபி தலைவருமான லிம் குவான் எங், சிறையில் உள்ள இண்ட்ராப் தலைவரைச் சந்திக்க ஆர்வம் கொண்டிருக்கிறார். உதயகுமாரைச் சந்திக்க சிறைத்துறை தலைமை இயக்குனர் அனுமதி அளிக்க மறுத்து விட்டார் என்பதால் உள்துறை அமைச்சரிடம் முறையீடு செய்துகொள்ளப்போவதாய் அவர் தெரிவித்தார். அவரின் விருப்பத்துக்குப் பின்னே அரசியல் நோக்கம்…
தலைமையாசிரியர் மன்னிப்பு: பொய் சொல்வது யார்?
உங்கள் கருத்து ‘கண்ணியமற்ற, நேர்மையற்ற அந்தத் தலைமையாசிரியரை மன்னிப்பு கேட்கும்படி மாநிலக் கல்வித் துறை பணிக்க வேண்டும்’. மன்னிப்பு கேட்டதாகக் கூறப்படுவதை மறுக்கிறார் தலைமை ஆசிரியர் டான்: எஸ்கே ஸ்ரீபிரிஸ்தானா தலைமை ஆசிரியர் முகம்மட் நாசிர் மன்னிப்பு கேட்டதாகக் கூறப்படுவதை மறுக்கிறார். ஆனால், மலேசியன் தமிழன் டுடே அமைப்பின்…
தாண்டா புத்ரா இரண்டாவது வாரத்தில் படுத்துக்கொண்டது
மலேசியத் திரைப்படங்களில் மிகுந்த சர்ச்சைக்குள்ளான படம் ‘தாண்டா புத்ரா’ என்பதில் ஐயமில்லை. சர்ச்சையின் காரணமாகவே பரவலான விளம்பரமும் கிடைத்தது அப்படத்துக்கு. ஓர் ஆண்டுக்கு மேலாக வெளியிடாமல் வைத்திருந்து இறுதியில் ஆகஸ்ட் 29-இல், திரையிடப்பட்ட அப்படம், முதல் வாரத்தில் நல்ல வசூலைக் கண்ட 10 படங்களின் வரிசையில் 6-வது இடத்தில்…
மகாதிர்: ‘புரொஜெக்ட் ஐசி பற்றி அறியேன்’
கள்ளக் குடியேறிகளுக்குக் குடியுரிமை கொடுப்பதற்குக் காரணமான இருந்தது என்று சொல்லப்படும் ‘புரொஜெக்ட் ஐசி’ அல்லது ‘புரொஜெக்ட் மகாதிர்’ பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்று மறுக்கிறார் டாக்டர் மகாதிர். சாபாவில், கள்ளக் குடியேறிகள் மீது விசாரணை நடத்தும் அரச ஆணையத்திடம் சாட்சியமளித்த முன்னாள் பிரதமர், “இப்போதுதான் அதைக் கேள்விப்படுகிறேன்”,என்றார்.…
சபா ஆர்சிஐ: இன்று மகாதிர் சாட்சியம் அளிக்கிறார்
சபாவில் அந்நியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது சம்பந்தமாக நடந்து வரும் அரச விசாரணை ஆணையத்தின் முன்பு இன்று முன்னாள் பிரதமர் மாகாதிர் முகமட் சாட்சியமளிக்கிறார். அந்த ஆணையத்தின் விசாரணைக்கு நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிவிற்கு வரவிருக்கும் வேளையில் மகாதிர் சாட்சியமளிக்கிறார். அந்நியர்களுக்கு அடையாள அட்டை வழங்கியதில் மலேசியாவின் பிரதமராக 22…
தாண்டா புத்ராவைத் திரையிடும் முக்ரிசுக்கு எம்பி கண்டனம்
கெடா மந்திரி புசார் முகிரிஸ் மகாதிர், தாண்டா புத்ரா திரைப்படத்தை அரசின் ஏற்பாட்டில் விஸ்மா டாருல் அமானில் திரையிடுவது குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார் அலோர் ஸ்டார் எம்பி, கூய் ஹிசியாவ் லியோங். முக்ரிசைத் தவிர்த்து வேறு எந்த மந்திரி புசாருக்கும் ஏன் பிரதமருக்கும்கூட தாண்டா புத்ரா படத்தை அதிகாரப்பூர்வமாக …
மன்னிப்பு கேட்டதாகக் கூறப்படுவதை மறுக்கிறார் தலைமை ஆசிரியர்
“குளியலறை உணவருந்தும் இடமாக”ப் பயன்படுத்தப்பட்ட விவகாரம் எஸ்கே ஸ்ரீபிரிஸ்தானா தலைமையாசிரியர் மன்னிப்பு கேட்டதை அடுத்து முடிந்துபோனதாக நம்பிக்கொண்டிருந்த நேரத்தில் அந்த நம்பிக்கை சிதறடிக்கப்பட்டிருக்கிறது. மன்னிப்பு கேட்டதாகச் சொல்லப்படுவதைத் தலைமையாசிரியர் முகம்மட் நாசிர் முகம்மட் நூர் மறுத்துள்ளார். “நான் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்கவில்லை. அந்த விவகாரத்துக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுவிட்டதாகவே…
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தாதது ஏன்? ஜாஹிட்டைக் கேட்கிறார் சுரேந்திரன்
குண்டர்கள்மீதான போலீஸ் அதிரடி நடவடிக்கை தொடர்பில், உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி-க்கும் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரனுக்குமிடையில் வாய்ச் சண்டை தொடர்கிறது. கைது செய்யப்பட்ட குண்டர்களில் மிகச் சிலர் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டிருப்பது ஏன் என்று கேட்கிறார் சுரேந்திரன். “அத்தனை பேர் கைது செய்யப்பட்டிருந்தும் எவரும் நீதிமன்றத்தில்…
ஓவியப் போட்டியால் எழுந்தது சர்ச்சை
பினாங்கு மாநில அருங்காட்சியம் மற்றும் கலைக்கூடம் ஓவியப் போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஆனால், அப்போட்டி 'Ubah'என்னும் கருப்பொருளில் நடத்தப்படுவதால் சர்ச்சை மூண்டுள்ளது. அது டிஏபி-க்கு மறைமுகமான விளம்பரமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 13வது பொதுத் தேர்தலில் 'Ubah' (மாற்றம்) என்பது டிஏபி-இன் தேர்தல் முழக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.…
எஸ்கே பிரிஸ்தானா தலைமையாசிரியர் மன்னிப்பு கேட்டார்; போதாது என்கிறது என்ஜிஓ
எஸ்கே ஸ்ரீபிரிஸ்தானா தலைமையாசிரியர் முகம்மட் நாசிர் முகம்மட் நோர், குளியலறை விவகாரம் தொடர்பில் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார். “நேற்று தலைமையாசிரியர் மன்னிப்பு கேட்டுகொண்டதை அடுத்து இவ்விவகாரம் முடிவுக்கு வருகிறது”, என்று மலேசியன் தமிழன் டுடே அமைப்பின் செயலாளர் கூறினார். ஆனால், மன்னிப்பு மட்டும் போதுமானதல்ல என்கிறார் இந்திய முற்போக்குச்…
சேமிப்பில் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால் தேவையில்லாப் பயணங்களைக் குறைப்பீர்
நிதிநிலையை வலுப்படுத்த அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருப்போர் அனுபவிக்கும் சில சலுகைகளை அகற்ற வேண்டும் என பிகேஆரின் கம்போங் பாண்டான் எம்பி ரபிஸி ரம்லி ஆலோசனை கூறுகிறார். அவர்கள் பெட்ரோலுக்கு சொந்தப் பணத்தையே கொடுக்க வேண்டும் என்று முன்பு குறிப்பிட்ட ரபிஸி, அவர்களின் உள்நாட்டு வெளிநாட்டுப் பயணங்களையும் குறைக்க…
பாஸ் துணைத் தலைவர் மாட் சாபுவின் பதவி ஆட்டம் கண்டுள்ளது
முகம்மட் சாபுவின் பாஸ் துணைத் தலைவர் பதவிக்கு ஆபத்து வந்துள்ளது. அப்பதவியில் சமய அறிஞர் ஒருவர் இருப்பதையே அக்கட்சியின் ஆன்மீக தலைவர் நிக் அப்துல் அசீஸ் நிக் மாட் விரும்புவதால் மாட் சாபுவின் நிலை ஆட்டம் கண்டிருப்பதாகக் கட்சி வட்டாரங்கள் சில தெரிவித்தன. நிக் அசீஸ் தம் விருப்பத்தை…
‘தெங்கு ரசாலி நஜிப்பை எதிர்க்கவில்லை, ஆதரிக்கிறார்’
தெங்கு ரசாலி, நடப்பு அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கை ஆதரிப்பாரே தவிர எதிர்க்க மாட்டார் என்று கூறுகிறார் அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர். எதிர்க்கப் போவதாக ஒரு பேச்சுக்காக சொல்லியிருப்பார் மற்றபடி உண்மையில் எதிர்த்துப் போட்டியிட மாட்டார் என்றாரவர். கட்சித் தேர்தலில் போட்டியிட…
‘கல்வி செயல்திட்டத்தில் Dong Zong மட்டுமே அதிருப்தி கொண்டிருக்கிறது’
கடந்த வாரம் அறிமுகமான கல்விசெயல்திட்டம் 2013-2025 மீது மனநிறைவுகொள்ளாத ஒரே தரப்பு சீனக் கல்விக்காப்பு அமைப்பான Dong Zong மட்டுமே என்கிறார் கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன். செயல்திட்டம் இறுதிசெய்யப்படுமுன்னர் கல்வி அமைச்சர் முகைதின் யாசினுடன் சந்திப்பு நடத்திய மற்ற சீன, இந்திய கல்வி தரப்புகளுக்கு அதில் திருப்திதான்…
ஜாஹிட்: கடும் நடவடிக்கை மலிவான விளம்பரத் தந்திரமல்ல
உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, இரகசிய சங்கங்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை, அம்னோ தேர்தலுக்குமுன் தம் தோற்றத்தை உயர்த்திக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட ஒரு விளம்பரத் தந்திரம் என்று கிண்டலடித்துள்ள பிகேஆரைச் சாடினார். “அப்படிப்பட்ட மலிவு விளம்பரம் எனக்குத் தேவையில்லை”, என இன்று காலை பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன்…
உடைக்கப்பட்டது ஆலயமல்ல, சட்டவிரோத கேண்டீன்தான்-அமைச்சர்
ஒரு வாரத்துக்குமுன் டிபிகேஎல் அதிகாரிகள் உடைத்தது ஆலையத்தை அல்ல, ஒரு கேண்டீனைத்தான் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் மீண்டும் வலியுறுத்துகிறார். “நானும் சமயப் பற்றுள்ளவன்தான், தொழுகை செய்பவன்தான். மற்றவர்கள் வழிபாடு நடத்தும் இடத்தை உடைக்க உடன்படேன்”, என அட்னான் பிரிக்பீல்ட்சில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.…
காய்கறிகளின் விலை உயர்ந்தது, பேருந்து கட்டணம் உயரப்போவதாக மிரட்டுகிறது
கடந்த வாரம் எரிபொருளுக்கான உதவித் தொகை குறைக்கப்பட்டதை அடுத்து காய்கறிகளின் விலை உயர்ந்திருக்கிறது. பள்ளி பேருந்து கட்டணம் ஆண்டு இறுதியில் உயரக்கூடும். பள்ளி பேருந்து கட்டணத்தை நிலப் போக்குவரத்து ஆணையம் (Spad) மறு ஆய்வு செய்து கொண்டிருப்பதாகவும் ஆண்டு இறுதியில் அது முடிவுறும் எனவும் நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ்…


