2022 ஜொகூர் மாநிலத் தேர்தலில் பெரிகாத்தான் நேஷனல் (PN) அனைத்து 56 தொகுதிகளிலும் போட்டியிட்டது, ஆனால் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. "வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு இடையே மோதல்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, மற்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கூட்டணி எப்போதும் தயாராகவே உள்ளது என்று பெரிகாத்தான் நேஷனல்…
கண்டனக் கூட்டத்தில் கோழிகள் பலி கொடுக்கப்பட்டதற்கு என்ஜிஓ-களின் விளக்கம்
மலாய் சமூகத்துக்கு சினமூட்டும் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்ததைத் தடுத்துவதற்காகவே டிஏபி உதவித் தலைவர் தெரேசா கொக்-க்குக் கண்டனம் தெரிவிக்கும் கூட்டத்தில் கோழிகள் பலி கொடுக்கப்பட்டனவாம். அது சினமூட்டும் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என மலேசிய இஸ்லாமிய பயனீட்டாளர் சங்க (பிபிஐஎம்) தலைவர் நட்ஸிம் ஜொஹான் கூறினார். “அரசாங்கம் …
தீமை பயக்கும் கட்டுரை வெளியிட்ட உத்துசானுக்கு எதிராக நடவடிக்கை தேவை
அதன் வார இறுதிப் பதிப்பின் முதல் பக்கத்தில் “பொய்யான ஒரு கட்டுரையை” வெளியிட்டிருந்ததற்காக அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாதது என் என்று டிஏபி நாடாளுமன்ற தலைவர் லிம் கிட் சியாங் வினவியுள்ளார். ‘Melayu, Islam dihina di Tanah Melayu’ (தானா மலாயுவில் மலாய்க்காரர்களையும் …
அன்வாருக்கு வாக்களிப்பது அமெரிக்காவுக்கு வாக்களிப்பதற்கு ஒப்பாகும்
டாக்டர் மகாதிர் முகம்மட், “அமெரிக்க-ஆதரவு அரசு” வேண்டும் என்போர் அன்வார் இப்ராகிமுக்கு வாக்களிக்கலாம் என்று குறிப்பிட்டார்.. “அமெரிக்க-ஆதரவு அரசு வேண்டுமா, (காஜாங் இடைத் தேர்தலில்) அன்வாருக்கு வாக்களியுங்கள்”, என அரசதந்திர, வெளியுறவு விவகாரங்களுக்கான கழகத்தில் ஒரு நிகழ்வில் பேசியபோது முன்னாள் பிரதமர் கூறினார். ஆட்சியில் மாற்றம்காண விரும்பும் நாடுகளில் …
“இடுகாட்டிலும் நிம்மதி இல்லையே”
இந்த நாட்டில் இலட்சக்கணக்கான ஏக்கர் காட்டை அழித்து நாடாக்கிய இந்தியர்களுக்கு இன்று அவர்களுடைய இறுதி உறைவிடமான இடுகாட்டிலும் நிம்மதி இல்லையே என்று கம்போங் பாரு குண்டாங் வாழ் இந்தியர்கள் குமுறுகின்றனர். லாதார் நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் குண்டாங் வழியாக ஒரு சாலையை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால்…
வேதமூர்த்தி: மன்னிக்க வேண்டுகிறேன்
பிரதமர்துறை துணை அமைச்சர் பதவியிலிருந்த விலகிய பி.வேதமூர்த்தி, “இந்திய ஏழைமக்களிடம்” அவர்களுக்கு வாக்குறுதி அளித்த சமூக-பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். தம் வாக்குறுதியை நம்பி இந்தியர்கள் பிஎன்னுக்கு வாக்களித்தனர். அது, 13வது பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெற- அது குறுகிய வெற்றிதான் என்ற …
‘நஜிப் சந்தா குலோஸ்போல் நடிப்பதை நிறுத்தாவிட்டால் தூக்கி எறியப்படுவார்’
முன்னாள் பத்திரிகையாளரும் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் நெருங்கிய நண்பருமான ஏ. காடிர் ஜாசின், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் “சந்தா குலோஸ்போல் நடிப்பதை” நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். தம் வலைப்பதிவில் இவ்வாறு கோரிக்கை விடுத்த காடிர், நஜிப் நாட்டையும் பொருளாதாரத்தையும் நிர்வகிக்கும் முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் …
வேதமூர்த்தியின் தோல்விகளுக்கு நஜிப்பே காரணம்
உங்கள் கருத்து: வேதாவின் விலகலுக்கு பிரதமர் வருந்துகிறாராம் டபுல்யுடிஏ: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பி.வேதமூர்த்தியை கெட்டவராக சித்திரித்துக்காட்ட முனைகிறாரே தவிர அவரது பதவி விலகலுக்குப் பொறுப்பேற்க தயாராக இல்லை. மலேசிய இந்தியர்கள் இப்போதாவது விழித்துக்கொள்ள வேண்டும். பிஎன் அரசின் இனிப்பான வாக்குறுதிகளில் மீண்டும் ஏமாந்து விடக்கூடாது. அபாசிர்: …
‘அன்வாரை காஜாங்கில் புதைப்போம்’-மசீச சூளுரை
காஜாங்கில் ஓர் இடைத் தேர்தலை உருவாக்கியுள்ள பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமை அங்கேயே “புதைப்போம்” என மசீச தலைவர் லியோ தியோங் லாய் சூளுரைத்துள்ளார். “அவர் அங்கு குழி தோண்டி இருப்பதால், அவரை அங்கேயே போட்டுப் புதைப்போம்”, என சுங்கை சுவாவில் மசீச தேர்தல் நடவடிக்கை மையத்தில் …
மசீச தனக்குத் தானே குழி தோண்டிக்கொண்டது
முன்னாள் கல்வியாளர் ஒருவர், மசீச-வின் வீழ்ச்சிக்கு மசீச-வே காரணம் என்றார். 1962-இலும் 1973-இலும் அரசமைப்புத் திருத்தங்களுக்கு அது உடன்பட்டது அதன் வலிமை குறையவும் புறநகர் வாக்காளர் வலிமை மேலோங்கவும் வழி வகுத்தது என அரசியல் ஆய்வாளர் லிம் ஹொங் ஹாய் கூறினார். அப்போது மசீச தலைவராக இருந்த டான் …
பிகேஆரின் திட்டத்தைக் கெடுக்கவே ஜைட் காஜாங்கில் போட்டியிடுகிறாராம்
காஜாங் இடைத் தேர்தலில் தாம் வெற்றிபெற்றால் அப்துல் காலிட் இப்ராகிம் மந்திரி புசாராக தொடர்வது உறுதி என முன்னாள் பிரதமர்துறை அமைச்சர் ஜைட் இப்ராகிம் இன்று செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூறினார். அன்வார் சட்டமன்ற உறுப்பினரானால் அவர் காலிட்டை மந்திரி புசார் பதவியிலிருந்து வெளியேற்ற முயல்வார் என்றாரவர். காலிட்டும் …
என்ஜிஓ: கொக் ரோஸ்மாவை இழிவுபடுத்துகிறார் என்பது கண்கூடு
சிபூத்தே எம்பி தெரேசா கொக்கின் சீனப்புத்தாண்டுக் காணொளிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் என்ஜிஓ-களில் ஒன்று அதில் இடம்பெற்றுள்ள பாத்திரங்களில் ஒன்று பிரதமரின் துணைவியாரைப் பிரதிபலிக்கிறது என்பதால்தான் தாங்கள் ஆத்திரம் அடைவதாகக் கூறியது. “அதில் வரும் பெண்ணின் தோற்றம், அவரின் கைப்பை, மோதிரங்கள் அப்படியே ரோஸ்மா மன்சூரை நினைவுபடுத்துகின்றன. “இது ஒரு …
வேதமூர்த்தி விலகல்: எல்லாம் எதிர்பார்த்ததே!
- முனைவர் ஆறு. நாகப்பன் ஏறத்தாழ எட்டு மாதங்களுக்குப் பிறகு வேதமூர்த்தி பிரதமர் துறையின் துணையமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். பிரதமரின் மழலை நம்பிக்கையை நம்பி கடந்த பொதுத்தேர்தலில் அவரோடு வேதமூர்த்தி கைகோர்த்த போதே பிரதமர் அவரையும் ஏமாற்றுவார், அவர் பிரதிநிதித்த இந்தியர்களையும் ஏமாற்றுவார் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான்.…
பால் லவ், வேதமூர்த்திபோல் பதவி விலக மாட்டார்
பிரதமர்துறை அமைச்சர் பால் லவ், ஊழலை எதிர்ப்பதில் வெற்றிபெற முடியாததால் பதவி விலகுவார் என்று கூறும் வதந்திகளை மறுக்கிறார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தம்மீது மிகவும் நம்பிக்கை வைத்துள்ளார் என்பதால் பதவி விலகும் எண்ணமெல்லாம் கிடையாது என்றவர் கூறியதாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது. திங்கள்கிழமை, பி. வேதமூர்த்தி …
அன்வார்: மசீச அம்னோவின் அடிமைபோல் நடந்துகொள்ளக்கூடாது
மசீச, சீனர் சமூகத்துக்காக துணிச்சலாகக் குரல் கொடுக்க வேண்டும், அம்னோவொன் அடிமைபோல் நடந்துகொள்ளக்கூடாது என பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் வலியுறுத்தினார். மசீச தலைவர் லியோங் தியோங் லாய் 1987-இல், ஒப்ஸ் லாலாங் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதற்கு அன்வார்தான் காரணம் என்று கூறி இருப்பதற்குப் பதிலடியாக அன்வார் இவ்வாறு கூறினார்.…
பிப்.19-இல் குட்டி இந்தியா கலவரம்மீது பொது விசாரணை
சிங்கப்பூர் குட்டி இந்தியா பகுதியில் நிகழ்ந்த கலவரம் மீதான பொது விசாரணை பிப்ரவரி 19-இல் தொடங்கும். விசாரணைக்கான ஆயத்த வேலைகளை பொது விசாரணைக் குழு(சிஓஐ)ச் செயலகம் செய்து வருகிறது. கலவரத்தை ஆராய நியமனம் செய்யப்பட்ட மத்திய போதைப்பொருள் பிரிவு அதிகாரிகள் கிட்ட 300 பேரைச் சந்தித்து வாக்குமூலம் பதிவு …
காஜாங் இடைத் தேர்தலில் ஜைட் இப்ராகிம்?
முன்னாள் பிரதமர்துறை அமைச்சர் ஜைட் இப்ராகிம் எதிர்வரும் காஜாங் இடைத் தேர்தலில் களமிறங்கும் நோக்கம் இருப்பதாக இன்று அறிவித்தார். அங்கு போட்டியிடுவது மக்களைச் சந்திக்கவும் நாடு இப்போது எதிர்நோக்கும் பல்வேறு அரசியல், பொருளாதார விவகாரங்கள் பற்றி அவர்களுடன் கலந்துரையாடவும் வாய்ப்பாக அமையும் என்றவர் தம் வலைப்பதிவில் கூறி இருந்தார்.…
லியோ: ஒப்ஸ் லாலாங் நடவடிக்கைக்கு அன்வார்தான் காரணம்
1987-இல், ஒப்ஸ் லாலாங் நடவடிக்கையில் பலர் கைது செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்தான் என மசீச தலைவர் லியோ தியோங் லாய் காஜாங் சீனர் சமூகத்துக்கு நினைவுபடுத்தினார். அன்வார் மெண்டரின் தெரியாத ஆசிரியர்களைச் சீனப் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தார் என்றாரவர். 1980-களில், கல்வி …
அன்வாரின் வாழ்க்கை வரலாற்று நூல் பெரிய புத்தகக் கடைகள் பலவற்றில்…
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூலான "The Evolution of a Muslim Democract: The Life of Malaysia's Anwar Ibrahim" கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனல், இந்நூல் சைட் மொக்தார் அல்-புஹாரிக்குச் சொந்தமான எம்பிஎச் புத்தகக் கடைகளில் விற்கப்படுவதில்லை. அந்த …
அன்வார் காஜாங்கில் கூட்டம் நடத்துவதை நிறுத்தப்போவதில்லை
காஜாங் இடைத் தேர்தல் வேட்பாளரான அன்வார் இப்ராகிம், தாம் தேர்தல் சட்டவிதிகளை மீறவில்லை என்பதால் காஜாங்கில் தம் செராமாக்களை நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்கிறார். செராமாக்களில் நடப்பு விவகாரங்கள் பற்றித்தான் பேசுவதாகவும் அவை ‘தேர்தல் பரப்புரைகள்’ அல்ல என்றும் அவர் கூறியதாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது. “போலீஸ் விசாரணை …
பாஸ் இளைஞர்கள்: தாயிப்மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முதலில் தீர்வுகாண வேண்டும்
அப்துல் தாயிப் மஹ்முட் சரவாக் ஆளுநராக நியமிக்கப்படுமுன்னர் அவர்மீதுள்ள ஊழல், அதிகாரமீறல் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபட வேண்டும் என பாஸ் இளைஞர் பகுதி பேரரசரிடம் மகஜர் கொடுத்திருக்கிறது. அந்த மகஜரை அரண்மனையின் தலைமை நிர்வாக உதவியாளர் சைனல் டின் முகம்மட் நோர் பெற்றுக்கொண்டதாக பாஸ் இளைஞர் தலைவர் சுஹாய்சான் கயாட் …
சரவாக்கின் புதிய சிஎம் சுயமாக செயல்படுவாரா?
சரவாக்கில், அப்துல் தாயிப் மஹ்முட்டிடமிருந்து மார்ச் மாதம் முதலமைச்சர் பதவியை ஏற்கும் அடினான் சாதேம் முதலமைச்சரான பின்னர் சுயமாக செயல்படுவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஏனென்றால் அவர் பதவியேற்ற சில நாள்களிலேயே தாயிப் சரவாக் ஆளுநராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தாயிப்பின் முன்னாள் மனைவி அடினானின் சகோதரி. அந்த …
அரசியலா? சமூகமா?
-குலசேகரன், து. காமாட்சி, அ. சிவநேசன், டிஎபி, பெப்ரவரி 14, 2014. சமீபத்தில் நான், சபாய் சட்ட மன்ற உறுப்பினர் து.காமாட்சி, சுங்கை சட்ட மன்ற உறுப்பினர் அ.சிவநேசன் ஆகியோர் “நாம்” என்ற இயக்க தொடக்க விழாவில் கலந்து கொண்டதை ஆட்சேபித்து பலரிடமிருந்து கண்டனக் குரல்கள் வரத் தொடங்கியுள்ளன.…
எங்கே இருக்கிறது ஊடகச் சுதந்திரம்? சுரேந்திரன் சாடல்
ஊடகங்கள் “முன் எப்போதையும்விட சுதந்திரமாக உள்ளன” என்பது இணையத்தளங்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்றபடி வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் ஆகியவற்றை அரசாங்கம் இறுக்கமாக தனது பிடிக்குள் வைத்திருக்கும்போது அவ்வாறு அறிக்கை விடுப்பது “அபத்தமாகும்” என பிகேஆர் எம்பி என்.சுரேந்திரன் கூறினார். செய்திதாள்களின் உரிமங்கள் எந்த நேரத்திலும் மீட்டுக்கொள்ளப்படும் அபாயம் இருக்கவே …


