கலந்துரையாடல் நடத்த அன்வார் முன் வந்ததை அம்னோ நிராகரிக்கிறது

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில்  விவாதிக்கப்படுவதற்குத் தேசியப் பிரச்னைகள் ஏதுமில்லை என அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் சொல்கிறார். "எல்லாம் வெறும் அரசியல். அன்வார் விவாதம் நடத்த விரும்பினால் அதனை  நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்." "அவரைப் பொறுத்த வரையில் எல்லாம் அரசியலே.…

கோயில் உடைக்கப்படுவதைத் தடுக்க முயன்ற பிகேஆர் ஜெயதாஸ் கைது

கோலாலம்பூர், ஜாலான் பி.ரமலியில் அமைந்துள்ள ஓர் இந்து கோயில் உடைக்கப்படுவதைத் தடுக்க முயன்ற பிகேஆரின் எஸ். ஜெயதாஸ் மற்றும் கோயில் பிரதிநிதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள அவ்விருவரும் தற்போது டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக பிகேஆர் உதவித் தலைவர்…

தமிழ்ப்பள்ளிகளுக்கு 2,000 ஏக்கர் நிலம்: ஏன் சீனப்பள்ளிகளைப் பின்பற்றவில்லை?

-மு. குலசேகரன், ஆகஸ்ட் 31, 2013.    2000 ஏக்கர் நிலத்தை பேராக் இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியம் நிர்வகிக்கும் என்று இன்று அனைத்து தமிழ் நாளிதழ்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளன.   கடந்த இரு வருடங்களாக இந்த நிலம் அரசியல் சார்புடையவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது என்று நான் தொடர்ந்து…

நாடு மெர்தேக்காவைக் கொண்டாடும் வேளையில் எதிர்காலம் நன்றாக இல்லை என…

மலேசியாவின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்காது என பினாங்கு முதலமைச்சர்  லிம் குவான் எங் சொல்கிறார். காரணம் 'நாட்டில் தீவிரவாதப் போக்கும் இனவாதப் பிளவுகளும்' தொடருவதே  அதற்குக் காரணம் என அவர் சொன்னார். மலேசியர்கள் இன்று மெர்தேக்கா தினத்தைக் கொண்டாடும் வேளையில்  விடுத்துள்ள உரையில் லிம் அவ்வாறு கூறியிருக்கிறார். பொது…

தண்டா புத்ரா விஷயத்தில் ‘தடுமாற்றம்’ ஏன் ?

தண்டா புத்ரா திரைப்படம் மீது எழுந்துள்ள சர்ச்சையைக் கையாளுவதில் முதலமைச்சர் லிம் குவான் எங் 'தடுமாறியிருப்பதாக' Anak Merdeka Permatang Pauh என அழைக்கப்படும் மலாய் இளைஞர் அமைப்பு ஒன்று குற்றம்  சாட்டியுள்ளது. அந்தத் திரைப்படத்தை காட்ட வேண்டாம் என லிம் முதலில் உத்தரவைப்  பிறப்பித்து விட்டு பின்னர்…

டீசல் சிந்தியதால் ஏற்பட்ட நீர் வினியோக நெருக்கடி கட்டுப்பாட்டிலுள்ளது

டீசல் எண்ணெய் சிந்தியதால் சிலாங்கூர் மாநிலத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட நீர் வினியோக தடங்கல் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எலிசபெத் வோங் கூறுகிறார். தற்போதைய நிலவரப்படி, டீசல் எண்ணெய் ஆற்றில் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் காணப்படும் டீசல் எண்ணெய்யின் அளவு மிகக் குறைவாகவே…

சபாஸ் அபாய அறிவிப்பு: டீசல் எண்ணெய் சிந்தியதால் நீர் வினியோகம்…

  சிந்திய டீசல் எண்ணெய் வினியோகிக்கப்படும் நீரில் கலந்து விட்டதால் சிலாங்கூர் மாநிலமும் கோலாலம்பூரும் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று முஷரிகாட் பெக்கலான் ஆயர் சிலாங்கூர் (சபாஸ்) இன்று அபாய அறிவிப்பு செய்துள்ளது. சிந்திய டீசல் எண்ணெய்யால் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் ஆகியவற்றுக்கான நீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும்…

‘சிறிய விவகாரம்’என்ற கமலநாதனுக்குக் கடுமையான கண்டனம்

எஸ்கே பிரிஸ்தானா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சிறுமைப்படுத்தியதாக கல்வி துணை அமைச்சர் பி,கமலநாதானை டிஏபி உதவித் தலைவர் குலசேகரன் கடுமையாகச் சாடியுள்ளார். கமலநாதன் அதனைச் “சின்ன விசயம்” என்று வியாழக்கிழமை குறிப்பிட்டது அதற்குமுன்னர் அவர் கொண்டிருந்த நிலைபாட்டுக்கு முரணாக உள்ளது என்று ஈப்போ பாராட் எம்பியுமான குலசேகரன் கூறினார். “அவ்விவகாரம்…

மஇகா இளைஞர் பிரிவு: குண்டர் கும்பல்களை முறியடிப்பதில் அரசாங்கம் இனவாரியான…

நாட்டில் குண்டர் கும்பல்களை முறியடிக்கும் நடவடிக்கைகளில் இன வாரியான போக்கை அரசாங்கமும் போலீசும் பின்பற்றுவதாக மஇகா இளைஞர் பிரிவு  இன்று வருணித்துள்ளது. குண்டர் கும்பல்களில் 28,926 மலேசிய இந்தியர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக  உள்துறை அமைச்சு கூறியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்ட அந்தப் பிரிவின் செயலாளர் சி சிவராஜா  ஏதாவது செய்யப்பட…

தலைமையாசிரியருக்கு எதிராக ஏன் நடவடிக்கை இல்லை? மசீச குமுறல்

மாணவர்கள் மிரட்டப்படுவதாகக் கூறப்படுவதன் தொடர்பில் எஸ்கே பிரிஸ்தானா தலைமையாசிரியருக்கு எதிராகக் கல்வி அமைச்சோ சிலாங்கூர் கல்வித் துறையோ நடவடிக்கை எடுக்காதிருப்பது ஏமாற்றமளிப்பதாக மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங் கூறுகிறார். பத்து மாணவர்கள் அங்கிருந்து இடம் மாறிச்செல்ல முற்பட்டதைச் சுட்டிக்காட்டிய அந்த முன்னாள் கல்வி துணை அமைச்சர்,…

மலேசியாவுக்குள் வங்காள தேசத் தொழிலாளர்கள் ‘கொண்டு வரப்படுவதாக’ பிகேஆர் சொல்கிறது

கேள்விக்குரிய சுற்றுப்பயண விசாக்களை வழங்குவதின் மூலம் ஆயிரக்கணக்கான வங்காள தேசத் தொழிலாளர்களை மலேசியாவுக்குள் கொண்டு வர அரசாங்க அதிகாரிகள் வகுத்துள்ள ஒரு திட்டத்துக்கு உதவியாக கூடுதல் விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்படுவதாக பிகேஆர் கூறிக் கொண்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு மாத சுற்றுப்பயண விசா என அழைக்கப்படும் ஆவணத்துடன் ஆயிரம் வங்காள தேசத் தொழிலாளர்களைக்…

‘சஞ்சீவனின் ஞாபக மறதி நிரந்தரமானதல்ல’

குற்ற-எதிர்ப்பு இயக்கவாதி ஆர். சஞ்சீவனின் ஞாபக மறதி நிரந்தரமானதல்ல, சில நாள்களில் அவருக்கு எல்லாம் நினைவுக்கு வந்திடலாம் என்று அவரின் தந்தை பி.ராமகிருஷ்ணன் கூறினார். 10-நாள் நினைவிழந்திருந்த  சஞ்சீவனுக்கு இப்போது நினைவு திரும்பிவிட்டது.  ஆனால், அவரால் பெற்றோரைக்கூட அடையாளம்  கண்டுகொள்ள இயலவில்லை. “நாங்கள்தான் அதை நினைவூட்ட வேண்டி இருக்கிறது.…

மஇகா தேர்தல்: கவனம் உதவித் தலைவர்கள்மீது திரும்புகிறது

செப்டம்பர் 1-இல், ஜி.பழனிவேல் போட்டியின்றி மஇகா தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.அதே வேளை, தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதில்லை என ஒப்புக்கொண்டிருக்கும் டாக்டர் எஸ். சுப்ரமணியத்தை எதிர்த்துத் துணைத் தலைவர் பதவிக்கு எவரும் போட்டியிடுவார்களா என்பதும் சந்தேகமே.. அவ்வாறு செய்வது அரசியல் தற்கொலை என்பதை அனவரும் அறிந்தே இருப்பதால் எவரும் அதில் ஆர்வம்…

டிஏபி: கணிதம் அறிவியல் பாடங்களுக்கான மதிப்பெண்கள் ரகசியமா ?

ஐந்தாம் படிவ கணிதம், கூடுதல் கணிதம், பௌதிகம், இரசாயனம், ஆங்கிலம்  ஆகிய பாடங்களுக்கான ஐந்தாம் படிவத் தேர்வுகளில் தேர்ச்சி மதிப்பெண்களை  (passing marks) தெரிவிக்க கல்வி அமைச்சு மறுப்பதாக சரவாக் எதிர்க்கட்சித்  தலைவர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தின் அந்தத் தகவல் வருவதாக காரணம் காட்டி…

பிகேஆர்: தண்டா புத்ரா அறிவுரை நினைவூட்டலே

'தண்டா புத்ரா' திரைப்படத்தை திரையிட வேண்டாம் என பினாங்கு மாநில  அரசாங்கம் சினிமா அரங்குகளுக்குத் தெரிவித்துள்ள 'ஆலோசனை' அந்தத்  திரைப்படத்தின் உள்ளடக்கம் பற்றி மக்களுக்கு நினைவூட்டலாகும் என  எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சொல்கிறார். "மக்களுக்கு நினைவூட்டப்படுவது அவசியமாகும். அந்தத் திரைப்படம் வரலாற்று  ஆவணம் என வலியுறுத்தப்படுகின்றது. அது…

பிஎன் -னுடன் கலந்துரையாடல் நடத்த அன்வார் முன் வருகிறார்

முக்கியமான தேசியப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்துக்கும் எதிர்த்தரப்புக்கும் இடையில் திறந்த கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என  எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார். "திறந்த கலந்துரையாடலை நடத்துவதற்கு நாங்கள் யோசனை தெரிவிக்கிறோம்.  அது வெளிப்படையாகவும் பொருத்தமானதாகவும் இருக்கும்," என அவர் இன்று  காலை பிகேஆர் தலைமையகத்தில் மெர்தேக்கா உரையை…

அன்வார்: ஜிஎஸ்டி-க்கு முன்னர் மிக முக்கியமான பிரச்னைகளை கவனியுங்கள்

அரசாங்கம் 2014 வரவு செலவுத் திட்டத்தில் ஜிஎஸ்டி என்ற பொருள் சேவை  வரியை அறிமுகம் செய்தாலும் அந்த வரியை எதிர்ப்பதில் தாம் உறுதியாக  இருப்பதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சொல்கிறார். "நமக்கு ஏன் ஜிஎஸ்டி தேவை ? வருமானத்தை அதிகரிப்பதற்காக. ஊழல், விரயம்  போன்ற மிக முக்கியமான…

குண்டர் கும்பல்களில் அபாயமிக்கவை இந்தியர்களைக் கொண்ட 04, 08 கும்பல்களே

நாட்டில்  செயல்பட்டு வரும் இரகசிய குண்டர் கும்பல்கள் பற்றிய விவரங்களை உள்துறை அமைச்சு நேற்று வெளியிட்டது. 49 குண்டர் கும்பல்கள் செயல்பட்டு வந்தாலும் மிகவும் ஆபத்தானவர்கள், ரவுடித்தனத்தில் அதிகம் ஈடுபடுபவர்கள் இந்தியர்களைக் கொண்ட 04, 08 கேங்குகளே என்கிறார் உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் அப்துல் ரஹிம் முகம்மட்…

கோகிலன்: வேதா துணை அமைச்சர் வேலையைத் தானே செய்கிறார்

பிரதமர் துறை துணை அமைச்சர் பி வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என சக  அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ள வேளையில் வேதமூர்த்தி தமது பணிகளை  தொடர வேண்டும் என கெராக்கான் உதவித் தலைவர் ஏ கோகிலன் பிள்ளை  அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பினாங்கு சுங்கை நிபோங்கில் கடந்த வாரம் சந்தேகத்துக்குரிய…

தாண்டா புத்ரா, வரலாற்று உண்மை என்கிறார்கள் படம் பார்த்தவர்கள்

தாண்டா புத்ரா படம் பார்த்த ஒருவர், அதில் சித்திரிக்கப்படும் மே 13 சம்பவங்கள் “வரலாற்று உண்மை” என்று நம்புகிறார். அப்படத்தில் எழுப்பப்படும் விவகாரங்கள் வரலாற்றில் நீங்கா இடம்பெற்றிருக்கும். அதை வருங்கால மக்கள் ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும் என்று சைடி சித்திக் கூறினார். “மே 13, 1969-இல் நான்…

கைரி: நாட்டுக்கு ‘புது வேகம்’ கொடுக்க புதிய சமூக ஒப்பந்தம்…

நாட்டுக்கு மலேசியர்கள் 'புது வேகத்தை' கொடுக்க புதிய சமூக ஒப்பந்தம்  வரையப்பட வேண்டும் என இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுதின்  யோசனை கூறியிருக்கிறார். "அத்தகைய நடவடிக்கை மலேசியர்கள் தங்கள் ஐக்கியத்திற்கு புதிய அடித்தளம்  அமைக்க உதவும். அத்துடன் இன்றைய தலைமுறை எதிர்நோக்கும் சவால்களைப்  பிரதிபலிப்பதாகவும் அது இருக்கும்."…

பினாங்கில் தண்டா புத்ராவை திரையிடுமாறு பினாஸ் ஆணையிடும்

'தண்டா புத்ரா' திரைப்படம் உணர்வுகளைத் தூண்டும் தன்மையைக்  கொண்டிருப்பதால் அதனைத் திரையிட வேண்டாம் என பினாங்கு மாநில  அரசாங்கம் கூறியுள்ள ஆலோசனைக்கு அங்குள்ள சினிமா அரங்குகள்  கட்டுப்பட்டுள்ள போதிலும் அதனை அவை திரையிட வேண்டிய நிலை ஏற்படலாம். சர்ச்சையை உருவாக்கியுள்ள அந்தத் திரைப்படம் சனிக்கிழமை பினாங்கு  தியேட்டர்களில் காட்டப்படும்…

பெற்றோர் இல்லாமல் பிள்ளைகளை போலீசார் விசாரித்தது தவறு

"போலீஸ் அதிகாரிகள் பிள்ளைகளை 'பேட்டி' கண்டனர். அவர்களிடமிருந்து  அதிகாரத்துவ வாக்குமூலத்தை பதிவு செய்யவில்லை. என்றாலும் மாணவர்களை  அச்சுறுத்தவில்லை என அவர்கள் கூறிக் கொள்கின்றனர். அதனை நம்ப முடிகிறதா  ?" ஒசிபிடி: ஆமாம் நாங்கள் பிள்ளைகளை விசாரித்தோம். ஆனால் மிரட்டவில்லை அப்சலோம்: போலீசார் மாணவர்களிடம் 'பேசுவதற்கு' முன்னர் தலைமை  ஆசிரியரின்…