சிலாங்கூர் மெர்தேக்கா தின ஊர்வலத்திலிருந்து போலீசும் இராணுவமும் விலகிக் கொண்டன

நேற்றிரவு நடைபெற்ற சிலாங்கூர் தேசிய நாள் ஊர்வலத்தில் பங்கு கொள்வதிலிருந்து அரச மலேசியப் போலீஸ் படையும் மலேசிய ஆயுதப் படைகளும் விலகிக் கொண்டன. அந்த நிகழ்வில் பேசுவதற்கு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அனுமதிக்கப்பட்டதே அதற்குக் காரணம் என அவை கூறிக் கொண்டன. போலீஸ் படை விலகிக்…

போலீஸ், ஜஞ்சி டெமாக்கரசி ஏற்பாட்டாளர்களை விசாரிக்கிறது

கோலாலம்பூர் டாத்தாரான் மெர்தேக்காவில் நேற்றிரவு 10,000 மக்களைக் கவர்ந்த ஜஞ்சி டெமாக்கரசி (Janji Demokrasi) பேரணி ஏற்பாட்டாளர்களை போலீஸ் விசாரிக்கிறது. அதனை உறுதிப்படுத்திய கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுப் பிரிவுத் தலைவர் கூ சின் வா, 2012ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் அந்த புலானய்வு நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.…

டிவிட்டர்ஜெயா: சின்னப் பிள்ளைகளுடன் பாலியல் வல்லுறவு குழந்தை விளையாட்டல்ல

12 வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டைப் புரிந்ததாக கண்டு பிடிக்கப்பட்ட 22 வயதான ஆடவர் ஒருவருக்கு பினாங்கு செஷன்ஸ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிக்காமல் போனதைக் கண்டு இணைய குடிமக்கள் ஆத்திரத்தையும் வெறுப்பையும் கொட்டியுள்ளனர். அந்தத் தீர்ப்பை எல்லாத் தரப்புக்களைச் சார்ந்த மக்களும் குறிப்பாக சமூக ஊடகங்களில்…

டாத்தாரானில் மெர்தேக்காவுக்கு முந்திய நாளில் தெளிவான எதிர்ப்பு

"டாத்தாரான் மெர்தேக்காவில் நேற்றிரவு நடைபெற்ற 'Janji Demokrasi' கூட்டத்துக்குச் சென்ற துணிச்சலான சரியான சிந்தனையைக் கொண்ட அனைத்து மக்களுக்கும் பாராட்டுக்கள்." தடை விதிக்கப்பட்ட போதிலும் மஞ்சள் சட்டைகள் டாத்தாரானை நிறைத்தன [காணொளி ] மாற்றம்: விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதுமில்லை என டாங் வாங்கி போலீஸ் மாவட்டத் தலைவர் ஜைனுடின்…

மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களுக்கு ஆதரவு தேட பெரிய பரிசுகள்

கூட்டரசு அரசாங்கம் தேசிய நாள் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ள தேசிய அரங்கத்தில்  பொது மக்களுக்கு இருக்கைகள் கிடைக்குமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. என்றாலும் அந்த மாபெரும் நிகழ்ச்சியை ஒட்டி அதிர்ஷ்ட குலுக்கு நிச்சயம் நடத்தப்படும் என உறுதியாகத் தெரிகிறது. அந்தக் குலுக்கில் வெற்றி பெறுகின்றவர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகள்…

Janji Demokrasi பேரணி சட்டவிரோதமானது: போலீஸ் அறிவிப்பு

இன்றிரவு நடைபெறவுள்ள Janji Demokrasi பேரணி விதிமுறைகளுக்கு எதிரானது என்று போலீஸ் அறிவித்துள்ளது. ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் மரியா சின்-னைத் தொடர்புகொண்டபோது அவர் இதை உறுதிப்படுத்தினார். டாங் வாங்கி வட்டார போலீஸ் தலைவர் சைனுடின் அஹ்மட் அனுப்பிய கடிதம் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகத்தான் வந்து கிடைத்ததாக அவர் சொன்னார்.…

டாக்டர் மகாதீருக்கு சபீனாவை அனுப்பும் முயற்சியில் கர்பால் தோல்வி

டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் தமக்கு எதிராக நடைபெற்று வரும் தேச நிந்தனை வழக்கில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு சபீனா அனுப்ப வேண்டும் என சமர்பித்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது. முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அபு தாலிப் ஒஸ்மான், அவரை…

நஸ்ரி: பிஎன் மூவரை கண்டிக்க வேண்டும் என்ற யோசனையை அமைச்சரவை…

1950ம் ஆண்டுக்கான ஆதாரச் சட்டத்தின் 114ஏ பிரிவை வெளிப்படையாக ஆட்சேபித்ததற்காக மூன்று முக்கிய பிஎன் தலைவர்களைக் கண்டிக்க வேண்டும் என ஆகஸ்ட் 15ம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் யோசனைகள் தெரிவிக்கப்பட்டதை பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் அந்த யோசனைகளை ஏற்றுக் கொள்வதில்லை…

WWW1: நிஜாருக்கு இழப்பீடு கொடுக்க உத்துசானுக்கு உத்தரவு

கோலாலம்பூர் சிவில் உயர் நீதிமன்றம், முன்னாள் பேராக் மந்திரி புசார் முகம்மட் நிஜார் ஜமாலுடின், உத்துசான் மலேசியாவுக்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்கில் அவருக்கு இழப்பீடு வழங்குமாறு  அச்செய்தித்தாளின் உரிமையாளரான உத்துசான் மலாயு (எம்) பெர்ஹாட்டுக்கு  இன்று உத்தரவிட்டது. இன்றைய விசாரணைக்கு உத்துசானின் வழக்குரைஞர் வராததால் நீதிமன்றம் இடைக்காலத்…

Janji Demokrasi பேரணி சட்டவிரோதமானது: போலீஸ் அறிவிப்பு

இன்றிரவு நடைபெறவுள்ள Janji Demokrasi பேரணி விதிமுறைகளுக்கு எதிரானது என்று போலீஸ் அறிவித்துள்ளது. ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் மரியா சின்னைத் தொடர்புகொண்டபோது அவர் இதை உறுதிப்படுத்தினார். டாங் வாங்கி வட்டார போலீஸ் தலைவர் சைனுடின் அஹ்மட் அனுப்பிய கடிதம் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகத்தான் வந்து கிடைத்ததாக அவர் சொன்னார்.

கட்சித்தாவல்-தடுப்புச் சட்டத்துக்கு கெராக்கான் எதிர்ப்பு

பினாங்கு சட்டமன்றத்தின் நவம்பர் மாதக் கூட்டத்தில் கட்சிவிட்டு கட்சி தாவும் அரசியல் தவளைகளுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள கட்சித்தாவல்-தடுப்புச் சட்டத்தை எல்லாருமே வரவேற்கவில்லை. அச்சட்டம் கொண்டுவர பக்காத்தான் ரக்யாட் காட்டும் அவசரம் ‘ ஒரு நாடகமாக அல்லது கூத்தாகத்தான்’   பினாங்கின் மாற்றரசுக் கட்சிகளுக்கு- குறிப்பாக கெராக்கானுக்குப் படுகிறது.ஏனென்றால், பினாங்கில் அப்படி…

புதிய என்ஜிஓ பக்காத்தான் விவகாரங்களையும் அலசி ஆராயும்

தவறுகளைக் கண்காணிக்கவும் அவை பற்றித் தகவல் அளிக்கவும் அமைக்கப்பட்டிருக்கும் புதிய அரசுசாரா அமைப்பான  National Oversight and Whistleblowers (NOW) பிகேஆர் தொடர்புள்ளது என்றாலும் பக்காத்தான் ரக்யாட் ஊழல்களையும் அது விட்டு வைக்காது, அலசி ஆராயும். “மற்றவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதுபோலவே பக்காத்தானிடமும் நடந்துகொள்வோம். “ஆனால் புகார் சொல்பவர்கள் ஆதாரங்களைக்…

IPCMC போலீஸ் மீது பொது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தும்

IPCMC என்ற போலீஸ் புகார்கள், தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையம் அமைக்கப்படுவதின் மூலம் போலீஸ் மீது பொது மக்கள் நம்பிக்கை குறைந்து வருவதைத் தடுக்க முடியும் என Proham என்ற மனித உரிமைகள் மேம்பாட்டுச் சங்கம் கூறியுள்ளது. போலீசாரின் தவறான நடத்தைகளை ஆய்வு செய்வதற்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள…

‘மெர்தேக்கா வரவேற்பு நிகழ்வுகளுக்கு அனுமதி தேவையா ?’

டாத்தாரான் மெர்தேக்காவில் இன்றிரவு கூடுவதின் மூலம் தாங்கள் அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தை மீறப் போவதாக கூறப்படுவதை ஜாஞ்சி டெமாக்கரசி ஏற்பாட்டாளர்கள் நிராகரித்துள்ளனர். வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்துவதாக தான் அளித்துள்ள வாக்குறுதியை அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அந்தக் கூட்டத்திற்குப் பின்னணியில் உள்ள 47 அரசு சாரா அமைப்புக்களைச்…

விட்டுக் கொடுக்க வேண்டாம், உத்துசான் போண்டியாகும் வரை வழக்குப் போடுங்கள்

"அவர்கள் விதி விலக்குப் பெற்றவர்களைப் போல, யாரும் தொட முடியாதவர்கள்  என்பதைப் போல பொய்ச் செய்திகளையும் பாதி உண்மைகளையும்  போடுகின்றனர். வெறுப்புணர்வைத் தூண்டி விடும் தேசத் துரோக கட்டுரைகளை வெளியிடுகின்றனர்." உத்துசான் ஆசிரியர் கர்பாலிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டார் லின் வென் குவன்: சமய, இனப் பகை…

அம்பாங் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்: சாட்சியமளிக்க நிபந்தனை

கடந்த வாரம் அம்பாங் போலீசால் தங்கள் நண்பர் டி.தினேஷ் சுட்டுக்கொல்லப்பட்டதை நேரில் கண்ட இருவர், அந்த வட்டாரப் போலீசிடம் வாக்குமூலம் அளிக்க மறுக்கின்றனர். கே.மோசஸ்,ஒய்.இளவரசன்(இடம்)ஆகிய அவ்விருவரும் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த “சுயேச்சை விசாரணைக் குழுவிடம் மட்டுமே” சாட்சியமளிப்பார்கள் என வழக்குரைஞர் என்.சுரேந்திரன் கூறினார். “துப்பாக்கியால் சுட்டவர்கள் அம்பாங் போலீஸ்…

பக்காத்தான் விரும்பினால் சிலாங்கூர் கட்சித்தாவல்-தடுப்புச் சட்டம் கொண்டுவரும்

பக்காத்தான் ரக்யாட் உயர்தலைவர்கள் அனுமதித்தால் கட்சித்தாவல்-தடுப்புச் சட்டம் கொண்டுவருவது பற்றி சிலாங்கூர் பரிசீலிக்கும். அது ஒரு “அரசியல் விவகாரம்” என்றுரைத்த மந்திரி  புசார் காலிட் இப்ராகிம், இப்போதைக்கு அதனினும் முக்கியமான விவகாரங்கள் இருப்பதாக ஷா ஆலமில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார். முக்கியமாக 13வது பொதுத் தேர்தலின் வேட்பாளர் பட்டியலில்…

தண்ணீர் விவகாரம்: மறுசீரமைப்புக்கான விவரங்களை சிலாங்கூர் சமர்பிக்கும்

சிலாங்கூர் மாநில அரசாங்கம் தண்ணீர் மறுசீரமைப்பு ஏற்பாடுகள் தொடர்பான விவரங்களை அடுத்த மாதம் நீர் வள சலுகைகளைப் பெற்றுள்ள நான்கு நிறுவனங்களிடமும் சமர்பிக்கும் என மந்திரி புசார் காலித் இப்ராஹிம் கூறியிருக்கிறார். "நாங்கள் செப்டம்பர் இரண்டாவது வாரம் யோசனைகளையும் அவற்றை அமல்படுத்துவதற்கான முறைகளையும் தெரிவிப்போம்." "சிலாங்கூரில் உள்ள அந்த…

114ஏ பிரிவு மீதான கருத்துக்காக பிஎன் மூவர் கண்டிக்கப்படலாம்

1950ம் ஆண்டுக்கான ஆதாரச் சட்டத்தின் 114ஏ பிரிவை வெளிப்படையாக எதிர்த்ததற்காக மூன்று முக்கிய பிஎன் தலைவர்கள் கண்டிக்கப்பட வேண்டும் என்ற யோசனையை அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது. உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுதின் அப்துல்லா, இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் கான் பிங் சியூ, அம்னோ இளைஞர் தலைவர்…

டாத்தாரான் நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றவர்கள் மஞ்சள் உடையிலும் வரலாம்

கோலாலம்பூர் டாத்தாரான் மெர்தேக்காவில் நிகழும் 55வது மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வரும் பொது மக்கள் மஞ்சள் உடையை அணிந்திருப்பதற்கு எந்த ஆட்சேபமும் இல்லை என தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் கூறுகிறார். "மஞ்சள் அல்லது சிவப்பு அன்றைய தினம் எதுவாக இருந்தாலும் எங்களுக்கு…

மெர்தேக்கா நிகழ்வுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என ஜாஞ்சி டெமாக்கரசி…

அதிகாரத்துவ மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார், ஜாஞ்சி டெமாக்கரசி ( Janji Demokrasi ) ஏற்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன் எற்பாட்டாளர்கள் அண்மையில் நிறைவேற்றப்பட்ட அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.…

மெர்டேகா கொண்டாட்டத்தில் நஜிப்புக்குப் பக்கத்தில் கிட் சியாங்குக்கு இடமளிக்கத் தயார்

தகவல்,தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம், புக்கிட் ஜலில் அரங்கில் நடைபெறும் மெர்டேகா தினக் கொண்டாட்டத்தில் மாற்றரசுக் கட்சித் தலைவர்களுக்கு இடமில்லை என்று கூறப்படுவதை மறுக்கிறார். வெள்ளிக்கிழமை இரவுக் கொண்டாட்டத்தில் அவர்களும் தாராளமாக கலந்துகொள்ளலாம் என்கிறார் அவர். “அது உண்மையல்ல. எவரும் வரலாம். அது பிஎன் கட்சிக்காரர்களுக்கு மட்டுமே…