மக்களின் பாதுகாப்பில் ஏன் இந்த மெத்தனப் போக்கு – சார்ல்ஸ்…

தனது கடைக்கு முன் டெலிக்கொம் மலேசியாவின் குத்தகையாளர்கள் ஏற்படுத்திய துளையை  சரி செய்ய கோரி விண்ணப்பம் செய்த லீ காங் ஹன் (வயது 36) என்ற வர்த்தகர், டெலிகொம் மலேசியாவின் மெத்தனப் போக்கினாலும்  அலட்சியப் போக்கினாலும் ஏமாற்றம் அடைந்து, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சேவை மையத்தின் உதவியை நாடினார்.…

ஹனிப் வழக்குரைஞர் மன்றத்தையும் அம்பிகாவையும் சந்திக்க விரும்புகிறார்

கடந்த ஏப்ரல் 28 இல் நடந்த பெர்சே 3.0 பேரணியில் ஏற்பட்ட கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள சுயேட்சை ஆலோசனைக் குழு வழக்குரைஞர் மன்றம் மற்றும் அம்பிகா சீனிவாசன் ஆகியோரைச் சந்தித்து அன்று என்ன நடந்தது என்று விவாதிப்பதற்காக சந்திப்புக்கான நேரம் கேட்டு ஒரு கடிதத்தை இன்று அனுப்பியுள்ளது.…

எங்கெங்கு நோக்கினும் குற்றச்செயல்களே: மலேசியாகினி ஊழியர்களின் அனுபவங்கள்

குற்றங்கள் குறைந்திருப்பதாகவும் ஊடகங்கள்தாம் குற்றச்செயல்கள் பெருகியிருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டன என்றும் போலீசும் அரசாங்கத் தலைவர்களும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மலேசியாகினி ஊழியர்களில் சிலர் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால்,அவர்கள்  கடந்த மாதம் குற்றச்செயல்களுக்கு நேரடியாக பலியானவர்கள். ஒருவர் ஒரு கொள்ளைக்கும்பலிடம் பொருள்களைப் பறி கொடுத்தார், மற்ற மூவரில் ஒருவரின்…

சொங் வெய்க்கு பினாங்கு அரசு ரிம100,000 வெகுமதி

பினாங்கு அரசு தேசிய பூப்பந்து வீரர் லீ சொங் வெய்யைப் பாராட்டி வெகுமதியாக ரிம100,000  வழங்கக்கூடும் என்று முதலமைச்சர் லிம் குவான் எங் அறிவித்துள்ளார். ஒலிம்பிக் விளையாட்டுகளில் இரண்டு வெள்ளி பதக்கம் வென்ற ஒரே மலேசியர் என்ற முறையில் அவருக்கு வெகுமதி வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் என்று பெர்பாடானான்…

பினாங்கில் முஸ்லிம்கள் மதம் மாற்றம் செய்யப்படுவதற்கான ஆதாரத்தை என்ஜிஒ சமர்பிக்கும்

அந்நியர்கள் பினாங்கில் முஸ்லிம்களை மதம் மாற்றம் செய்வதாகக் கூறிக் கொள்ளும் என்ஜிஒ என்ற ஒர் அரசு சாரா அமைப்பு படங்கள் வடிவிலும் வீடியோ ஒளிப்பதிவுகள் வடிவிலும் ஆதாரங்களை பினாங்கு இஸ்லாமிய விவகார மன்றத்திடம் சமர்பிக்கவிருக்கிறது. அந்த ஆதாரங்கள் வரும் வியாழக்கிழமை பினாங்கு இஸ்லாமிய விவகார மன்றத் தலைவர் முகமட்…

கிளந்தான் பாஸ்: எண்ணெய் உரிமப் பணக் குழு தேர்தல் மாயாஜாலம்

மூன்று கிழக்குக் கரை மாநிலங்களுக்கான எண்ணெய் உரிமப்பண விவகாரம் மீது சிறப்புக் குழு ஒன்றை அமைக்க பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எடுத்துள்ள முடிவை கிளந்தான் பாஸ் நிராகரித்துள்ளது. அதனைத் தேர்தல் தந்திரம் என வருணித்த அது வெளியிலிருந்து பிஎன்-னுக்கு தொடுக்கப்படும் நெருக்குதலையும் ஆளும் கூட்டணிக்குள் இருந்து கொடுக்கப்படும்…

பிகேஆர்: ஏய்ம்ஸ்ட் உணவு விடுதி குத்தகையில் வேள்பாரி தலையிட்டார்

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக உணவு விடுதியை நடத்தும் ஒப்பந்தம் மஇகா இளைஞர் தலைவர் ஒருவருடைய நிறுவனத்துக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான எஸ் வேள்பாரி தலையிட்டதை நிரூபிப்பதாகக் கூறப்படும் அதிகமான ஆவணங்களை பிகேஆர் இன்று வெளியிட்டது. 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் தேதி…

சொங் வெய் மீதான டிவிட்டர் செய்திக்காக மனோகரன் மன்னிப்புக் கேட்டார்

தேசிய பூப்பந்து வீரரான லி சொங் வெய் குறித்து டிவிட்டரில் தெரிவித்த கருத்துக்களுக்காக கோத்தா அலாம் ஷா சட்டமன்ற உறுப்பினர் எம் மனோகரன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார். லண்டன் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான பூப்பந்து ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சொங் வெய் சீனாவின் லின் டான்-இடம் தோல்வி கண்ட பின்னர்…

சொங் வெய்க்கு ரசிகர்கள் வீர வரவேற்பு அளித்தனர்

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பூப்பந்து ஒற்றையர் ஆட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற தேசிய பூப்பந்து வீரர் லீ சொங் வெய் இன்று காலை கோலாலம்பூர் திரும்பினார். அவருக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கூடியிருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் மகத்தான வரவேற்பு அளித்தனர். அந்த பூப்பந்து ஒற்றையர் ஆட்டத்தில்…

அம்பிகாவுடன் தமிழ் ஊடகங்கள்!

தூயத் தேர்தல் வழி சனநாயகத்தையும் சமத்துவத்தையும் கொண்டு வர முடியுமா? இந்த கேள்வியை மையமாக கொண்டு சமூக அமைப்புகளின் விருந்து நிகழ்வு வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணியளவில் மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் (சா ஆலம்)  நடைபெறவுள்ளது. இதில் டத்தோ அம்பிகா சீனிவாசன், நமது…

பினாங்கு பிஎன் வேட்பாளர் பிரச்னை 13வது பொதுத் தேர்தலை தாமதிக்கிறதா?

அடுத்த பொதுத் தேர்தலுக்கு தனது தேர்தல் மாவட்டங்களைத் தயார் செய்வதில் பினாங்கு பிஎன் பல சவால்களை எதிர்நோக்குகிறது. அந்தப் பகுதிகளில் யார் போட்டியிடுவது என்பதை இன்னும் சில உறுப்புக் கட்சிகள் முடிவு செய்யாமல் இருப்பதே அதற்குக் காரணமாகும். களத்தில் நிலைமை கடுமையாக இருப்பதாகக் கூறப்படுவதை நிராகரித்த மாநில பிஎன்…

3பக்காத்தான் மாநிலங்களில் மாற்றுக் கருப்பொருளில் தேசிய நாள் கொண்டாட்டம்

பக்காத்தான்  ஆளும் மூன்று மாநிலங்களில் -பினாங்கு, சிலாங்கூர்,கிளந்தான்-இவ்வாண்டு தேசிய நாள் கொண்டாட்டங்கள்   ‘Sebangsa, Senegara, Sejiwa’ (ஒரே தேசியம், ஒரே நாடு, ஒரே மூச்சு) என்ற அவற்றின் மாற்றுக் கருப்பொருளில் கொண்டாடப்படும் என்பதை பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் ஆயுப் உறுதிப்படுத்தினார். ஆனால், இன்னொரு பக்காத்தான் மாநிலமான கெடா,…

போலீஸ் படையில் உள்ள ஆண்களும் பெண்களும் ஏன் பின்-னைக் கண்டு…

தேர்தல்களின் போது 100,000 பேரைக் கொண்ட போலீஸ் படை வழக்கமாக பிஎன்-னுக்கு ஆதரவளிப்பதற்குத் தாங்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தால் 'துரோகிகள்' என்றும் நன்றி மறந்தவர்கள் என்றும் தாங்கள் கருதப்படலாம் என்ற அச்சம் அதிகாரிகளிடையே நிலவுவதே காரணமாகும்.   இவ்வாறு புக்கிட் அமான் குற்றப் புலானய்வுத் துறை இயக்குநர் பொறுப்பிலிருந்து ஒய்வு பெற்ற…

மார்ச் 8 புத்தகத் தடை தொடரும்; மேல் முறையீட்டு நீதிமன்றம்…

பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கம்போங் மேடான் வன்முறை பற்றிய "மார்ச் 8" என்ற புத்தகத்திற்கு அரசாங்கம் விதித்த தடையை ரத்துச் செய்வதற்கு அதன் ஆசிரியர் கா. ஆறுமுகம் செய்த மனுவை மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்தது. மார்ச் 8 என்னும் தலைப்பில் தமிழ்மொழியில் எழுதப்பட்ட அந்தப்…

சைனாய்ட் எதிர்ப்புப் பேரணி சுகாதாரப் பிரச்னைகளைத் தீர்க்காது என்கிறார் அமைச்சர்

Raub Australian Gold Mine (RAGM) Sdn Bhd தங்கச் சுரங்க நடவடிக்கைகளுக்கு சைனாய்ட்டை பயன்படுத்துவது மீதான நீண்ட காலப் பிரச்னை மீது பேரணியை நடத்துவதற்குப் பதில் அதற்கான  தீர்வுகளை முன் வைக்குமாறு ரவூப் பசுமைப் பேரணியை சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் கேட்டுக் கொண்டிருக்கிறார். பாகாங்…

கனி தொடர்பான புத்தகம் மீது ரோபர்ட் பாங் புகார் செய்தார்

‘Tan Sri Abdul Gani Patail: Pemalsu, Penipu, Penjenayah?’ என்னும் தலைப்பைக் கொண்ட புதிய புத்தகத்தில் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லின் அதிகார அத்துமீறல்கள் என வருணிக்கப்பட்டுள்ள விஷயங்களை அதிகாரிகள் ஆராய வேண்டும் என எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய ஆலோசகர் குழு…

ஷாரிஸாட்: எனக்கு என்எப்சி திட்டம் பற்றி எதுவும் தெரியாது

தேசிய விலங்குக் கூடத் திட்டத்தைப் பெறுவதற்குத் தமது கணவர் முயற்சி செய்தது குறித்து தமக்கு தெரியும் எனக் கூறப்படுவதை ஷாரிஸாட் அப்துல் ஜலில் மறுத்துள்ளார். அவர் இரண்டு பிகேஆர் தலைவர்களுக்கு எதிராகத் தாம் தொடுத்துள்ள 100 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கில் சாட்சியமளித்தார். என்எப்சி  என்ற தேசிய விலங்குக்…

சொங் வெய்மீது மனோகரன் தெரிவித்த கருத்துக்குக் கண்டனம்

தேசிய பூப்பந்து வீரர் லீ சொங் வெய், நேற்றிரவு சீனாவின் லின் டானுடன் கடுமையாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்ததால் மலேசியர் பலர் ஏமாற்றமடைந்தனர். லீ தோற்றாலும் அவரின் கடும் முயற்சியை  மலேசியர்கள் பாராட்டினர், மெச்சினர். ஆனால், அவரது ஆட்டம் பற்றி தம் டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவுசெய்த டிஏபி-இன்…

ஸபாஷ்: தண்ணீர் பங்கீட்டைக் குடியிருப்பாளர்கள் ஆதரிக்கிறார்கள்

குடியிருப்பாளர்கள் பலருடைய கோரிக்கைகளுக்கு இணங்க தண்ணீர் பங்கீட்டு விவகாரத்தைத் தேசிய நீர்ச்சேவை ஆணையத்தின்(ஸ்பேன்) கவனத்துக்கு மீண்டும் கொண்டு செல்லப் போவதாக ஷரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூர்(ஸபாஷ்) கூறியுள்ளது. “சீரமத்தை எல்லாரும் பகிர்ந்துகொள்ளும் வகையில் தண்ணீர் பங்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் குரல்கள் வலுத்து வருகின்றன”, என்று தலைமை…

சொங் வெய்க்கு தேசிய வீரருக்குரிய வரவேற்பு

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பூப்பந்தாட்டத்தில் தங்கப் பதக்கம் பெறத் தவறினாலும் நாளை நாடு திரும்பும் லீ சொங் வெய்க்கு தேசிய வீரருக்குரிய வரவேற்பு அளிக்கப்படும். சொங் வெய் தம் பரம் எதிரியான லின் டானை எதிர்ப்பதில் மிகுந்த மன உறுதியை வெளிப்படுத்தினார் என்று இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர்…

கைரி: எண்ணெய் உரிமப் பணக் குழு தேர்தல் இனிப்பு அல்ல

கிழக்கு கரை மாநிலங்களுக்கு எண்ணெய் உரிமப் பணம் கொடுப்பது மீது சிறப்புக் குழுவை அமைக்க கூட்டரசு அரசாங்கம் முடிவு செய்திருப்பதற்கும் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதீன் கூறுகிறார். பொருளாதார ரீதியில் வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு உதவி செய்ய…

தேசிய நாள் பாடல் காப்பியடிப்பா? வழக்கு தொடுத்தால் அதைச் சந்திக்கவும்…

இவ்வாண்டுக்கான தேசிய நாள் பாடலான  'Janji Ditepati' (Promises Fulfilled)மற்ற பாடல்களைப் பார்த்து காப்பியடிக்கப்பட்டது என்று கூறுவோர் அதை நிரூபித்துக்காட்டி வழக்கு தொடுத்தால் அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளார் தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம். “அது மற்றவர்களின் பாடல் என்பதை நிரூபிக்குமாறு சவால் விடுக்கிறேன்.அதற்காக என்னை…