கர்பால்: நான் கூறியது தேசநிந்தனையானது என்று பொருள்படாது

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பேராக் மாநில ஆட்சிக் கவிழ்ப்பு குறித்து செய்தியாளர் கூட்டத்தில் தாம் கூறியது தேசநிந்தனைக்கு ஒப்பானதாகாது என்று மூத்த வழக்குரைஞர் கர்பால் சிங் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறினார். "நான் சுல்தானின் தனிச்சிறப்புரிமை மீது கேள்வி எழுப்பவில்லை, அவர் நடந்து கொண்ட செயல்முறையைத்தான்", என்று…

குகனின் தாயார்: “அதிகாரப்பூர்வ மரண விசாரணை அறிக்கையில் நம்பிக்கை இல்லை”

ஏ.குகனின் தாயார் என்.இந்திரா, தம்  மகனின் இறப்புக்குப் பின்னர் வெளியிடப்பட்ட முதலாவது சவப் பரிசோதனை அறிக்கையை நம்பவில்லை என்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறினார். போலீஸ் காவலில் இருந்தபோது அடிக்கப்பட்டதால்தான் குகன் இறந்தார் என்றவர் நம்புகிறார். அரசாங்கத்துக்கும் போலீசுக்கும் எதிராக தொடுத்துள்ள ரிம100மில்லியன்  சிவில் வழக்கில் சாட்சியமளித்த இந்திரா,…

‘பத்துமலை கொண்டோ அங்கீகரிக்கப்பட்ட கூட்டத்தில் அந்த இருவரும் இல்லை’

வெளியுறவுத் துணை அமைச்சர் ஏ கோகிலன் பிள்ளையும் உலு சிலாங்கூர் எம்பி கமலநாதனும் நகராட்சி மன்ற உறுப்பினர்களாக இருந்த போது பத்துமலைக் கோவிலுக்கு அருகில் சர்ச்சைக்குரிய 29 மாடி ஆடம்பர அடுக்கு மாடித் தொகுதிக்கு (கொண்டோ) அங்கீகாரம் வழங்கிய செலாயாங் நகராட்சி மன்ற முழு வாரியக் கூட்டத்தில் இல்லை.…

முகமட் ஹசான் பாதி கதையைத்தான் சொல்லியிருக்கிறார் என்கிறது பிகேஆர்

நெகிரி செம்பிலானில் காட்டு ஒதுக்கீட்டு பகுதியிலிருந்து அகற்றப்பட்ட நிலம் மாற்றப்பட்டு YNS என்ற  Yayasan Negri Sembilan அமைப்பிடம் இருப்பதாக மாநில மந்திரி புசார் முகமட் ஹசான் விடுத்துள்ள அறிக்கையை பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் நிராகரித்துள்ளார். "முகமட் ஹசான் அந்தக் கதையில் பாதியை மட்டுமே சொல்லியிருக்கிறார்.…

பக்காத்தான் மெகா பேரணிக்கு 15 அரசு சாரா அமைப்புக்கள் ஆட்சேபம்

சிரம்பானில் நாளை நடத்தப்படவிருக்கும் பக்காத்தான் மெகா பேரணிக்கு எதிராக 15 அரசு சாரா அமைப்புக்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. குழப்பத்தைத் தவிர்ப்பதற்கு அந்தப் பேரணியை ரத்துச் செய்யுமாறு அவை ஏற்பாட்டாளர்களைக் கேட்டுக் கொண்டன. அந்த அமைப்புக்களில் GMPN என்ற மலேசிய தேசிய போராளிகளை கௌரவிக்கும் அமைப்பு, செனாவாங் மாநிலச் சட்டமன்றத்…

“பினாங்கு அடுத்த ஆண்டில் வறுமையை முற்றாக ஒழிக்கும்”

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், அடுத்த ஆண்டுக்குள் பினாங்கில் வறுமை நிலை முற்றாகத் துடைத்தொழிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். பரம ஏழ்மைநிலை என்பதை அம்மாநிலத்திலிருந்து ஒழித்துக்கட்டியிருப்பதாக 2009-இலேயே லிம், அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2015-க்குள் வறுமைநிலையை முற்றாக ஒழிக்க நிர்ணயித்திருந்த இலக்கை மாநில அரசு இப்போது முன்னோக்கிக் கொண்டு…

அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் தாங்கள் சொல்வதற்குப் பொறுப்பேற்க வேண்டும்

சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் உட்பட அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் தாங்கள் சொல்வதற்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும். அதிகாரிகள் தயாரித்ததையே  தாங்கள் வாசித்ததாக கூறி அவர்கள் தப்பித்துக் கொள்ளக் கூடாது என பத்து எம்பி  சுவா தியான் சாங் கூறினார். "அதிகாரிகள் தயாரிக்கும் பதிலைத் திருத்தும்…

ஓராங் அஸ்லி மாணவர்களை அறைந்த ஆசிரியரை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்

எம்பி பேசுகிறார்: கோபிந்த் சிங் டியோ பிஹாய் இடைநிலைப்பள்ளியில் நான்கு ஓராங் அஸ்லி மாணவர்களைக் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படும் ஆசிரியர்மீது தாக்குதல் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். பிஹாய் பள்ளி,குவா மூசாங் உள்புறம் கிளந்தான்-பேராக் எல்லைக்கருகில்  ஓராங் அஸ்லி மாணவர்களுக்காகவே உள்ள ஒரு பள்ளிக்கூடமாகும். அங்கு பயிலும்…

போலீஸ், MACC முரட்டுத்தனத்தை ஆட்சேபித்து அரசு சாரா அமைப்புக்கள் பேரணி

டிசம்பர் மாதம் அனுசரிக்கப்படவிருக்கும் மனித உரிமை தினத்துக்கு முதல் நாள் 30 அரசு சாரா அமைப்புக்களை கொண்ட ஒரு குழு அரசாங்க அமைப்புக்கள் பின்பற்றுவதாகக் கூறப்படும் முரட்டுத்தனப் பண்பாட்டை ஆட்சேபித்து பேரணி ஒன்றைத் திட்டமிட்டுள்ளன. அத்தகையை முரட்டுத்தன பண்பாட்டைக் களைவதற்கு அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதாகவும் தெரியவில்லை என்றும் அந்தக்…

பினாங்கு ரிம262 மில்லியன் பற்றாக்குறை பட்ஜெட்டை அறிவித்தது

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், ரிம262 மில்லியன் பற்றாக்குறை பட்ஜெட் ஒன்றை இன்று தாக்கல் செய்தார். 2013-இல் வரவு ரிம 708 மில்லியனாகவும் செலவு ரிம970 மில்லியனாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருப்பதாக லிம் கூறினார். “மாநில அரசின் சேமிப்பு 2011 முடிய ரிம710 மில்லியனாக இருந்தது.அதைக் கொண்டு…

கெராக்கான்: ஏஇஸ்-இல் ‘பல குறைகள்’, மேலும் ஆய்வு தேவை

பொதுமக்களிடையே “எதிர்ப்புக்குரல்” பலமாக இருப்பதால் அரசாங்கம் “குறைகளுடைய” தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்) யை Read More

ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்டது மீது அரசு அமைப்புக்கள்…

துவா சொல்லாததற்காக நான்கு ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்ட சம்பவம் மீது கல்வித் துறையும் ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறையும் நேற்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளன. குவா மூசாங், கோலா பெட்டிஸில் உள்ள Dewan Jubli Perak மண்டபத்தில் நடைபெற்ற ஐந்து மணி நேரச் சந்திப்பின் போது…

ஹிண்ட்ராப்-அன்வார் சந்திப்பு நிகழ்ந்தது

இந்திய சமூகத்தைப் பாதிக்கின்ற விஷயங்களை விவாதிப்பதற்காக ஹிண்ட்ராப் என்னும் இந்து உரிமை நடவடிக்கைக் குழு முதன் முறையாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் உட்பட பிகேஆர் உயர் நிலைத் தலைவர்களை அதிகாரப்பூர்வமாகச் சந்தித்துள்ளது. ஹிண்ட்ராப் குழுவுக்கு அதன் தலைவர் பி வேதமூர்த்தி தலைமை தாங்கினார். தமது சகோதரர் உதயகுமாருடன்…

Hummer வாகனம் நஸ்ரி-சியா தொடர்புகளைக் காட்டுவதாக பிகேஆர் சொல்கின்றது

சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ், வணிகரான மைக்கல் சியா-ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்து சியா விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளதில் சுய நலன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏனெனில் அவர்கள் இருவரும் நண்பர்கள் எனத் தெரிவதாக பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் சொன்னார். நஸ்ரிக்கும் சியாவுக்கும் இடையிலான தொடர்பு சியாவுக்கு சொந்தமான…

ஏய்ட்ஸ் நோயால் இறந்ததாக கூறப்படும் கைதிக்குச் சவப்பரிசோதனை

திங்கள்கிழமை காஜாங் சிறையில் இறந்துபோன ஆர்.குமரராஜாவுக்கு சவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. அவர் ஏய்ட்ஸ் நோயால் இறந்தார் என்று போலீசார் அறிவித்துள்ளனர். அவரின் உடல்மீது பரிசோதனை இன்று நண்பகல் தொடங்கியது. அது முடிய மூன்று மணி நேரம் ஆகலாம் என்று பிகேஆர் மனித உரிமை ஆர்வலர் எஸ்.ஜெயதாஸ் மலேசியாகினியிடம்…

கொங்: அம்னோ இளைஞர்கள் ஒரேயடியாக ஏஇஎஸ்-ஸை நிராகரிக்கவில்லை

போக்குவரத்து அமைச்சர் கொங் சோ ஹா, தானியக்க அமலாக்க முறை(ஏஇஎஸ்)  விவகாரத்தில் மாற்றரசுக் கட்சி சொந்த அரசியல் நலனுக்காக மக்களின் உயிர்களைப் பணயம் வைக்கக்கூடாது என்று கூறுகிறார். “பக்காத்தான் சாலைப் பாதுகாப்பை வைத்து அரசியல்  ஆடக்கூடாது.பிறகு, விபத்துகள் நிகழ்ந்தால் நாங்கள்தான் தேவையானதைச் செய்யவில்லை என்பார்கள். “நாங்கள் ஏதாவது செய்தால்…

Tanda Putera தாமதம் திரைப்படத் தணிக்கை வாரிய முடிவு என்கிறார்…

Tanda Putera திரைப்படம் திரையிடப்படுவது வைக்கப்பட்டுள்ளது, தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சின் முடிவு அல்ல. இவ்வாறு அதன் அமைச்சர் ராயிஸ் யாத்திம் கூறியிருக்கிறார். உள்துறை அமைச்சின் கீழ் வரும் திரைப்படத் தணிக்கை வாரியம் அதனைத் தள்ளி வைப்பது என முடிவு செய்துள்ளதாக அவர் சொன்னார். "அது தற்போது அதிகாரிகளுடைய…

பொதுச்சேவை ஊழியர் சம்பளத்தைத் திருத்தி அமைக்க அரசு ஆலோசனை

பொதுச்சேவை ஊழியர்களுக்கு ஐந்து விழுக்காடு ஊதிய உயர்வு கொடுப்பது உள்பட சம்பளத் திட்டத்தை மாற்றி அமைப்பது பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தலைமைச் செயலாளர் அலி ஹம்சா கூறினார். வாழ்க்கைச் செலவு கூடி வருவதால் இந்த மாற்றம் அவசியமாகிறது என்றாரவர். “பிரிவுவாரியாக ஆராய்வோம். உயர்நிலையில் உள்ளவர்களுக்கு ஐந்து விழுக்காடு…

தேர்தல் கொள்கை விளக்க அறிக்கை பிரதமரின் ஒப்புதலுக்குக் காத்திருக்கிறது

பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல்(பிஎன்) பினாங்கில் வெற்றி பெற்றால் அம்மாநிலத்தை மேம்படுத்தும் திட்டங்கள் எல்லாம் தயார்நிலையில் இருப்பதாகவும் அவை இப்போது திருத்திச் சீர்மைப்படுத்தப்பட்டு வருவதாகவும் மாநில பிஎன் தலைவர் தெங் சாங் இயோ கூறினார். இப்போதுள்ள நிலையில், சுற்றுலா, அடக்கவிலை வீடுகள், போக்குவரத்து என எட்டு முக்கிய பொருளாதார…

கெடா மாநிலச் செயலாளர் விலக வேண்டும் என ஊராட்சி மன்ற…

கெடா மாநிலச் செயலாளர் ராஸ்லி பாசிர் பதவி துறக்க வேண்டும் எனக் கோரி அலோர் ஸ்டாரில் மாநிலச் செயலகம் அமைந்துள்ள விஸ்மா டாருல் அமானுக்கு வெளியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்று திரண்டனர். கிராமத் தலைவர்களும் உள்ளிட்டிருந்த அந்த ஊராட்சிமன்ற உறுப்பினர் குழு ஏற்கனவே இது போன்று மூன்று…

என்ஜிஒ போராளிகள் நிறுத்தப்படுகின்றனர், பயங்கரவாதிகள் சுதந்திரமாக உலா வருகின்றனர்

"உண்மையான பயங்கரவாதிகள் மீது அதிகாரிகள் இசா சட்டத்தைப் பயன்படுத்துவது இல்லை. மாறாக தங்கள் அரசியல் எதிரிகள் மீது அதிகாரிகள் அதனைப் பயன்படுத்துகின்றனர்" பயங்கரவாதிகள் நம்ம்மிடையே இருப்பதை ஹிஷாமுடின் ஒப்புக் கொள்கிறார் ஜெடி_ஹு: போலீஸ் வளங்களைக் கொண்டு பெர்சே, சுவாராம், எதிர்க்கட்சிகள் மீது அரசாங்கம் அவற்றின் மீது வழக்குப் போடுகிறது.…

பக்காத்தான் நெகிரி செம்பிலான் பேரணியை நடத்தும், இலக்கு 50,000 ஆதரவாளர்கள்

பக்காத்தான் ராக்யாட் உள்ளூர் போலீசார் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் வரும் சனிக்கிழமையன்று சிரம்பானில் மாபெரும் பேரணியை நடத்த உறுதி பூண்டுள்ளது. அதற்கு 50,000 ஆதரவாளர்களை ஒன்று திரட்டவும் அது எண்ணியுள்ளது. நாடு முழுமைக்குமான பக்காத்தான் விளக்கக் கூட்டங்களின் முதல் கட்டமாக சிரம்பான் பேரணி அமைகின்றது. அந்தப் பேரணிக்கு அனுமதி…

“தவறு செய்த” பாகாங் எம்ஏசிசி தலைவருக்கு டத்தோ பட்டம் வழங்கப்படுவது…

எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் பாகாங் பிரிவுத் தலைவர் மோ சம்சுடின், டத்தோ பட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது அந்த ஆணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முறைகேடான நடத்தைக்காக அவர் ஏற்கனவே விசாரிக்கப்பட்டு மூன்றாவது விசாரணையை எதிர்நோக்கியுள்ள வேளையில் அவருக்கு அந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணமாகும்.…