மற்றவர்கள் எழுத்தைத் திருடினேனா? மறுக்கிறார் பேராசிரியர் டீ

யுனிவர்சிடி பெர்தஹானான் நேசனல் மலேசியா (யுஎன்பிஎம்) பேராசிரியர் ரித்வான் டீ அப்துல்லா, தாம் கல்விப் பணிகளுக்கு மற்றவர்களின் எழுத்துகளைத் திருடியதாகக் கூறப்படுவதை மறுக்கிறார். அவ்வாறு கூறுபவர்கள் தம் “பெயரைக் கெடுக்கும் எண்ணம் கொண்டவர்கள்” என்றவர் சாடினார். உத்துசான் மலேசியாவின் பத்தி எழுத்தாளராகவும் உள்ள ரித்வான், தம் எழுத்தைப் பிடிக்காதவர்கள்தான்…

இந்தியர்கள் தங்களுக்குள் உதவிக்கொள்ள வேண்டும், அரசைக் குறைசொல்லக்கூடாது’- அமைச்சர் அறிவுரை

இந்தியர்கள் அரசாங்கக் கொள்கைகளைக் குறை சொல்லிக்கொண்டிருக்காமல் அவர்களில் உயர்நிலையில் இருப்பவர்கள் வசதிகுறைந்தவர்களுக்கு உதவிட வேண்டும் என ஷாஹிடான் காசிம் கூறுகிறார். “கல்விச் சாதனையாளர்கள் என்று பார்த்தால்கூட இந்தியர்களின் விகிதாசாரம் அதிகம்தான். என்ன, உயர்நிலையில் இருப்பவர்களுக்கும் படிப்பைப் பாதியிலேயே கைவிட்டவர்களுக்குமிடையிலான இடைவெளி பெரிதாக இருக்கிறது. “எனவே, உயர்நிலையில் இருப்பவர்கள் கல்வியைப்…

தெங்கு அட்னான்: சொத்துவரி உயர்வு என் மனைவிக்குக்கூடத்தான் பிடிக்கவில்லை

கோலாலும்பூரில் சொத்து வரி உயர்வு மறுஆய்வு செய்யப்படும் எனக் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் அறிவித்துள்ளார். சொத்து வரி மிகப் பெரிய அளவில் உயர்த்தப்படுவது கோலாலும்பூர் மக்களில் பலருக்குப் பிடிக்கவில்லை.  தம் மனைவிக்கும்கூட அது பிடிக்கவில்லை என தெங்கு அட்னான் கூறினார். இன்று, கோலாலும்பூர்…

அரசு வழக்குரைஞர் குழுவிலிருந்து ஷாபியை நீக்கும் அன்வாரின் முயற்சி தோல்வி

அன்வார் இப்ராகிம்,  தம் இரண்டாவது குதப் புணர்ச்சி வழக்கின் மேல்முறையீட்டில் அரசுதரப்பு வழக்குரைஞர் குழுவுக்குத் தலைமைதாங்குவதினின்றும் அம்னோ தொடர்புடைய வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாவை நீக்க வேண்டும் என்று செய்துகொண்டிருந்த மனுவைக் கூட்டரசு  நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டிவிட்டரில் இதைத் தெரிவித்த பத்து தொகுதி எம்பி தியான் சுவா,…

ரித்வான் டீ மீது பல புகார்கள் கூறப்பட்டாலும் அவர் பேராசிரியராக…

உத்துசான் மலேசியா பத்தி எழுத்தாளரான யுனிவர்சிடி பெர்தஹானான் நேசனல் மலேசியா (யுஎன்பிஎம்) விரிவுரையாளர் ரித்வான் டீ (இடம்), சாதாரண விரிவுரையாளர் என்ற நிலையிலிருந்து பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டிருக்கிறார். இதனை அவரின் முன்னாள் சகாவும் பினாங்கின் டிஏபி செனட்டருமான அரிபின் ஒமார், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார். ரித்வான்…

கார்களுக்குக் கால-வரம்பு கட்டும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை

அரசாங்கம்  கார்களுக்குக் கால-வரம்பு கட்டும் கொள்கையைக் கொண்டுவர  திட்டமிடுவதாகக் கூறப்படுவதை மறுத்த போக்குவரத்து துணை அமைச்சர் அப்துல் அசீஸ் கப்ராவி,  அது “மாற்றரசுக் கட்சிகள் கட்டிவிட்ட கதை”, என்றார். “அரசாங்கத்திடம் அப்படி ஒரு திட்டம் இல்லை”, என  நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் கூறினார். அங்கிருந்த சாலைப்…

ரோஸ்மாவின் காட்டார் பயணம் நாட்டை பிரதிநித்தல்ல

  பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா கடந்த நவம்பர் 10 இல் காட்டாருக்கு தனிப்பட்ட ஜெட் விமானத்தில் மேற்கொண்ட பயணம் தனிப்பட்ட முறையிலானது. அவர் நாட்டை பிரதிநிக்கவில்லை என்று அவருடன் காட்டாருக்கு சென்ற அம்னோ பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினர் அஸைனால் ஓத்மான் ஒப்புக்கொண்டார். னால், அவர் ரோஸ்மாவுடன் அதே…

அஸ்ட்ரோவுக்கு எதிராக ஜிங்கா13 போர்க்கொடி

தொலைக்காட்சிச் சேவை வழங்கும் அஸ்ட்ரோவின் கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் அனுமதி அளித்திருப்பது வாழ்க்கைச் செலவினம் அதிகரித்து வருவதைப் பற்றி அது கவலைப்படவில்லை என்பதைக் காண்பிக்கிறது என அரசுசாரா அமைப்பான ஜிங்கா 13  கூறியது. பெட்ரோல், சீனி போன்றவற்றுக்கான உதவித்தொகைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ள வேளையில் அஸ்ட்ரோ கட்டண உயர்வும் வந்துள்ளது…

அரசியல் ஈடுபாட்டுக்காக அரசு ஊழியர் எவரும் பணிநீக்கம் செய்யப்பட்டதில்லை

அரசியலில் ஈடுபட்ட காரணதுக்காக அரசு ஊழியர் எவரும் பணிநீக்கம் செய்யப்பட்டதில்லை என இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 2010-க்கும் 2013-க்குமிடையில்  அனுமதி பெறாமல்  அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டிய ஒன்பதின்பர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.  பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம் இவ்வாறு கூறினார். அரசு ஊழியர் நடத்தைவிதிகளின்படி அரசியலில்…

என்எப்சி மீதான அறிக்கை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படும்

முந்தைய நாடாளுமன்ற  பொதுக் கணக்குக்குழு(பிஏசி)வால் தயாரிக்கப்பட்ட நேசனல் பீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) மீதான அறிக்கையை இப்போதைய பொதுக் கணக்குக் குழு ஏற்றுக்கொண்டிருப்பதை அடுத்து அவ்வறிக்கை அடுத்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இன்று பிஏசி கூட்டத்துக்குப் பின்னர் அதன் தலைவர் நூர் ஜஸ்லான் முகம்மட்  (வலம்) இதைத் தெரிவித்தார். அவ்வறிக்கை மேலும்…

மலேசியாகினி கட்டிடத்துக்கு ஒரு கல்லை வாங்கினார் மாட் சாபு

பாஸ் துணைத் தலைவர் மாட் சாபு, மலேசியாகினி, ஒரு புதிய கட்டிடம் வாங்குவதற்கு உதவியாக ஒரு கல்லை விலைக்கு வாங்கினார். வரும் வெள்ளிக்கிழமை பாஸ் கட்சித் தேர்தலில் தம் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள போட்டியிடும் மாட் சாபு, ஊடக சுதந்திரத்துக்கு ஆதரவுதெரிவிக்கும் நோக்கில் அதைச் செய்ததாகக் கூறினார். “நான்…

‘வங்காள தேச வாக்காளர் விவகாரத்தில் தப்பான தகவல் சொல்லி நாடாளுமன்றத்தைத்…

வங்காள தேசத்தைச் சேர்ந்த 40,000 அந்நிய தொழிலாளர்கள் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று எதிரணியினர் கூறியதாகச் சொல்லி நாடாளுமன்றத்தில் தப்பான எண்ணத்தை உருவாக்கியவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் என மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் குற்றம் சாட்டியுள்ளார். எதிரணியினர் அப்படிச் சொல்லவே இல்லை என்றவர் திட்டவட்டமாகக்…

எஸ்யுபிபி, மசீச, கெராக்கான் ஆகியவை ‘ஒன்றிணைவது கடினம்’

மசீச, கெராக்கான் ஆகிய கட்சிகளுடன் இணையும் சாத்தியம் அறவே இல்லை என்கிறார் சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி (எஸ்யுபிபி)-இன் சிபு கிளைத் தலைவர் வொங் சூன் கோ. அம்மூன்று கட்சிகளின் “அடிப்படை இலக்குகள் வெவ்வேறானவை” என்றாரவர். “மசீச சீனர்களின் கட்சி. எஸ்யுபிபி-யோ ஒரு பல்லினக்கட்சி”, என்று வொங் நேற்று…

தொலைந்துபோன மைகார்டுகள் வெளிநாட்டவரிடம் விற்கப்பட்டிருக்கலாம்

வெளிநாட்டவர் மைகார்டுகள் பெறுவது எளிதாக இருப்பதைப் பார்க்கையில் அவர்களுக்கும் காணாமல்போகும் மைகார்டுகளுக்கும் தொடர்பிருக்கலாம் என உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி வான் ஜப்பார் கூறினார். இவ்வாண்டு அக்டோபர்வரை 565,000-க்கும் அதிகமான மைகார்டுகள் காணாமல் போனதாக புகார் செய்யப்பட்டிருக்கின்றன. “மற்றவர்களுக்குச் சொந்தமான இந்த மைகார்டுகளை வெளிநாட்டவர் பயன்படுத்திக்கொள்ளும் சாத்தியம்…

அவசர தகவல்.2013 UPSR பெற்றோர்கள் கவனத்திற்கு 2014 கல்வி ஆண்டு…

அவசர தகவல்.2013 UPSR  பெற்றோர்கள் கவனத்திற்கு 2014 கல்வி ஆண்டு முழு உதவி ஆஸ்ரம பள்ளிக்கு மனு செய்யுங்கள் . நாட்டில்  SBP SEKOLAH BANTUAN PENUH  என்ற ஒன்று உண்டு. UPSR -இல் 7 A பெற்ற மாணவர்கள் இந்த முழு உதவி ஆஸ்ரம பள்ளிக்கு மனு…

ஒருநாள் சிறைத்தண்டனையை நீதிமன்றத்தில் கழித்தார் இப்ராகிம் அலி

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக கோலாலும்பூர் உயர் நீதிமன்றம், பெர்காசா தலைவர் இப்ராகிம் அலிக்கு ஒரு நாள் சிறைத்தண்டனையும் ரிம20,000 அபராதமும் விதித்தது. ஒருநாள் சிறை என்றால் மாலை 5மணிவரை நீதிமன்ற லாக் அப்பிலேயே இருக்க வேண்டும்.ஆனால், நான்கு மணிக்கு அவர் கோலாலும்பூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிற்றுண்டி நிலையத்தில்…

சிலாங்கூருக்கு உரிய நிதியைக் கொடுக்காவிட்டால் அதன் விளைவுகளை பிஎன் மீண்டும்…

சிலாங்கூருக்கு உரிய நிதியைக் கொடுக்க பிஎன் மறுத்தால் அடுத்த தேர்தலில் அது மீண்டும் படுதோல்வியைச் சந்திக்கும் என சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் எச்சரித்துள்ளார். “2008-இலிருந்து சிலாங்கூருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நேரடி நிதி கிடைக்கவில்லை. மாறாக, அந்நிதி அமலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவில் உள்ள தேர்ந்தெடுக்கப்படாத…

அரசு பதவிகளிலிருந்து வெளியேறப் போவதாக பினாங்கு பாஸ் மிரட்டல்

பினாங்கு பாஸ், இஸ்லாமிய விவகாரங்களில் மாநில அரசின் “நியாயமற்ற தலையீடுகளுக்கும்” மாநில அரசு அமைப்புகளிலும் கிராம, பாதுகாப்பு மேம்பாட்டுக் குழுக்களிலும் அக்கட்சி  உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படும் முறைக்கும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. அது தொடருமானால் பக்காத்தான் ரக்யாட்டில் தன் நிலை குறித்து மறுஆய்வு செய்ய வேண்டி இருக்கும் என மாநில…

2000 ஏக்கர் நில விவகாரத்தில் வீரசிங்கம் உளறுகிறார் !

-மு. குல்சேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், நவம்பர் 19, 2013.  கடந்த வெள்ளியன்று ஈப்போவில் நடை பெற்ற பேரா ம.இ.கா மாநாட்டில் பேராளர்கள், தமிழ்ப் பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 2000 ஏக்கர் நிலம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு வீரசிங்கம் சரியான பதில் கூறாமல் உளறியிருக்கின்றார் என பல ம.இ.கா கிளைத் தலைவர்களும்…

பிஎஸ்என் தலைவர் நியமனம் குறித்து பாஸ் கேள்வி எழுப்பியது

பொதுச் சேவைத்துறை இயக்குனராக இருந்தபோது ‘பொதுநலன் கருதி’ பணிநீக்கம் செய்யப்பட்ட அபு பக்கார் அப்துல்லா, பேங்க் சிம்பானான் நேசனல் (பிஎஸ்என்) தலைவராக நியமிக்கப்பட்டது எப்படி என்று பாஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இன்று, பாஸின் பொக்கொக் சேனா எம்பி மாபுஸ் ஒமாருக்கு வழங்கிய எழுத்துவடிவிலான பதிலில் பிரதமர்துறை அமைச்சர் ஷாஹிடான்…

நீதிமன்றத்தை அவமதித்த இப்ராகிம் அலிக்கு ஒரு நாள் சிறை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக கோலாலும்பூர் உயர் நீதிமன்றம், பெர்காசா தலைவர் இப்ராகிம் அலிக்கு ஒரு நாள் சிறைத்தண்டனையும் ரிம20,000 அபராதமும் விதித்தது. சைனுடின் சாலே எழுதிய கட்டுரை ஒன்றை பெர்காசா வலைத்தளத்தில் வெளியிட்டதற்காக அவருக்கு இத்தண்டனை. அக்கட்டுரையில் இப்போது பணிஓய்வு பெற்றுவிட்ட நீதிபதி  வி. டி. சிங்கத்தின் நேர்மை…

பொம் பொம் தீவு, சொத்துவரி அதிகரிப்பு மீதான தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன

இன்று மக்களவையில் மாற்றரசுக் கட்சியினர் கொண்டுவந்த இரண்டு தீர்மானங்கள் மக்களவை துணைத் தலைவர் ரொனால்ட் கியாண்டியால் தள்ளுபடி செய்யப்ப்பட்டன. ஒன்று பொம் பொம் தீவில் தைவானிய தம்பதிகளில் ஒருவர் கொல்லப்பட்டு இன்னொருவர் கடத்தப்பட்ட சம்பவம் பற்றியது; இன்னொன்று கோலாலும்பூர் மாநகராட்சி மன்றத்தின் சொத்துவரி அதிகரிப்பு பற்றியது. முதல் தீர்மானத்தை…

மசீச: பாஸ் கட்சியைத் தற்காப்பதை பக்காத்தான் நிறுத்த வேண்டும்

டிஏபியும் பிகேஆரும் பாஸ் கட்சியின் கடும் போக்காளர்களைத் தற்காத்துப் பேசுவதை விடுத்து 1993-இல் இயற்றப்பட்ட கிளந்தான் ஷியாரியா குற்றவியல் சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்வதற்கு வழிகாண வேண்டும் என மசீச வலியுறுத்தியுள்ளது. நாடும் சரி, கிளந்தான் மாநிலமும் சரி இரண்டு வகை குற்றவியல் சட்டங்களைக் கொண்டு செயல்பட முடியாது…