நேற்று இரவு சிலாயாங் பாருவில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையில் மொத்தம் 843 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர்கள் கைது செய்யப்பட்டனர். குடியேற்றச் சட்டத்தின் கீழ் அவர்கள் பல்வேறு குற்றங்களைச் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. மாநில பாதுகாப்புக் குழுவின் தலைவரான சிலாங்கூர் மந்திரி புசார் அமிருதின் ஷாரி, கைது செய்யப்பட்டவர்களில் இந்தோனேசியா, பங்களாதேஷ், இந்தியா,…
ஆடாம் அட்லி தேச நிந்தனை குற்றச்சாட்டுக்கு எதிராக விசாரணை கோரினார்
பல்கலைக்கழக மாணவர் ஆடாம் அட்லி அப்துல் ஹாலிம், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்க்கக் கோரிக்கை விடுத்ததன்வழி தேச நிந்தனைக் குற்றம் இழைத்துள்ளார் என இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். தேச நிந்தனைச் சட்டம் பகுதி 4(1)-இன்கீழ் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றச்சாட்டை மறுத்த சமூக ஆர்வலரான ஆடாம்…
‘தேர்தல் தொகுதியைத் திருத்தி அமைப்பது பிஎன்-னுக்கே சாதகமாகிறது’
ஒரு தேர்தல் தொகுதியின் எல்லை திருத்தி அமைக்கப்பட்டதும் அங்கு பிஎன் கூட்டணிக்கு எளிதாக வெற்றி கிடைத்து விடுகிறது என மலாயாப் பல்கலைக்கழக ஜனநாயக, தேர்தல் மையம் (யுஎம்சிடெல்) கூறுகிறது. ஒரு தொகுதியின் எல்லைக்கோடுகள் திருத்தி அமைக்கப்பட்டதும் அத்தொகுதியில் பிஎன்னுக்கு சராசரி 60 விழுக்காடு வாக்குகள் கிடைத்து விடுவதைத்தான் வரலாறு…
முரட்டுத்தனமாக தாக்கப்பட்டதில் கைதி இறந்தார் என்பதை மருத்துவமனை உறுதிப்படுத்தியது
போலீசாரால் விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்ட என். தர்மேந்திரன் “முரட்டுத்தனமாகத் தாக்கப்பட்டதில் ஏற்பட்ட காயங்களால்த்தான் இறந்தார்” என்பதை கோலாலும்பூர் மருத்துவமனை (எச்கேஎல்) மருத்துவ நிபுணர் ஒருவர் உறுதிப்படுத்தினார். நேற்றிரவு டாக்டர் சியு சுயு பெங், எச்கேஎல் பிணவறையில் தர்மேந்திரனின் குடும்பத்தாரிடமும் வழக்குரைஞர்கள் என்.சுரேந்திரன், லத்திபா கோயா ஆகியோரிடமும் இதைத் தெரிவித்தார்.…
இந்தியர்களின் குரல் யார்? : மக்கள் கூட்டணியா? ம.இ.காவா? ஹிண்ட்ராப்பா?
-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், மே 23, 2013. ம.இ.காவின் கணக்குப்படி 6 லட்சம் பேர் அதன் உறுப்பினர்கள். பி பி பி சொல்கிறது அதனிடம் 3 லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்று. ஐ பி எப் பின் விவரப்படி அதனிடம் 4 லட்சம் பேர் இருக்கின்றார்கள்.…
ஆடாம் அலியை விடுதலை செய்யக்கோரி ஊர்வலம்; 18 பேர் கைது
மாணவர் போராளி ஆடாம் அலியை விடுதலை செய்யக்கோரி ஜிஞ்சங் காவல்நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஊர்வலத்தின்போது 18 பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக அரசாங்கத்துக்கு எதிராக மே 13 ஆம் தேதி போராட்டம் நடத்தியதாக கூறி சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவரான ஆடாம் அலியை காவல்துறையினர்…
நஸ்ரி : தெரு ஆர்ப்பாட்டங்களால் சுற்றுலா தொழில் பாதிப்புறவில்லை
மலேசியாவில் அண்மைக்காலமாக “சட்டவிரோத” தெரு ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்து வந்தாலும், அதனால் சுற்றுலா Read More
லிங்: மசீச ஆண்டுக்கூட்டம்தான் தலைவரை அகற்ற முடியும்
மசீசவின் மூத்த உறுப்பினர்கள் 15 பேர், கட்சித் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் உடனடியாக பதவி விலகக் கோரிக்கை விடுத்திருக்கும் நேரத்தில் முன்னாள் தலைவர் லிங் லியோங் சிக் வேறு வகை கருத்தைத் தெரிவித்துள்ளார். தலைவரைப் பதவி இறக்க வேண்டுமானால், ஆண்டுக்கூட்டத்தில் (ஏஜிஎம்) மட்டுமே அதற்கான முடிவைச்…
மகாதிர்: தெரு ஆர்ப்பாட்டங்கள் நடத்தியா அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பது?
பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக பக்காத்தான் ரக்யாட் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்து வரும் பேரணிகளைச் சாடிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், போகும் போக்கைப் பார்த்தால் தேர்தல்களுக்குப் பதிலாக தெரு ஆர்ப்பாட்டங்கள் மூலமாக அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் நிலை உருவாகும்போல் தெரிகிறது என்று குத்தலாகக் குறிப்பிட்டுள்ளார். “தெரு ஆர்ப்பாட்டங்கள்…
GST-ஆல் ஒவ்வொரு மலேசியனுக்கும் ஆண்டுக்கு ரிம1,000 சுமை!
அரசாங்கம், 7 விழுக்காடு பொருள் மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி)யை நடைமுறைப்படுத்தினால் அதற்காக ஒவ்வொரு மலேசியனும் ஆண்டுக்கு ஆயிரம் ரிங்கிட்டை வழங்க வேண்டியிருக்கும் என்கிறார் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங். அந்த வரிவிதிப்பு அமலுக்கு வந்தால், கூட்டரசு அரசாங்கத்துக்கு அது வாக்குறுதி அளித்த ரிம1,200 பந்துவான் ரக்யாட் 1மலேசியா…
கட்சித் தேர்தலைத் தள்ளிவைக்கலாமா என்று பிகேஆர் ஆராய்கிறது
இவ்வாண்டு நவம்பரில் நடைபெறவுள்ள கட்சித் தேர்தலைத் தள்ளிவைப்பதா, வேண்டாமா என்று பிகேஆர் தலைவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். சனிக்கிழமை கட்சியின் பேராளர் கூட்டம் நடைபெறுகிறது. அதன்பின்னரே ஒரு முடிவெடுக்கப்படும் என்று பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார். “அண்மைய தேர்தல் ஒரு முக்கிய போரைப்…
காலிட்: இந்தத் தவணை நிதி, புறநகர் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படும்
சிலாங்கூர் மந்திரி புசாருடன் ஒரு நேர்காணல் இரண்டாம் தவணைக்கு சிலாங்கூர் மந்திரி புசாராக பொறுப்பேற்றுள்ள காலிட் இப்ராகிம், மாநிலத்தின் நிதிநிலையை மேம்படுத்துவதற்கும் புறநகர் பகுதிகளை மேம்படுத்துவதற்கும் முக்கியத்தும் கொடுப்பார். முதல் தவணை மந்திரி புசாராக இருந்த காலத்தில் பூமிபுத்ராக்கள் வாழும் உள்பகுதிகளில் அரசு அதிகக் கவனம் செலுத்தவில்லை என்பதை…
சட்டப் பிரதிநிதிகளைக் கூர்ந்து ஆராய வேண்டியவர்கள் மக்கள்தானே தவிர எம்ஏசிசி…
சட்டம் கேட்டுக்கொண்டால் டிஏபி-இன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அவர்களின் சொத்துவிவரத்தை பொதுவில் அறிவிக்க ஆயத்தமாக இருக்கிறார்கள். ஆனால், அதை எம்ஏசிசி-இடம் “இரகசியமாக தெரியப்படுத்த வேண்டும்” என்பதை அவர்கள் ஏற்கவில்லை. “இரகசியமாக” தெரியப்படுத்த எம்ஏசிசி-இன் ஆலோசனை மற்றும் ஊழல் தடுப்பு வாரியம் முன்மொழிந்துள்ள இந்த ஆலோசனை குறைபாடுடையது என டிஏபி விளம்பரப்…
காலிட் : அஸ்மின் குறைகூறியபோதும் நானே எம்பி ஆனேன்
நேர்காணல் : சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி மறைமுகமாக தம் நிர்வாகம் குறித்து குறை சொல்லி வந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இப்படிப்பட்ட அரசியல் எதிர்ப்பு இருந்த போதிலும் மீண்டும் சிலாங்கூர் அரசின் மந்திரி புசாராக நியமிக்கப்பட்டிருப்பதை அவர்…
பிகேஆர் : இசி அதிகாரிகள் வாக்குச் சீட்டுப் பைகளைத் திறந்து…
மே 7-இல், கிளந்தான், கெதேரெயிலில் முனிசிபல் மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குச் சீட்டுப் பைகளை உயர் நீதிமன்ற உத்தரவின்றியே தேர்தல் ஆணைய(இசி) அதிகாரிகள், திறந்து பார்த்ததாகக் கூறப்படுகிறது. இது பற்றி தம் கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் போலீசில் புகார் செய்திருப்பதாக கெதேரெ பிகேஆர் இளைஞர் தலைவர் முகம்மட் சுகிர்மான்…
தகுதிநிலை குறித்து கருத்துரைக்க அவைத் தலைவர் மறுப்பு
செனட் அவை தலைவராக இன்று பதவியேற்ற அபு ஜஹார் ஊஜாங், தேர்ந்தெடுக்கப்படாமலேயே அல்லது செனட்டர்களாக்கப்படாலேயே அமைச்சர்களாக்கப்பட்டவர்களின் தகுதிநிலை பற்றிக் கருத்துரைக்க மறுத்தார். ஆனால், நிலைமையை “ஒழுங்குப்படுத்தப் போவதாக”க் கூறினார். எப்படி என்பதை விளக்கவில்லை. “எல்லாவற்றையும் முறைப்படுத்துவேன். எனக்குப் பின் மேலும் பலர் செனட்டர்களாக பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள்”, என்றாரவர்.…
‘பேச்சு நன்று, ஆனால் அது செவிட்டு காதில் ஊதிய சங்குதான்’
உங்கள் கருத்து : ‘நேர்மைக்குறைவுதான் பிஎன்/அம்னோவை மக்கள் நிராகரிக்க முக்கிய காரணம். ஆனால், அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்களே, அதை என்னவென்பது.....’ நேர்மைக்குறைவால் பிஎன் ஆதரவு சரிகிறது கலா: அம்னோ தலைமையிலான பிஎன் ஆட்சி நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறது என்பதைத்தான் பேராக் அரசப் பேராளர் ராஜா நஸ்ரின் நயமாக…
ஊடுருவலுக்குப் பின்னணியில் உள்ள மாற்றரசுக் கட்சித் தலைவர்கள் மூவர் யார்?
மூன்று மாற்றரசுக் கட்சித் தலைவர்கள் லஹாட் டத்து ஊடுருவலுக்குப் பின்னணியாக இருந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்களின் பெயர்களை இப்போதைக்கு வெளியிடுவதற்கில்லை என்கிறார் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட். வழக்கு, நீதிமன்றம் கொண்டுசெல்லப்படும்போதுதான் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படுமாம். அம்மூவர் தொடர்பான ஆவணங்களும் தகவல்களும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும்…
இணையத்தளத்தில் தணிக்கை இல்லை என்கிறார் புதிய தகவல் அமைச்சர்
மாற்றரசுக் கட்சி செய்திகள் பாரம்பரிய தகவல் ஊடகங்களில் இடம்பெறுவதற்குக் கட்டுப்பாடு உண்டு என்பதை ஒப்புக்கொண்ட புதிதாக தகவல் அமைச்சராக பொறுபேற்றுள்ள அஹ்மட் சபரி சிக், இணையத்தில் அவர்களுக்குக் கட்டுப்பாடுகள் கிடையாது என்றார். “அவர்களின் செய்திகள் ஊடகங்களில் வருவதில்லை என்பது உண்மை அல்ல. பாரம்பரிய ஊடகங்களில் வருவதில்லை. “ஆனால், புதிய…
‘நேர்மை பற்றாக்குறையாக இருக்கும்போது பிஎன்-னுக்கு ஆதரவு சரிகிறது’
நேர்மை குறித்த எதிர்பார்ப்புக்களுக்கும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கும் இடையிலான வேறுபாடு பிஎன் வழி நடத்தும் கூட்டரசு அரசாங்கத்திற்கான ஆதரவு சரிவதற்கான காரணம் என பேராக் அரசப் பேராளர் ராஜா நஸ்ரின் ஷா கூறியிருக்கிறார். 2004 பொதுத் தேர்தலில் அப்துல்லா அகமட் படாவி தலைமையில் பிஎன் மகத்தான வெற்றி பெற்றதைக்…
‘இது உங்க அப்பன் நாடும் அல்ல’, ஜாஹிட் பதிலடி (விரிவான…
உள்துறை அமைச்சர், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் சொன்னதற்குச் சரிக்குச் சரியாக பதிலளிக்கும் விதத்தில், “இது உங்க அப்பன் நாடும் அல்ல”, என்று கூறினார். தேர்தல்முறை பிடிக்காதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்று தாம் முன்னர் கூறியதைத் தற்காத்துப் பேசிய அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, “இது என் அப்பன்…
குவான் எங்: அமைச்சர்கள் எதனை மறைக்க முயலுகின்றனர் ?
அமைச்சர்கள் தங்கள் சொத்து விவரங்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை புதிய வெளிப்படை அமைச்சர் பால் லோ தவிர்ப்பதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சர்கள் அங்கு மறைப்பதற்கு என்ன இருக்கிறது என அவர் வினவினார். பினாங்கு ஆட்சி மன்ற உறுப்பினர்கள் தங்கள்…
போலீஸ் பணியில் தலையிட வேண்டாம் என ஸாஹிட்டுக்கு ஆலோசனை
போலீஸ் பணியில் 'தலையிட வேண்டாம்' என பிகேஆர் வியூகவாதி ராபிஸி இஸ்மாயில் உள்துறை அமைச்சர் ராபிஸி இஸ்மாயிலுக்கு ஆலோசனை கூறியிருக்கிறார். பேரணிகளில் பங்கு கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸாஹிட் எச்சரித்ததைத் தொடர்ந்து ராபிஸி அவ்வாறு சொன்னார். ஸாஹிட் 'எல்லை மீறக் கூடாது' எனக் குறிப்பிட்ட…
அன்வார் ‘அவதூறு மன்னன்’ என இசி குற்றம் சாட்டுகின்றது
பாதுகாப்புப் படை வீரர்கள் முன் கூட்டியே செலுத்திய 500,000 வாக்குகள் 'திருத்தப்பட்டுள்ளதாக' பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறிக் கொண்டுள்ளது மீது அதிருப்தி அடைந்துள்ள தேர்தல் ஆணைய (இசி) துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார், அந்த பெர்மாத்தாங் எம்பி 'அவதூறு மன்னன்' எனக் குற்றம்…


