கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு 24 பிரம்படி தண்டனை விதித்துள்ளது பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு ஆயுள் தண்டனையும் 24 கசையடி தண்டனையும் விதிக்கப்பட்டது. அதேவேளை, அவரும் அவரது மனைவியான நோர்ஸ்யாஃபிகா நஸ்வா நூரிசானும் இணைந்து எதிர்கொண்ட இரண்டு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரது…
பிரதமர் கமலா சிறீ லங்கா காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார்
நாளை சிறீ லங்காவில் தொடங்கும் காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் டிரினிடாட் டுபேகோ பிரதமர் கமலா பெர்ஷாத் பிஸ்செசார் கலந்துகொள்ள மாட்டார் என்று அவரது அலுவலகம் அறிவித்துள்ளது. முன்னதாக, சீனாவுக்கான அவரது அதிகாரப்பூர்வமான வருகையை முடித்துக் கொண்ட பின்னர் சிறீ லங்கா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கும் டிரினிடாட் டுபேகோ நாட்டின்…
‘அம்னோ போலீசைப் பயன்படுத்திக் கொண்டதை ஜாஹிட் ஹமிடி மறைக்கிறார்’
அக்டோபர் 20 அம்னோ தேர்தலுக்கு உதவியாக போலீஸ் படை பயன்படுத்திக்கொள்ளப்பட்டதா என்று தாம் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிட் அளித்த பதிலில் “நேர்மையில்லை” என டிஏபி எம்பி ஒருவர் கூறுகிறார். ஜாஹிட் தம் பதிலில், அம்னோ பேராளர் கூட்டத்தின்போது போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், அந்நிகழ்வுக்கு வந்திருந்த…
பழனிவேல் எந்த உலகத்தில் இருக்கிறார் ?
-மு.குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், நவம்பர் 14, 2013. நாளை வெள்ளிக்கிழமை (15-11-13) நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் நஜிப் இலங்கையில் கூடவிருக்கும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பது குறித்து கேள்வியெழுப்பப் போவதாக ம.இ.கா தேசியத் தலைவர் பழனிவேல் கூறியதாக பத்திரிகையில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. "நான் பிரதமருடன் வெள்ளிக் கிழமை பேசப்போகிறேன்” என்ற…
உதயகுமாரைச் சந்திக்க அவரின் குடும்பதாருக்கும் வழக்குரைஞருக்கும் அனுமதி மறுப்பு
நேற்று நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்ட இண்ட்ராப் நடப்பில் தலைவர் பி.உதயகுமாரை, அவரின் குடும்பத்தாரும் வழக்குரைஞரும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. நீதிமன்றம் அதற்கு அனுமதித்திருந்தாலும் போலீசார் அனுமதிக்கவில்லை என உதயகுமாரின் வழக்குரைஞர் எம். மனோகரன் கூறினார். “காஜாங் சிறைச்சாலைச் சேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டரும் ஏழெட்டு போலீஸ்காரர்களும் அவரைத் தரதரவென்று இழுத்துச் சென்றுவிட்டனர். அவர்கள் முரட்டுத்தனமாக…
சிறீ லங்கா:பிரதமரின் செயல் நாட்டு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க வேண்டும்.
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர், நவம்பர் 13, 2013. மலேசியப் பிரதமர் நஜிப் துன் ராசாக் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டு அடையாளத்திற்கு நாட்டைப் பிரதிநிதிப்பதை விட நாட்டு மக்களின் எண்ணங்களைப் பிரதிநிதிக்கும் வண்ணம் அம்மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும். அதுவே, மலேசியர்களுக்கு,…
பிரதமரே தயவு செய்து புறக்கணியுங்கள், 147 அமைப்புகள் மீண்டும் வலியுறுத்து!
பொதுநலவாய மாநாட்டுக்குப் பிரதமர் இலங்கை செல்வார் என்பது உறுதியாகியுள்ள நிலையிலும், அவர் தனது முடிவை மாற்றக் கோரி 147 சமூக அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன. இது சார்பாக 33 பக்கங்கள் கொண்ட ஒரு மகஜரை இன்று பிற்பகல் 12.30 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் சமூக அமைப்பு பிரதிநிதிகள் சமர்ப்பித்தனர்.…
பரந்து விரிந்து கிடக்கும் சைட் மொக்தாரின் தொழில் சாம்ராஜ்யம்
வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை பரிவர்த்தனை முடிவுக்கு வந்தபோது சைட் மொக்தார் அல்புகாரியின் தலையாய தொழில்நிறுவனமான எம்எம்சி பங்குகளின் சந்தை மதிப்பு ரிம8.22 பில்லியன். அதில், சைட் மொக்தாருக்குள்ள பங்குரிமை 51.76 விழுக்காடு. அதன் மதிப்பு ரிம4.25 பில்லியன். அவரது இன்னொரு முக்கிய நிறுவனமான டிஆர்பி ஹைகோமின் சந்தை மதிப்பு…
சுப்ரமணியம் ‘பொய்யான அறிக்கை’ கொடுத்தார்: தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு
சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம், ஈராண்டுகளுக்குமுன் அனைத்துலக தொழிலாளர் நிறுவன(ஐஎல்ஓ)த்திடம் ‘பொய்யான அறிக்கை’ஒன்றைக் கொடுத்தார் என்று கூறி இரண்டு தொழிற்சங்கங்கள்- மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்(எம்டியுசி), தேசிய வங்கி ஊழியர் சங்கம்(என்யுபிஇ) ஆகியவை- அமைச்சரைச் சாடியுள்ளன. அத்தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டிய பிகேஆர் கோலா…
காமன்வெல்த் மாநாட்டிற்கு ரோஸ்மாவுடன் செல்கிறார் நஜிப்
சிறீ லங்காவில் நவம்பர் 15 லிருந்து 17 வரையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளும் மலேசிய குழுவுக்கு தலைமையேற்று நஜிப் அவரது துணைவியாருடன் சிறீ லங்கா செல்வார் என்று பெர்னாமா செய்தி கூறுகிறது. அவ்விருவருடன் வெளிவிவகார அமைச்சர் அனிபா அமான், பிரதமர்துறை, வெளிவிவகார அமைச்சு, அலைத்துலக வாணிப…
14வது பொதுத் தேர்தலில் 135 தொகுதிகளைக் குறி வைக்கிறார் கிட்…
அடுத்த பொதுத் தேர்தலில் புத்ரா ஜெயாவைக் கைப்பற்ற எண்ணும் பக்காத்தான் ரக்யாட் 135 நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்ல வேண்டும் என லிம் கிட் சீயாங் கூறினார். பிகேஆர், பாஸ், டிஏபி ஆகியவை ஒவ்வொன்றும் 45 இடங்களில் வெல்வதை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். அப்படி வென்றால் நாடாளுமன்றத்தில் பக்காத்தானின் பெரும்பான்மை…
அரசாங்கம் தனியார் ஆலோசனைச் சேவைக்கு ரிம7.2பில்லியன் செலவிட்டது
அரசாங்கம் 2009-இலிருந்து தனியார் ஆலோசனை நிறுவனங்களின் சேவைக்காக ரிம7.2 பில்லியனைச் செலவிட்டிருக்கிறது என நேற்று, நாடாளுமன்றத்தில் பிகேஆர் கிளானா ஜெயா எம்பி வொங் சென்னுக்கு வழங்கப்பட்ட எழுத்து வடிவிலான பதிலில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி பார்த்தால் மாதத்துக்கு ரிம125 மில்லியன் அல்லது ஒரு நாளைக்கு ரிம4 மில்லியன் செலவிடப்பட்டிருக்கிறது என…
தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எங்கே? பக்காத்தான் எம்பிகள் கேள்வி
பக்காத்தான் ரக்யாட் எம்பிகளின் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டதாக அரசாங்கம் கூறினாலும் அந்த நிதியைக் கண்ணால் பார்க்க முடிவதில்லை என்கிறார் பத்து கவான் எம்பி கஸ்தூரி பட்டு. அந்த நிதி ஒதுக்கீடு மாநில மேம்பாட்டு அதிகாரிகள் (எஸ்டிஓ) வழியாக வழங்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை அந்நிதி எதிரணி எம்பிகள் கைக்குக்…
எம்பிகேஜெ நெருக்கடிக்குத் தீர்வு காணாதிருக்கும் சிலாங்கூர் அரசுக்குக் கண்டனம்
காஜாங் முனிசிபல் மன்ற (எம்பிகேஜெ) கவுன்சிலர்களுக்கும் தலைவருக்குமிடையில் நிலவும் சர்ச்சைக்கு சிலாங்கூர் அரசு தீர்வு காண முடியாமல் தத்தளிப்பதாக மசீச குறைகூறியுள்ளது. அச்சர்ச்சை பல மாதங்களாக நீடிக்கிறது என மசீச விளம்பரப் பிரிவுத் தலைவர் யாப் பியான் ஹொன் தெரிவித்தார். “அவர்களின் சர்ச்சையால் காஜாங் மக்கள் கவலை கொண்டிருக்கிறார்கள்.…
பக்கதான்: பிரதமர் சிறீ லங்கா மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்
இம்மாதம் சிறீ லங்காவில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் நஜிப் ரசாக் புறக்கணிக்க வேண்டும் என்று பக்கத்தான் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறீ லங்கா அரசின் மோசமான மனித உரிமை மீறல்களை அவர்கள் சுட்டிக் காட்டினர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறீ லங்காவில் நடந்த உள்நாட்டில் போரில்…
வேதா கூறிவிட்டார்: இந்து விவகாரங்களில் தலையிட தெங்கு அட்னானுக்கு உரிமை…
ஸ்ரீமுனீஸ்வரர் ஆலயத்தில் சில பகுதிகள் உடைக்கப்பட்டதைத் தற்காத்துப் பேசிய கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் மன்சூரை இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி சாடினார். “சிறிய கோயில், பெரிய கோயில் என்று விளக்கமளிக்கும் தகுதி” தெங்கு அட்னானுக்கு இல்லை என்றாரவர். நீண்ட மவுனத்துக்குப் பின் வாய் திறந்துள்ள பிரதமர்துறை துணை…
மகாதிர்: முஸ்லிம்கள் மறுமை வாழ்வைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கக்…
மக்கள், மறுமை வாழ்வுக்கு ஆயத்தமாவதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருப்பது போதாது. முன்னேற்றம் காண விரும்பினால் இம்மை வாழ்வில் தொழில்நுட்ப அறிவு பெறுவதிலும் நாட்டம் செலுத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட் வலியுறுத்தியுள்ளார். அரபு உலகம் சமய அறிவைப் பெருக்குவதில் மட்டுமே குறியாக இருந்ததால்தான் வீழ்ச்சி…
மரியா சின் பெர்சே 2.0-இன் புதிய தலைவராகலாம்
தேர்தல் சீரமைப்புக்காக போராடும் கூட்டமைப்பு(பெர்சே)க்கு, மனித உரிமை போராளியான மரியா சின் அப்துல்லா, நவம்பர் 30-க்குப் பின்னர் தலைவராவார் எனத் தெரிகிறது. பெர்சேயில் இடம்பெற்றுள்ள 19 என்ஜிஓ-களில் 13, தலைவர் பதவிக்கு மரியா சின்னை நியமனம் செய்துள்ளன. இதனைத் தெரிவித்த மூவரடங்கிய தேர்தல் குழு, அம்மாதம் 30 ஆம்…
சுரேந்திரன் மக்களவையிலிருந்து மறுபடியும் வெளியேற்றப்பட்டார்
பாடாங் செராய் எம்பியும் பிகேஆர் உதவித் தலைவருமான என். சுரேந்திரன், நாடாளுமன்றக் கூட்டத்திலிருந்து இரண்டாவது முறையாக வெளியேற்றப்பட்டார். கோலாலும்பூர், ஜாலான் பி.ரம்லியில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரர் ஆலய உடைப்புமீது அவசரத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர முயன்றபோது மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா அவரை வெளியேறுமாறு உத்தரவிட்டார். அவசரத் தீர்மானத்தை…
55 அரசு அதிகாரிகள் ஊழல் செய்தது கண்டறியப்பட்டுள்ளது
அரசு ஊழியர்களின் ஒழுக்கக் கேடுகளைப் புலன் ஆய்வு செய்யும் சிறப்புக் குழு, அக்டோபர் 28 வரை, மொத்தம் 55 அரசு ஊழியர்கள் ஊழலில் ஈடுபட்டிருந்ததைக் கண்டுபிடித்துள்ளது. அக்குழு 11 அமைச்சுகளிலும் அரசாங்க அமைப்புகளிலும் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து இதைக் கண்டறிந்ததாக பிரதமர்துறை அமைச்சர் துணை அமைச்சர் ரசாலி இப்ராகிம் கூறினார்.…
பாஸ்: அரசாங்கம் ‘அல்லாஹ்’ விவகாரம் தொடர்பில் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க…
கிறிஸ்துவர்கள் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவதை ஒரு விவகாரமாக்கியதற்காக அரசாங்கம் முஸ்லிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார் (வலம்) வலியுறுத்தியுள்ளார். முஸ்லிம்-அல்லாதார் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்த பாஸ் அனுமதிக்கிறது என்றுகூட அவர்கள் பாஸுக்கு எதிராகக் குற்றம் சுமத்தினார்கள் என்று மாபுஸ்(வலம்)…
பிரதமர் செல்லக்கூடாது! கிள்ளானில் பேரணி!
இலங்கை அரசு இலட்சக்கணக்கான அதன் குடிமக்களைக் கொன்று குவித்திருக்கிறது. அந்நாட்டின் ஆயிரக்கணக்கான பெண்கள் உலக வரலாறு கண்டிராத வகையில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இக்கொடுமைகளை இழைத்தது அந்நாட்டு சாதாரண மக்கள் அல்ல. அந்நாட்டு இராணுவப் படையினர். அந்நாட்டு இனவெறியர்களின் கொடூரச் செயல்களை உலக மக்கள் கண்ணாரக்…
கூ னான்: கோயிலை உடைக்கவில்லை; அழகுபடுத்துகிறோம்
கோலாலலும்பூர் மாநகராட்சி மன்றம் ஸ்ரீமுனீஸ்வரர் காளியம்மன் ஆலயத்தை உடைக்கவில்லை; அதை அழகுபடுத்தப் போகிறது என்கிறார் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் மன்சூர் கூறினார். ஜாலான் பி.ரம்லியில் உள்ள அது ஒரு சிறு கோயில் என்று கூறிய அமைச்சர் அங்கு சில சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பது அமைச்சுக்குத் தெரிய…
கோயிலில் மதுபானங்கள் இருந்ததாகச் சொல்வது அபத்தம்- ஆலய சட்ட ஆலோசகர்
ஸ்ரீமுனீஸ்வரர் காளியம்மன் கோயிலின் சட்ட ஆலோசகர், கோயிலில் சட்ட விரோத நடவடிக்கைகள் நடப்பதாகவும் அங்கு மதுபானங்கள் இருந்ததாகவும் கூட்டரசு அமைச்சர் தெங்கு அட்னான் மன்சூர் கூறியிருப்பது ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு என்றார். “யாரும் எதை வேண்டுமானாலும் கூறிக்கொள்ளலாம். நாங்கள் கோயில் நிர்வாகக் குழுவுடனும் தலைவருடனும் அணுக்கமாக இருந்து வந்திருக்கிறோம். …


