கடந்த ஆண்டில், அந்த நிதியம் முதலாளிகளுக்கு எதிராக 3,530 சிவில் வழக்குகளைத் தாக்கல் செய்ததுடன், 6,011 வழக்குகளில் குற்றவியல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. "ஊழியர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மொத்தம் 21,029 புகார்களில், 2025-ஆம் ஆண்டில் 8,868 நிலுவைப்பணிக் கூடுதல் (contribution arrears) வழக்குகள் தீர்க்கப்பட்டதாக ஊழியர் சேமநிதி வாரியத்தின் (EPF) தலைமைச்…
ஓராங் அஸ்லி: எங்களுக்குத் தெரியாமலேயே சட்டம் திருத்தப்படுகிறது
ஓராங் அஸ்லி (பூர்வ குடியினர்)-களுக்குத் தெரியாமலேயே அரசாங்கம் 1954 ஓராங் அஸ்லி சட்டத்தின் 134வது பிரிவைத் திருத்த முற்பட்டிருப்பதற்கு ஓராங் அஸ்லி உரிமைக்காக போராடும் ஒரு குழு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. “சட்டத் திருத்தத்தின் பிரதி எதுவும் எங்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதால் அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறோம்”, என மலேசிய தீவகற்ப…
அவதூறு வழக்கில் எம்பி தோல்வி
ஷா ஆலம் எம்பி காலிட் சமட், அம்னோ மகளிர் பகுதி தகவல் தலைவர் ஹமிடா ஒஸ்மானுக்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்கை ஷா ஆலம் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தாம் பாதிரியார் உடை தரித்ததுபோல் ஒரு மேல்பொறுத்தப்பட்ட படத்தை வெளியிட்டிருந்தார் என்று கூறி ஹமிடாவுக்கு எதிராக காலிட்…
பாஸ் வேட்பாளர்: ‘அறியாமை’யால் அம்னோவில் சேர்ந்தேன்
கோலா பெசுட் இடைத் தேர்தலில் பாஸ் வேட்பாளராகக் களமிறக்கப்படும் அஸ்லான் யூசுப் ஒரு முன்னாள் அம்னோ தொகுதித் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அறியாமையால் அம்னோவில் சேர்ந்ததாக அவர் கூறினார். “அப்போது பக்குவம் இல்லை. இப்போது முதிர்ச்சி பெற்று விட்டேன். விவரம் தெரிந்தவனாகி விட்டேன்”, என்றாரவர். வேட்புமனு தாக்கல் செய்த…
இஸ்லாமியப் பாடம் மீது கேள்வி எழுப்பிய டிஏபி-யை இப்ராஹிம் அலி…
தனியார் உயர் கல்விக் கூடங்களில் இஸ்லாமிய நாகரீக பாடத்தை அறிமுகம் செய்வது மீது கேள்வி எழுப்பிய கம்பார் எம்பி கோ சுங் செங் ஆணவமாக நடந்து கொள்வதாக பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலில் வருணித்துள்ளார். அத்துடன் கோ, அகோங்கை அவமதிப்பதாகவும் அவர் கூறிக் கொண்டார். கட்டாயப் பாடமாக்கப்படவிருக்கும் அதனை…
டிஏபி: ‘முன்னாள் கைதிகள் மீது ஏன் குற்றம் சாட்டப்படவில்லை ?’
ரத்துச் செய்யப்பட்டு விட்ட அவசர காலச் சட்டத்தின் (EO) கீழ் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கைதிகளுக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால் அவர்கள் ஏன் இன்னும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி விளக்க வேண்டும் என டிஏபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி…
‘IPCMC-யை நிராகரிக்க ‘தொழில்நுட்ப பிரச்னைகளை’ காரணம் காட்ட வேண்டாம்’
IPCMC எனப்படும் போலீஸ் புகார்கள் தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையத்தை அமைப்பதற்கு 'தொழில்நுட்ப பிரச்னைகள்' தடையாக இருப்பதாக கூறுவதை அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கெரக்கான் தலைமைச் செயலாளர் மா சியூ கியோங் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த IPCMC, விசாரிக்கப்படும் போலீஸ்காரர்கள் முறையீடு செய்து கொள்வதற்கும்…
இந்து, கிறிஸ்துவ நாகரீகங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
'பொதுக் கல்வியை கொஞ்சம் கூட திருத்த முடியாத அளவுக்கு பாழாக்கி விட்ட பின்னர் அடுத்தது தனியார் கல்வியிலும் அவ்வாறு செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது' 'இஸ்லாமிய நாகரீகம்' தனியார் பல்கலைக்கழகங்களில் கட்டாயப் பாடம் பிரிமுஸ்: நாகரீகம் பற்றிய பாடங்களுக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் ஏன் 'இஸ்லாமிய நாகரீகத்தை'…
திரெங்கானுவின் நிலைத்தன்மைக்காக பிஎன்-னை ஆதரிப்பீர்: துணைப் பிரதமர்
திரெங்கானுவில் நிலைத்தன்மை சீர்குலையாதிருக்க வாக்காளர்கள் பிஎன்னை ஆதரிக்க வேண்டும் என்கிறார் அக்கூட்டணியின் துணைத் தலைவர் முகைதின் யாசின். இல்லையேல் அங்கு பல குழப்பங்கள் நேரும். மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய அவசியமும் ஏற்படலாம் . “அப்படியெல்லாம் நிகழாதிருக்க எளிய வழி, பிஎன்னை ஆதரிப்பதுதான். அப்படிச் செய்தால் இப்போதுள்ள நிலை…
கோலா பெசுட்டில் பாஸ்-பிஎன் நேரடி
இன்று, கோலா பெசுட் இடைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நாள். வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் காலை மணி 10-க்கு முடிவு வந்தபோது பாஸ் கட்சியின் அஸ்லான் யூசுப், பிஎன்னின் தெங்கு ஜைஹான் சே கு அப்துல் ரஹ்மான் ஆகிய இருவரைத் தவிர எவரும் வேட்புமனு தாக்கல்…
உள்துறை அமைச்சருக்கும் விதி விலக்கு இல்லை
'குண்டரைப் போன்ற நடத்தைக்காக அகமட் ஸாஹிட் மீது ஏன் குற்றம் சாட்டப்பட வேண்டும் என்பதை தெளிவாக விளக்கிய மாட் ஜைன் -னுக்கு மிக்க நன்றி' ஸாஹிட் மீது ஏன் இன்னும் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) குற்றம் சாட்டவில்லை என வினவுகிறார் முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி கலா: சமமான…
அழியா மை விநியோகிப்பாளர் பெயர் ரகசியமாக வைத்திருக்கப்படுவதை அமைச்சர் ஆதரிக்கிறார்
பொதுத் தேர்தலுக்கு அழியா மையை வழங்கிய விநியோகிப்பாளருடைய பெயர்- 'குழப்பமும் மோதலும்' ஏற்படுவதைத் தடுக்க ரகசியமாக வைத்திருக்கப்பட வேண்டும் என பிரதமர் துறை அமைச்சர் ஷாஹிடான் காசிம் மக்களவையில் தெரிவித்துள்ளார். அரச உரை மீதான விவாதத்தை பிரதமர் துறைக்காக நேற்று நிறைவு செய்து வைத்துப் பேசிய அவர் அவ்வாறு…
‘பெமாண்டு, ‘தீவிரமான சீர்திருத்தங்கள் எங்கே ?’
மலேசியாவின் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொது மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதை ஒர் அனைத்துலக ஆய்வு காட்டியுள்ளதைத் தொடர்ந்து ஊழலைத் துடைத்தொழிக்க 'தீவிரமான சீர்திருத்தங்களை' அமலாக்க பெமாண்டு எனப்படும் அடைவு நிலை நிர்வாக, பட்டுவாடாப் பிரிவு திட்டமிட்டுள்ளது குறித்து பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கேள்வி…
அவசர காலச் சட்டம் (EO) தேவை என்பதற்கு ஸாஹிட் புள்ளி…
அவசர காலச் சட்டம் மீண்டும் தேவை என்பதை மெய்பிக்க உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் புள்ளிவிவரங்களை வழங்குவார். அந்த புள்ளிவிவரங்கள் குற்றச்செயல்கள் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் வழி பெறப்பட்டவையாகும். இந்த நாட்டில் பெரும்பாலான கிரிமினல் நடவடிக்கைகளுக்கு 2012ம் ஆண்டு அவசர…
‘அழியா மை மீதான புகார்களை கவனியுங்கள்’
மே 5 தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியா மை குறித்து கொடுக்கப்பட்டுள்ள 1,500க்கும் மேற்பட்ட புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு புக்கிட் கட்டில் பிகேஆர் எம்பி சம்சுல் இஸ்காண்டார் அக்கின் சட்டத்துறைத் தலைவரைக் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த அழியா மை தொடர்பில் இவ்வாண்டு ஜுன் 3ம் தேதி வரையில்…
இப்போதைக்கு மின் கட்டண உயர்வு இல்லை
எரிபொருள் விலையேற்றத்தை பயனீட்டாளர்களுக்கு மாற்றி விடும் யோசனையை கூட்டரசு அரசாங்கம் இன்னும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறது. அதனால் இப்போதைக்கு மின் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் ஏதுமில்லை. இவ்வாறு எரிசக்தி, பசுமைத் தொழில்நுட்ப, நீர் வள அமைச்சர் மாக்ஸிமுஸ் ஒங்கிலி கூறியுள்ளார். அந்த யோசனையை அமலாக்குவதற்கு முன்னர் சில முக்கியப்…
எம்பி: தற்காலிக ஆசிரியர்களுக்கு போனஸ் கிடைக்கவில்லை
அரசாங்கம் வாக்களித்த ஒன்றரை-மாத போனஸ் பல தற்காலிக ஆசிரியர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என டிஏபி எம்பி தியோ நை சிங் கூறினார். கூலாய் எம்பியான அவர், தம் தொகுதியிலேயே மூன்று தற்காலிக ஆசிரியர்கள் போனஸ் கிடைக்கவில்லை என்று புகார் செய்திருக்கிறார்கள் என்றார். ஜனவரி மாதமே அது கிடைத்திருக்க வேண்டும்.…
பாதுகாவலரை (chaperone) பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக மூன்று சுக்மா விளையாட்டாளர்கள்…
மூன்று சுக்மா விளையாட்டாளர்களில் ஒருவர் பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டு கூட்டரசுப் பிரதேச மகளிர் handball குழுவின் 19 வயதுப் பாதுகாவலர் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 18 வயது அடிப் அட்ஹா இஸ்மாயில் என்ற அந்த விளையாட்டாளர் ஜுலை…
‘பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகியவற்றிலும் IPCMC போன்ற அமைப்புக்கள் உள்ளன’
பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகியவற்றிலும் IPCMC போன்ற கண்காணிப்பு அமைப்புக்கள் இயங்கும் போது இங்கு IPCMC என்ற போலீஸ் புகார்கள், தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையத்தை அமைப்பது எப்படி அரசமைப்புக்கு முரணானதாகும் என்று முன்னாள் அம்னோ மகளிர் பிரிவுத் துணைத் தலைவி கமிலியா இப்ராஹிம் கேள்வி எழுப்பியுள்ளார். 2005ம்…
‘இஸ்லாமிய நாகரீகம்’ தனியார் பல்கலைக்கழகங்களிலும் கட்டாயப் பாடம்
தனியார் பல்கலைக்கழகங்களில் பயிலும் உள்நாட்டு மாணவர்களுக்கு 'இஸ்லாமிய நாகரீகம்' (Tamadun Islam) என்ற பாடத்தை கட்டாயமாக்க கல்வி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி எம்பி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். பொதுப் பல்கலைக்கழகங்களின் தேவைகளுக்கு ஏற்ப 'சீராக இருக்கும் பொருட்டு' செப்டம்பர் முதல் தேதி தொடக்கம் தனியார் உயர்…
சுஹாக்காமிடம் சமர்பிக்கப்பட்ட புகார் பட்டியலில் போலீஸ் முதலிடம்
அண்மைய ஆண்டுகளில் போலீசாருக்கு எதிராக புகார்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுஹாக்காம் எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணையம் கூறுகிறது. 2008ல் போலீசுக்கு எதிராக 38 புகார்கள் கொடுக்கப்பட்ட வேளையில் 2012ல் அந்த எண்ணிக்கை 126 ஆக கூடியுள்ளது என அந்த ஆணையத்தின் 2012ம் ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
எம்பி: ஊழல்வாதிகளின் பாதுகாவலராக மாறிவிட்டதா எம்ஏசிசி?
பொதுத் தேர்தலில் வாக்குகளை விலைக்கு வாங்கியதாக செய்த புகார்களின்மீது விசாரணையை முடித்துக்கொண்ட பினாங்கின் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தை (எம்ஏசிசி) மேலும் ஒரு பக்காத்தான் ரக்யாட் எம்பி- இங் வெய் ஏய்க்- சாடியுள்ளார். ஏழு இடங்களில் அந்தத் தேர்தல் குற்றம் நடந்திருப்பதாக பக்காத்தான் தலைவர்கள் புகார் பதிவு செய்துள்ளபோதும் அவற்றைக்…
மதம் மாற்றம் மீதான மாநிலச் சட்டங்களைத் திருத்துமாறு ஐந்து மாநில…
தன்மூப்பாக மதம் மாற்றப்படுவதைத் தடுப்பதற்காக தங்கள் மாநில மதம் மாற்ற சட்டங்களை திருத்துமாறு ஐந்து மாநில அரசாங்கங்களை டிஏபி தைப்பிங் எம்பி இங்கா கோர் மிங் கேட்டுக் கொண்டுள்ளார். குழந்தையை இஸ்லாத்துக்கு மதம் மாற்றுவதற்கு பெற்றோர்கள் இருவருடைய ஒப்புதலும் கட்டாயமாகத் தேவை எனக் கூறும் மற்ற ஆறு மாநில மதம்…
கேள்வி நேரம் நீண்டிருப்பதை விரும்புகிறார் பினாங்கு சட்டமன்றத் தலைவர்
பினாங்கின் புதிய சட்டமன்றத் தலைவர் லாவ் சூ கியாங், கேள்வி நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்ற பரிந்துரையைச் செயல்படுத்தலாமா என்று ஆலோசித்து வருகிறார். முந்தைய சட்டமன்றம், சட்டமன்றச் சீரமைப்புக்காக எட்டு திருத்தங்களை முன்மொழிந்திருந்தது. “அதில் கேள்வி நேரத்தை ஒவ்வொரு நாளும் 90 நிமிடங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும்”,…


