ஓட்டை பாக்கெட்!

எம். குலசேரகன்,  ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர், 02.04.2013 இன்றைய மலேசிய தமிழ் நாளேடுகளில் வெளிவந்த துணை அமைச்சர் சரவணனின் ஓட்டை  பாக்கெட் என்ற தலைப்பிலான செய்தியைப் படித்து நகைத்து நின்றேன். எங்களின் பாக்கெட் ஓட்டைதான்  அதில் பணம் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால், மக்கள் பணத்தை கொள்ளையடித்து…

திட்டமிடப்பட்டிருந்த பக்கத்தான் – ஹிண்ட்ராப் சந்திப்பு கைவிடப்பட்டது, கணேசன்

பக்கத்தான் மற்றும் ஹிண்ட்ராப் தரப்பினர்களுக்கிடையில் கடந்த வாரம் வரையில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால், அதனைத் தொடர்ந்து நடைபெறவிருந்த கூட்டம் கைவிடப்பட்டது. கடந்த வாரம், டிஎபி தேர்தல் வியூகர் டாக்டர் ஓங் கியன் மிங் ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தையும் பக்கத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையையும் ஒப்பிட்டு தயாரித்திருந்த…

சாபாய் சட்டமன்றத்தில் ஜசெக வேட்பாளராக காமாட்சி துரைராஜூ களமிறங்குகிறார்

பெந்தோங் நாடாளுமன்றத்தின் கீழ் அமைந்துள்ள ஜசெக-வின் பீலூட், கெத்தாரி, சாபாய் ஆகிய மூன்று சட்டமன்றங்களுக்கான வேட்பாளர்களை ஜசெக தலைமைச் செயலாளரும் பினாங்கு முதலமைச்சருமான லிம் குவான் எங், நேற்று மாலை நடைபெற்ற ஜசெக தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி வைத்தார். இவற்றுள் சாபாய் சட்டமன்றத்தில் திருமதி காமாட்சி…

70 வயதான குழந்தைவேலு குடியுரிமை கோருகிறார்

நிரந்தர வசிப்பிடத் தகுதியைக் கொண்டுள்ள ஆர் குழந்தைவேலு, தமக்கு குடியுரிமையையும் நீல நிற மை  கார்டையும் வழங்க மறுத்த தேசியப் பதிவுத் துறை முடிவு மீது நீதித் துறை மறு ஆய்வுக்கு விண்ணப்பித்துக்  கொள்வதற்கு அனுமதி பெற்றுள்ளார். கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஸாலேஹா யூசோப் அந்த அனுமதியை…

தெங்: குவான் எங்-கிற்கு பல இனத் தொகுதியில் போட்டியிடும் துணிச்சல்…

பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ் தம்மை ஏமாற்றி விட்டதாக முதலமைச்சர் லிம் குவான் எங்  கூறியிருக்கிறார். "13வது பொதுத் தேர்தலில் அது தான் பெரிய நகைச்சுவை," என உடனடியாக லிம் -முக்குப் பதில் அளித்த தெங் சொன்னார். "நான் அவருக்காக வருந்துகிறேன். டிஏபி-க்காக அதை விட…

ஹாடி: ‘தேர்தல் தேதிக்காக பிஎன் போமோவைப் பார்க்கிறதோ, என்னவோ’

தேர்தல் தேதியை முடிவுசெய்ய பிஎன் தலைவர்கள் போமோவைப் பார்க்கிறார்களோ என்னவோ - அதனால்தான் நாடாளுமன்றக் கலைப்பு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது என்று கிண்டலடித்தார் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங். “முஸ்தபா அலி (பாஸ் தலைமைச் செயலாளர்) சாத்தியமான தேர்தல் தேதி குறித்து சற்றுமுன்னர் கூறினார். நான் என்ன நினைக்கிறேன்…

பொதுத் தேர்தல் மீதான விவாத அரங்கில் பிஎன் பக்காத்தான் இளம்…

13வது பொதுத் தேர்தல் பற்றி ஏப்ரல் 10ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்று மணி நேர விவாத அரங்கில்  பிஎன், பக்காத்தான் ராக்யாட் ஆகியவற்றைச் சேர்ந்த நான்கு இளம் தலைவர்கள் கலந்து கொள்வர். CPPS எனப்படும் பொது, கொள்கை ஆய்வு மய்யம் ஏற்பாடு செய்யும் அந்த நிகழ்வு யூ…

பட்டியலில் சந்தேகமான வாக்காளர்கள் இருப்பதை சிலாங்கூர் இசி தலைவர் ஒப்பினார்

சிலாங்கூர்  தேர்தல் ஆணைய (இசி)த் தலைவர் சுல்கிப்ளி அப்துல் ரஹ்மான், அம்னோ உதவிப் பதிவதிகாரி ஒருவர் சந்தேகத்துக்குரிய பலரை வாக்காளர்களாக பதிவு செய்தார் என்று தெரிவித்ததாக டிஏபி-இன் கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு கூறினார். சுல்கிப்ளியை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசியபோது அதை ஒப்புக்கொண்டார் என்றாரவர். அதே…

தாமான் மேடான் வாக்காளர் ஸ்ரீ செத்தியாவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிகேஆர் சொல்கிறது

வாக்காளர்களுக்குத் தெரியாமல் அவர்கள் வேறு தொகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது குறித்து பிகேஆர்  சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து புகார் செய்கின்றனர். 2008ல் தாமான் மேடான் தொகுதியில் வாக்களித்த சம்சியா அரிபின் என்பவர் ஸ்ரீ செத்தியா சட்டமன்றத் தொகுதிக்கும் கிளானா ஜெயா நாடாளுமன்றத் தொகுதிக்கும் மாற்றப்பட்டுள்ளதாக தாமான் மேடான் சட்டமன்ற  உறுப்பினர் ஹனிஸா…

கேலாங் பாத்தா பிரகடனம் எல்லா இந்தியர்களுக்கும் மகிழ்ச்சி தரவில்லை

உங்கள் கருத்து : ‘என்னைக் கேட்டால், டிஏபி-இன் வாக்குறுதிகளை ஏற்போம். அவர்கள் திருப்தி அளிக்கும் வகையில் நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்ப்போம்’ இந்தியர்களுக்கான டிஏபி-இன் 14-அம்சத் திட்டம் ஜெரார்ட் லூர்துசாமி: டிஏபி-இன் இந்த 14-அம்சத் திட்டத்துக்கு இணையான திட்டத்தை அம்னோ/பிஎன்னால் கொண்டு வர முடியுமா? இதை முன்பே அறிவித்திருக்க வேண்டும்…

இந்தியர்களுக்கான டிஏபி பெருந்திட்டத்தை சாமிவேலு சாடுகிறார்

இந்திய சமூக வாக்குகளைப் பெறுவதற்காக கடைசி நேரத்தில் சலுகைகளை அறிவிப்பதின் மூலம் அந்த  சமூகத்தை ஏமாற்ற முயலுவதாக முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு சாடியிருக்கிறார். மலேசிய இந்தியர்களுடைய சமூக பொருளாதார நிலையை உயர்த்தும் பொருட்டு கடந்த ஞாயிற்றுக் கிழமை  டிஏபி அறிவித்த 'கேலாங் பாத்தா பிரகடனம்' என…

தேர்தலில் வெற்றி பெற்றால் பக்காத்தான் ‘அந்நியச் செலாவணி ஊழலை’ புலனாய்வு…

அடுத்த கூட்டரசு அரசாங்கத்தை அமைப்பதில் பக்காத்தான் ராக்யாட் வெற்றி பெற்றால் 1990-களின்  தொடக்கத்தில் பாங்க் நெகாரா மலேசியாவுக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய அந்நியச் செலாவணி ஊழல்  விசாரிக்கப்படும். அந்த வகையில் தற்போது பிரதமர் துறையில் அமைச்சராக இருக்கும் நோர் முகமட் யாக்கோப்பின் பங்கு எனக்   கூறப்படுவது மீது கவனம் செலுத்தப்படும்.…

பினாங்கில் குவான் எங்-தெங் போட்டி இல்லை

பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயோவின் கோமாளித்தனங்களால் எரிச்சலடைந்த டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அவருக்கு எதிராக பாடாங் கோத்தாவில் போட்டியிடும் எண்ணத்தைக் கைவிட்டிருக்கிறார். தெங் “சர்க்கஸ் கோமாளி”போல் நடந்துகொண்டிருக்கிறார் என்று லிம் கூறினார். எனவே, “இனியும் இந்த ஆட்டத்தில் ஈடுபட ஆர்வமில்லை”, என்றாரவர்.…

உண்ணா விரதம் முடிந்தது, ஹிண்ட்ராப்புக்கு எந்த மாற்றமும் இல்லை!

உங்கள் கருத்து : 'வேதமூர்த்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த உண்ணா விரதம் அவருடைய ஆரோக்கியதைப் பாதித்திருக்காது என நான் நம்புகிறேன். ஹிண்ட்ராப் பக்காத்தானுடன் நல்ல   எண்ணத்துடன் மீண்டும் பேச்சுக்களைத் தொடங்க வேண்டும்' "வேதமூர்த்தி மயங்கி விழுந்தார் உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார்" சின்ன…

டிஏபி, நஜிப்பின் முன்னாள் தகவல் பிரிவுத் தலைவரை ரவூப்பில் நிறுத்துகிறது

அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கின் உள் வட்டாரத்தில் ஒர் உறுப்பினராக இருந்த முகமட் அரிப் சாப்ரி  அப்துல் அஜிஸை டிஏபி, ரவூப் நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்துகின்றது. டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் நேற்று ரவூப்பில் செராமா ஒன்றின் போது அந்தத் தகவலை  அறிவித்தார். 2004…

கேலாங் பாத்தாவில் போட்டியிடுமாறு டாக்டர் மகாதீருக்கு கிட் சியாங் சவால்

யாருடைய 'அரசியல் புதைகுழி' என்பதை முடிவு செய்ய கேலாங் பாத்தாவில் போட்டியிடுமாறு டிஏபி  நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு சவால்  விடுத்துள்ளார். கேலாங் பாத்தாவில் அம்னோ/பிஎன் பக்காத்தான் ராக்யாட்டுடன் மோதுவதில் உதவுவதற்காக வந்துள்ள அந்த  முன்னாள் பிரதமர், டிஏபி…

கிட் சியாங் சட்டமன்றத் தொகுதிக்குப் போட்டியிட மாட்டார்

எந்த சட்டமன்றத் தொகுதிக்கும் தாம் போட்டியிடப் போவதில்லை என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் இன்று அறிவித்துள்ளார். வரும் பொதுத் தேர்தலில் தாம் கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியில் கவனம் செலுத்தப் போவதாக  அவர் சொன்னார். தாம் சட்டமன்றத் தொகுதி ஒன்றுக்குப் போட்டியிட எப்போது…

‘ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது வாயை மூடிக் கொண்டிருங்கள்’-ஹுஸ்னிக்கு பிகேஆர் பதிலடி

பக்காத்தான் ரக்யாட்டின் தேர்தல் கொள்கை அறிக்கையைக் குறைசொல்லும் இரண்டாவது நிதி அமைச்சர் அஹமட் ஹுஸ்னி ஹனட்ஸ்லா வெறுமனே குறைசொல்லுதல் போதாது அதற்கான ஆதாரங்களை முன்வைக்கத் தயாரா என மாற்றரசுக் கட்சியான பிகேஆர் சவால் விடுத்துள்ளது. “புள்ளிவிவரங்களை முன்வைத்து அலசி ஆராயத் தயாரா என்று அவருக்குச் சவால் விடுக்கிறோம்”, என்று…

பக்காத்தான், கார்களைத் தொடர்ந்து மலிவான மோட்டார் சைக்கிள்களுக்கும் வாக்குறுதி அளிக்கிறது

புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றினால் கார்களுக்கான கலால் வரியைக் குறைக்கப் போவதாக அந்த எதிர்த்தரப்புக் கூட்டணி ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளது. இப்போது மோட்டார் சைக்கிள்களுக்கான கலால் வரியைக் குறைப்பதாகவும் அது உறுதி அளித்துள்ளது. "மலேசியாவில் வேலை செய்யும் வர்க்கத்தினர் கார்களை வாங்குவதை விரும்புவதால் போக்குவரத்துக்கு மோட்டார் சைக்கிள்களை நம்பியிருக்கின்றவர்கள்…

முடிவு கட்டுங்கள் : ஜோகூர் வாக்காளர்களுக்கு மகாதீர் வேண்டுகோள்

13வது பொதுத் தேர்தல் டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங்-கின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டுவதை  உறுதி செய்யுமாறு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஜோகூரில் உள்ள பல்வேறு சமூகங்களைக்  கேட்டுக் கொண்டிருக்கிறார். அத்துடன் Parti Keadilan Rakyat என்ற பிகேஆர் கட்சியின் ஆலோசகர் அன்வார் இப்ராஹிம்,…

மசீச: குளுவாங்கில் எங்கள் கட்சிக்குள் குழப்பம் உண்டாக்கப் பார்க்கிறார் குவான்…

மசீச உதவித் தலைவர் கான் பிங் சியு, குளுவாங்கில் டிஏபி-இன் லியு சின் தொங்கை எதிர்த்துப் போட்டியிடத் தயாரா என்று தமக்குச் சவால் விடுக்கும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அதன்வழி மசீசவில் குழப்பம் விளைவிக்கப் பார்க்கிறார் எனச் சாடியுள்ளார். அத்தொகுதியில் யார் வேட்பாளர் என்பதை…

‘சுலு சுல்தானுடன்’ தொடர்புடைய மனிதர் போலீசாரிடம் சரணடைந்தார்

'சுலு சுல்தான்' குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்பட்ட ஒருவர் போலீசாரிடம்  சரணடைந்துள்ளார். அவர் பினாங்கில் இஸ்லாமிய நலன் சங்கம் ஒன்றுக்குத் தலைமைப் பொறுப்பை வகிக்கிறார். முகமட் ரிட்வான் சுலைமான் என அடையாளம் கூறப்பட்ட அந்த மனிதர் சரணடைந்த பின்னர் பாதுகாப்புக்   குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ்…

குவான் எங் -உடன் மோதுவதற்கு இடத்தை தாம் தேர்வு செய்ய…

வரும் தேர்தலில் முதலமைச்சர் லிம் குவான் எங்-கிற்கு எதிராகப் போட்டியிடும் தொகுதியை தாம் முடிவு செய்ய  வேண்டும் என்பதில் பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயூ பிடிவாதமாக இருக்கிறார். "இடத்தை நான் தான் முடிவு செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். முதலமைச்சர் என்பதால் எந்த…