கணக்கறிக்கை- பரிகாரங்கள் தேவை

உங்கள் கருத்து: “பிரச்னையைவிட அதன்பிறகு ஒருவர் என்ன செய்கிறார் என்பதுதான் முக்கியம்.” கெடா இல்லாத வீடுகளைப் பழுதுபார்க்க பணம் செலவிட்டுள்ளது பெர்ட் டான்:  அரசு ஊழியர்களிடம் ஊழல், கடமை தவறுதல் முதலிய பிரச்னைகள் எப்போதுமே இருந்து வருகின்றன. தவறு செய்பவர்கள் அதற்கு எந்தக் காரணமும் கூறித் தப்பித்துக்கொள்ள முடியாது.…

ஏஇஎஸ் பற்றி விளக்கம் பெற பினாங்கு அரசு விருப்பம்

பினாங்குக்குத் தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்) பற்றி விளக்கம்  தர என்று போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளருக்கு மாநில அரசு  அழைப்பு விடுத்துள்ளது. நேற்றைய மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் அதற்கான முடிவு செய்யப்பட்டதாக ஆட்சிக்குழு உறுப்பினர் செள கொன் இயோ ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார். “ஏஇஎஸ் மீது மாநில…

போலீஸ் சட்டத்துறைத் தலைவர் மீதான நூலை இன்னமும் ஆராய்கிறது

சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் குறித்து Tan Sri Gani Patail: Pemalsu, Penipu, Penjenayah (டான்ஸ்ரீ அப்துல் கனி பட்டேய்ல்: மோசடிக்காரர், பொய்யர், குற்றவாளி) என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை போலீசார் இன்னமும் ஆராய்ந்து வருகிறார்கள். அந்நூல் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றி அறிந்துகொள்ள விரும்பிய ஈப்போ…

என்எப்சி: இலக்குகளை அடைய முடியாமல் போனதற்கு விவசாய அமைச்சுதான் காரணம்

கூட்டரசு அரசாங்கத்தினால் பல தடங்கல்கள் ஏற்பட்டதுதான்  கால்நடை வளர்ப்புத் திட்டத்தைப் பூர்த்தி செய்ய முடியாமல் போனதற்குக் காரணம் என நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் பழியைக் கூட்டரசு அரசாங்கத்தின்மீது போட்டுள்ளது. அந்நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி அரசு ஆலோசிப்பதாக செய்தி வெளியானதை அடுத்து என்எப்சி தலைவர் முகம்மட்…

இஸ்மாயில் சப்ரியின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும்: டோனி புவா

உள்நாட்டு வாணிகம், கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சப்ரி மலேசிய நிறுவனங்கள் ஆணைய (சிசிஎம்) த்தைக் கொண்டு சுவாரா இனிஷியேடிப் சென் பெர்ஹாட் மீது விசாரணை மேற்கொண்டதன்வழி தம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்பதால் அவரின் சம்பளத்தில் ரிம10 ரிங்கிட்டைப் பிடித்தம் செய்ய வேண்டும் என்று டிஏபி…

சுவாராம்: ஸ்கோர்பீன் வழக்கில் நாங்கள் இன்னும் ஒரு கட்சிக்காரரே

பிரான்ஸில் நடந்து வரும் ஸ்கோர்பீன் ஊழல் சம்பந்தப்பட்ட வழக்கில் தாம் இன்னும் ஒரு கட்சிக்காரராக இருப்பதாக கூறிய மலேசிய மனித உரிமைக் கழகமான சுவாராம் அதற்கு மாறான குற்றச்சாட்டுகள் "தீய நோக்கம் கொண்டவை என்பதோடு அவை ஒட்டுமொத்த பொய்யாகும்", என்று சுவாராம் அலுவலக உறுப்பினர் ஃபாடியா நாட்வா ஃபிக்ரி…

காருக்குள் புகைப்பிடிப்பதால் அனைவருக்கும் ஆபத்து; விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

காருக்குள் அமர்ந்து புகைப்படிக்கும்போது உள்ளிருக்கின்ற காற்றில் நச்சுப் பொருட்களின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட அதிகமாக உள்ளதாக என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். காரின் ஜன்னல் கண்ணாடிகளை திறந்து வைத்துக்கொண்டு புகை பிடித்தாலும், காரில் குளிரூட்டியை இயக்கிக் கொண்டு புகைபிடித்தாலும்கூட நச்சுப் பொருட்கள் அதிகமாகவே இருப்பதாக அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். காரின் முன்னிருக்கையில்…

ரபிஸி: என்எப்சிமீது வழக்குத் தொடுத்து பணத்தைத் திரும்பப் பெற இயலாது

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசனுக்கு (என்எப்சி) எதிராக வழக்குத் தொடுத்து வெற்றிபெற்றால்கூட அதனிடமிருந்து அரசாங்கம் பணத்தைத் திரும்பப் பெற முடியுமா என்பது சந்தேகம்தான் என்கிறார் பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி. ஏனென்றால் என்எப்சி பணத்தில் பெரும்பகுதி அதன் இயக்குனர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளது. என்எப்சி-இடம் சொத்து அதிகமில்லை. அதனால் அரசாங்கத்தின்…

மலேசியாகினிக்கு எதிராக ஏஜி மேல்முறையீடு

மலேசியாகினிக்கு செய்தித்தாள் வெளியிடும் உரிமம் கொடுக்க மறுத்த உள்துறை அமைச்சின் முடிவைத் தள்ளுபடி செய்த கோலாலும்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகமும் அமைச்சும் மேல்முறையீட்டைப் பதிவு செய்துள்ளன. அதை ஏஜி அலுவலகத்தின் சிவில் வழக்குப் பிரிவுத் தலைவர் அசிசா நவாவி இன்று உறுதிப்படுத்தினார்.…

என்எப்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாமா என்று அரசாங்கம் ஆலோசனை

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசனுக்கு (என்எப்சி) எதிராக சிவில் வழக்கு தொடுத்து ரிம 250 மில்லியன் கடனைத் திரும்பப் பெறுவது பற்றி அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. “நிதி அமைச்சு, விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சு, சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகம் ஆகியவை பொருத்தமான நடவடிக்கை எடுப்பது பற்றிப் பல…

அன்வாருக்கு எதிரான வழக்கை முன்னாள் ஐஜிபி மூசா மீட்டுக்கொண்டார்

முன்னாள் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசன், அன்வார் இப்ராகிம் மீது தொடுத்திருந்த அவதூறு வழக்கை மீட்டுக்கொண்டார். முதலாவது குதப்புணர்ச்சி வழக்கில் பொய்ச் சாட்சியங்கள் தயாரிக்கப்பட்டதாக மாற்றரசுக் கட்சித் தலைவர் செய்திருந்த போலீஸ் புகாரின் தொடர்பில் அந்த அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. முன்னாள் போலீஸ் தலைவர் வழக்கை மீட்டுக்கொள்வதாக…

வீடமைப்புக்காக வாங்கப்பட்ட நிலம் குறைந்த வாடகைக்கு விடப்பட்டது ஏன்?

1982-இல், கப்பாளா பத்தாஸில் அரச மலேசிய ஆகாயப்படைப் பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்காக வாங்கப்பட்ட நிலத்தில் திட்டப்படி  ஏன் வீடுகள் கட்டப்படவில்லை என்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வினவியுள்ளார். மாறாக, அந்த 330-ஏக்கர் நிலம் மாதம் ரிம7,000-க்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.…

டிபிகேஎல் கேமராக்களில் பெரும்பாலானவை பழுதடைந்தவை

கோலாலம்பூரில் போக்குவரத்தைக் கண்காணிக்க ரிம 366 மில்லியன் செலவில் பொருத்தப்பட்ட கேமராக்களில் பாதிக்கு மேற்பட்டவை சரியாக வேலை செய்வதில்லை என்று 2011 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை கூறுகிறது. போக்குவரத்து நிலவரத்தைக் கண்காணிக்க 255 சிசிடிவி கேமராக்களும் விபத்துகளைக் கண்டதும் தானாகவே தகவல் சொல்ல 728 கேமராக்களும் பொருத்தப்பட்டன. இந்த…

சோரோஸையோ, சுவாராமையோ ஆதரிக்கவில்லை; சைபுடின் திட்டவட்டம்

உயர்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா, எதற்காக ஜார்ஜ் சோரோஸ்மீது இத்தனை தாக்குதல்கள் என்று கேள்வி கேட்டதற்காக தம்மைக் குறைகூறிய சகாக்களுக்கும் அம்னோ ஆதரவாளர்களுக்கும் தாம் அந்த யூதக் கோடீஸ்வரரையோ, சுவாராமையோ ஆதரிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். “நான் சோரோஸ் அல்லது சுவாராமை ஆதரிக்கவில்லை. சோரோஸை அல்லது சுவாராமைத் தற்காத்துப்…

கணக்கறிக்கை: அரசுதுறைகளின் தரம் உயர்ந்துள்ளது

தலைமைக் கணக்காய்வாளரின் 2011ஆம் ஆண்டுக் கணக்கறிக்கை, இரண்டுவார தாமதத்துக்குப் பின்னர் இன்றுகாலை கேள்விநேரத்துக்குப் பின்னர்  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 456 நிதிநிலை விவர அறிக்கைகள் இணைக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றில் 413 தணிக்கை செய்யப்பட்டவை என்றும் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் விடுத்த அறிக்கை கூறியது. “அவற்றில் 388க்கு (85.1விழுக்காடு) கடிந்துரையின்றி…

TNB மின்கட்டணம் மக்களுக்குச் சுமையாக இல்லாபடிக்கு அரசாங்கம் உறுதிப்படுத்தும்

மலேசியாவில் மின்சார விநியோகம் அரசுக்குச் சொந்தமான தெனாகா நேசனல் பெர்ஹாட்டின் (TNB) ஏகபோக உரிமையாக இருந்தாலும், மக்களுக்குச் சுமையாக இருக்கும் அளவுக்கு மின்கட்டணம் உயர்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள அரசாங்கம் சிறப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது. “அரசாங்கம் அதன் வழியில் மின் கட்டணம் பயனீட்டாளர்களுக்குப் பெரும் சுமையாக ஆகிவிடாமல் கட்டுப்படுத்தி…

மலாய் மேலாண்மையால் மலாய்க்காரர்-அல்லாதாரின் உரிமைகள் படிப்படியாகக் கரைந்துபோகலாம்

மலாய் மேலாண்மை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தால், மலேசியாவின் மற்ற இனங்களின் உரிமைகளுக்கு உத்தரவாதமின்றிப் போகும் என்று பாஸ் தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார். “மலாய் மேலாண்மை” என்பது மலாய்க்காரர் உரிமைகளைப் பாதுகாப்பதைவிட அம்னோ நீண்டகாலம் Read More

வெளிநாட்டு வாக்களிப்பு: தென்கொரியர்கள் வழி காண்பிக்கிறார்கள்

நமது தேர்தல் ஆணையம் வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் செய்வதற்குத் தத்தளிக்கும் வேளையில் மலேசியாவில் உள்ள தென்கொரியர்கள் முதன்முறையாக அவர்கள் நாட்டில் நடைபெறும் அதிபர் தேர்தலில் இங்கிருந்தபடியே வாக்களிக்க ஆயத்தமாகி வருகிறார்கள். சுபாங் ஜெயாவில் உள்ள சன்வே மாநாட்டு மையத்தில் நேற்றுடன் முடிவுக்கு வந்த கொரிய தினக்…

சிலாங்கூரில் மஇகா 2 லட்சத்து 35 ஆயிரம் வாக்குகளைக் கொண்டுவரும்…

எதிர்வரும் பதின்மூன்றாவது பொதுத்தேர்தலில் சிலாங்கூர் மாநில தேசிய முன்னணிக்கு மஇகா 2 லட்சத்து 35 ஆயிரம் வாக்குகளைக் கொண்டு வரும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜி. பழனிவேல் கூறியுள்ளார். இந்திய சமூகத்தின் நலனுக்காக பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்துள்ள பல அணுகூலங்களைத் தொடர்ந்து, மேற்கண்ட வாக்குகளை…

கணக்கறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்

தலைமைக் கணக்காய்வாளரின் 2011ஆம் ஆண்டுக் கணக்கறிக்கை, இரண்டு வார தாமதத்துக்குப் பின்னர் இன்று காலை பின்னேரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று இதனைத் தெரிவிக்கிறது. தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை பட்ஜெட்டுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்படுவதுதான் வழக்கம். ஆனால், இரண்டாமாண்டாக அது பட்ஜெட்டுக்குபின்…

ரொக்கப் பணத்தைக் கடத்துவது முறையான வழி அல்லவே

உங்கள் கருத்து: “இதே ரிம40 மில்லியன் விவகாரத்தில் மாற்றுக்கட்சி கூட்டணி அல்லது அக்கூட்டணியின் அரசியல்வாதி ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தால் பிரதமர் என்ன சொல்லி இருப்பார்?” பிரதமர் ரிம40 மில்லியன் நன்கொடை வழங்கியவர் யார் என்பதைத் தெரிவிக்க மறுக்கிறார் பெயரிலி _3e21:மைய நீரோட்ட ஊடகத்தில் இது இடம்பெறவில்லை. ஆனால், மலேசியர்கள் அதைப்…

நிக் அசீஸ் விலக வேண்டும் என்கிறார் ஹசன் அலி

பக்காத்தான் ரக்யாட்டில் பாஸ்-டிஏபி ஒத்துழைப்பைத் தற்காத்துப் பேசும் நிக் அப்துல் அசீஸ் நிக் மாட் பதவி விலக வேண்டும் என்று சிலாங்கூர் முன்னாள் பாஸ் ஆணையர் ஹசன் அலி கூறியுள்ளார். “நிக் அசீஸ் தாமதிக்காமல் கட்சியின் ஆன்மிகத் தலைவர் பதவியைத் துணைத் தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்பதவியை ஏற்கும்…