ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கசாஸ்) இருந்து பெர்சியாரன் கெவாஜிபன், சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் வெளியேறும் பாதையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற நீண்ட டிரெய்லர் லாரி கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காணொளி டிக்டோக்கில் பரவியதைத் தொடர்ந்து…
‘பக்காத்தான்-ஆதரவு சீன நிறுவனங்களைப் புறக்கணிப்பீர்’: என்ஜிஓ-கள் வலியுறுத்தல்
13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட்டுக்கு நிதியுதவி செய்த சீனர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களை மலாய் சமூகம் புறக்கணிக்க வேண்டும் என்று சில இஸ்லாமிய என்ஜிஓ-கள் வலியுறுத்தியுள்ளன. அப்படிப்பட்ட நிறுவனங்களின் செயல்களால் நாட்டில் ஒற்றுமை குலைந்து விட்டதாக மலேசிய முஸ்லிம் பயனீட்டாளர் சங்க (பிபிஐஎம்) தலைவர் நட்ஸிம் ஜொஹான் (இடம்)…
‘சீனர் சுனாமி’ என்ற கருத்தை நெகிரி மந்திரி புசாரும் நிராகரிக்கிறார்
13வது பொதுத் தேர்தலில் பிஎன் அடைவு நிலை மோசமானதற்கு 'சீனர் சுனாமி' காரணம் என பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் கூறியதை நிராகரித்துள்ள அம்னோ தலைவர்களுடன் நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகமட் ஹசானும் சேர்ந்து கொண்டுள்ளார். அண்மைய தேர்தல் முடிவுகள் இளம் வாக்காளர்கள் பக்காத்தான் ராக்யாட்டுடன்…
‘வாக்காளர்கள் தொடர்பான குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று இசி பதவி விலக வேண்டும்’
வாக்காளர்கள் பட்டியலில் உள்ளதாகக் கூறப்படும் குறைபாடுகளுக்கும் ‘அழியா மை’ அழிந்துபோனதற்கும் பொறுப்பேற்று தேர்தல் ஆணையம் (இசி) பதவி விலகுவதே கெளரவமான, கண்ணியான செயலாக இருக்கும் என சமூக அமைப்பு ஒன்று வலியுறுத்தியுள்ளது. “அவர்கள் பேரரசரால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதை அறிவோம். அவர்கள் இயல்பாக நீக்கப்படுவதற்குமுன் அவர்களின் மனசாட்சியின் உறுத்தலால் தாங்களே…
ஹாடி : அம்னோ மூழ்குகிறது அதனுடன் சேர்ந்து நாங்களும் மூழ்க…
மலாய்க்காரர்கள் ஐக்கியமடைய வேண்டும் என அம்னோவில் உள்ளவர்கள் விடுத்துள்ள வேண்டுகோளை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நிராகரித்துள்ளார். அந்த மலாய் தேசியவாதக் கட்சி 'மூழ்கிக் கொண்டிருக்கிறது, அதனை இனிமேல் காப்பாற்ற முடியாது' என அவர் வருணித்தார். மூழ்கிக் கொண்டிருக்கும் அம்னோவுடன் பாஸ் சேர்ந்தால் அதுவும் மூழ்கி விடும்…
ஜோகூரில் கட்சி தீர்மானத்தை மீறி ஆட்சிக்குழுவில் இணைந்தார் மசீச பிரதிநிதி
பூலாய் செபாதாங் சட்டமன்ற உறுப்பினர் டீ சியு கியோங், அரசாங்கப் பதவிகளை ஏற்பதில்லை என்ற கட்சியின் தீர்மானத்தை மீறும் முதலாவது மசீச சட்டமன்ற பிரதிநிதியாகியுள்ளார். அவர், இன்று காலை ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். ஆட்சிகுழுவில் சுற்றுலா, உள்ளூர் வர்த்தகம், பயனீட்டாளர் விவகாரம் ஆகியவற்றுக்குப்…
தாய்மொழிப் பள்ளிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் பிரதமர்…
தேசிய ஒற்றுமைக்காக தாய்மொழிப் பள்ளிக்கூடங்களை அகற்ற வேண்டும் என முனைவர் ஒருவர் தெரிவித்த யோசனை மீதான தமது நிலையை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தெளிவுபடுத்த வேண்டும் என 25 சிவில் சமூக அமைப்புக்களை அங்கமாக கொண்ட Gabungan Bertindak Malaysia என்னும் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. "பிரதமர்…
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து மஇகா தலைமைச் செயலாளர் பதவி துறந்தார்
எஸ் முருகேசன் மஇகா தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார். 13வது பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தால் பதவி துறக்கப் போவதாக தாம் அளித்த உறுதிமொழிக்கு இணங்க அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டிருக்கிறார். மே 5ம் தேதி நிகழ்ந்த தேர்தலில் அவர், கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியை…
சபா, சரவாக் எம்பி-க்கள் அமைச்சரவைப் பதவிகளை நிரப்புவார்கள்
அமைச்சரவைப் பதவிகளை ஏற்றுக் கொள்வதில்லை என்று பாரிசான் நேசனல் (பிஎன்) உறுப்புக் கட்சிகளான மசீச-வும் கெராக்கானும் முடிவு செய்ததைத் தொடர்ந்து சபா, சரவாக்கைச் சேர்ந்த புதுமுகங்கள் காலி இடங்களை நிர்ப்புவர் என ஆரூடம் கூறப்பட்டுள்ளது. மே 5 பொதுத் தேர்தலில் மோசமான அடைவு நிலையைப் பெற்றதைத் தொடர்ந்து வாக்காளர்களுடைய…
காலித் சிலாங்கூர் மந்திரி புசாராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்
அப்துல் காலித் இப்ராஹிம் சிலாங்கூர் மந்திரி புசாராக இரண்டாவது தவணைக் காலத்துக்கு இன்று காலை மணி 10.10 வாக்கில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார். கிள்ளானில் உள்ள இஸ்தானா அலம் ஷா-வில் சிலாங்கூர் சுல்தான் ஷாராபுதின் ஷா முன்னிலையில் அவர் அந்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டார்.…
கோலாலம்பூரில் ஒரு மில்லியன் மக்கள் கலந்து கொள்ளும் பேரணி
தேர்தல் மோசடிக்கு எதிராக கோலாலம்பூர் சாலைகளில் ஒரு மில்லியன் மக்களை ஒன்று திரட்டி மாபெரும் பேரணியை இந்த மாதம் பிற்பகுதியில் நடத்தப் போவதாக Solidariti Anak Muda Malaysia (SAMM) Asalkan Bukan Umno (ABU) ஆகிய அமைப்புக்களின் தலைமையில் பல அரசு சாரா அமைப்புக்கள் உறுதி அளித்துள்ளன. அந்தப்…
‘அம்னோ தீவிரவாதிகள் கட்டுப்பாடு இல்லாமல் பேசுகின்றனர் ஆனால் சமரசம் நஜிப்…
உங்கள் கருத்து : "அந்த முன்னாள் நீதிபதி விடுத்த அறிக்கை மீது பிரதமர் தமது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும். அத்துடன் அந்த மனிதர் அம்னோ ஒழுங்கு நடவடிக்கை வாரியத்திலும் அங்கம் பெற்றுள்ளார்" "துரோகத்திற்கு" பதிலடி கொடுக்கப்படும் என முன்னாள் நீதிபதி சீனர்களை எச்சரிக்கிறார் 2 டிம் 1:7: மக்களில்…
டிஏபி: லாபிஸில் 800 வாக்காளர்களுக்கு பிஎன் பணம் கொடுத்தது
லாபிஸ் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்களிப்பு அறையில் வாக்கு வேட்டை, ரொக்கப்பணம் வழங்குதல், மின் துண்டிப்பு, வாக்களிப்பு மையத்தைசு சுற்றியுள்ள பகுதியில் பிஎன் சட்டைகளை அணிந்து திரிதல் போன்ற முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக ஏழு போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் மோசமான குற்றம் எதுவென்றால் பணம் கொடுத்ததுதான். லாடாங் கெர்சாங்கிலும் லாடாங்…
ரபிஸி குழுவினர் 27 இடங்களில் தேர்தல் முடிவுகளை ஆராய்வர்
பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி, தேர்தல் மோசடி என்று கூறப்படும் விவகாரத்தை ஆராய ஒரு குழுவை அமைத்துள்ளார். அக்குழு தேர்தல் மோசடி நிகழ்திருக்கலாம் என்று அடையாளம் கண்டுள்ள 27 இடங்களில் அதன் புலன் விசாரணையை மேற்கொள்ளும். அவற்றில் 19 இடங்கள் பிகேஆர் போட்டியிட்ட தொகுதிகளாகும். மற்றவை பக்காத்தான்…
நீங்கள் சொல்வதற்கு ஆதாரத்தைக் காட்டுங்கள் என குவான் எங் முன்னாள்…
கடந்த ஞாயிற்றுக் கிழமை பொதுத் தேர்தலில் சீன சமூகம் மலாய்க்காரர்களிடமிருந்து 'அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற' முயன்றதாகத் தாம் சொல்லிக் கொள்வதற்கான ஆதாரத்தை முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகமட் நூர் அப்துல்லா காட்ட வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கேட்டுக் கொண்டுள்ளார். "தமது…
சீன வாக்காளர்கள் மீது நம்பிக்கை இழக்க வேண்டாம் என அம்னோவுக்கு…
மே 5 பொதுத் தேர்தலில் மலேசிய சீனர்களுடைய ஆதரவை இழந்ததால் மேலும் வலது பக்கம் திரும்ப அம்னோ முடிவு செய்யுமானால் அது அரசியல் தற்கொலையாக இருக்கும் என அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் சைபுடின் அப்துல்லா தமது கட்சியை எச்சரித்துள்ளார். அம்னோ தனது மிதவாத சித்தாந்தத்தைத் தொடர வேண்டும்…
காலித் நாளை மந்திரி புசாராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்வார்
அப்துல் காலித் இப்ராஹிம் சிலாங்கூர் மந்திரி புசாராக இரண்டாவது தவணைக் காலத்துக்கு நாளை கிள்ளானில் உள்ள இஸ்தானா அலாம் ஷா-வில் சிலாங்கூர் சுல்தான் ஷாராபுதின் இட்ரிஸ் ஷா முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொள்வார். சிலாங்கூர் மந்திரி புசார் அலுவலகத்தின் பத்திரிக்கைச் செயலகம் இன்று அந்தத் தகவலை…
‘கறுப்புப் பேரணிகள் சீனர்களின் ஆதிக்கத்தை பெற்றிருந்தது என வருணனை’
அண்மைய பொதுத் தேர்தலில் மோசடிகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறிக் கொண்டு பக்காத்தான் ராக்யாட் நடத்தும் 'கறுப்புப் பேரணிகள்' வன்முறையானதுடன் சீனர்களின் ஆதிக்கத்தை பெற்றிருந்தது என அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவும் அம்னோவுடன் தொடர்புடைய பெரித்தா ஹரியானும் வருணனை செய்துள்ளன. 'சட்ட விரோதப் பேரணிகளில் இளம் சீனர்கள் ஆதிக்கம் செலுத்தினர்' என…
பினாங்கு பக்காத்தான் தேர்தல் வேட்பாளர்கள் எம்ஏசிசி-யிடம் புகார் செய்தனர்
பினாங்கில் 13வது பொதுத் தேர்தலில் தோல்வி கண்ட பத்து பக்காத்தான் ராக்யாட் வேட்பாளர்கள் ஊழல் நிகழ்ந்துள்ளதாகக் கூறிக் கொண்டு எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்துள்ளனர். அவர்களில் எழுவர் பினாங்குத் தீவிலும் மூவர் தலைநிலத்திலும் தேர்தலில் போட்டியிட்டவர்கள் என அவர்களுடைய பேச்சாளரும் பாயான் பாரு…
அன்வார்: முன்னாள்-நீதிபதியின் பேச்சு கூ கிளக்ஸ் இரகசிய கும்பலையே வெட்கமுறச்…
மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், நேற்று ஒரு கருத்தரங்கில் முன்னாள்-நீதிபதி ஒருவர் பேசிய பேச்சு இனவாதம் நிரம்பியது எனக் கண்டித்துள்ளார். அதை அவர், அடோல்ப் ஹிட்லர், கூ கிளக்ஸ் இரகசியக் கும்பல் போன்றோரின் பேச்சுடன் ஒப்பிட்டார். “முன்னாள்-நீதிபதி முகம்மட் நூரின் பேச்சை ஹிட்லரோ, கூ கிளக்ஸ் இரகசியக்…
ஈப்போ கறுப்பு 505 பேரணியில் 30,000 பேர் கலந்து கொண்டனர்
கோலாலம்பூரிலும் பினாங்கிலும் வெற்றிகரமாக கறுப்பு 505 பேரணிகள் நடத்தப்பட்ட பின்னர் தேர்தல் மோசடிகள் எனக் கூறப்படுவதற்கு எதிராகத் துக்கம் அனுசரிக்கும் பொருட்டு நேற்றிரவு ஈப்போ, மேடான் இஸ்தானாவில் நடைபெற்ற பேரணியில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் பேர் கலந்து கொண்டார்கள். அந்த எண்ணிக்கை பெரும்பாலும் 30,000-ஆக இருக்கலாம் என நேரில்…
பிஎன் இழப்புக்கு அம்னோ மீது மட்டுமே பழி போட வேண்டும்
உங்கள் கருத்து : "பிஎன் இழப்புக்கு ஊழல், இனவாதம், அநியாயம் ஆகியவை முக்கியக் காரணம் என்பதை அம்னோ ஒப்புக் கொள்வதற்காக நான் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறேன்" ராயிஸ்: பிஎன் இழப்புக்கு மசீச-வும் கெராக்கானும் பகுதி காரணம் கமலப்பன்ஸ்: மசீச, கெராக்கான், மஇகா ஆகியவற்றின் அடைவு நிலை மோசமானதற்கு அம்னோ…
முனைவர்: இன ஒற்றுமைக்காக தாய்மொழிப் பள்ளிக்கூடங்களை அகற்றுங்கள்
மலாய் மொழியைப் போதனா மொழியாகப் பயன்படுத்தும் ஒரே பள்ளிக்கூட முறையை ஏற்படுத்தும் பொருட்டு சீன, தமிழ் தாய்மொழிப் பள்ளிக்கூடங்களை அகற்றுமாறு Universiti Teknologi Mara இணை வேந்தர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட் கேட்டுக் கொண்டுள்ளார். இன ஒற்றுமைக்காக அது செய்யப்பட வேண்டும் என அவர் சொன்னார். அந்த இலக்கை…
எதிர்க்கட்சிகள் பெரிய வேடதாரிகள்-நஜிப்
பிஎன் -னுக்குச் சாதகமாக உள்ள 13வது பொதுத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் மறுப்பது பெரிய கபட நாடகம் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வருணித்துள்ளார். தேர்தல்கள் கறை படிந்தவை எனக் கூறிக் கொள்ளும் அவர்கள் தங்களுக்கு நன்மை அளித்துள்ள முடிவுகளை ஏற்றுக் கொள்கின்றனர்…


