கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு 24 பிரம்படி தண்டனை விதித்துள்ளது பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு ஆயுள் தண்டனையும் 24 கசையடி தண்டனையும் விதிக்கப்பட்டது. அதேவேளை, அவரும் அவரது மனைவியான நோர்ஸ்யாஃபிகா நஸ்வா நூரிசானும் இணைந்து எதிர்கொண்ட இரண்டு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரது…
மாடுவெட்டிய விவகாரம் தொடர்பில் கமலநாதனைச் சாடியது பெர்காசா
கல்வி அமைச்சு பள்ளிகளில் மாடுவெட்ட அனுமதித்ததில்லை என்று அறிக்கை வெளியிட்டதன்வழி கல்வி அமைச்சர் II பி.கமலநாதன் இஸ்லாத்தை அவமதித்து விட்டார் என பெர்காசா சாடியுள்ளது. “பள்ளிகளில் குர்பான் செய்ய அனுமதி இல்லை என்று பி.கமலநாதன் அறிக்கை வெளியிட்டது மலாய்க்காரர்களையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும் செயலாகும்”, என பெர்காசா அமைப்பின் இளைஞர்…
கமலநாதன், பிரச்னையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்
உங்கள் கருத்து ‘அவ்வப்போது அறிவுரை கூறுவோம் என்கிறீர்களே, அதன் பொருள் என்ன? ஒவ்வோர் ஆண்டும் இது தொடர்வதற்கு இடமளித்து அதன்பின்னர் செய்தித்தாள்களில் நாடகமாட போகிறீர்களா? கமலநாதன்: பள்ளிகளில் குர்பானுக்கு இடமில்லை ஆரிஸ்46: பாவம் கல்வி துணை அமைச்சர் II, பி.கமலநாதன். அமைச்சின் விதிமுறைகளை மீறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு எதிராக…
ஜிஎஸ்டி கூடுதலான வரியல்ல, முகைதின் யாசின்
நேற்று அறிவிக்கப்பட பொருள் மற்றும் சேவைகள் வரி கூடுதலான வரியல்ல. இவ்வரி நீண்ட காலமாக அமலில் இருந்து வரும் விற்பனை மற்றும் சேவைகள் வரிக்கு மாற்றாகும் என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறினார். ஏன் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு பல அறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன என்றும் அவர்…
புதிய வரி விதிப்பின் மூலம் அரசாங்கம் மக்களைத் தண்டிக்கிறது, அன்வார்
பிரதமர் நஜிப் அறித்த 2014 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு அறிக்கையில் பொருள்கள் மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது "மக்களைத் தண்டிக்க" உதவுகிறது என்று எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். இந்த வரி ஏழை மற்றும் செல்வந்தர்களுக்கிடையிலான பிளவை மேலும் விரிவாக்க உதவும் என்று கூறிய அன்வார்,…
நாளை உதவித் தொகை இரத்தாவதால் சீனி விலை உயரும்
சீனிக்கு வழங்கப்பட்டுவரும் 34சென் உதவித்தொகை நாளை தொடக்கம் இரத்துச் செய்யப்படுவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அறிவித்தார். இப்போது சீனியின் விலை ஒரு கிலோகிராம் தீவகற்ப மலேசியாவில் ரிம2.50 ஆகவும் கிழக்கு மலேசியாவில் ரிம2.60 ஆகவும் உள்ளது. இந்நடவடிக்கை நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் செய்யப்பட்டதாக…
ஜிஎஸ்டி 2015-இல் அமலாக்கப்படும்
மிகுந்த சர்ச்சைக்குள்ளான பொருள், சேவைகள் வரி(ஜிஎஸ்டி), 6 விழுக்காடு என்னும் விகிதத்தில் 2015, ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அமலாக்கம் காணும். இன்று நாடாளுமன்றத்தில் 2014 பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இதனைத் தெரிவித்தார். அது அமலாக்கம் காணும்போது விற்பனை, சேவை வரி இரத்தாகும். அரிசி,…
நஜிப் பட்ஜெட் 2014: பொருள்கள் மற்றும் சேவை வரி வருகிறது…
இதுவரையில் சர்ச்சையில் இருந்து வந்த பொருள்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 2015 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்படும். அவ்வரி 6 விழுக்காடாக இருக்கும். இது நஜிப்பின் பட்ஜெட் உரையின் சிறப்பு அம்சமாகும். நிதி அமைச்சர் நஜிப் ரசாக்கின் 2014 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் கருப்பொருள் "பொருளாதார மீட்சியை வலுப்படுத்துதலும்…
டிஏபி-யைக் கடுமையாக விமர்சித்து வந்த சுல்கிப்ளி கட்சியின் எல்லாப் பதவிகளிலிருந்தும்…
முன்னாள் டிஏபி உதவித் தலைவரான சுல்கிப்ளி முகம்மட் நூர். அக்கட்சியின் எல்லாப் பதவிகளிலிருந்தும் இன்று விலகினார். பல மாதங்களாக அக்கட்சியைக் குறைகூறி வந்த சுல்கிப்ளி, பாயான் பாரு டிஏபி தொடர்புத் தலைவர், பினாங்கு டிஏபி செயற்குழு உறுப்பினர், பினாங்கு மாநில சுற்றுலா பிரிவுத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்து விலகுவதாக…
முக்ரிஸ்: சீனர்கள், பிஎன்னை ஆதரிப்பதை நிரூபிக்க வேண்டும்
சுங்கை லிமாவ் இடைத் தேர்தல், சீனர்கள் பின்னை ஆதரிப்பதை நிரூபித்துக்காட்ட நல்ல வாய்ப்பு என்று கூறினார் கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர். இடைத் தேர்தலில் சீனர்கள் முக்கிய பங்காற்ற முடியும் என்றாரவர். அத்தொகுதியில் சுமார் 1,800 சீன வாக்காளர்கள் உள்ளனர். “சீனர்களில் பாதிப்பேர் வாக்களித்தால் போதும் அத்தொகுதியை…
வெள்ளப் பேரிடரில் காணாமல்போன பெண்ணைத் தேடும் பணி தொடர்கிறது
புதன்கிழமை கேமரன் மலையில் ஏற்பட்ட வெள்ளத்திலும் சகதி ஓட்டத்திலும் அடித்துச் செல்லப்பட்ட இந்தோனேசியர் என நம்பப்படும் ஒரு பெண்ணைத் தேடும் பணி தொடர்கிறது. அப்பணியில், கேமரன் மலை தீ அணைப்பு மீட்புப் பணித் துறை, போலீஸ், சிவில் தற்காப்புத் துறை, ரேலா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 300 பேர்…
ரிங்லெட் துயரச் சம்பவம், அதைவிட மோசமான அவலங்கள் நிகழும் என்பதற்கு…
கேமரன் மலையில் அணைக்கட்டு நீர் திறந்துவிடப்பட்டதால் பெர்தாம் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வெள்ளம், அதை விடவும் மோசமான அவலங்கள் அடுத்து நிகழலாம் என்பதற்கான அறிகுறியாகும் என்று தெலுக் இந்தான் முன்னாள் எம்பி எம். மனோகரன் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அணைக்கட்டு நீர் திறந்து விடப்பட்டதில் நிலையான இயக்க முறைமைகள் (எஸ்ஓபி)…
PKFZ விவகாரத்தில் லிங் விடுவிக்கப்பட்டார்
கோலாலும்பூர் உயர் நீதிமன்றம், பல பில்லியன் ரிங்கிட் பெறும் PKFZ திட்டத்தில் அரசாங்கத்தை ஏமாற்றியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியோங் சிக்கை விடுவித்துள்ளது. தீர்ப்புக் குறித்து கருத்துரைக்குமாறு லிம்மைக் கேட்டதற்கு “கருத்துச்சொல்ல எதுவுமில்லை” என்று கூறிவிட்டார். PKFZ திட்டத்துக்கான நிலத்தின் பெறுமதி ரிம1,088,456,000…
உதயகுமார் தனி அறை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்
ஹிண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் "கட்டளைகளை ஏற்றுக்கொள்ள மறுத்ததால்" தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் இரு தடவைகளில் மொத்தம் 13 நாள்களுக்கு அடைக்கப்பட்டிருந்தார். பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் அனுப்பியிருந்த கடிதத்தில் இதனை சிறைச்சாலை இலாகா உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், உதயகுமார் குற்றச்சாட்டியது போல் "இருட்டறையில்" அடைத்து வைத்திருக்கப்படவில்லை என்று அந்த இலாகா கூறிக்கொண்டது.…
வாக்காளர்களுக்குக் கையூட்டு கொடுக்கும் முயற்சிகள் குறித்து: பாஸ் எச்சரிக்கை
கெடா சுங்கை லிமாவ் இடைத் தேர்தலில் பிஎன் வேட்பாளருக்கு வாக்களிக்கப்பதற்காகக் கையூட்டு கொடுக்கும் முயற்சி நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என பாஸ் தலைவர்கள் கூறுகின்றனர். பல இடைத் தேர்தல்களிலும் அது நடந்துள்ளதாகக் கூறிய பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார், சுங்கை லிமாவிலும் அது நடந்தால் தேர்தல்…
என்எப்சி அறிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படலாம்
சர்ச்சைக்குரிய தேசிய ஃபீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) மீதான பொதுக் கணக்குக் குழு(பிஏசி)-வின் அறிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுவதாக நடப்பு பிஏசி தலைவர் நூர் ஜஸ்லான் தெரிவித்தார். முந்தைய பிஏசி தயாரித்த அறிக்கை அது என்று கூறிய நூர் ஜஸ்லான், புதிய குழு அந்த அறிக்கையை…
கெராக்கான்: அம்னோவிடம் மண்டியிடும் நிலை இனி இருக்காது
அடுத்தடுத்து இரண்டு பொதுத் தேர்தல்களில் பெருந் தோல்வி கண்ட கெராக்கான் மீண்டும் தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமானால், முதலில் பிஎன் அரசியல், நடைமுறைக்கு ஒத்துவரக்கூடியதுதானா என்பதை நன்கு ஆராய வேண்டும். இவ்வாறு கூறுகிறார் கெராக்கான் தலைவர் பதவிக்குப் போட்டியிடவுள்ள மா சியு கியோங். கெராக்கான் எல்லாவற்றிலும் அம்னோவிடம் “மண்டியிடுகிறது” என்று…
கமலநாதன்: பள்ளிகளில் குர்பான் செய்ய அனுமதி இல்லை
சமய அடிப்படையில் கால்நடைகளைப் பலியிடும் குர்பான் கடமையைப் பள்ளிகளில் செய்யக்கூடாது என்று கூறிய கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன், பூச்சோங்கில் குர்பான் செய்யப்பட்டதற்குக் கவனக்குறைவே காரணமாகும் என்றார். “உண்மையில், பள்ளிகளில் அதற்கு அனுமதி இல்லை. மாவட்ட கல்வித் துறை(பிபிடி)க்கு அவர்கள் தெரிவிக்கவில்லை. அதுதான் பிரச்னைக்குக் காரணம்”, எனச் செய்தியாளர்…
பிகேஆர்: ஜிஎஸ்டி வருமானத்தைப் பெருக்கும் ‘சோம்பேறித்தனமான’ வழிமுறை
பொருள், சேவைகள் வரி (ஜிஎஸ்டி) என்பது அரசாங்க வருமானத்தைப் பெருக்குவதற்கான ‘சோம்பேறித்தனமான’ வழிமுறையாகும் என பக்காத்தான் ரக்யாட் கூறுகிறது. ஜிஎஸ்டி-யைக் கொண்டுவந்து ருசி கண்டுவிட்டால் பிறகு, அரசாங்கம் ஒருபோதும் அதைக் குறைக்காது என பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் குறிப்பிட்டார். நுருல், இன்று நாடாளுமன்றக் கட்டிடத்தில்…
எம்பி: அணைக்கட்டு நீர்மட்டம் ஏன் கண்காணிக்கப்படவில்லை?
கேமரன் மலையில் சுல்தான் அபு பக்கார் அணைக்கட்டில் நீர்மட்டம் ஏன் தொடர்ந்து கண்காணிக்கப்படவில்லை என்பதை தெனாகா நேசனல் பெர்ஹாட் (டிஎன்பி) விளக்க வேண்டும். தொடர்ந்து கண்காணித்து வந்திருந்தால் அணைக்கட்டு நீரை அவசரமாக திறந்துவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்று டிஏபி-இன் ராவுப் எம்பி முகம்மட் அரிப் சப்ரி அப்துல்…
ஜிஎஸ்டி பணக்காரர்களின் பணம் ஏழைகளுக்குக் கிடைக்க உதவும்
பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)யால், உயர் வருமானம் பெறுவோர் கூடுதல் வரி செலுத்த வேண்டிவரும். அவ்வாறு வரியின்வழி கிடைக்கும் கூடுதல் வருமானத்தைக் கொண்டு குறைந்த வருமானம் பெறுவோருக்கு உதவ முடியும் என்கிறார் மசீச-வின் லாபிஸ் எம்பி, சுவா டீ யோங். “சிங்கப்பூரில், ஜிஎஸ்டி-இன் 75 விழுக்காட்டை வழங்குபவர்கள் உயர் வருமானம்…
ஸைட் ஹுசேன் அலியிடம் உத்துசான் மன்னிப்புக் கோரியது
பிகேஆரின் முன்னாள் துணைத் தலைவர் செனட்டர் ஸைட் ஹுசேன் அலி உத்துசான் மலேசியாவுக்கு எதிராகத் தொடுந்திருந்த அவதூறு வழக்கில் அம்னோவுக்கு சொந்தமான அந்த மலாய் நாளேடு அவரிடம் மன்னிப்பு கோரியது. உத்துசான் மலேசியா தம்மிடம் மன்னிப்பு கோரியதாகவும் அதனை அந்நாளிதழ் வெளியிடும் என்றும் அவர் டிவிட் செய்துள்ளார். "உத்துசானும்…
நோ ஒமார்: ஐஎஸ்ஏதான் மலேசியாவை அமைதியாக வைத்திருந்தது
1987-இல் ஒப்ஸ் லாலாங் நடவடிக்கை மேற்கொள்ளப்படாதிருந்தால் மலேசியா அமைதி நிலவும் நாடாக இருந்திருக்காது என பிஎன்னின் தஞ்சோங் காராங் எம்பி, நோ ஒமார் இன்று கூறினார். அந்த ஒப்ஸ் லாலாங் நடவடிக்கையில் 106பேர் தடுத்து வைக்கப்பட்டனர். அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்குமுன் 1987-இல் இனக் கலவரம் வெடிக்கும் அபாயம் இருந்தது என்றாரவர்.…
கேமரன் மலை அணைக்கட்டு திறந்து விடப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூவர்…
கேமரன் மலை நீர்-மின்சார அணைக்கட்டு திறந்துவிட்டதால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் மூன்று வெளிநாட்டவரும் ஒரு மலேசியரும் உயிர் இழந்தனர் எனக் கூறப்படும் வேளையில் இன்னொருவர் என்னவானார் என்பது தெரியவில்லை. உயிரிழப்புப் பற்றி நேற்றிரவு பின்னேரம் 1.38 அளவில் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக கேமரன் மலை தீயணைப்பு, மீட்புச் சேவைகள் துறைத் தலைவர்…


