இந்தியர்களின் 60 விழுக்காடு வாக்குகள் பக்காத்தானுக்கு கிடைத்தது, சேவியர்

இந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் இந்தியர்களின் ஓட்டு 60 விழுக்காடு பாரிசானுக்கு கிடைத்தாகக் கூறி,  சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர்  டாக்டர் சுப்ரமணியம்  இந்தியர்களை  அவமதிக்கக் கூடாது என்று டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார். இந்திய சமுதாயத்தின் வாக்குகள் பெரும்பகுதி  பாரிசானுக்கு  கிடைத்திருந்தால்  பாரிசானுக்கு தேசிய அளவிலும், சிலாங்கூர் மாநிலத்திலும்கூட…

‘அஸ்மின் அலி பக்காத்தானை விட்டு வெளியேறத் தயாராகிறாரா?’

அன்வார் இப்ராஹிமின் வலது கரம் எனக் கருதப்படும் முகமட் அஸ்மின் அலி பிகேஆர் கட்சியிலிருந்தும்  பக்காத்தான் ராக்யாட் கூட்டணியிலிருந்தும் வெளியேறுவதற்குத் தயாராகி வருவதாகச் சொல்லப்படுகின்றது. "பக்காத்தான் உறுப்புக் கட்சிகளுக்கு இடையில் சிலாங்கூர் ஆட்சி மன்ற இடங்கள் ஒதுக்கீடு குறித்து மனநிறைவு  கொள்ளாததால்" அவர் கூட்டணியிலிருந்து விலக விரும்புவதாக கட்சி…

நஜிப் கருத்துக்கள் பொருத்தமானவை அல்ல என கூட்டமைப்பு ஒன்று கூறுகின்றது

13வது பொதுத் தேர்தல் முடிவுகளை 'சீனர் சுனாமி' என்று வருணித்தும் உத்துசான் மலேசியா வெளியிடும்  'மறைமுகமான இனவாத கருத்துக்களை' தற்காத்தும் பேசியுள்ள பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை 25 அரசு  சாரா  அமைப்புக்களின் கூட்டமைப்பு ஒன்று சாடியுள்ளது. உத்துசான் மலேசியாவும் மற்ற தரப்புக்களும் வெளியிட்டுள்ள நஜிப்பின் அறிக்கை மலேசிய…

கிட் சியாங் பிஎன்னில் சேரும் ஆலோசனையை ‘ஆராயத் தயாராக இல்லை’

டிஏபி பெருந் தலைவர், லிம் கிட் சியாங், புதிய அரசாங்கத்தில் டிஏபி-இன் பங்காற்றுவது குறித்து பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் கட்சி அவை பற்றி விவாதிக்கவில்லை என்றும் தம்மைப் பொறுத்தவரை அப்பரிந்துரையை ‘எண்ணிப் பார்க்கத் தயாராக இல்லை’ என்றும் கூறியுள்ளார். “எந்தவொரு பரிந்துரையையும் நான் பரிசீலிக்க நினைக்கவில்லை”, என்று…

பினாங்கு சட்டமன்றத் தலைவராக சீனர் ஒருவர் நியமனம்

பினாங்கு சட்டமன்றத்துக்கு முதல்முறையாக சீனர் ஒருவர் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். பினாங்கு பிகேஆரின் மாநில துணைத் தலைவர் லாவ் சூ கியாங் சட்டமன்றத் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருப்பதை அக்கட்சியின் மாநிலத் தலைவர் மன்சூர் ஒஸ்மான், உறுதிப்படுத்தினார். டேவான் ஸ்ரீபினாங்கில் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர்…

கெராக்கான், மசீச-வை பின்பற்றி அரசாங்கப் பதவிகளை நிராகரிக்காது

அண்மைய பொதுத் தேர்தலில் மிக மோசமான அடைவு நிலையைப் பெற்றதால் எல்லா அரசாங்கப்  பதவிகளையும் நிராகரித்து தனது சேவை மய்யங்களை மூடும் மசீச-வை கெராக்கான் கட்சி பின்பற்றாது. இவ்வாறு அந்தக் கட்சியின் துணைத் தலைவர் சாங் கோ யூவான் கூறியிருக்கிறார். பாரிசான் நேசனல் பின்பற்றும் கொள்கைகளிலும் பிரச்சாரம் செய்யும்…

நுசா ஜெயா வாக்குச் சீட்டுக்கள் மகோட்டாவுக்கான வாக்குப் பெட்டியில் காணப்பட்டன

நுசா ஜெயா சட்டமன்றத் தொகுதிக்கான நான்கு வாக்குச் சீட்டுக்கள் அந்தத் தொகுதியிலிருந்து முற்றிலும்  மாறுபட்ட தொகுதிக்கான வாக்குப் பெட்டியில் கண்டு பிடிக்கப்பட்டது மீது போலீசில் புகார்  செய்யப்பட்டுள்ளது. மே 5ம் தேதி முன் கூட்டியே செலுத்தப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்ட போது மகோட்டா சட்டமன்றத்  தொகுதியில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கையில்…

பக்காத்தான் பேரணி பேச்சாளர்கள் 28பேர்மீது போலீஸ் விசாரணை

நேற்றிரவு பக்காத்தான் ரக்யாட்டின் மாபெரும் பேரணியில் பேசிய 32 பேச்சாளர்களில் 28 பேர் தேசநிந்தனைச் சட்டத்துக்கு முரணாக பேசினார்களா என்று போலீஸ் விசாரணை மேற்கொள்ளும். சம்பந்தப்பட்ட பேச்சாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று சிலாங்கூர் போலீஸ் தலைவர் (சிபிஓ) இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்ததாக சீன நாளேடுகள் அறிவித்துள்ளன. பேரணியை…

டாக்டர் மகாதீர்: தோல்வியை ஏற்க முடியாததால் எதிர்க்கட்சிகள் பேரணியை நடத்துகின்றன

13வது பொதுத் தேர்தலில் தாங்கள் தோல்வி அடைந்து விட்டதை ஏற்றுக் கொள்ள முடியாததால்  எதிர்க்கட்சிகள் நேற்றிரவு கிளானா ஜெயா அரங்கில் பேரணியை நடத்தியதாக முன்னாள் பிரதமர் டாக்டர்  மகாதீர் முகமட் கூறுகிறார். "அவை தோல்வி அடைந்திருக்கா விட்டால் அவை நிச்சயம் எதிர்ப்பு தெரிவித்திருக்க மாட்டா. அரசாங்கத்துக்கு  நெருக்குதல் கொடுக்க…

முகமட் ரஷீட் ஹாஸ்னோன் பினாங்கு மாநில புதிய முதலாவது துணை…

பினாங்கு மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்கள் தேவான் ஸ்ரீ பினாங்கில் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக்  கொண்ட பின்னர் பிகேஆர் பந்தாய் ஜெரஸாக் சட்டமன்ற உறுப்பினர் முகமட் ரஷீட் ஹாஸ்னோன் புதிய  முதலாவது துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர், நிபோங் தெபால் எம்பி-யாக தேர்வு பெற்றுள்ள மாநில பிகேஆர்…

‘சிலாங்கூர் மந்திரி புசாராக காலித் பெயர் குறிப்பிடப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது’

பொதுத் தேர்தல் முடிந்து நான்கு நாளாகி விட்டது. புதிய சிலாங்கூர் மந்திரி புசார் பதவி உறுதி மொழி எடுத்துக்  கொள்வதற்கான அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை. பக்காத்தான் கட்டுக்குள் உள்ள மற்ற இரு மாநிலங்களான பினாங்கிலும் கிளந்தானிலும் முறையே புதிய முதலமைச்சரும் மந்திரி புசாரும் பதவி ஏற்றுக் கொண்டு விட்டனர்.…

மகாதீர் தாக்குதலை தொடங்கி விட்டார்

'மகாதீர் நஜிப் மீது முதல் ஏவுகணையை எறிந்து விட்டார். நஜிப் விழும் வரை அடுத்தடுத்து ஏவுகணைகள்  வீசப்படும். அடுத்து முஹைடின் மேலே போவார்' டாக்டர் மகாதீர்: நஜிப் பாக் லா-வைக் காட்டிலும் மோசமாகச் செய்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. பெர்ட் தான்: அம்னோவில் குதிரை வியாபாரம் தொடங்கி விட்டது.…

மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள்

இன்று (08.05.2013) கிளானா ஜெயாவில் பொதுத்தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற மக்கள் பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் திரண்டனர். இரவு மணி 10.39 அளவில் பேரணியில் உரையாற்றிய மக்கள் கூட்டணி தலைவர் அன்வார் இப்ராகிம் மலேசியர்கள், அவர்கள் மலாய்க்காரர்களாகவோ, சீனர்களாகவோ, இந்தியர்களாகவோ, கடஸான்களாகவோ, டயாக்களாகவோ இருக்கலாம், விரும்புவது சுதந்திரமான, நேர்மையான…

மக்களின் முழு வெற்றியைப் பறித்துக்கொண்டனர்

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மே 8, 2013. இந்த 13 வது பொதுத்தேர்தலில்  எனது வெற்றிக்கும் பக்காத்தான் கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும்  வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும்  எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   இந்தத் தேர்தலில் நாட்டில் மாற்றத்தை  ஏற்படுத்த வேண்டும் என்ற  வேட்கையுடன் எங்கள் வெற்றிக்குப் பாடுபட்ட…

ஐஜிபி: கூட்டம் அமைதியாக நிகழும் வரையில் அனுமதி தேவையில்லை

எந்த ஒரு கூட்டமும் 2012ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்றுகூடும் சட்டத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி  செய்ய வேண்டும் என தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் தெளிவுபடுத்தியுள்ளார். அந்த நிபந்தனைகளில் ஆயுதங்கள் ஏதுமில்லாமல் அது அமைதியான கூட்டமாக இருப்பதை ஏற்பாட்டாளர்கள்  உறுதி செய்ய வேண்டும் என்பதும் அடங்கும். எந்த…

பேரணி நிகழவிருக்கும் வேளையில் புத்ராஜெயா அன்வாரைச் சாடுகின்றது

தேசியத் தேர்தலில் தோல்வி கண்ட அன்வார் வாக்கு மோசடி எனத் தாம்  கூறிக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்  பொருட்டு இன்றிரவு நடத்தத் திட்டமிட்டுள்ள பேரணி வழியாக அவர் "பிரிவினைக்கு வித்திடுகிறார்" என்றும்  பதற்றத்தை ஏற்படுத்தத் திட்டமிடுகிறார் என்றும் மலேசிய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நாட்டை நீண்ட காலமாக…

பிகேஆர்: தீய நோக்கம் கொண்ட எஸ்எம்எஸ்-களைப் புறக்கணித்து பேரணிக்கு வாரீர்

மக்கள் “தீய நோக்கம்கொண்ட” குறுஞ்செய்திகளைப் புறக்கணித்து தேர்தல் மோசடிக்குக் கண்டனம் தெரிவிக்க இன்று சிலாங்கூரில் நடைபெறும் பேரணிக்கு வர வேண்டும் என பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி வலியுறுத்தியுள்ளார். 2012ஆம் ஆண்டு அமைதிப் பேரணிச் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப, கிளானா ஜெயா அரங்கில்  இன்றிரவு  மணி 8.30க்கு…

முன்கூட்டிய வாக்குகளைக் கொண்டிருந்த பெட்டிகள் முறையாக பாதுகாக்கப்பட்டனவா?

முன்கூட்டி அளிக்கப்பட்ட  வாக்குகளையும் அஞ்சல் வாக்குகளையும் கொண்ட பெட்டிகள்,  அழியா மையுடனும் வாக்களிப்பு நாளில் பயன்படுத்தப்படுவதகான வாக்குச் சீட்டுகளுடனும் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தபோது பாதுகாப்பையும் மீறி எதுவும் நடந்திருக்கலாம் என  ஐயுறுகிறார் பிகேஆர் உதவித் தலைவர் புஸியா சாலே. தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அசீஸ் யூசுப், வேட்பாளர்களின் பிரதிநிதிகள்…

பார்வையாளர்கள்: பொதுத் தேர்தலில் ஓரளவு சுதந்திரம் இருந்தது ஆனால், நியாயமாக…

13வது பொதுத் தேர்தலில் பார்வையாளர்களாக அங்கீகரிப்பட்ட சிந்தனைக் குழுக்களான CPPS / Asli and Ideas ஆகியவை வெளியிட்டிருக்கும் இடைக்கால அறிக்கை, ‘தேர்தலில் ஓரளவுக்கு சுதந்திரம் இருந்தது. ஆனால், நியாயமாக நடத்தப்படவில்லை’ எனக் கூறியுள்ளது. “எங்கள் மதிப்பீட்டு அளவு அனைத்துலக நாடாளுமன்ற சங்க(ஐபியு)ப் பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டது. “மலேசியா…

பினாங்கு மசீசவில் கிளர்ச்சி, கெராக்கான் சேவை மையங்களை மூடுகிறது

13வது பொதுத் தேர்தலில் படுதோல்வி கண்டதை அடுத்து பினாங்கு மசீசவில் கிளர்ச்சி உருவாகியுள்ளது. கெராக்கான் அதன் சேவை மையங்களை மூடி வருகிறது. பாயான் பாருவில் நிறைய சேவையாற்றி வந்துள்ளபோதிலும் வேட்பாளராக நியமிக்கப்படாத அத்தொகுதி மசீச தலைவர் டேவிட் லிம்,  இன்று செய்தியாளர் கூட்டமொன்றைக் கூட்டுவார். அதில் கட்சித் தலைவர்…

அன்வார் தொடர்ந்து போராட வேண்டும் – கா. ஆறுமுகம்

தேர்தல் பற்றி சுவராம் தலைவர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம். 1. தேர்தல் முடிவுகள் பற்றி பொதுவான கருத்து என்ன? பிரதமர் நஜிப்பின் அள்ளிக் கொடுக்கும் திட்டங்களும், பணப்பட்டுவாடாவும், ஒருதலைப்பட்ச ஊடகங்களும், தேர்தல் ஆணையத்தின் மலட்டுத்தனமும் ஒரு வகையில் மக்களின் தேர்வாக அமைய வேண்டிய இந்த தேர்தலை மக்களிடம் இருந்து…

மகாதிர்: நஜிப்பின் அடைவுநிலை அப்துல்லாவைவிட மோசமாக இருக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை

பொதுத் தேர்தலில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவருக்கு முன்னிருந்த அப்துல்லா அஹ்மட் படாவியைவிட மோசமாக சாதிப்பார் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியுள்ளார். அப்துல்லா ஆட்சியைக் கடுமையாக விமர்சித்த வந்தவரான மகாதிர், 12வது பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு 140 இடங்களைப்…

ஐபிஎப் தேர்தல் விளம்பரம், நம்மை அழ வைக்கிறது!

விடுதலை புலி இயக்கத் தலைவர் பிரபாகரனின்  மகன் பாலச்சந்திரன் படத்துடன் “ இந்நிலை யாருக்கும் வேண்டாம்” என்ற தலைப்புடன் ஐபிஎப் கட்சி நாளிதழ்களில் வெளியிட்ட விளம்பரம் பலரின் மனதை நோகடித்துள்ளது. இந்த விளம்பரத்தை மு.வீ. மதியழகன் செய்துள்ளதாகத் தெரிகிறது. அந்த நிலை யாருக்கும் வரக் கூடாதுதான். ஆனால் இந்த…