பினாங்கு பிஎன்: 30 நாள் அவகாசம் பாரபட்சமானது

தாமான் மாங்கிஸ் நிலத்துக்கு 30 நாட்களுக்குள் பாக்கித் தொகையைக் கட்டுமாறு மாநில அரசாங்கம் நிபந்தனை விதித்துள்ளது பாரபட்சமானது என பினாங்கு பிஎன் கூறுகிறது. காரணம் இன்னொரு நில விற்பனையில் ஐந்து ஆண்டுகளில் பாக்கிப் பணத்தை செலுத்துவதற்கு தனியார் நிறுவன்ம் ஒன்று அனுமதிக்கப்பட்டுள்ளது என மாநில அம்னோ இளைஞர் தலைவர்…

எம்ஏசிசி, மலாக்கா மாநில மேம்பாட்டுக் கழக தலைமை நிர்வாக அதிகாரியிடமிருந்து…

கடந்த வார இறுதியில் நடைபெற்ற முதலமைச்சர் முகமட் அலி ரூஸ்தாமின் புதல்வர் திருமணம் தொடர்பான விசாரணைகளில் உதவுவதற்காக எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மலாக்கா மாநில மேம்பாட்டுக் கழக தலைமை நிர்வாக அதிகாரியிடமிருந்து இன்று வாக்குமூலத்தைப் பதிவு செய்தது. அந்தத் தகவலை அந்தத் தலைமை நிர்வாக…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்க பிரஞ்சு வழக்குரைஞர் போர்டோன் இணக்கம்

ஸ்கார்ப்பின் வழக்கு தொடர்பில் மலேசியா நாடாளுமன்றத்துக்கு விளக்கமளிக்க அந்த விவகாரத்தில் சுவாராமைப் பிரதிநிதிக்கும் பிரஞ்சு வழக்குரைஞர் வில்லியம் போர்டோன் தயாராக இருக்கிறார். ஆனால் அவர் இங்கு வரும் போது அவரது பாதுகாப்புக்கு அம்னோவும் பாரிசான் நேசனல் அரசாங்கமும்  உத்தரவாதம் அளிக்க வேண்டும். எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று…

சிந்தனைக்குழு: பிஎன்-னும்தான் அமெரிக்க நிதியுதவி பெறுகிறது

வெளிநாட்டு நிதி உதவி என்றதும் பிஎன் “அரண்டுபோக” வேண்டியதில்லை, ஏனென்றால் ஆளும் கூட்டணிக்கும்கூட அமெரிக்க உதவி கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது என்கிறது ஒரு சிந்தனைக்குழு. “மலேசிய என்ஜிஓ-களுக்கு வெளிநாட்டு நிதியுதவி கிடைப்பதை நினைத்து பாரிசான் எம்பிகள் அரண்டுபோய் அலற வேண்டியதில்லை”, என்று ஜனநாயக, பொருளாதார விவகாரங்கள் மீதான கழக (ஐடியாஸ்)த்…

‘மெகா கெண்டூரி’ தொடர்பில் மலாக்கா ‘சிஎம்’மீது எம்ஏசிசி விசாரணை

மலாக்கா முதலமைச்சர் முகம்மட் அலி ருஸ்தம் மகனின் திருமண விருந்து ஊழல்மீது மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரணையைத் தொடக்கியுள்ளது. “நாங்கள் விசாரித்து வருகிறோம்.......எவ்வளவு செலவானது,  செலவிட்டது யார் என ஒவ்வொன்றாக ஆராய்ந்து வருகிறோம்”, என எம்ஏசிசி துணைத் தலைவர் (நடவடிக்கை) முகம்மட் ஷுக்ரி அப்துல் இன்று கோலாலம்பூரில்…

மூசா அமானின் அங்கீகார மதிப்பீடு 50விழுக்காட்டுக்குக் கீழ் குறைந்தது.

சாபா முதலமைச்சர் மூசா அமான் மீது வாக்காளரின் திருப்தி நிலை 50விழுக்காட்டுக்குக்கீழ் குறைந்தது. ஆனால், நஜிப்பின் அங்கீகார மதிப்பீடு இன்னும் உயர்வாகத்தான் உள்ளது. மெர்டேகா கருத்துக்கணிப்பு மையம் மேற்கொண்ட ஆய்வில்,  பத்தாண்டுகளுக்குமேல் சாபா முதலமைச்சராக இருக்கும் மூசாவுக்கு வாக்காளரின் அங்கீகாரம் 2009, நவம்பரில் 60 விழுக்காடாக இருந்து 2012…

முதலமைச்சர் புதல்வரது ‘ஆதரவு’ திருமணம்: பிஎன் மௌனம்

"முதலமைச்சர் குற்றவாளி எனச் சொல்வதற்கு 1,001 விதிகள் இருக்க வேண்டும். ஊழலும் அதிகார அத்துமீறலும் அவற்றுள் அடங்கும்." மலாக்கா அரசாங்க நிறுவனங்கள் மெகா கெண்டுரிக்கு 'ஆதரவு' அளித்தன பி தேவ் ஆனந்த் பிள்ளை: பல தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தாலும் மலாக்காவில் உள்ள பெரும்பாலான மலாய்க்காரர்கள் இன்னும் அம்னோவுக்குத் தான்…

வல்லுநர்கள்: எம்ஏசிசி நடைமுறைகளே தவறானது, சட்டத்தில் அல்ல

ஊழல் அரசியல்வாதிகளை பிடிப்பதற்கு தான் திறமையாக இயங்குவதற்கு சில சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கூறுவதை சட்ட நிபுணர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. நடப்புச் சட்டங்களில் காணப்படும் 'சில பழைய விதிகள்' தனக்குத் தடையாக இருப்பதாக எம்ஏசிசி சொன்னதாக ஊழல் மீதான…

பக்காத்தானுக்கு பொறாமை, பகைமை என்கிறார் அலி ரூஸ்தாம்

பக்காத்தான் தேசிய சாதனையை ஏற்படுத்தியுள்ள தமது புதல்வர் திருமணத்திலிருந்து பிரச்னைகளை உருவாக்குவதாக மலாக்கா முதலமைச்சார் முகமட் அலி ரூஸ்தாம் சாடியிருக்கிறார். அவர் நேற்று ஆயர் குரோவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். எதிர்க்கட்சிகள் அந்த விஷயத்தை அரசியல் ஆதாயமாக்க முயலுகின்றன என்றும் அவற்றின் நடவடிக்கைகள் பற்றித் தாம் கவலைப்படவில்லை என்றும்…

அன்வாரின் ‘பொருளாதாரத் திறமையின்மை’யைக் கேலி செய்தார் முகைதின்

பக்காத்தான் நிழல் பட்ஜெட், பற்றாக் குறையைக் குறைக்கும் என்று கூறுவது அக்கூட்டணிக்குப் “பொருளாதா Read More

புக்கிட் ஜாலில் தோட்ட முன்னாள் தொழிலாளர்களின் போராட்டம்: பிரதமர் பதில்…

கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு முன்பு புக்கிட் ஜாலில் தோட்ட முன்னாள் தொழிலாளர்களின் வீட்டு பிரச்னை குறித்து பிரதமர் நஜிப்புடன் அத்தொழிலாளர்கள் நடத்திய சந்திப்பிற்குப் பின்னர், இப்போது அவர்களுக்கு பதில் கிடைத்துள்ளது என்று ஜாரிட் இயக்கத்தின் எஸ். மாதவி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். பிரதமர் அளித்துள்ள பதில்…

பிகேஆர்: பெங்கெராங் திட்டம் என்ற போர்வையில் நில அபகரிப்பு

பெங்கெராங் பெட்ரோலியவேதியியல் திட்டம் என்ற பெயரில் நிலத்தைப் பெருமளவில் அபகரித்து அவரின் அல்லக்கைகளைப் பணக்காரர்களாக்க ஜோகூர் மந்திரி புசார் கனி ஒத்மான் திட்டமிட்டிருக்கிறார் என பிகேஆர் உதவித் தலைவர் சுவா ஜூய் மெங் கூறியுள்ளார். அந்த பெட்ரோனாஸ் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோலியவேதியியல் ஒருங்கிணைப்புத் திட்டத்தை(ரெபிட்)  முதலில் சிலாங்கூரில்…

600,000 ரிங்கிட் அம்னோ தரத்தில் கொசுறு தான்

"அது 600,000 ரிங்கிட் அல்லது 6 மில்லியன் ரிங்கிட்டாக இருந்தாலும் அலி ரூஸ்தாமுக்கு அந்தப் பணம் எங்கிருந்து கிடைத்தது ? தமது வாழ் நாள் சேமிப்பு முழுவதையும் அவர் முடித்து விட்டாரா? முதலமைச்சர்: என் புதல்வர் திருமணம் ஆடம்பரமானது அல்ல எம்எப்எம்: இங்கு ஒரு விஷயத்தை கவனியுங்கள். மலாக்கா…

தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் மலேசியக் கல்விக் கொள்கை மீதான கலந்துரையாடல்

மலேசியக் கல்விக் கொள்கை மீதான கல்வி அமைச்சு கொண்டிருக்கும் கருத்தாக்கங்களின் மீது Read More

பெர்சே தலைவர்கள் விமான நிலையங்களில் அச்சுறுத்தப்படுகின்றனர்

கடந்த மாதத்திலிருந்து குறைந்தது மூன்று பெர்சே குழு உறுப்பினர்கள் அனைத்துலகப் பயணங்களுக்காக விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் சிறிது நேரத்துக்குத் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடருவதற்கு இறுதியில் அனுமதிக்கப்பட்டாலும்- அரசு சாரா அமைப்புக்கள் மீது நெருக்குதலை அரசாங்கம் அதிகரித்துள்ள வேளையில் அது தங்களை அச்சுறுத்தும் நடவடிக்கை என அண்ட்ரூ…

நஜிப்: கார் விலைகள் மீது அரசாங்கம் நீண்ட காலத் திட்டத்தை…

கார் வங்கும் போது சிறந்த தேர்வுகளை மலேசியர்கள் நாடுவதைத் தாம் அறிந்திருப்பதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். அதனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் அந்த விவகாரத்தை ஆய்வு செய்வதாக அவர் சொன்னார். "மக்கள் சிறந்த தேர்வுகளை விரும்புவதை நான் உணர்ந்துள்ளேன். நாங்கள் இன்னும் அந்த விஷயத்தை ஆய்வு…

மலாக்கா மாநில அரசு நிறுவனங்கள் அந்த மெகா கெண்டுரிக்கு (…

மலாக்கா முதலமைச்சர் முகமட் அலி ருஸ்தாமின் மூத்த புதல்வர் திருமணச் சடங்குகளுக்கு மாநில அரசு நிறுவனங்கள் ஆதரவு அளித்துள்ளதை மலாக்கா மாநில மேம்பாட்டுக் கழகத்திலிருந்து (PKNM) கசிந்துள்ள ஆவணம் ஒன்று காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாஸ் பொக்கோக்…

பக்காத்தான் மகளிர்: பெண்கள் அவலங்கள் பற்றி நஜிப்புக்கு எதுவும் தெரியவில்லை

மலேசியாவில் மகளிர் உரிமை இயக்கங்கள் தேவை இல்லை என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருப்பது அவருக்குப் பெண்கள் எதிர்நோக்கும் அவலங்கள் பற்றி எதுவும் தெரியாது எனத்  தோன்றுவதாக பக்காத்தான் ராக்யாட் மகளிர் தலைவிகள் இன்று கூறியுள்ளனர். உலக அளவிலான பால் (Gender) இடைவெளி குறியீட்டில் மலேசியாவின் நிலை…