கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு 24 பிரம்படி தண்டனை விதித்துள்ளது பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு ஆயுள் தண்டனையும் 24 கசையடி தண்டனையும் விதிக்கப்பட்டது. அதேவேளை, அவரும் அவரது மனைவியான நோர்ஸ்யாஃபிகா நஸ்வா நூரிசானும் இணைந்து எதிர்கொண்ட இரண்டு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரது…
‘முதலில் சுடுங்கள்’ என்று ஜாஹிட் கூறியது ஏன் என்று அரசு…
பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன், தாம் போலீசாரின் சுடும் நடவடிக்கையில் கலந்துகொண்டாலும்கூட உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி ‘முதலில் சுடுங்கள்’ என்று கூறியதற்கு விளக்கம் தராமல் தப்பித்துக்கொள்ள முடியாது என்றார். போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார், போலீஸ் நடவடிக்கையை நேரில் காண வருமாறு டிவிட்டரில் …
அசிஸ் பாரி: அல்லாஹ் தீர்ப்பில் நீதிமன்றம் தவறு செய்துள்ளது
கிறிஸ்துவ வார இதழான த ஹெரால்ட் அதன் மலாய் மொழிப் பதிப்பில் கடவுளைக் குறிக்கும் "அல்லாஹ்" என்ற சொல்லை பயன்படுத்துவதைத் தடை செய்யும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானதாகும் என்று அரசமைப்புச் சட்ட நிபுணர் கூறுகிரார். "பெடரல் அரசமைப்புச் சட்டப் பிரிவு 3(1) ஐ சமய உரிமைகளுடன்…
அல்லாஹ் தீர்ப்பு: வழிக்கு வாருங்கள் அல்லது வழியைப் பாருங்கள்
கத்தோலிக்க வார வெளியீடான த ஹெரால்ட் அல்லா என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மலேசிய கிறிஸ்துவ சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லை என்றால், நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி எப்போது வேண்டுமானாலும் சிந்திக்கலாம் என்று இக்காதான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா)…
தமிழ்ப்பள்ளிக்கு பினாங்கு அரசு நிலம் கொடுக்கவில்லை
பினாங்கு இண்ட்ராப், தலைநிலத்தில் தமிழ்ப்பள்ளி ஒன்றுக்கு மாநில அரசு நிலம் கொடுக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளது. தமிழ்ப்பள்ளிக்கூடம் கட்ட நிலம் கொடுக்காத மாநில அரசு அதே பத்து கவான் தொகுதியில் ஹல் பல்கலைக்கழகத்துக்கு நிலம் கொடுத்துள்ளது என இண்ட்ராப் பினாங்கின் தலைவர் கே.கலைச்செல்வம் கூறினார். “தமிழ்ப் பள்ளி மாணவர் எண்ணிக்கை…
இப்ராகிம் அலி: ‘அல்லாஹ்’ தீர்ப்பு அரசமைப்பை அடிப்படையாகக் கொண்டது
முறையீட்டு நீதிமன்றம், கிறிஸ்துவ வார இதழான த ஹெரால்டில் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தத் தடை விதித்தானது அரசமைப்பு, சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் செய்யப்பட்ட ஒரு முடிவாகும் என பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறினார். இந்நாட்டில் மற்ற சமயத்தவர் தேவாலயங்கள், கோயில்கள் போன்றவற்றுக்குச் சென்று வழிபடுவதற்கோ அவர்களின்…
கத்தோலிக்க வார இதழில் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தத் தடை
கத்தோலிக்க வார இதழான த ஹெரால்ட்-இல், இறைவனைக் குறிப்பிட ‘அல்லாஹ்’ என்னும் சொல் பயன்படுத்தப்படுவதற்கான தடையை உறுதிப்படுத்தி புத்ரா ஜெயா முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்வழி, அச்சொல்லைப் பயன்படுத்தலாம் எனக் கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியிருந்த தீர்ப்பை அது தள்ளுபடி செய்தது. இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய த…
‘அரசமைப்பைக் காக்க முடியாதவர்கள் நீதிபதிகளாக இருக்கக்கூடாது’
கத்தோலிக்க வார இதழான த ஹெரால்ட்-இல், இறைவனைக் குறிப்பிட ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தப்படுத்தத் தடை விதித்த முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பைப் பலரும் குறைகூறியுள்ளனர். வழக்குரைஞரான ஷியாரெட்ஸான் ஜொஹான், அரசமைப்பைக் காப்பதாக எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மறந்த நீதிபதிகள் நீதிபதியாக இருக்கக்கூடாது என்றார். “நீதிபதிகள் அரசமைப்பைக் காக்க அவர்கள் உறுதிமொழி…
பினாங்கு சட்டமன்ற உறுப்பினர்களைக் கண்காணிக்க ஊடக உதவி நாடப்பட்டது
பினாங்கு சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் இனி கோமாளித்தனங்கள் செய்து தப்பித்துக்கொள்ள முடியாது. அவர்களின் செயல்களைச் செய்தியாளர் குழு ஒன்று அணுக்கமாகக் கண்காணித்து மதிப்பீடு செய்யும். சட்டமன்றத்தில் இருந்து உறுப்பினர்களின் நடத்தையைக் கவனித்து வருபவர்கள் என்பதால் உறுப்பினர்களைக் கண்காணித்து அவர்களின் அடைவுநிலையை மதிப்பீடு செய்ய செய்தியாளர்களின் உதவி நாடப்பட்டது எனச் சட்டமன்றத்…
அம்னோ இளைஞர் உதவித் தலைவர் தேர்தல் முடிவு, ஹஜ்ஜு பெருநாளுக்குப்…
அம்னோ இளைஞர் உதவித் தலைவர் தேர்தலில், முன்னணி வேட்பாளர்கள் இருவரும் சம எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்றிருப்பதால் வெற்றியாளர் யார் என்பது ஹஜ்ஜு பெருநாள் முடிந்துதான் அறிவிக்கப்படும். முன்னணி வேட்பாளர்களான ஜமாவி ஜாஃபாரும் கைருல் ஹருனும் 190 தொகுதிகளிலிருந்து ஆளுக்கு 73 தொகுதி வாக்குகளைப் பெற்றிருப்பதாக அம்னோ தேர்தல் குழுத்…
கேலி கூத்தாக்காதீர்: இந்திய குத்தகையாளர் அமைப்பு காட்டம்
கடந்த தேர்தலின் போது தமிழ்ப்பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு ரிம 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவற்றை கட்ட இந்திய குத்தகையாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 53 இந்திய குத்தககையாளர்கள் தங்களது டெண்டர்களை சமர்ப்பித்தனர். இவை சமர்பித்து 6 மாதங்கள் ஆகியும் இன்னமும் இழுப்பறியாகவே இருப்பதாகவும் மாறி ,மாறி…
கைரி: முற்போக்குச் சிந்தனைக்கே வெற்றி
அம்னோ இளைஞர் பதவியைத் தக்க வைத்துக்கொண்டுள்ள கைரி ஜமாலுடின், முற்போக்குச் சிந்தனைதான் தம் வெற்றிக்குக் காரணம் என்றார். அதிகாரப்பூர்வமற்ற கணக்கெடுப்பின்வழி அவர் அமோக வெற்றிபெற்றிருப்பது உறுதியாக தெரிந்தாலும், அது இச்செய்தி எழுதப்படும்வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. “சொல்லப்படுவதுபோல் மிகப் பெரிய வெற்றியாக இருக்குமானால், அது முற்போக்கான சிந்தனையை கொண்டு வருவதில்…
சுவா: கெராக்கான் மன்னிக்க வேண்டும் ஆனாலும், நான் சொல்வது உண்மையே
மசீச தலைவர் டாக்டர் சுவாஅ சொய் லெக், துணைத் தலைவர் லியோ தியோங் லாய் கட்சிக்குத் தலைவரானால் அது இன்னொரு கெராக்கானாக மாறும் எனக் கூறியதற்காக கெராக்கானிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ஆனாலும் தாம் சொல்லியது சரியே என்றவர் வாதாடுகிறார். “மசீச-வை அம்னோவுடன் அல்லது மஇகாவுடன் ஒப்பிடுவதற்கில்லை என்பதால் தன்னை…
பிரளயனின் வீதி நாடகம் – பவுன் குஞ்சு
"அன்பே சிவம்" படத்தில் ஒரு வீதி நாடகம் – மிகவும் பிரமாண்டமானது. அதை வடிவமைத்தவர் பிரளயன். தத்துவக் கூர்மையும், வர்க்கப்பிடிமானமும் கொண்ட இவர், பத்தாண்டு காலம் மார்க்சிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர், பத்திரிகையாளர், திரை இணை இயக்குநர் வரை எங்கெங்கோ அலைந்திருந்தாலும் அவரது ஜீவன் நாடகத்தில் துடித்துக் கொண்டிருக்கிறது.…
கல்விப் பெருந்திட்டம் தமிழ்க்கல்விக்கு ஆபத்தானது
மலேசியக் கல்விப் பெருந்திட்டம் தமிழ்ப் பள்ளிகளையும் தமிழ்க் கல்வியையும் வெகுவாக பாதிக்கும் என்பதால் நமது சமூகம் சீனர்களைப் போல் போராட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. நேற்று பெட்டாலிங் ஜெயாவில் சீனக் கல்விமான்களுடன் தமிழ் அறவாரியம் நடத்திய ஒரு கலந்துரையாடலின் விளைவாக அம்முடிவு எடுக்கப்பட்டதாக அதை ஒருங்கிணைத்த தமிழ்…
ஸ்டாரின் முதல்பக்கச் செய்தி கண்டு குமுறுகிறார் லியோ
‘அவர் பலவீனமானவர்’, ‘அவர் சட்டென்று முடிவெடுக்கத் தெரியாதவர்’, ‘அவர் ஒரு போராளி அல்லர்’-இப்படி இன்றைய ஸ்டார் நாளேட்டின் முதல் பக்கம் முழங்கியது. எல்லாம் மசீச துணைத் தலைவர் லியோ தியோங் லாய் பற்றித்தான். கட்சித் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்கை மேற்கோள்காட்டி அந்நாளேடு வெளியிட்டிருந்த இந்தப்‘புண்மொழி’களால் சீற்றமடைந்திருக்கிறார்…
எம்பி: கணக்கறிக்கை சொல்வது சரியாக இருந்தால், ரிம6.5 பில்லியன் விரயமாக்கப்பட்டுள்ளது
2012 கணக்கறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 64 செலவினங்களை ஆராய்ந்த செர்டாங் எம்பி ஒங் கியான் மிங் அரசாங்கம் ரிம6.5 பில்லியனை விரயமாக்கி இருக்கலாம் என மதிப்பிடுகிறார். விரயம் செய்யப்பட்ட இந்த ரிம6.5 பில்லியன், பெட்ரோல் உதவித் தொகையில் 20 சென் குறைக்கப்பட்டதால் மிச்சப்படும் தொகையைவிட இரண்டு மடங்கு அதிகமாகும் என்று…
அடுத்து ‘வேட்டை’க்குப் போகும்போது உடன் வருக: சுரேந்திரனுக்கு போலீஸ் அழைப்பு
கிண்டலா, கேலியா தெரியவில்லை. ஆனால், அடுத்த தடவை போலீஸ் குற்றவாளிகளுடன் துப்பாக்கிச் சூட்டுக்களைப் பரிமாறிக்கொள்ளும்போது அதைக் காண பிகேஆர் எம்பி என்.சுரேந்திரன் வர வேண்டும் என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் அழைத்திருக்கிறார். நேற்றிரவு, டிவிட்டரில் காலிட் இந்த அழைப்பை விடுத்திருந்தார். இதற்கு பிகேஆர் உதவித்…
டிபிபிஏ எதிர்ப்பாளர்களுக்கு மழை தடை அன்று
கோலாலும்பூர் மாநாட்டு மையத்துக்கு வெளியில் ட்ரேன்ஸ்-பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், மழை பெய்தபோதும் மழையில் நனைந்துகொண்டே தங்கள் எதிர்ப்பைப் பாடல் மூலமாக வெளிப்படுத்தினார்கள். அந்த ஆர்ப்பாட்டம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரும்போது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்,ஒபாமா வரவில்லை என்பதால் அவரின் பிரதிநிதியாக அமெரிக்க…
சொய் லெக்: லியோ பதவி விலகினால் நானும் விலகுவேன்
மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் பதவி விலக ஆயத்தமாக உள்ளார். ஆனால், துணைத் தலைவர் லியோ தியோங் லாயும் பதவி விலக வேண்டும் என்கிறார். “நான் போகத் தயார். ஆனால், கூடவே லியோவும் பதவி விலக வேண்டும்”. இன்று பிற்பகல் கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது சுவா…
‘உருட்டல், மிரட்டல் வேலை’ வேண்டாம்: முக்ரிசுக்குக் கெராக்கான் பதிலடி
தன்மீது குறைகூறிய கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிருக்குப் பதிலடி கொடுத்துள்ள கெராக்கான், “உருட்டல், மிரட்டல்களையும்” “பழிவாங்கும் அரசியலையும்” சகித்துக்கொண்டிருக்க முடியாது என்று அறிவித்துள்ளது. கெராக்கான் தலைமைச் செயலாளர் மா சியு கியோங், நேற்று கெராக்கான் கட்சி குறித்து எதிர்மறையான கருத்து தெரிவித்த பொதுக் கணக்குக் குழு(பிஏசி)த் தலைவர்…
மூன்று நாள்களில் 10 கொள்ளையர் சுட்டுக்கொலை
கடந்த மூன்று நாள்களில் போலீசுடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் கொள்ளையர்கள் என்று சந்தேகிக்கப்படும் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆகக் கடைசி சம்பவத்தில், இரண்டு வீடுகளில் கொள்ளையடித்து தப்பியோடிய நான்கு இந்தோனேசியர்களை கோலாலும்பூரில் அம்பாங் ஹிலிர்வரை விரட்டிச் சென்ற போலீசார், அங்கு கொள்ளையருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில்…
‘பிரதமராகும் வாய்ப்புள்ளவரை’க் குறைசொல்ல தயங்குவோரைச் சாடுகிறார் ஜைட்
அஹ்மட் ஜாஹிட் ஹமிடியைப் பிரதமராகும் வாய்ப்புள்ளவர் என வருணித்த முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிம், அவரின் பேச்சில் குறை கண்டால்கூட அதைச் சுட்டிக்காட்ட அஞ்சி வாயைப் பொத்திக் கொண்டிருப்போரைச் சாடினார். “உதய நட்சத்திரத்தைப் பகைத்துக்கொள்ள எவருக்கும் துணிச்சலில்லை. நாடு போலீஸ் ராஜ்யமாக மாறும் அபாயத்தை நெருங்கிக் கொண்டிருப்பது…
‘ஐஜிபி-இன் கூற்றுக்கு நேர்மாறாக பேசும் ஜாஹிட், பினாங்கில் ஐவர் சுட்டுக்…
‘பொய்களையும் முரண்பாடான கருத்துக்களையும் சொல்லிச் சொல்லிப் பழக்கப்பட்ட அதிகாரிகள் இப்போது அவர்கள் பின்னிய வலையில் அவர்களே சிக்கிக்கொண்டு விழிக்கிறார்கள் என்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன். நேற்றிரவு தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, பினாங்கில் போலீசார் ஐவரை முன்னெச்சரிக்கை விடுக்காமல் சுட்டுத்தள்ளினார்கள்…


