அரசியல் பொருளாதார நிபுணர் எட்மண்ட் டெரன்ஸ் கோமஸ்(Edmund Terence Gomez), துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி(Ahmad Zahid Hamidi) மற்றும் சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஜாஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ்(Tengku Zafrul Tengku Abdul Aziz) ஆகியோர் பண்டோரா ஆவணங்கள் தொடர்பாக விசாரணைக்கு…
தாஜுடின் விவகாரம்: நஸ்ரி யோசனை மீது ஜிஎல்சி-க்கள் மௌனம்
முன்னாள் எம்ஏஎஸ் தலைவர் தாஜுடின் ராம்லிக்கு எதிரான வழக்கு- வழக்கு நிர்வாகத்துக்காக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்னும் இரண்டு வாரங்களில் சமர்பிக்க வேண்டும். ஆனால் தங்களைப் பிரதிநிதிப்பதற்கு ஜிஎல்சி-க்கள் என்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் சர்ர்சைக்குரிய அம்னோ நிறுவனத்தை நியமிக்க வேண்டும் என அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ்…
மக்கள் வென்றனர் ஆனால் அழுத்தம் தொடர வேண்டும்
"வாக்குப் பெட்டிகளில் தோல்வி காணக்கூடிய சாத்தியம் ஏற்பட்டால் மட்டுமே நஜிப் நகர்கிறார். அதுதான் இங்கு நடக்கிறது." இசா ரத்துச் செய்யப்படுவதாக நஜிப் அறிவிக்கிறார் கிட் பி: நான் பிஎன் அரசாங்கத்தை ஆதரிக்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. குடிமக்களை தனது விருப்பம் போல்…
இசா சட்டம் ரத்துச் செய்யப்படும் என நஜிப் அறிவித்தார்
இசா என்ற உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் ரத்துச் செய்யப்படும் எனப் பிரதமர் இன்றிரவு அறிவித்தார். அத்துடன் ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்கான முயற்சிகள் எனக் குறை கூறப்பட்டுள்ள பல சட்டங்கள் திருத்தப்படும் என்றும் அவர் கூறினார். நாளை மலேசியா தினத்தை ஒட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட உரையில் அவர் அந்த விவரங்களை வெளியிட்டார்.…
சிலாங்கூர் பிஎன் தேர்தல் வியூகங்களை வகுக்கக் கூடுகிறது
சிலாங்கூர் பிஎன் தனது தேர்தல் எந்திரத்தை வரும் சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக முடுக்கி விடுகிறது. அதனை ஒட்டி பக்காத்தான் ராக்யாட்டிடமிருந்து மாநிலத்தைக் கைப்பற்றுவதற்கான வியூகங்களை விவாதிக்க அன்றைய தினம் மாநாடு ஒன்று நடத்தப்படும். சிலாங்கூர் மாநிலத்தைத் தேர்தலுக்கு ஆயத்த நிலையில் வைப்பது அதன் நோக்கம் என்று ஷா அலாமில் உள்ள…
2ஜி ஸ்பெக்ட்ரம் : அஸ்ட்ரோவின் ரேல்ப் மார்செல் விசாரிக்கப்பட்டார்
கடந்த திங்கள்கிழமை மேக்சிஸ் பெர்ஹாட்டின் உயர்மட்ட அதிகாரியை இந்தியாவின் சிபிஐ தொலைபேசித்துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரித்தது. சன் டிவியில் முதலீடு செய்துள்ள அஸ்ட்ரோவின் தலைமை செயல்முறை அதிகாரியும் மேக்சிஸ் வாரியத்தின் உறுப்பினருமான ரேல்ப் மார்ஷல் …
பாஸ் இளைஞர் பிரிவு “போலி மை கார்டுகளை” கொண்ட வாக்காளர்களை…
"போலி மை கார்டுகளுடன்" வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் பத்து வாக்காளர்களின் பெயர்களை அன்றாடம் பாஸ் இளைஞர் பிரிவு வெளியிடும். தேர்தல் முறையில் காணப்படுகின்ற பல்வேறு குளறுபடிகளை ஆராய்வதற்கு அரச விசாரணை ஆணையத்தை அமைக்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பது அதன் நோக்கமாகும். அத்தகைய "போலி மை கார்டுகளை" வைத்திருந்த…
முன்னாள் போலீஸ் அதிகாரி: கம்யூனிஸ்ட் “கீழறுப்பு சக்திகள்” பல்கலைக்கழகங்களில் உள்ளன
கம்யூனிஸ்ட் இயக்கம் மலேசியாவில் பெரும்பாலும் நமது உயர் கல்விக் கூடங்களில் இன்னும் உயிருடன் இருப்பதாக முன்னாள் போலீஸ் சிறப்புப் பிரிவு தேசிய இயக்குநர் சுல்கிப்லி அப்துல் ரஹ்மான் கூறுகிறார். "கம்யூனிஸ்ட் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் இன்னும் மறையவில்லை. அது நமது கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும்…
சீரமைப்புகள்: நஜிப் பக்காத்தானைப் பின்பற்ற வேண்டும்
இன்றிரவு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பல்வேறு சீரமைப்புகளை அறிவிப்பார் என்று சொல்லப்படுகின்ற வேளையில் அவர் சீரமைப்பில் உண்மையிலேயே அக்கறை கொண்டவராக இருந்தால் தங்களை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று பக்காத்தான் எம்பிகள் கூறுகின்றனர். “மலேசிய மக்களுக்குப் பயனான மாற்றங்களைச் செய்ய பிரதமர் விரும்பினால் அவர் எங்கள் பரிந்துரைகளைப்…
ஜயிஸ்: அரசியல்வாதி பேச்சுகளுக்கு இனி அனுமதி இல்லை
சிலாங்கூரில் உள்ள 2081 தொழுகை இல்லங்களிலும் 380 பள்ளிவாசல்களிலும் அரசியல்வாதிகள் ‘செராமா’(உரை) நிகழ்த்துவதற்கு இனி அனுமதி வழங்கப்பட மாட்டாது என சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை(ஜயிஸ்) இயக்குனர் மர்சுகி உசேன் இன்று கூறினார். “முன்பு அனுமதி பெற்றவர்கள் அந்த அனுமதி காலவதியான பின்னர் அதைப் புதுப்பிக்க முடியாது. இனி,…
பாக் சாமாட்: துங்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டவர் மட்டுமே
"சுதந்திரத் தந்தை" எனச் சொல்லப்படுகிற துங்கு அப்துல் ரஹ்மான், சுதந்திரத்தை பெற்றுக் கொண்டவர் மட்டுமே என தேசிய இலக்கியவாதியான ஏ சாமாட் சையட் கூறுகிறார். மலாயாவில் உள்ள தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்கள் துங்குவைத் தேர்வு செய்தனர் என்றார் அவர். "என்னைப் பொறுத்த வரையில்…
15 வயதினனைக் கொன்ற போலீஸ்காரருக்கு 5 ஆண்டுகள் சிறை
2010 ஏப்ரல் 26-இல், பதின்ம வயது அமினுல்ரஷிட் அம்சா, காரில் துரத்திச் செல்லப்பட்டு முடிவில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது இறப்புக்கு போலீஸ் கார்ப்பரல் ஜெனாய்ன் சுபிதான் காரணம் என்று ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. குற்றவியல் சட்டத்தின் பகுதி 304(அ)-இன்கீழ், அவர் ஒருவரின் மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கிறார்…
இந்து சங்கம் மதமாற்ற விவகாரத்தை பிரதமரிடம் கொண்டுசெல்லும்
மலேசிய இந்து சங்கம், பெர்லிஸ் மாநிலத்தில் ஓர் இந்திய மாணவி மதம் மாறியதில் அக்கல்லூரியின் பணியாளர்களும் மாநில இஸ்லாமிய விவகாரத் துறை (ஜயிப்) அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்று கூறப்படுவதைக் கண்டித்துள்ளது. இந்து சங்கத் தலைவர் ஆர்.எஸ். மோகன் ஷண், நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில், மாணவர்களின் “அறிவாற்றலையும் திறன்களையும் மேம்படுத்துவதில் ஈடுபட…
தேர்தல் ஆணையம் படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களுடன் “கண்ணாம்பூச்சி” ஆட்டம் ஆடுகிறது
"நம்பிக்கையான தவறு ஏதும் நிகழ முடியாத முறை எதுவும் இல்லையா ? ஐயங்களைப் போக்குவதற்கு அரச விசாரணை ஆணையம் தேவைப்படலாம்." காணாமல் போன "படியாக்க" வாக்காளர்கள் பாஸ் கட்சியை குழப்புகிறது வெற்று வேட்டு: குளறுபடிகள் பற்றிய தகவல்களும் அதனை பின்னர் தேர்தல் ஆணையமும் தேசியப்…
அழிக்க முடியாத மையை “அழிக்க முடியும்” என்பதை தேர்தல் பார்வையாளர்கள்…
ஒருவர் பல முறை வாக்களிப்பதைத் தடுப்பதற்கு பயன்படுத்தப்படும் அழிக்க முடியாத மையை 'அழுக்கு நீக்கி' களைக் கொண்டு எளிதாக அழித்து விட முடியும் என்று கூறப்படுவதை, பல நாடுகளில் தேர்தல் பார்வையாளர்களாக பணி புரிந்துள்ளவர்கள் நம்பவில்லை. என்றாலும் ஆப்கானிஸ்தானில் 2009ம் ஆண்டு அதிபர் தேர்தலைக் கண்காணித்த ஒங் பிகே,…
அம்னோவிடம் மன்னிப்பு கேட்க மறுத்தார் குவான் எங்
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், கடந்த மாதம் மாநில டிஏபி தலைமையகத்தை தீவைத்துக் கொளுத்த முயன்றது அம்னோதான் என்று சந்தேகிப்பதாகக் கூறி அதன் பெயருக்குக் களங்கம் உண்டுபண்ணியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதை நிராகரித்தார். அது மட்டுமல்லாமல், ஜூலையில் கொம்டாரிலும் பினாங்கு பாலத்திலும் வன்செயல்மிக்க ஆர்ப்பாட்டங்களுக்கு…
மாட் சாபு, கம்யூனிஸ்ட் தகவல்கள் தொடர்பில் உத்துசான் மீது வழக்குத்…
பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, தாம் கம்யூனிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களை பாராட்டியதாக தகவல் வெளியிட்டதின் மூலம் தமக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியதாக கூறி அம்னோவுக்கு சொந்தமான மலாய் நாளேடான உத்துசான் மலேசியா மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இன்று காலை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு சமர்பிக்கப்பட்டது. அதில்…
தொகுதி ஒதுக்கீடு:சர்ச்சையை நிறுத்த டிஏபி அறைகூவல்
பிகேஆரைப் போலவே டிஏபியும், பக்காத்தான் ரக்யாட்டின் தொகுதி ஒதுக்கீட்டு விவகாரம் தொடர்பில் கருத்துவேறுபாடுகளைப் பொதுவில் தெரிவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தன் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டிருகிறது. ஜூலை 19-இல், பக்காத்தான் தலைவர்கள் செய்த முடிவை கட்சியில் அனைவரும் மதிக்க வேண்டும் என்று டிஏபி உதவித் தலைவர் டான் கொக் வாய்…
வழக்கை தாம் ஜோடித்ததாகக் கூறப்படுவதை மூசா மறுக்கிறார்
1999ம் ஆண்டு அன்வார் இப்ராஹிம் தண்டிக்கப்பட்ட அதிகார அத்துமீறல் வழக்கில் தாமும் சட்டத் துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லும் சாட்சியங்களை ஜோடித்ததாக முன்னாள் கோலாலம்பூர் சிஐடி தலைவர் மாட் ஜெய்ன் இப்ராஹிம் கூறியுள்ள குற்றச்சாட்டை முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் மறுத்துள்ளார். அந்தக்…
பாஸ்: 10,000 “போலி வாக்காளர்கள்” பட்டியலிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்
'போலி மை கார்டுகளை" வைத்திருந்த 10,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள், கடந்த இரண்டு மாதங்களில் வாக்காளர் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். அந்தத் தகவலை ஜோகூர் பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் சுஹாய்சான் காயாட் இன்று வெளியிட்டார். அவர் அண்மைய காலமாக வாக்காளர் பட்டியலில் காணப்படுகின்ற குளறுபடிகளை பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்.…
ஜயிஸ் அதிரடிச் சோதனை தொடர்பில் பாஸ் மீது அம்னோ வழக்கு
கடந்த மாதம் ஒரு தேவாலயத்தில் மாநில இஸ்லாமிய விவகாரத் துறை மேற்கொண்ட சர்ச்சைக்குரிய அதிரடிச் சோதனையில் அம்னோவுக்கு சம்பந்தமுண்டு என்று கூறியதற்காக பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி மீதும் மேலும் ஐவர்மீதும் சிலாங்கூர் அம்னோ சிவில் வழக்கு ஒன்றை இன்று பதிவு செய்தது. தங்களின் நற்பெயரைக் கெடுக்கும்…
“நஜிப் சரிப்பட்டு வரமாட்டார் என நினைக்கிறார் மகாதிர்”
டாக்டர் மகாதிர் முகம்மட், அப்துல்லா அஹமட் படாவிக்குச் செய்ததுபோலவே பதவியிலிருந்து இறங்குமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் அழுத்தம் கொடுத்து வருகிறார் என்று பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார் கூறுகிறார். பிஎன் வேட்பாளர்களை முறையாக ஆய்வு செய்ய அடுத்த பொதுத்தேர்தலைத் தாமதப்படுத்துமாறு மகாதிர் நஜிப்புக்கு ஆலோசனை கூறியிருப்பதாக…
“டெல்கோ, வரியை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவதை அரசாங்கம் தடுக்க முடியாது”
முன் கட்டணம் செலுத்தப்பட்ட கைத் தொலைபேசி சேவைகளுக்கான ஆறு விழுக்காடு வரியை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வசூலிப்பதை நிறுத்துவதற்கு அரசாங்கத்துக்கு அதிகாரம் இல்லை. இவ்வாறு மலேசிய வரி விதிப்பு ஆய்வுக் கழகத்தின் ( Chartered Taxation Institute Malaysia ) தலைவர் எஸ்எம் தண்ணீர்மலை கூறுகிறார். 1998ம் ஆண்டு…
பக்காத்தான் உட்பூசல் வாக்காளர்களை அதன் மீது வெறுப்படைச் செய்யும்
"நீங்கள் உங்களுக்கு இடையில் சண்டையிட்டுக் கொண்டால் அரசாங்கத்தை அமைப்பதற்கு உங்கள் மீது வாக்காளர்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?" பிகேஆர் டிஏபி-யிடம் சொல்கிறது: சண்டையில் வெற்றி பெறவில்லை. ஆனால் சண்டையில் தோற்கிறோம் இண்டோன் பிளாண்டர்: பிகேஆர் இளைஞர் பிரிவு உதவித் தலைவர் சான் மிங் காய்…