செராமாக்களில் தொல்லை கொடுப்போர்மீது போலீஸ் நடவடிக்கை

அரசியல் கூட்டங்களில் தொல்லை கொடுப்போர்மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்று கூறும் தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார், 13வது பொதுத் தேர்தல் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவது உறுதி செய்யப்படும் என்கிறார். “சட்டப்படி நடந்துகொள்வோம். சிறிய கும்பலோ, பெரிய குழுவோ, தனிப்பட்டவர்களோ சட்டத்தை மீறுவோர்மீது நடவடிக்கை எடுப்போம்”,…

என்ஜிஓ-வின் மதிப்பீட்டில் பினாங்கு அரசுக்கு 10-க்கு 4 புள்ளிகள்தான்

பினாங்கு அரசு, மக்கள் நலனைவிட முதலீட்டாளர்களின் நலன்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறது என்றும் பொதுமக்களுடனும் என்ஜிஓ-க்களுடனும் போதுமான அளவுக்குக் ஆலோசனை கலப்பதில்லை என்றும் குறைகூறப்பட்டுள்ளது. நிலையான மேம்பாட்டுப் பணிகள் தொடர்பில் அரசு நிர்வாகம், தனியார்துறை,பொதுமக்களிடையே ஆலோசனை கலக்க லோகல் அஜெண்டா 21(Local Agenda 21) திட்டத்தில் மாநில அரசுகள் உறுதிகூறியுள்ளபடி,…

பிஎஸ்சி, லினாஸுக்காக காலத்தைக் கடத்தும் தந்திரம் என்கிறார் பூஸியா

700 மில்லியன் ரிங்கிட் செலவில் குவாந்தான் கெபெங்கில் அமைக்கப்படும் அரிய மண் தொழில் கூடத்தின் பாதுகாப்பு மீது அமைக்கப்பட்டுள்ள பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு, அடுத்த பொதுத் தேர்தல் வரையில் அந்தத் தொழில் கூடம் பற்றிய குறைகூறல்களைச் சாந்தப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதாகும் என குவாந்தான் எம்பி பூஸியா…

நல்லா அன்வாரிடம் சொல்கிறார்: நீதிமன்றத்தில் சந்திப்போம்

அன்வாருக்கு எதிராக தாம் கூறிய கருத்துக்களை மீட்டுக் கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் என அந்த எதிர்த்தரப்புத் தலைவர் கோரியிருப்பதை தான் புறக்கணிக்கப் போவதாக அன்வாருடைய அணுக்கமான முன்னாள் நண்பரான செனட்டர் எஸ் நல்லகருப்பன் கூறுகிறார். அன்வாரை தாம் நீதி மன்றத்தில் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் மலேசிய இந்தியர்…

பழனிவேல் அடுத்த மாதம் நாடு முழுவதும் வாக்காளர்களைச் சந்திப்பார்

மஇகா ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் வாக்காளர்களை சந்திக்கும் இயக்கத்தைத் தொடங்கும். இவ்வாறு அதன் தலைவர் ஜி பழனிவேல் கூறுகிறார். "எங்கள் எந்திரம் அதற்கு ஏற்கனவே தயாராகி விட்டது. தனது சொந்தக் கட்சி வாக்காளர்களை சந்திப்பது அதன்  முதல் நடவடிக்கையாக இருக்கும். முதலில் சிலாங்கூர், பேராக்கிலும் அடுத்து கெடாவிலும்…

நஸ்ரி புதல்வர் விவகாரம்: போலீஸ் பாகுபாடு காட்டாமல் விசாரணை நடத்த…

பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸின் புதல்வர், அவரது மெய்க்க்காவலர் ஆகியோருக்கும் பாதுகாவலர் மேற்பார்வையாளர் ஒருவருக்கும் இடையில் இந்த வாரத் தொடக்கத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் கைகலப்பு குறித்து போலீசார் பாகுபாடு காட்டாமல் சுயேச்சையான விசாரணையை நடத்த வேண்டும் என பிகேஆர் கேட்டுக் கொண்டுள்ளது. அந்தக் கட்சியின் உதவித்…

‘போலீஸ் ஊழல்’ ( Copgate ) தொடர்பில் ஏஜி இடை…

'போலீஸ் ஊழல்' ( Copgate ) என்று அழைக்கப்படும் விவகாரத்தில் ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் விஷயங்கள் வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவரை இடை நீக்கம் செய்யுமாறு எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் அரசாங்கத்தை நெருக்கத் தொடங்கியுள்ளனர். உண்மையில் அப்துல் கனி, முன்னாள் தேசியப் போலீஸ்…