கர்பால்-ராமசாமி தகராறு இன்னும் ஓயவில்லை

டிஏபி துணைத் தலைமைச் செயலாளர் பி ராமசாமி கட்சிக் கட்டுகோப்பை மீறினார் என்ற குற்றச்சாட்டிலிருந்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விடுவித்ததை டிஏபி தலைவர் கர்பால் சிங் நிராகரித்துள்ளார். ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் ராமசாமியும் இடம் பெற்றுள்ளதால் அவரை விசாரிப்பதற்கு அந்தக் குழுவுக்குத் தகுதி இல்லை எனப் பினாங்கில்…

பிரதமர் இந்தியர்களிடம் சொல்கிறார்: “என்னுடன் நடந்து வாருங்கள்”

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தமது நிர்வாகம் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்பதை மெய்பித்திருப்பதால் தம்முடன் இணைந்து நடந்து வருமாறு இந்திய சமூகத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அரசாங்கம் 2009ம் ஆண்டு தொடக்கம் தமிழ்ப் பள்ளிக்கூடங்களை மேம்படுத்துவதற்கு 440 மில்லியன் ரிங்கிட்டை செலவு செய்துள்ளதாக கூறிய அவர், அந்த சமூகம்…

போலீஸ் படையில் கௌரவமான போலீஸ்காரர்களும் இருக்கின்றனர்

"தூய்மையான மக்கள் துணிச்சலுடன் வெளியில் வந்து உண்மைகளை வெளிப்படுத்தினால் நம் நாட்டிலிருந்து ஊழலும் அதிகார அத்துமீறலும் ஒழிந்து விடும்." பஞ்சாயத்து மன்றத்தின் முன்பு சாட்சியமளிக்க சேவையில் உள்ள போலீஸ் அதிகாரிகள் முன் வருகின்றனர். நடுவணம்: ஏதோ ஒன்று கோளாறாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அழுத்தம் அதிகரிப்பது தெளிவாகத் தெரிகிறது.…

இண்ட்ராப் இனவாத-எதிர்ப்பு மகஜரை ஐநாவிடம் வழங்கும்

மார்ச் 21-இல், ஐநா தலைமைச் செயலாளர் பான் கி மூன் மலேசியா வரும்போது பாகுபாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மகஜர் ஒன்றை இண்ட்ராப் அவரிடம் வழங்கும். கூட்டரசு அரசமைப்பின் 153வது பகுதியில் காணப்படும்  “இனவாதக் கூறுகளை”க் கவனப்படுத்தும் நோக்கில் அவ்வாறு செய்யப்படும் என்று இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி இன்று ஓர்…

ஜைட் கோத்தா பாருவில் போட்டியிடுவது உறுதி

பார்டி கெசெஜாத்ராஆன் இன்சான் நெகாரா(கித்தா) தலைவர் ஜைட் இப்ராகிம், 13-வது பொதுத் தேர்தலில் கோத்தா பாரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப்போவதை உறுதிப்படுத்தியுள்ளார். வாக்குகளைப் பிரிப்பதற்காக போட்டியிடவில்லை என்றும் தகுதி இருப்பதால் போட்டியிடுவதாகவும் ஜைட் வலியுறுத்தினார். “என் அரசியல் போராட்டத்தைச் சரியாக புரிந்துகொள்ளாததால் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். தகுதி இருப்பதாலும் வாய்ப்பு…

பொதுத் தேர்தல் எப்போது? ஆருடங்கள் வலுக்கின்றன

இப்போது மலேசியர்கள் எங்கு கூடினாலும் அங்கு13வது பொதுத் தேர்தல் தேதி பற்றி விவாதிப்பது வழக்கமாகி விட்டது. பொதுத் தேர்தலுக்கான தேதியை முடிவு செய்யும் உரிமை பிரதமருக்கு மட்டுமே உண்டு.அதை முடிவு செய்ததும் அவர் நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு பேரரசருக்கு ஆலோசனை கூறுவார்.நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் தேர்தல் ஆணையம்(இசி) வேட்புமனு தாக்கல் செய்யும்…

பாஸ் யூதர்களுடன் ஒத்துழைக்கும், யூத நாட்டின் ஆதரவாளர்களுடன் ஒத்துழைக்காது

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், யூதர்களுடன் ஒத்துழைப்பதை, அதுவும் குறிப்பாக வணிகத்தில், கட்சி அனுமதிக்கிறது என்றும் ஆனால்  யூத நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் இயக்கமான சயோனிசத்தை அது நிராகரிக்கிறது என்றும் கூறியுள்ளார். யூதர்களுடன் ஒத்துழைக்க இடமளிக்கப்படுகிறது ஏனென்றால் முஸ்லிம்-அல்லாதாருடன் வணிகம் செய்வது எப்போதுமே அனுமதிக்கப்பட்டு வந்திருக்கிறது  என்றாரவர்.…

‘எம்ஏஎஸ் குறித்த நஜிப் முடிவுகள் அவருடைய சீர்திருத்தங்கள் மீது ஐயத்தை…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்,எம்ஏஎஸ்-ஸும் ஏர் ஏசியாவும் பங்குகளைப் பரிவர்த்தனை செய்து கொள்வதற்கு உணர்வுகளுக்கு அடிமையாகி உடனடியாக எடுத்த முடிவும் அது இப்போது நேர்மாற்றம் காணும் எனத் தோன்றுவதும் உருப்படியான சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு அவருக்கு உள்ள ஆற்றல் மீது நம்பிக்கையைத் தரவில்லை என டிஏபி கூறுகிறது. கடந்த…