சுங்கத் துறை ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குத் தயாராகிறது

ஜிஎஸ்டி என அழைக்கப்படும் பொருள், சேவை வரியை அமலாக்குவதற்கு அரசாங்கம் விரும்பினால் அதனைச் செய்வதற்கு அரச மலேசிய சுங்கத் துறை தயாராக இருக்கிறது. அந்தத் தகவலை அதன் தலைமை இயக்குநர் கசாலி அகமட் இன்று தாவாவ்-வில் வெளியிட்டார். ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை உருவாக்கும் பொறுப்பு சுங்கத் துறைக்கு…

கேஎல் கெராக்கான் பல்சிகிச்சை சட்ட முன்வரைவில் மாற்றங்களை விரும்புகிறது

கோலாலம்பூர் கெராக்கான் தொகுதி விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள 2012 பல்சிகிச்சை சட்ட Read More

போலீஸ், சங்கப் பதிவதிகாரி அலுவலக அதிகாரிகள் சுவாராம் அலுவலகத்தில் ‘சோதனை”

போலீஸ் படையையும் சங்கப் பதிவதிகாரி அலுவலகத்தையும் சேர்ந்த ஆறு அதிகாரிகள் இன்று முற்பகல் மணி 11.40 வாக்கில் மனித உரிமைகள் போராடும் அரசு சாரா அமைப்பான சுவாரமின் அலுவகத்திற்கு வந்தனர். அவர்கள் அந்த அலுவலகத்தை 'சோதனை' செய்யும் நோக்கத்துடன் வந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. "சோதனைக்காக போலீஸ், சங்கப்பதிவதிகாரி அலுவலக அதிகாரிகள்…

நஜிப்பின் பெக்கான் கூட்டப் படம் ஜோடிக்கப்பட்டுள்ளது என இணைய மக்கள்…

பிரதமர் துன் அப்துல் ரசாக் கலந்து கொண்ட பெக்கான் கூட்டத்திற்கு பெரும் திரளாக மக்கள்  வந்திருந்தனர் என்ற தோற்றத்தை அளிப்பதற்காக நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸில் வெளியான படம் ஒன்று ஜோடிக்கப்பட்டுள்ளதாக இணைய மக்கள் கருதுகின்றனர். திருத்தப்பட்டதாகக் கூறப்படும் அந்தப் படத்தில் பின்னணியில் கூட்டத்தில் ஒரு பகுதியினர் இரண்டு முறை…

ஏஜி: திருத்தப்பட்ட ஆதாரச் சட்டத்தில் வலுவான சாட்சியங்கள் தேவை

1950ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட ஆதாரச் சட்டம் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் முன்னர் அரசு தரப்பு விரிவான புலனாய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதாக சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் கூறுகிறார். வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் ஒரு நபருடைய பெயர் இணைக்கப்பட்டுள்ளதால் அவர் மீது எளிதாகக் குற்றம் சாட்டி விட…

ஹிண்ட்ராப் தலைவர் நாட்டை விட்டு புறப்படுவதிலிருந்து தடுக்கப்பட்டார்

ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை நடவடிக்கைக் குழுத் தலைவர் பி வேதமூர்த்தி நாட்டை விட்டு புறப்படுவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளார். அவர் தேசிய மருட்டலாக இருப்பது அந்தத் தடைக்குக் காரணம் எனக் கூறப்பட்டது. "குடி நுழைவுத் துறை தலைமை இயக்குநரும் தேசியப் போலீஸ் படைத் தலைவரும் என் மீது கட்டுப்பாடு விதித்துள்ளதாக என்னிடம்…

லினாஸின் இக்கட்டான சூழ்நிலையை ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் கேலி செய்கிறார்

லினாஸ் தொழில் நிறுவனம் தனது அரிய மண் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெறப்படும் கழிவுப் பொருட்கள் மீது இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டிருப்பதாக மேற்கு ஆஸ்திரேலிய மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேலியாகக் குறிப்பிட்டுள்ளார். லினாஸ் "அந்தக் குழந்தையை தானே வைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு" தள்ளப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது என…

பினாங்கு, பிஎன் நில விற்பனைகள் மீது வெள்ளை அறிக்கையை வெளியிடும்

பினாங்கு மாநில அரசாங்கம் முன்னாள் பாரிசான் நேசனல் நிர்வாகம் நிலத்தை மலிவாக விற்றதாக கூறப்படுவது தொடர்பில் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட முடிவு செய்துள்ளது. நடப்பு அரசாங்கம் அரசு நிலத்தை விற்பதாகவும் அந்தப் பரிவர்த்தனைகளில் சுய நலன்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் பிஎன் திரும்பத் திரும்ப குற்றம் சாட்டுவதை முறியடிக்க பக்காத்தான்…

பெர்சே ஆதரவாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன

சட்ட விரோதமாகக் கூடியதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவருடைய ஆணையை மீறியதாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து 21 பேரை பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம் இன்று விடுவித்து விடுதலை செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு இருப்பதை அரசு தரப்பு நிரூபிக்கத் தவறி விட்டதாக அது தீர்ப்பளித்தது. 2008ம் ஆண்டு பெர்சே-க்கு…

கட்சித்தாவலை பிஎன் சாதாரணமாகக் கருதக்கூடாது

சாபா பாரிசான் நேசனலில் அடுத்தடுத்து நிகழ்ந்த கட்சித்தாவல்கள் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும் “அதைச் சாதாரணமாகக் கருதக்கூடாது”என்று அம்னோ உதவித் தலைவர் முகம்மட் ஷாபி அப்டால் கூறியுள்ளார். “அதுவும் அரசியலில் ஒரு பகுதிதான்.எனவே அதைக் கடுமையான விவகாரமாகவே கருத வேண்டும் என்று நினைக்கிறேன்”, என்றாரவர். அதனால்…

‘பண அரசியலில்’ ஈடுபடுவதாகச் சொல்லக்கேட்டு அதிர்ச்சியடைந்தார் மசீசவின் ஹெங்

மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், கட்சியின் “பெண் துணை அமைச்சர் ஒருவர்” கோப்பெங் வேட்பாளராக நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக பண அரசியலில் ஈடுபட்டிருக்கிறார் என்று கூறியிருப்பதைக் கேட்டு அதிர்ச்சி அடைவதாக அக்கட்சியின் மகளிர் உதவித் தலைவர்  ஹெங் சியய் கை கூறினார். ஹெங்தான் மசீசவின்…

இசி: படத்தை மிதிப்பது வெறுக்கத்தக்கது, அரசமைப்புக்கு முரணானது

ஆகஸ்ட் 30ம் தேதி Janji Demokrasi பேரணியின் போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் படம் மிதிக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் கடுமையாகச் சாடியுள்ளது. அந்தச் செயல் வெறுக்கத்தக்கது, அரசமைப்புக்கு முரணானது, ஜனநாயகத்துக்குப் புறம்பானது என அதன் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் வருணித்தார். பிரதமரை அவமதிப்பது…

ஸ்கார்ப்பின் விவகாரத்தை சுவாராம் தொடர்ந்து அம்பலப்படுத்தும்

சுவாராம்  ஒடுக்கப்பட்டாலும் ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிகளை மலேசிய அரசாங்கம் கொள்முதல் செய்ததில் கையூட்டுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது மீதான பிரஞ்சு விசாரணை தொடரும் என அந்த மனித உரிமை போராட்ட அமைப்பு இன்று அறிவித்துள்ளது. "அரசாங்கம் எங்கள் மீது குற்றம் சாட்ட முடிவு செய்தாலும் அல்லது எங்களுக்கு வேறு எதுவும் செய்தாலும்…

சுவாராம்மீது வழக்கு:சிசிஎம் இன்று ஏஜியைச் சந்திக்கிறது

சுவாராமின் வாகனமாக செயல்படும் சுவாரா இனிஷியேடிப் சென்.பெர்ஹாட்மீது வழக்கு தொடுக்குமாறு மலேசிய நிறுவனங்களின் ஆணையம்(சிசிஎம்) சட்டத்துதுறைத் தலைவரிடம் பரிந்துரைக்கும்.  இன்று கோலாலம்பூரில் சிசிஎம் தலைமையகக் கட்டிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உள்நாட்டு வாணிக, கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப், இன்று மாலை மணி 4-க்குச்…

அமைச்சர்: சுவாராம் மீது இந்த வாரம் குற்றம் சாட்டப்படும்

சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் அனுமதி கொடுத்ததும் இந்த வாரம் நீதிமன்றத்தில் மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என உள்நாட்டு வாணிக, கூட்டுறவு பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் அறிவித்துள்ளார். மேல் நடவடிக்கைக்காக சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்துக்கு சமர்பிக்கப்பட்ட,…

எதையும் எதிர்கொள்ள ஆயத்தமாகிறது சுவாராம் (விரிவான செய்தி)

மனித உரிமைக்குப் போராடும் அமைப்பான சுவாராம், அரசாங்கத்தின் விசாரணையில் அது ஒரு சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்கப்படுவது உள்பட “மிக மோசமான விளைவுகளை”எதிர்நோக்க நேரலாம், என்றாலும் எது வரினும்  எதிர்கொள்ள அது  தயாராகவுள்ளது. “மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்வது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.... (உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர்…

சுவாராமுக்கு ஆதரவாக மலேசிய, வட்டார என்ஜிஓ-கள் அணிதிரண்டன

அரசுசாரா அமைப்புகள் (NGOs) பலவற்றின் உறுப்பினர்கள் சுமார் 25பேர், ‘சுவாராமுக்கு ஆதரவு’இயக்கம் ஒன்றைத் Read More

நாங்கள் இஸ்லாமிய ஜனநாயகவாதிகள் என்கிறார் பாஸ் தலைவர் ஒருவர்

பாஸ் அரசியல் கட்சியாக 64 ஆண்டுகள் நிலைத்திருந்த பின்னர் "முதிர்ச்சி" அடைந்துள்ளதாக அந்தக் கட்சியின் ஆய்வுக் கழக நிர்வாக இயக்குநர் சுல்கெப்லி அகமட் கூறுகிறார். அவர் பாஸ் கட்சியில் முன்னேற்ற சிந்தனைகளைக் கொண்ட எர்டோகன் பிரிவைச் சார்ந்தவர் ஆவார். "நாங்கள் இனிமேலும் இஸ்லாமியவாதிகள் அல்ல. ஆனால் இஸ்லாமிய ஜனநாயகவாதிகள்,"…

எதையும் எதிர்கொள்ள ஆயத்தமாகிறது சுவாராம்

மனித உரிமைக்குப் போராடும் அமைப்பான சுவாராம், அரசாங்கத்தின் விசாரணையில் அது ஒரு சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்கப்படுவது உள்பட “மிக மோசமான விளைவுகளை”எதிர்நோக்க நேரலாம் என்றாலும், எதுவரினும்  எதிர்கொள்ள அது  தயாராகவுள்ளது. “மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்வது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம்....(உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார) அமைச்சர்…

கெராக்கான் சேவை மையத்தின்மீது முட்டைகளும் காப்பியும் வீசியெறியப்பட்டன

இன்று அதிகாலை, பினாங்கு பூலாவ் திக்குஸ் கெராக்கான் சேவை மையத்தின் முன்கதவின்மீது முட்டைகள் வீசி எறியப்பட்டதுடன் காப்பியும் விசிறியடிக்கப்பட்டிருந்தது. அச்சம்பவம் பற்றிக் கருத்துரைத்த பினாங்கு கெராக்கான் தலைவர் டாக்டர் டெங் ஹொக் நான்,அது அரசியல் நோக்கம் கொண்ட ஒரு செயல் என்பது தெளிவாகத் தெரிகிறது என்றார்.அதனால் மக்கள் ஆத்திரமடையலாம்…

‘சரவாக் கனவுகள் பயங்கரமாகி விட்டன’

மலேசியக் கூட்டரசில் ஒளிமயமான எதிர்காலத்தை கனவு கண்ட சரவாக் மக்கள் இப்போது பயங்கரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். 18 அம்ச மலேசியா ஒப்பந்தத்தில் கூறப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியான் கூறியிருக்கிறார். அவர் நேற்று கூச்சிங் சொங்லின் பூங்காவில் மலேசியா தொடக்க விழாவில் பெருந்திரளான…