உண்மையே, நஜிப் வெறுப்பை உமிழ்வதற்கு உத்துசானுக்கு சுதந்திரம் கொடுத்துள்ளார்

"அதிகமான சுதந்திரம் என்பது சுதந்திரமான ஊடகங்கள் எனப் பொருள் அல்ல. ஊடகங்கள் உள்துறை அமைச்சின் கண்காணிப்புக்கு உட்பட்டிருக்கும் வரையில் சுதந்திரமான ஊடகங்களை நாம் பெறவே முடியாது." நஜிப்: நான் ஊடகங்களுக்கு கூடுதல் சுதந்திரம் கொடுத்தேன் குவிக்னோபாண்ட்: பேச்சுச் சுதந்திரம் என்பது கூட்டரசு அரசாங்கம் மக்களுக்கு 'கொடுக்கும்' ஏதோ ஒன்று…

லைனாஸ் மீதான பிஎஸ்சியை புறக்கணித்தது பக்காத்தான்

இன்று பிற்பகல், மாற்றரசுக் கட்சியினர் மக்களவையிலிருந்து திடீரென்று வெளிநடப்புச் செய்தனர்.லைனாஸ் ஆலை மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு(பிஎஸ்சி)வை அமைப்பது தொடர்பில் நடைபெற்ற விவாதத்தை அடுத்து இந்த வெளிநடப்பு நடைபெற்றது. குவாந்தான், கெபெங்கில் அரிய மண் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படுவதால் விளையக்கூடிய அபாயங்களை மூடிமறைக்கத்தான் பிஎஸ்சி அமைக்கப்படுவதாக அவர்கள் வாதிட்டனர்.…

நாளை, ஹிண்ட்ராப் அமைப்பினர் ஐ.நா பணிமனையில் குறிப்பாணை வழங்குவர்

ஆண்டுதோறும் மார்ச் 21-ஆம் தேதி அனைத்துலக இனவாத எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்பட்டுவருகிறது. 1960-ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் இனவெறி சட்டதிற்கெதிரான அமைதி ஊர்வலத்தின் போது காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 69 பேர் பலியானதயொட்டி, இனவாத கொள்கைகளை  எதிர்த்து  அனைத்துலகச் சமூகம் பகிரங்கமாக குரல் கொடுக்கும் நோக்கில், 1966-ஆம்…

வருக! வருக! மாண்புமிகு ஐநா தலைமைச் செயலாளர் பான் கீ…

தாங்கள் இக்குழந்தைகளுக்கு வாக்குறுதிகள் அளித்தீர்கள்! (you promised something to these children!) தங்களின் நிபுணத்துவ அறிக்கை நடந்ததைச் சொன்னது! (Your Panel of Experts Report is damning) சானல் 4 காணொளிகள் உலகத்தை உலுக்கியது! (The world was shocked by Channel 4 videos)…

ஷாங்ரிலா: பிரதமர் தமது பிறந்த நாள் விருந்துச் செலவுக்குப் பணம்…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தமது  பிறந்த நாள் விருந்து தொடர்பில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் எனக் கூறப்படுவதிலிருந்து கோலாலம்பூரில் உள்ள ஷாங்ரிலா ஹோட்டல் அவரை மீண்டும் விடுவித்துள்ளது. 2011ம் ஆண்டு ஜுலை மாதம் 24ம் தேதி நடந்த அந்த விருந்துக்கான 80,000 ரிங்கிட் மொத்தச் செலவுகளுக்கு நஜிப் …

இலங்கை மீது விசாரணை நடத்தகோரி மலேசிய ஐ.நா தூதரகத்தில் மனு

ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசாங்கம் மீது அனைத்துலகப் போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என வலியுறுத்தி இன்று (21.03.2012) மதியம் 11.30 மணிக்கு Wisma UN, Blok C, Jalan Dungun, Damansara Height, KL-ல் அமைந்துள்ள மலேசியாவுக்கான ஐ.நா தூதரகத்தில் கோரிக்கை மனு ஒன்று வழங்கப்படவுள்ளது. இந்த கோரிக்கை…

நான் இன்னும் சிலாங்கூரில் போட்டியிட முடியும் என்கிறார் காலித்

சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம், தமது வாக்களிப்புத் தொகுதி சிலாங்கூரில் உள்ள பெட்டாலிங் ஜெயா செலத்தானிலிருந்து கோலாலம்பூரிலிருந்து லெம்பாய் பந்தாய் தொகுதிக்கு மாறியிருப்பதால் அடுத்த பொதுத் தேர்தலில் தாம் சிலாங்கூரில் போட்டியிட முடியாமல் போகலாம் என்ற ஆரூடங்களை நிராகரித்துள்ளார். அந்த விவகாரம் மீது முதன் முறையாக கருத்துரைத்த…

பினாங்கு முதல்வரிடம் ஷேக் உசேன் மன்னிப்பு கேட்க வேண்டும்

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், டிஏபி-இன் நிதிதிரட்டும் விருந்தில் ஆற்றிய உரையில் இந்தியர்களை ஓரங்கட்டினார் என்று கூறியதற்காக மாநில அம்னோ இளைஞர் பகுதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதலமைச்சரின் அரசியல் செயலாளர் வலியுறுத்தியுள்ளார். மாநில அம்னோ இளைஞர் தலைவர் கேட்டுக்கொண்டிருப்பதுபோல் லிம் அந்நிகழ்வில் ஆற்றிய உரையின்…

டயிம்:பொதுத் தேர்தலில் மூன்று மாநிலங்களை மட்டுமே பிஎன் முழுசாக நம்ப…

2008 பொதுத் தேர்தலில் பினாங்கு, சிலாங்கூர், கெடா ஆகியவற்றில் பிஎன் ஆட்சி கவிழும் என்பதை முன்னறிந்து கூறியிருந்த முன்னாள் நிதி அமைச்சர் டயிம் சைனுடின் இப்போது 13வது பொதுத் தேர்தல் பற்றியும் ஒரு கணிப்பைச் செய்துள்ளார். அவரது கணிப்பு மத்திய அரசுக்கு அவ்வளவாக அனுசரணையாக இல்லை. சீனமொழி நாளேடான…