பிஎஸ்சி பக்காத்தான் உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் காலக் கெடுவை வலியுறுத்தினர்…

13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு பரிந்துரைக்கும் மாற்றங்கள் அமலாக்கப்பட வேண்டும் என அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த பக்காத்தான் எம்பி-க்கள் வலியுறுத்தவில்லை எனக் கூறப்படுவதை ராசா எம்பி அந்தோனி லோக் இன்று மறுத்துள்ளார். பிஎஸ்சி-யின் முக்கியமான பரிந்துரைகள் குறிப்பாக பெர்சே 2.0ன்…

பிபிபி கூடுதலான உணவு விநியோக மய்யங்களைத் திறக்க எண்ணுகிறது

பிபிபி என்ற மக்கள் முற்போக்குக் கட்சி தனது ' உணவளிக்கும் திட்டம்: தேவைப்படுகின்றவர்களுக்கு உணவு' என்னும் திட்டத்தின் கீழ் ஜோகூரிலும் கெடாவிலும் இன்னும் அதிகமான உணவு விநியோக மய்யங்களைத் திறக்க எண்ணியுள்ளது. அத்தகைய முதலாவது மய்யம் கிள்ளான் தாமான்  செந்தோசாவில் மார்ச் மாதம் 4ம் தேதி தொடக்கி வைக்கப்பட்டதாக…

சிலாங்கூர் பிஎன் ‘Ops Kibar dan Santai’ இயக்கத்தைத் தொடங்கியுள்ளது

சிலாங்கூர் பாரிசான் நேசனல் இளைஞர்களுக்கு அணுக்கமாக இருக்கும் பொருட்டு நேற்றிரவு  'Ops Kibar dan Santai Orang Muda' இயக்கத்தை அறிமுகம் செய்துள்ளது. பொழுதுபோக்கு மாதிரியிலான நடவடிக்கைகளைக் கொண்ட அந்த வாராந்திரத் திட்டம் வரும் வெள்ளிக் கிழமை ஷா அலாமில் உள்ள சிலாங்கூர் அம்னோ கட்டிடத்தில் தொடக்கி வைக்கப்படும்.…

வெளியேறுமாறு விடுக்கப்பட்ட உத்தரவை மாணவர்கள் மீறினர்

நேற்று தொடக்கம் மெர்தேக்கா சதுக்கத்தில் முகாமிட்டுள்ள 30 மாணவர்கள் கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற அதிகாரி விடுத்த உத்தரவையும் மீறி அங்கு தொடர்ந்து இருக்கப் போவதாக உறுதி எடுத்துக் கொண்டுள்ளனர். இன்றிரவு அந்தச் சதுக்கத்தில் அரச இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படவிருப்பதை ஒட்டி மாணவர்கள் தங்களது பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்…

குறித்த நேரத்தில் ரயில்களை ஒட்டுவதே முகமட் ஜின்-னின் வேலை

'கேடிஎம் என்ற மலாயன் ரயில்வே ஆண்டுக்கு 130 மில்லியன் ரிங்கிட்டை இழந்து வருகிறது. அதன் ஊழியர்கள் தங்களது திறமையின்மையைத் தக்க வைத்துக் கொள்ள பிஎன்-னை ஆதரிக்கின்றனர்." 'ரயில் நிலையங்களில் பிஎன் கொடிகள் பறக்க விடப்படுவதை கேடிஎம் தலைவர் அனுமதிக்கிறார்' லோங்ஜாபார்: கேடிஎம் போன்ற அமைப்புகள் பாகுபாடு காட்டக் கூடாது.…

வரலாறு படைக்கும் மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி இன்று திறப்பு விழா காண்கிறது

மலேசிய நாட்டின் தமிழ்ப்பள்ளிகளுக்கே உரித்தான பஞ்சக்கோலத்திலிருந்து விடுபட்டு அடுத்த நூற்றாண்டிற்கு வழிகோலும் முன்னுதாரணமாக தலைநிமிர்ந்து நிற்கும் ஷா அலாம், மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி இன்று திறப்பு விழா காண்கிறது. நாட்டில் தோட்டங்களை மேம்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளும்போது தோட்ட மக்கள் குடியிறுப்பு, ஆலயம், மற்றும் தமிழ்ப்பள்ளிக்கு ஏற்படும் பிரச்சனைகள்  மிட்லண்ட்ஸ் தோட்டத்தையும் விட்டு…

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே மஇகா பட்டியல் பிரதமரிடம் கொடுக்கப்படும்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே பிரதமர் நஜிப்பிடம் கொடுக்கப்படும் என்று மஇகா தலைவர் ஜி. பழனிவேல் கூறினார். ஆனால், அப்பட்டியல் தயாராகி விட்டதா என்பதை அவர் கூறவில்லை. "பல மாநிலங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் நான் அது குறித்து…

இலவசக் கல்வி கோரி பல்கலைக்கழக மாணவர்கள் கோலாலம்பூர் சாலைகளில் ஊர்வலம்

தேசிய உபகாரச் சம்பளத் திட்டமான PTPTN என்ற தேசிய உயர் கல்வி நிதியை ரத்துச் செய்யுமாறு கோரி 300க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கோலாலம்பூர் சாலைகளில் ஊர்வலமாகச் சென்றுள்ளனர். மஸ்ஜித் ஜெமாய்க் (Masjid Jamek) எல்ஆர்டி நிலையத்தில் ஊர்வலத்தை தொடங்கிய அந்த மாணவர்கள் ஜாலான் ராஜா லாவுட்டை நோக்கிச்…

கூடுதல் வேகத்தில் செல்லுமாறு பிஎன் தேர்தல் நடவடிக்கை எந்திரத்துக்கு ஆலோசனை

அடுத்த பொதுத் தேர்தலுக்கு ஆயத்தம் செய்வதற்காக பிஎன் தேர்தல் நடவடிக்கை எந்திரம் இன்னும் கூடுதல் வேகத்தில் செல்ல வேண்டும் என பிரதமர் துறை துணை அமைச்சர் அகமட் மஸ்லான் கூறியிருக்கிறார். பொதுத் தேர்தலுக்கு தயார் நிலையில் இருப்பதற்கான தங்களது வேகத்தை பிஎன் தேர்தல் ஊழியர்கள் அதிகரித்துக் கொள்வதற்கு அந்த…

பிஎஸ்சி அறிக்கை தொடர்பில் பக்காத்தான் எம்பி-க்கள் குறித்து அம்பிகா ஏமாற்றம்

பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த பக்காத்தான் ராக்யாட் எம்பி-க்கள் இசி என்ற தேர்தல் ஆணையம், குழுவின் முக்கிய பரிந்துரைகள் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அமலாக்க வேண்டும் என வலியுறுத்தத் தவறி விட்டது குறித்து பெர்சே 2.0 கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் ஏமாற்றம்…

அமைச்சு இலக்கு: 2015ம் ஆண்டுக்குள் 150,000 அந்நிய மாணவர்களைச் சேர்க்க…

2015ம் ஆண்டுக்குள் இந்த நாட்டுக்கு மேற்கல்வியைத் தொடர 150,000 அந்நிய மாணவர்களைக் கவருவதற்கு உயர் கல்வி அமைச்சு இலக்கு வைத்துள்ளது. அவ்வாறு தெரிவித்த உயர் கல்வி அமைச்சின் தலைமைச் செயலாளர் அப்துல் ரஹிம் நூர், கடந்த ஆண்டு இறுதி வரையில் இந்த நாட்டில் 96,000 அந்நிய மாணவர்கள் மலேசியாவில்…