‘நாடற்ற இந்தியர் எண்ணிக்கை குறித்து பிரதமர் பொய் சொல்கிறார்’

மலேசியாவில் நாடற்றவர்களாக உள்ள இந்தியர் எண்ணிக்கை 9,000தான் என்று பிரதமர் கூறியிருப்பதைச் சாடுகிறார் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன். “பிரதமரின் அறிவிப்பில் உண்மையில்லை. அது நாடற்றவர்களாக உள்ள இந்திய வம்சாவளியினர் எண்ணிக்கையைக் குறைத்துக்காட்டும் அருவறுக்கத்தக்க முயற்சி; அந்த எண்ணிக்கை 9,000 என்பது அடிப்படையற்றது, அறிவுக்குப் பொருந்தாதது”, என்று சுரேந்திரன்…

ஹிம்புனான் ஹிஜாவுக்கு சுவாராம் விருது

சுற்றுச்சூழல், மனித உரிமைப் பிரச்னைகள் மீது பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக ஹிம்புனான் ஹிஜாவ், முரும்- பாராம் சமூகங்களுக்கு சுவாராமின் மனித உரிமை விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சுவாராம் விருது பெறுவோரைத் தேர்ந்தெடுக்கும் குழுவின் தலைவரும் ஜிஎம்ஐ என்ற இசா எதிர்ப்பு அமைப்பைச் சேர்ந்தவருமான நோர்லைலா அதனை அறிவித்தார். இந்த…

மாட் ஜெய்ன்: மூசாவின் ஆவேசம் இன்னொரு சண்டிவாரா (நாடகம்)

முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் அண்மையில் பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் எதிராக ஆவேசமாக பேசியிருப்பது 'இன்னொரு நாடகம்' என்று முன்னாள் கோலாலம்பூர் சிஐடி தலைவர் மாட் ஜெய்ன் இப்ராஹிம் கூறுகிறார். மூசா அறிக்கைகள் உண்மையானவை என்றும் அவர் திருந்தி போலீஸ் படையின் புகழை மீண்டும்…

மலிவான அம்னோ நிலம்: இப்போது அம்னோ அங்காடித் தொழிலிலும் இறங்கியுள்ளது

அம்னோ மலிவான விலைக்கு பெற்ற இன்னொரு நிலத்துக்கு டிஏபி இன்று வருகை அளித்தது. அந்த இடம்  இப்போது பரபரப்பான அங்காடி வியாபார மய்யமாகத் திகழ்கின்றது. அதற்குப் பின்னால் அந்நியத் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதிகளும் கட்டப்பட்டுள்ளன. சிலாங்கூர் சுங்கைவே-யில் 5,010.6 சதுர அடி பரப்புள்ள அந்த நிலம் 1981ம் ஆண்டு…

ஜசெக தேசிய மகளிர் அணியின் துணைச் செயளாலராக காமாட்சி தேர்வு

ஜனநாயக செயல் கட்சியின் மகளிர் பேரவை மாநாடு தலை நகர் ஃபெடரல் தங்கும் விடுதியில் நேற்று (09,12.2012) நடைபெற்றது. மகளிர் பிரிவு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது என்றாலும் தேர்தல் முறையில் உச்சமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்தது இதுவே முதல் முறையாகும். 300-க்கும் மேற்பட்ட மகளிர் பேராளர்கள்…

ஜஹ்ரேய்ன் அம்னோவுக்குப் பயன்படும் ஒரு கருவி; அவருக்குத் தேர்தலில் இடம்…

பாயான் பாரு எம்பி ஜஹ்ரேய்ன் முகம்மட் ஹிஷாம் அம்னோவில் மீண்டும் சேர விண்ணப்பம் செய்திருப்பதை பினாங்கு மாநில பிகேஆர் தலைவர் சாடியுள்ளார். “ஜஹ்ரேய்ன் அம்னோவில் மீண்டும் சேர விண்ணப்பம் செய்திருப்பது வியப்பளிக்கவில்லை. அவர் தேர்தலில் போட்டியிட்டால் அவருடன் மோத நாங்கள் தயார்”, என்று பெர்தாமில் மகளிர் பகுதி ஏற்பாடு…

உங்கள் கருத்து: ஹலோ, கழிவுப் பொருள் ஏற்றுமதி செய்யப்படும் என…

""கழிவுப் பொருளை ஏற்றுமது செய்யப் போவதாக லைனாஸ் அளித்த வாக்குறுதியை கட்டாயப்படுத்தப் போவதாக அணுசக்தி அனுமதி வாரியம் கூறியிருப்பதால் லைனாஸுக்குக் கொடுக்கப்பட்ட தற்காலிக நடவடிக்கை அனுமதியை நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது." கழிவுப் பொருள் மலேசியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட மாட்டாது என்கிறது…

பழனிவேல் அரைத்த மாவையே சரவணன் அரைக்கிறார்; சாடுகிறார் சிம்மாதிரி

-ஜே.சிம்மாதிரி, பாகாங் மாநில ஜ.செ.க துணைத் தலைவர், டிசம்பர் 10, 2012. இந்திய சமூகத்திற்கு அரசுத்துறையில் 15% தேவை என நகர்ப்புற நல்வாழ்வு துறை துணை அமைச்சர் சரவணன் கூறுகிறார். நல்லது வரவேற்போம். ஓராண்டுக்கு முன் "எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்; அரசுத் துறையில் 12% இந்தியர்களுக்கு வாய்ப்பு…

உங்கள் கருத்து: நாடற்றவராக ஓர் இந்தியர் இருந்தாலும் அது கேள்விக்குரியதுதான்

“சுதந்திரம்பெற்று 50 ஆண்டுகள் ஆன பிறகும் பிஎன் அரசு நாடற்றவர் தகுதிநிலை பற்றி இன்னமும் பரிசீலித்துக் கொண்டிருக்கிறது என்று கூறுவதைக் கேட்க அதிர்ச்சியாக உள்ளது.” பிரதமர்: நாடற்றவர் எண்ணிக்கை மிகைப்படுத்தப்படுகிறது லூயிஸ்: நாடற்றவர்களாக உள்ள இந்தியர் எண்ணிக்கை 300ஆயிரமோ ஒன்பதாயிரமோ பிரச்னை இல்லை. முதற்கண் நாடற்ற இந்தியர் என்று…

மலாய்க்காரர்களின் மலத் தொட்டியை தூக்க வந்தவர்களாம் இந்தியர்கள்!

மலாய்க்காரர்களின் மலத் தொட்டியை தூக்குவதற்கும் மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் இந்திய சீன வந்தேறிகளை பிரிட்டிஷ்காரர்கள் இங்கு அழைத்து வந்தனர் என்று கமார்ஸன் முஸ்தாபா என்பவன் தன்னுடைய முகநூல் (Facebook) எழுதியிருக்கிறான். சீனர்களைப் பொறுத்தவரை சுரங்கங்களில் வேலை பார்ப்பதற்கும் பிரிட்டிஷ் கூலிகளாக இருப்பதற்கும் தருவிக்கப்பட்டனர் என்றும் அவன் குறிப்பிட்டுள்ளான். "மலாய்க்காரர்கள்…

இந்தியர் பொருளாதார மேம்பாட்டுக்கான 10 அம்சங்களை மஇகா பிரதமரிடம் வற்புறுத்த…

-சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர், டிசம்பர் 9, 2012. பிரதமர் நஜிப் துன் ராசாக் இன்று  தெடக்கிய 66 வது ம.இ.கா பொதுப் பேரவையில் என்ன சொல்லப் போகிறார் என்பது  இந்தியச் சமூகத்தின் மீது அக்கறையுள்ள அனைவரின் கேள்விகளாக இருந்திருக்கும். அண்மையில்  சுங்கை சிப்புட்டில்  நிகழ்த்திய தீபாவளி…

சாமி மேடை உடைக்கப்பட்டது மீது மௌனம் சாதிக்கும் மந்திரி புசார்…

கடந்த மாதம் செப்பாங்கில் சாமி மேடை ஒன்று உடைக்கப்பட்ட விவகாரம் மீது மௌனம் சாதிக்கும் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிமை பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ சாடியுள்ளார். "நிலவரம் கடுமையாக இருந்தும் அரசியல் களத்தில் இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் கண்டித்திருந்தும் அப்துல் காலித் இது…

நான்கு அமைச்சர்கள் பதவி துறக்க வேண்டும் என்கிறது டிஏபி

குவாந்தான் கெபெங்கில் அமைந்துள்ள லைனாஸ் அரிய மண் தொழில் கூடத்தின் கழிவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை அந்த லைனாஸ் நிறுவனம் நிராகரித்து விட்டதைத் தொடர்ந்து அது அமைவதற்கு அனுமதி அளிப்பதில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட நான்கு அமைச்சர்கள் பதவி துறக்க வேண்டும் என டிஏபி…

“முஸ்லிம் அல்லாதார் மீது இஸ்லாமியச் சட்டங்களை அமலாக்குவது பாஸ் தோற்றத்தைப்…

கிளந்தானில் உள்ள முஸ்லிம் அல்லாதாருக்கு  இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பாஸ் கட்சியின் மிதவாதத் தோற்றத்தைப் பாதிக்கும் என டிஏபி இளைஞர் தலைவர் பொறுப்பிலிருந்து விலகும் அந்தோனி லோக் எச்சரித்துள்ளார். இது பக்காத்தான் ராக்யாட் மீதான முஸ்லிம் அல்லாதாரின் நம்பிக்கையை ஒரளவுக்குப் பாதித்துள்ளதாக அவர்…

கிட் சியாங்: அம்னோ ஆதரிக்க மறுப்பதால் ஒரே மலேசியா கோட்பாடு…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சொல்வது போல ஒரே மலேசியா கோட்பாடு உறுதியற்றதாக இருப்பதற்கு அம்னோ அதனை ஆதரிக்க மறுப்பதே காரணம் என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார். "நஜிப் தேவை இருப்பதால் ஒரு தோற்றத்தை அளிக்கிறார். தமது ஒரே மலேசியாக் கொள்கைக்கு அம்னோ…

பிரதமர்: நாடற்ற இந்தியர் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டது

அடையாளக் கார்டு இல்லாததால் 300,000க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் நாடற்றவர்களாக இருப்பதாக பக்காத்தான் ராக்யாட் கூறிக் கொள்வதை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று நிராகரித்துள்ளார். இன்று காலை கோலாலம்பூரில் மஇகா பொதுப் பேரவையில் உரையாற்றிய நஜிப்,  அந்த எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டது என்றார். "முதலாவதாக 300,000 நாடற்ற இந்தியர்கள்…

கம்போங் செமாங்காட் மக்களுக்கு இழப்பீடு வழங்க DANGA BAY முன்வருமா?

ஜொகூர் பாரு மாநகரில் இருந்து ஸ்கூடாய் நோக்கி செல்லும் 7.5-வது மைலில் வலது புறத்தில் கெமாயான் சிட்டி அருகில் அமைந்துள்ளது கம்போங் செமாங்காட். 60 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட இக்கிராமம் 5 லோட்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் 156 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட ஒரு லோட் டிசம்பர் 29,…

பினாங்கு மக்களுக்கு நஜிப்பின் தேர்தல் வாகுறுதிகளைச் சாடுகிறது டிஏபி

பினாங்கில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தெரிவித்த தேர்தல் வாக்குறுதிகளைச் சாடிய டிஏபி புக்கிட் பெண்டாரா நாடாளுமன்ற உறுப்பினர் லியு சென் தோங், அது ஒன்றும் மத்திய அரசாங்கம் செய்யும் சலுகை அல்ல என்றார். பினாங்கு தேசிய கருவூலத்துக்கு வழங்கும் பணத்திலிருந்து அத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்பதால் அப்படிப்பட்ட திட்டங்களை…

‘வருமானத்துக்கு மேல் வாழ்கின்றவர்களை புலனாய்வு செய்யுங்கள்’

தங்கள் வருமானத்துக்கு மேல் ஆடம்பரமாக வாழ்கின்றவர்களை விசாரிப்பதற்கு அனுமதிக்கும் பொருட்டு " அனுமான " சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது. எம்ஏசிசி சட்டத்துக்கான திருத்தத்தின் ஒரு பகுதியாக அந்த விஷயம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என எம்ஏசிசி நடவடிக்கை…

அந்த ஊராட்சி மன்றச் சதிகாரர்கள் மீது பாஸ் நடவடிக்கை எடுக்க…

முஸ்லிம் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்ட அண்மைய விவகாரங்களில் தவறு செய்துள்ள ஊராட்சி மன்ற 'சதிகாரர்கள்' மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு டிஏபி பாஸ் கட்சியைக் கேட்டுக் கொண்டுள்ளது. பக்காத்தான் ராக்யாட்டுக்குள் உறவுகள் சீர்குலைவதைத் தவிர்ப்பதற்கு அது அவசியம் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார். பாஸ்…

பேராசிரியர்: ஷாரியா பணக்காரர்களுக்கும் அரசியல் ரீதியில் வலுவானவர்களுக்கும் சாதகமாக உள்ளது

இந்த நாட்டில் ஷாரியா சட்டங்கள் பெண்களுக்கு எதிராக பாகுபாட்டைக் காட்டுகின்றன. அவை ' பணக்காரர்களுக்கும் அரசியல் ரீதியில் வலுவானவர்களுக்கும்' சாதகமாக உள்ளன என மகளிர் கருத்தரங்கு ஒன்றில் பேசிய பேராசிரியை ஒருவர் கூறுகிறார். "முஸ்லிம் திருமணத்தில் சம நிலை: சவால்களும் சாத்தியங்களும்" என்னும் தலைப்பில் இஸ்லாத்தில் சகோதரிகள் (SIS)…

பினாங்குக்கு கட்டுப்படியான விலையில் வீடுகள், மொனோ ரயில்: பிரதமர் வாக்குறுதி

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெற்றால் பினாங்கு மக்களுக்கு இரண்டு மிகப்பெரிய அன்பளிப்புகளை- கட்டுப்படியான விலையில் 20,000 வீடுகள், ஒரு மொனோ ரயில் சேவை- வழங்குவதாக இன்று உறுதி கூறினார். பினாங்கு யுனிவர்சிடி சயின்ஸ் மலேசியா(யுஎஸ்எம்)வில் ‘வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதைச் சொல்லும் பயணம்’ நிகழ்வைத்…

காலிட்: திரையரங்கு கட்ட எம்பிஎஸ்ஏ மக்கள் கருத்தைக் கேட்டறிய வேண்டும்

திரை அரங்கு ஒன்று கட்டப்படுவதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என்று சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா தெரிவித்திருந்தாலும் ஷா ஆலம் மாநராட்சி மன்றம் அவ்வட்டார மக்களின் கருத்தையும் கேட்டறியவது அவசியம் என்று கூறுகிறார் ஷா ஆலம் எம்பி காலிட் அபு சமட். ஷா ஆலம், செக்‌ஷன் 16-இல்,…