அம்பிகாவுடன் தமிழ் ஊடகங்கள்!

தூயத் தேர்தல் வழி சனநாயகத்தையும் சமத்துவத்தையும் கொண்டு வர முடியுமா? இந்த கேள்வியை மையமாக கொண்டு சமூக அமைப்புகளின் விருந்து நிகழ்வு வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணியளவில் மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் (சா ஆலம்)  நடைபெறவுள்ளது. இதில் டத்தோ அம்பிகா சீனிவாசன், நமது…

பினாங்கு பிஎன் வேட்பாளர் பிரச்னை 13வது பொதுத் தேர்தலை தாமதிக்கிறதா?

அடுத்த பொதுத் தேர்தலுக்கு தனது தேர்தல் மாவட்டங்களைத் தயார் செய்வதில் பினாங்கு பிஎன் பல சவால்களை எதிர்நோக்குகிறது. அந்தப் பகுதிகளில் யார் போட்டியிடுவது என்பதை இன்னும் சில உறுப்புக் கட்சிகள் முடிவு செய்யாமல் இருப்பதே அதற்குக் காரணமாகும். களத்தில் நிலைமை கடுமையாக இருப்பதாகக் கூறப்படுவதை நிராகரித்த மாநில பிஎன்…

3பக்காத்தான் மாநிலங்களில் மாற்றுக் கருப்பொருளில் தேசிய நாள் கொண்டாட்டம்

பக்காத்தான்  ஆளும் மூன்று மாநிலங்களில் -பினாங்கு, சிலாங்கூர்,கிளந்தான்-இவ்வாண்டு தேசிய நாள் கொண்டாட்டங்கள்   ‘Sebangsa, Senegara, Sejiwa’ (ஒரே தேசியம், ஒரே நாடு, ஒரே மூச்சு) என்ற அவற்றின் மாற்றுக் கருப்பொருளில் கொண்டாடப்படும் என்பதை பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் ஆயுப் உறுதிப்படுத்தினார். ஆனால், இன்னொரு பக்காத்தான் மாநிலமான கெடா,…

போலீஸ் படையில் உள்ள ஆண்களும் பெண்களும் ஏன் பின்-னைக் கண்டு…

தேர்தல்களின் போது 100,000 பேரைக் கொண்ட போலீஸ் படை வழக்கமாக பிஎன்-னுக்கு ஆதரவளிப்பதற்குத் தாங்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தால் 'துரோகிகள்' என்றும் நன்றி மறந்தவர்கள் என்றும் தாங்கள் கருதப்படலாம் என்ற அச்சம் அதிகாரிகளிடையே நிலவுவதே காரணமாகும்.   இவ்வாறு புக்கிட் அமான் குற்றப் புலானய்வுத் துறை இயக்குநர் பொறுப்பிலிருந்து ஒய்வு பெற்ற…

மார்ச் 8 புத்தகத் தடை தொடரும்; மேல் முறையீட்டு நீதிமன்றம்…

பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கம்போங் மேடான் வன்முறை பற்றிய "மார்ச் 8" என்ற புத்தகத்திற்கு அரசாங்கம் விதித்த தடையை ரத்துச் செய்வதற்கு அதன் ஆசிரியர் கா. ஆறுமுகம் செய்த மனுவை மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்தது. மார்ச் 8 என்னும் தலைப்பில் தமிழ்மொழியில் எழுதப்பட்ட அந்தப்…

சைனாய்ட் எதிர்ப்புப் பேரணி சுகாதாரப் பிரச்னைகளைத் தீர்க்காது என்கிறார் அமைச்சர்

Raub Australian Gold Mine (RAGM) Sdn Bhd தங்கச் சுரங்க நடவடிக்கைகளுக்கு சைனாய்ட்டை பயன்படுத்துவது மீதான நீண்ட காலப் பிரச்னை மீது பேரணியை நடத்துவதற்குப் பதில் அதற்கான  தீர்வுகளை முன் வைக்குமாறு ரவூப் பசுமைப் பேரணியை சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் கேட்டுக் கொண்டிருக்கிறார். பாகாங்…

கனி தொடர்பான புத்தகம் மீது ரோபர்ட் பாங் புகார் செய்தார்

‘Tan Sri Abdul Gani Patail: Pemalsu, Penipu, Penjenayah?’ என்னும் தலைப்பைக் கொண்ட புதிய புத்தகத்தில் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லின் அதிகார அத்துமீறல்கள் என வருணிக்கப்பட்டுள்ள விஷயங்களை அதிகாரிகள் ஆராய வேண்டும் என எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய ஆலோசகர் குழு…

ஷாரிஸாட்: எனக்கு என்எப்சி திட்டம் பற்றி எதுவும் தெரியாது

தேசிய விலங்குக் கூடத் திட்டத்தைப் பெறுவதற்குத் தமது கணவர் முயற்சி செய்தது குறித்து தமக்கு தெரியும் எனக் கூறப்படுவதை ஷாரிஸாட் அப்துல் ஜலில் மறுத்துள்ளார். அவர் இரண்டு பிகேஆர் தலைவர்களுக்கு எதிராகத் தாம் தொடுத்துள்ள 100 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கில் சாட்சியமளித்தார். என்எப்சி  என்ற தேசிய விலங்குக்…

சொங் வெய்மீது மனோகரன் தெரிவித்த கருத்துக்குக் கண்டனம்

தேசிய பூப்பந்து வீரர் லீ சொங் வெய், நேற்றிரவு சீனாவின் லின் டானுடன் கடுமையாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்ததால் மலேசியர் பலர் ஏமாற்றமடைந்தனர். லீ தோற்றாலும் அவரின் கடும் முயற்சியை  மலேசியர்கள் பாராட்டினர், மெச்சினர். ஆனால், அவரது ஆட்டம் பற்றி தம் டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவுசெய்த டிஏபி-இன்…

ஸபாஷ்: தண்ணீர் பங்கீட்டைக் குடியிருப்பாளர்கள் ஆதரிக்கிறார்கள்

குடியிருப்பாளர்கள் பலருடைய கோரிக்கைகளுக்கு இணங்க தண்ணீர் பங்கீட்டு விவகாரத்தைத் தேசிய நீர்ச்சேவை ஆணையத்தின்(ஸ்பேன்) கவனத்துக்கு மீண்டும் கொண்டு செல்லப் போவதாக ஷரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூர்(ஸபாஷ்) கூறியுள்ளது. “சீரமத்தை எல்லாரும் பகிர்ந்துகொள்ளும் வகையில் தண்ணீர் பங்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் குரல்கள் வலுத்து வருகின்றன”, என்று தலைமை…

சொங் வெய்க்கு தேசிய வீரருக்குரிய வரவேற்பு

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பூப்பந்தாட்டத்தில் தங்கப் பதக்கம் பெறத் தவறினாலும் நாளை நாடு திரும்பும் லீ சொங் வெய்க்கு தேசிய வீரருக்குரிய வரவேற்பு அளிக்கப்படும். சொங் வெய் தம் பரம் எதிரியான லின் டானை எதிர்ப்பதில் மிகுந்த மன உறுதியை வெளிப்படுத்தினார் என்று இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர்…

கைரி: எண்ணெய் உரிமப் பணக் குழு தேர்தல் இனிப்பு அல்ல

கிழக்கு கரை மாநிலங்களுக்கு எண்ணெய் உரிமப் பணம் கொடுப்பது மீது சிறப்புக் குழுவை அமைக்க கூட்டரசு அரசாங்கம் முடிவு செய்திருப்பதற்கும் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதீன் கூறுகிறார். பொருளாதார ரீதியில் வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு உதவி செய்ய…

தேசிய நாள் பாடல் காப்பியடிப்பா? வழக்கு தொடுத்தால் அதைச் சந்திக்கவும்…

இவ்வாண்டுக்கான தேசிய நாள் பாடலான  'Janji Ditepati' (Promises Fulfilled)மற்ற பாடல்களைப் பார்த்து காப்பியடிக்கப்பட்டது என்று கூறுவோர் அதை நிரூபித்துக்காட்டி வழக்கு தொடுத்தால் அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளார் தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம். “அது மற்றவர்களின் பாடல் என்பதை நிரூபிக்குமாறு சவால் விடுக்கிறேன்.அதற்காக என்னை…

புரோட்டோன் பற்றிய குறைகூறல் உண்மை என்று நிரூபணமாயிற்று

உங்கள் கருத்து: “புரோட்டோன் அதன் சொந்த காலில் நிற்பதற்குப் போதுமான அவகாசம் கொடுத்தாயிற்று.புரோட்டோனை வாழவைக்கும் கடப்பாடு எனக்கில்லை.மற்ற மலேசியர்களுக்கும் அக்கடப்பாடு இல்லை”. வாகனத் தொழில் பிகேஆரின் வாகனக் கொள்கையை ஆதரிக்கிறது ஸ்டார்: இறக்குமதி கார்களுக்கான சுங்க,கலால் வரிகளைக் குறைத்து உள்நாட்டு கார்களுக்குக்  கூடுதல் போட்டியை உருவாக்கும் பிகேஆரின் வாகனக்…

மந்திரி புசார்: சிலாங்கூரில் தண்ணீர் நெருக்கடி இல்லை என்பதை சபாஷ்…

சிலாங்கூர் மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தண்ணீர் கண்காணிப்புக் குழுவுக்கு விளக்கமளித்த சபாஷ் அதிகாரிகள் அந்த மாநிலம் தண்ணீர் நெருக்கடியை எதிர்நோக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இஸ்மாயில் கூறியிருக்கிறார். ஏற்கனவே அபாயகரமான இரண்டு விழுக்காடு உபரியுடன் நீர் நெருக்கடியை அந்த மாநிலம் எதிர்நோக்குவதாக…

மே 13 திரைப்படம் ‘ மலாய்க்காரர்களை அச்சுறுத்தும் ‘ இயக்கத்தின்…

"அந்த இயக்கத்தில் அப்பட்டமான பொய்கள் மூலம் டிஏபி-யை அரக்கனாக திரைப்படத்தில் சித்திரிக்கும் சுஹாய்மி பாபா போன்ற திரைப்படத் தயாரிப்பாளர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்." மந்திரி புசார் வீட்டுக்கு வெளியில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுவதை கிட் சியாங் மறுக்கிறார் உண்மையான வீரர்: டிஏபி தலைவர் லிம் கிட் சியாங் அத்தகைய வெறுக்கத்தக்க செயலை…

லண்டன் ஒலிம்பிக் பேட்மிண்டன்: சோங் வேய் தங்கத்திற்கான போட்டியில் தோல்வி

லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர் இறுதிப் போட்டியில் மலேசியாவின் லீ சோங் வேய் சீனாவின் லின் டானிடம் 21-15, 10-21, 19-21 என்ற புள்ளியில் தோல்வி கண்டார். ஒலிம்பிக் போட்டியில் இது லீ சீனாவின் லின் டானிடம் அடைந்த இரண்டாவது தோல்வியாகும்.

அப்துல்லா: மெர்தேக்கா கருபொருள் பாடல் ‘வினோதமானது’ ஆனால் ஒகே (சரி)

"Janji Ditepati (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன)" என்னும் மெர்தேக்கா தினக் கருப்பொருளை தாம் ஏற்றுக் கொள்வதாக முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி கூறுகிறார். என்றாலும் அது சற்று வினோதமாகத் தொனிக்கிறது என்றார் அவர். "அது சற்று வினோதாமாகத் தெரிந்தாலும் ( ganjil sikit ) தேர்வு செய்யப்பட்ட கருப்பொருளை…

மூசா: பக்காத்தானுடைய 20 விழுக்காடு எண்ணெய் உரிமப் பண வாக்குறுதி…

சபாவுக்கு கொடுக்கப்படும் எண்ணெய் உரிமப் பணத்தை ஐந்து விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக உயர்த்த பக்காத்தான் ராக்யாட் அளித்துள்ள வாக்குறுதி பொருத்தமற்றது என அந்த மாநில முதலமைச்சர் மூசா அமான் கூறியிருக்கிறார். புத்ராஜெயா நிர்வாகம் செய்யும் எண்ணெய் வருமானம் இறுதியில் சபாவுக்கு திருப்பி விடப்படுவதாக மூசா உத்துசான் மிங்குவுக்கு அளித்த…

சிறப்புக் குழு மீது நிக் அஜிஸ் சுல்தானுடைய பேட்டிக்கு விண்ணப்பிக்கிறார்

பெட்ரோலிய வருமானம் மீது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ள சிறப்புக் குழுவில் கிளந்தானைப் பிரதிநிதிப்பதற்கு மாநில அரசாங்கம் தேர்வு செய்துள்ளவருக்கு கிளந்தான் சுல்தானுடைய ஒப்புதலைப் பெறுவதற்காக அவருடைய பேட்டிக்கு விண்ணப்பிக்கப் போவதாக மாநில மந்திரி புசார் நிக் அஜிஸ் நிக் மாட் அறிவித்துள்ளார். அந்தக் குழுவில் இடம்…

வேதமூர்த்தி: நான் ஹிண்ட்ராப்-புக்கு வேறு வியூகத்தை வகுத்துள்ளேன்

ஹிண்ட்ராப்-பைக் கட்சி சார்பற்ற பாதையில் தாம் கொண்டு செல்லப் போவதாக வெளிநாட்டில் நாடு கடந்து வாழ்ந்த பின்னர் அண்மையில் தாயகம் திரும்பியுள்ள ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி கூறியிருக்கிறார். ஆனால் தாம் நாட்டில் இல்லாத வேளையில் ஹிண்டராப் இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய தமது மூத்த சகோதரர் பி உதயமுமாருடன்…

“அம்னோ-இசி தொடர்பு”: பிகேஆர் சைபுடின் விசாரிக்கப்படுகிறார்

தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் வான் அஹமட் வான் ஒமார் ஓர் அம்னோ உறுப்பினர் என்று குற்றம் சுமத்தியத்தியதற்காக பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியன் போலீசாரால் விசாரிக்கப்படுகிறார். குற்றவியல் சட்டம் பிரிவு 500 இன் கீழ் சைபுடின் கிரிமினல் அவதூறு குற்றத்திற்காக சைபுடின் விசாரிக்கப்படுகிறார் என்று பிகேஆர்…

பாபியா சட்டம் நிரபராதிகளை பாதுகாப்பதற்காகும், குற்றவாளிகளை அல்ல

"பாபியா சட்டம் வங்கித் தொழிலில் உள்ளவர்கள் தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவதைத் தடுப்பதற்காகும். குற்றச் செயல்களை அம்பலப்படுத்துவோரை மௌனமாக்குவதற்கு அல்ல." ராபிஸிக்கு எதிரான பாபியா குற்றச்சாட்டை நஜிப் ஆதரிக்கிறார் மாற்றம்: பிரதமர் நஜிப் ரசாக் சொல்வதில் பாதி மட்டுமே உண்மை. நாட்டின் நிதி முறை வெற்றி அடைவதற்கு வங்கி வாடிக்கையாளர்களுடைய…