சரவாக்கின் கூச்சிங்கில் உள்ள ஒரு ஒளிபரப்பு நிறுவனம் சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கு விசாரணையில் உதவுவதற்காக Op Ragada இன் கீழ் நேற்று மற்றும் இன்று கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒரு முன்னாள் மேயரும் அடங்குவார். கைது செய்யப்பட்டவர்களில் முறையே நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் முன்னாள் பொது…
மலாய் தகுதி மீதான பாடப் புத்தகக் கேள்வி இணைய மக்களுடைய…
ஐந்தாம் படிவ பயிற்சி நூல் ஒன்றில் மலாய்க்காரர்களுடைய நிலையை பராமரிப்பது பற்றிய கேள்வி ஒன்று இடம் பெற்றுள்ளது இணைய மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கேள்வி படம் பிடிக்கப்பட்டு பிப்ரவரி 26ம் தேது முகநூலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதனை கிட்டத்தட்ட 3,000 பேர் படித்துள்ளனர். ஐந்தாம் படிவ வரலாற்றுப் பாடத்துக்காக…
உடற்குறையுடையவருக்கான உதவியை நிறுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஆத்திரத்தை மூட்டியுள்ளது
சரவாக் விவசாயத் துணை அமைச்சர் மொங் டாஹாங், எதிர்த்தரப்புக்கு ஆதரவளிக்கும் உடற்குறையுடையவருக்கு வழங்கப்படும் அரசாங்க உதவியை நிறுத்துமாறு ஆணையிடும் கடிதம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் இணைய மக்களிடயே ஆத்திரத்தை மூட்டியுள்ளது. அந்தக் கடிதம் முகநூல் பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் மேல் பகுதியில் "விவசாயத் துணை அமைச்சர்…
டாக்டர் ஜெயக்குமாரின் தனித்த அரசியல் பயணம், ஒரு நேர்காணல்
அரசியல்வாதிகளிடையே, தப்பிப் பிறந்தவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார். அவர், கடந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினரானார். இடச்சாரி கொள்கையுடையவர் என்பதால் மையநீரோட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு இவரைப் பிடிக்காது. ஆனால், தன்னலமற்ற சேவையின் காரணமாக அரசியலில் இருதரப்பு அடிநிலை மக்களிடையேயும் இவருக்கு மதிப்புண்டு, மரியாதையுண்டு. ஜெயக்குமாரின் மக்கள்சேவைக்கு…
நஜிப் பிஎன் செய்த கடந்த காலத் தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டார்
கடந்த பொதுத் தேர்தலில் பிஎன் செய்த தவறுகளுக்காக அந்தக் கூட்டணியின் சார்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மக்களிடம் இன்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அந்தத் தவறுகள் காரணமாக கெடா உட்பட பல மாநிலங்களையும் பல தொகுதிகளையும் பிஎன் இழந்தது என்றார் அவர். பிஎன் அந்தத் தவறுகளை சரி …
மாணவர்கள் பெர்சே பாணியில் ஏப்ரல் 14ஆம் தேதி பேரணி நடத்துவர்
Solidariti Mahasiswa Malaysia என அழைக்கப்படும் மாணவர் அமைப்பு, அடுத்த மாதத்துக்கு திட்டமிடப்பட்டுள்ள பெரிய பேரணிக்கு முன்னோடியாக Malaysia Bangkit (மலேசிய எழுச்சி) என்னும் இயக்கத்தை இன்று தொடங்கியுள்ளது. அந்தப் பேரணி பெர்சே 2.0, Himpunan Hijau பேரணிகளைப் போன்று இருக்கும் என அந்த இயக்கத்தின் தலைவர் முகமட்…
மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை உறுதி, சிலாங்கூர் எம்பி நம்பிக்கை
பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடக்காதிருக்கலாம், ஆனால், பக்காத்தான் ரக்யாட் சிலாங்கூரில் ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்வதுடன் கூடுதல் இடங்களையும் கைப்பற்றும் என்ற நம்பிக்கை மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் நெஞ்சு நிறைய நிரம்பியுள்ளது. “எங்களுக்குக் கிடைத்த ஆய்வுத் தகவல்கள் பக்காத்தான் இப்போதிருப்பதைவிட கூடுதல் இடங்களைக் கைப்பற்றும்…