லினாஸை மக்கள் ஏற்றுக் கொண்டதாகக் கூறும் அரசாங்கக் கருத்துக் கணிப்பு…

குவாந்தான் கெபெங்கில் அரிய மண் தொழில் கூடம் அமைவது மீது கருத்துத் தெரிவித்தவர்களில் 97 விழுக்காட்டினர் ஒப்புதல் அளித்தனர் என்று கூறும் கருத்துக்கணிப்பின் "ஆதாரம் துல்லிதம்" ஆகியவை குறித்து கெரக்கான் இன்று ஐயம் தெரிவித்துள்ளது. அந்தக் கருத்துக் கணிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட வழி முறை பற்றி அந்தக் கட்சியின் இளைஞர்…

பேருந்து விபத்தில் இரு இந்திய சுற்றுப்பயணிகள் பலி,20பேர் காயம்

கோலாலம்பூருக்கு அருகில், கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் 22 இந்திய சுற்றுப்பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலா பேருந்து தடம்புரண்டதில் இருவர் உயிரிழந்தனர்,மேலும் 20பேர் காயமடைந்தனர். கெந்திங் மலையிலிருந்து வந்துகொண்டிருந்த அப்பேருந்து காலை மணி 8 வாக்கில் குறுகலான வளைவில் திரும்ப முனைந்தபோது கட்டுப்பாட்டை இழந்ததாக போலீசார் தெரிவித்தனர். “சாலைத்தடுப்பில் மோதி அது…

பாஸ்:லினாஸ் கழிவு அபாயமிக்கது என்பதை நஜிப் ஒப்புக்கொள்கிறார்

லினாஸ் ஆலையில் உருவாகும் கழிவுப்பொருள்கள் மக்கள் அதிகம் வசிக்காத இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டுக் கொட்டப்படும்  என்று அரசாங்கம் அறிவித்திருப்பது ஆலையிலிருந்து வெளிவரும் கழிவு அபாயமிக்கது என்பதை அரசாங்கம் அறிந்துள்ளதைக் காட்டுவதாக பாஸ் கூறியுள்ளது. கழிவுப்பொருள் கொட்டுமிடம் மாற்றப்படுவதை வைத்து கழிவுப்பொருள் அபாயமிக்கது என்று முடிவு செய்துவிட வேண்டாம் என்று பிரதமர்…

தவறுகளுக்குத் தேவை பரிகாரங்கள்;மன்னிப்பு அல்ல

“மன்னிப்பு கேட்கப்படுவதில் உண்மையில்லை,அது மக்களை ஏமாற்றும் தந்திரம்.அதில் பணிவில்லை,தவற்றுக்கு வருத்தப்படுவதாகவும் தெரியவில்லை.”   நஜிப்பின் மன்னிப்பின்மீது பிகேஆர் பாய்ச்சல் விழிப்பானவன்: மன்னிப்பு உண்மையிலேயே வருத்தப்பட்டுச் சொல்லப்படுவதாக இருக்க வேண்டும். செய்த தவறுகளும் நோக்கமில்லாமல் செய்யப்பட்டனவாக இருத்தல் வேண்டும். ஆனால், பிஎன்-அம்னோ நடந்துகொள்வதைப் பார்த்தால், செய்த தவறுகளுக்கு வருத்தப்படுவதுபோலவா இருக்கிறது?…

வழக்குகளைத் தள்ளுபடி செய்யும் அரசு,தாஜுடின் முயற்சி தோல்வி

மலேசிய விமான நிறுவனம் சம்பந்தப்பட்ட வழக்கில், ரிம500மில்லியன் கேட்டு தாஜுடின் தொடுத்த எதிர்-கோரிக்கை மனுவைத் தள்ளுபடி செய்யும் அரசாங்க முயற்சி தோல்வியுற்றது. அதேபோல், எம்ஏஎஸ்-இன் கோரிக்கை மனுவைத்  தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தாஜுடின் தொடுத்த வழக்கும் நிராகரிக்கப்பட்டது.  ஐரோப்பாவில் தன் சரக்கு ஏற்றி இறக்கும் நடவடிக்ககளுக்கான தளத்தை…

ஹிண்ட்ராப், பெர்க்காசாவைப் போன்று இனவாத அமைப்பா?

"இந்தியர்கள் சபிக்கப்பட்ட ஒர் இனம். அவர்களது பிரச்னைகள் பல வகையானவை. அவர்களுக்கு நியாயம் கேட்பது அனைத்து மலேசியர்களுக்கும் நியாயம் கிடைப்பதற்கு போராடுவதற்கு ஒப்பாகும்."     "எங்கு பிஎஸ்எம் ஹிண்ட்ராப்-பிலிருந்து வேறுபடுகிறது" மாற்றத்துக்கான வாக்கு: ஹிண்ட்ராப்பை பிஎஸெம்-முடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. கண்ணுக்குத் தெரியாத கோட்பாடுகளை காட்டுவதில் சுங்கை…

கோத்த ராஜா தொகுதியிலிருந்து HRP-யின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்?

அடுத்த பொதுத்தேர்தலில் கோத்த ராஜா நாடாளுமன்ற தொகுதியை பக்கத்தான் ரக்யாட்டிடமிருந்து கைப்பற்றுவதில் மனித உரிமைகள் கட்சி (HRP) "மிகுந்த நம்பிக்கை" கொண்டுள்ளது. கோலாலம்பூரில் நேற்றிரவு நடந்த ஒரு தேர்தல் நிதி திரட்டல் நிகழ்ச்சியில் எச்ஆர்பியின் தற்போதைய தலைமைச் செயலாளர் பி. உதயகுமார் கோத்த ராஜாவை அக்கட்சியின் முன்னிலை தொகுதி…

பிரதமர் மன்னிப்புக் கேட்டது, தன்னடக்கத்தைக் காட்டுகிறது

2008ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மோசமான அடைவு நிலையைப் பெற்றது உட்பட கடந்த கால பிஎன் தவறுகளுக்காக அந்தக் கூட்டணியின் சார்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருப்பது அந்தக் கட்சியின் தன்னடக்கத்தை காட்டுகிறது என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறியிருக்கிறார். எதிர்காலத்தை குறிப்பாக…

நஜிப் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதை பிகேஆர் குறை கூறுகிறது

பிஎன் கடந்த காலத்தில் செய்த தவறுகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல் அதற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மன்னிப்புக் கேட்பதில் அர்த்தமில்லை என பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் கூறுகிறார். என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனச் சர்ச்சை போன்ற பொது நிதி முறைகேடுகள், ஊழல்…

கெடா தகராறு தீர்க்கப்பட்டு விட்டது என்கிறார் பாஸ் உதவித் தலைவர்…

கெடா மாநில அரசாங்கத்தில் சர்ச்சையில் ஈடுபட்டுள்ள தலைவர்களுக்கு இடையில் நிலவும் தகராற்றுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. பாஸ் தலைமைத்துவத்துக்கும் அந்தக் கட்சியின் கெடா தலைமைத்துவத்துக்கும் இடையில் நேற்றிரவு நிகழ்ந்த கூட்டத்தில் ஏகமனதாக அந்தத் தீர்வு காணப்பட்டது என பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் அயூப் சொன்னதாக சினார் ஹரியான் செய்தி…