பெர்காசா: தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் ரெவ.இயு விசாரிக்கப்பட வேண்டும்

கடந்த சனிக்கிழமை ஒரு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் அரசமைப்புச் சட்டம் 153 குறித்து கேள்வி எழுப்பிய ஒரு கிறிஸ்துவ சமய குரு மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலாய் உரிமைகளுக்காகப் போராடும் பெர்காசா கேடுக்கொண்டுள்ளது. ரெவரெண்ட் இயு ஹோங் செங் மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராக்களின் உரிமைகள்…

இண்டர்லோக் மீட்டுக்கொள்ளப்பட்டதா? இந்திய NGO-களுக்கு நம்பிக்கை இல்லை

ஐந்தாம் படிவ இலக்கிய நூலான இண்டர்லோக் மீதான பிரச்னைக்கு முடிவு கட்டப்பட்டிருப்பதாகக்  கூறப்படுவதில் இந்திய NGO-கள் கூட்டமைப்பின் பேராளர்களுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை. இவ்வாண்டு தொடக்கத்தில் ஒரு பாட நூலாக அறிமுகமான அந்நாவல் குறித்து பல்வேறு தரப்பினரும், குறிப்பாக இந்திய சமூகத்தினர் ஓராண்டு காலமாகக் குறை கூறி வந்ததை…

பிகேஆர்: குதப்புணர்ச்சி தீர்ப்புநாளில் குழப்பம் விளைக்க எண்ணவில்லை

குதப்புணர்ச்சி II வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் நாளான ஜனவரி 9-இல், பேரணி நடத்தவும் “குழப்பம்” விளைவிக்கவும் மக்களைத் தூண்டிவிடுவதாகக் கூறப்படுவதை பிகேஆர்  மறுக்கிறது. பிகேஆர் உறுப்பினர்களைப் பேரணி நடத்துமாறு தாம் கேட்டுக்கொண்டிருப்பதாகக் கூறும் குறுஞ்செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக அதன் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார். “அதை…

நாளேடு ராமசாமியின் குற்றச்சாட்டை மறுக்கிறது

ஆங்கில நாளேடான த ஸ்டார், பினாங்கு 2ஆம் துணை முதலமைச்சர் பி.ராமசாமி தம் கூற்று திரித்துக் கூறப்பட்டிருப்பதாக சுமத்தியுள்ள குற்றச்சாட்டை மறுத்து தம் செய்தியாளர் சொல்வதே உண்மை என்றும் சாதிக்கிறது. “பினாங்கு 2ஆம் துணை முதலமைச்சர் பி.ராமசாமியுடனான நேர்காணலை அடிப்படையாக வைத்து எங்கள் செய்தியாளர் இயன் மெக்இண்டயர் எழுதிய…

ஷாரிசாட்டிடமிருந்து பதவிவிலகல் கடிதம் இல்லை:முகைதின்

சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலில், பதவி விலகுவதாகக் கடிதம் கொடுக்கவில்லை என்று முன்னர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் முன்னர் கூறியதையே துணைப் பிரதமர் முகைதின் யாசினும் இன்று எடுத்தொலித்தார். யுஐடிஎம் பூஞ்சாக் ஆலமில் செய்தியாளர்கள் வினவியதற்கு, “தா’ அடா (அப்படி ஒன்றும் இல்லை)”,…

ராமசாமி, எம்எஸ்எம்-இடம் பேசக்கூடாது என்ற முதலாவது விதியை மறந்து விட்டார்

“அரசுதொடர்புடைய எம்எஸ்எம், மாற்றரசுக் கட்சியைத் தாக்கும் வாய்ப்பு எப்போ எப்போ என்று காத்திருக்கின்றது. இது தெரிந்தும் டிஏபி தலைவர்கள் எம்எஸ்எம் வழியாகத்தான் தங்கள் மனக்குறைகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறார்கள்.” "திரித்துக் கூறிவிட்டார்கள் என்கிறார் ராமசாமி, மறுபடியும்" பெயரிலி_4031: செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டுவது நல்லதல்ல என்பது பினாங்கு 2ஆம் துணை முதலமைச்சர்…

கடல்பெருக்கால் திரெங்கானு கடற்கரை பாழானது

திரெங்கானுவில், கடல்பெருக்கும் ராட்சத அலைகளும்  பல கடற்கரைகளை அரித்துப் பாழாக்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இவ்வளவு மோசமான கடல் சீற்றம் ஏற்பட்டதில்லை என்று கூறப்படுகிறது. அடுத்த மாதம்வரை நீடிக்கும் என்று முன்னறிவிக்கப்பட்டுள்ள கடலின் சீற்றத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ஒன்று டுங்குன்.டுங்குனில் தெலுக் லிபாட் கடற்கரையைப்…

முகைதின்: பாரிசான் வளர்த்த ஒற்றுமையை அழித்து விடாதீர்

பாரிசான் மிகச் சிரமப்பட்டு உருவாக்கிய நாட்டின் ஒற்றுமையை கீழறப்புச் செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிராக துணைப் பிரதமர் முகைதின் யாசின் இன்று கடும் எச்சரிக்கை விடுத்தார். "நாம் என்றுமே உதாசீனப்படுத்தாத அடிப்படை முயற்சிகளில் ஒன்று வலுவான ஒற்றுமைக்கான  சூழ்நிலையை உருவாக்கியதாகும். "கடந்த 54 ஆண்டுகளாக நாம் உருவாக்கிய இதற்கான அடித்தளம்…

திரித்துக்கூறி விட்டார்கள் என்கிறார் ராமசாமி, மறுபடியும்

துணை முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறியிருப்பது குறித்து கொஞ்சமும் கலக்கம் உறாத பி.ராமசாமி,  செய்தித்தாள் ஒன்று தாம் சொன்னத்தைத் திரித்துக் கூறியதுதான் இப்போதைய சர்ச்சைக்குக் காரணம் என்று பழியைச் செய்தித்தாள்மீது போட்டிருக்கிறார். டிசம்பர் 23-இல் த ஸ்டார் செய்தித்தாளில்…

நான்கு மாநிலங்களில் வெள்ளம்: 3,000 பேர் வெளியேற்றம்

ஜோகூர், பகாங், சாபா ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தின் காரணமாக பலர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தனர். இன்னொரு மாநிலமான சரவாக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2,734 பேர் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். ஜோகூரில் 1,437 பேர், பகாங்கில் 946 பேர், சாபாவில் 351 பேர். சரவாக்கில் ஏழு குடும்பங்கள் அவர்களின்…

யுஐடிஎம் கருத்துக்கணிப்பு: இளைஞர்கள் அரசுக்கு எதிரானவர்கள் அல்லர்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இளைஞர்களை நெருங்கிச் செல்லும் முயற்சிகளை மேற்கொண்டதன் பயனாக  70 விழுக்காட்டு இளைஞர்கள் அரசாங்கத்துக்கு அனுசரணையாக இருப்பது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. 2010-இலிருந்து மேற்கொள்ளப்பட்ட அவ்வாய்வில் கலந்துகொண்ட இளைஞர்கள், சமூகக் கட்டமைப்பு ஊடகத்தைப் பயன்படுத்தித் தங்கள் கருத்துக்களை நேரடியாக அறியும் நஜிப்பின்…

இப்போது பேராக் டிஎபியில் புகைச்சல்

பினாங்கில் டிஎபி தலைவர்களான கர்பாலுக்கும் இராமசாமிக்கும் இடையிலான மோதல் இன்னும் தீராத வேளையில், பேராக் டிஎபியில் புகைச்சல் கிளம்பியுள்ளது. பேராக் மாநில டிஎபியின் இங்கா கோர் மிங்கின் மனைவி சம்பந்தப்பட்டுள்ள ஒரு தையல் ஒப்பந்த விவகாரத்தில் அவர் உண்மையைக் கூற வேண்டும் என்று டிஎபியின் தேசிய உதவித் தலைவரான…

சுயதேவைக்கு அதிகமாக கோருகின்ற உலகம் இது, காலிட் இப்ராகிம்

கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் கிறிஸ்துவ சமயத்தினருக்கும் இன்னும் சில தினங்களில் புத்தாண்டைக் கொண்டாடவிருக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் சிலாங்கூர் மந்திரி புசார்  அப்துல் காலிட் இப்ராஹிம்  தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.           "பல்லின மக்களைக் கொண்ட நாட்டில் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை ஒவ்வோராண்டும் உணர்த்தும் விழாவாக கிறிஸ்துஸ்…

இருப்போர் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும், சேவியர் ஜெயக்குமார்

"கிறிஸ்துமஸ் பண்டிகையின் சிறப்பே இருப்போர் இல்லாதவர்களுக்கு தந்து உதவுவது மட்டுமின்றி அன்பை அனைவரிடமும் பரிமாறிக் கொள்வதில்தான் உள்ளது", என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் அவரது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தில் கூறுகிறார். மலேசிய மக்கள் அனைவருக்கும் தமது கிறிஸ்துமஸ் வாழ்த்தைத் தெரிவித்துக்கொண்ட சேவியர், அனைத்து கிறிஸ்துவ…

டிஏபி தலைவர்கள் இருவரும் சமாதானம் ஆக மாட்டார்கள்போல் தெரிகிறது

“ராமசாமியைத் தண்டிப்பதாக இருந்தால், கர்பாலுக்கும் அதே தண்டனையைக் கொடுக்க வேண்டும். இருவருக்குமிடையில் பகை முற்றிப்போயுள்ளது.”   ராமசாமி பதவி விலக வேண்டும் என்று கர்பால் கோரிக்கை சூசாகேஸ்: பக்காத்தான் ரக்யாட் ஐயாக்களே,  ஊழல்மிகுந்த மலேசிய அரசியலில் நேர்மையை நிலைநாட்டுவதற்கு பெரும் தியாகங்கள் செய்த பெருமக்கள் உங்களில் பலர் இருக்கலாம்.…

இராமசாமி துணை முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும், கர்பால்

பினாங்கு துணை முதலைமச்சர் II பதிவியிலிருந்து டாக்டர் பி. இராமசாமி விலகிக்கொள்ள வேண்டும் என்று டிஎபியின் தேசியத் தலைவர் கர்பால் சிங் இன்று விடுத்த கோரிக்கை அவர்கள் இருவருக்குமிடையிலான மோதலை மேலும் வலுவடையச் செய்துள்ளது. கட்சி மற்றும் கட்சியின் தலைவர்களை பகிரங்கமாக குறைகூறுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்று…

கார் நிறுத்துமிடம் கட்டப்பட்டது, ஆனால் கார்களை நிறுத்த முடியவில்லை

பினாங்கு கொடிமலை அடிவாரத்தில் ரிம5 மில்லியன் செலவில் கட்டப்பட்ட கார் நிறுத்துமிடம் கிறிஸ்மஸ் பரிசாக திறப்புவிழா காணும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. 120-கார்கள் நிறுத்தும் வசதிகொண்ட அந்த நிறுத்துமிடத்தைக் கட்டிமுடிக்கப்படும் பொறுப்பு சுற்றுலா அமைச்சால் பினாங்கு மேம்பாட்டுக் கழகத்திடம்(பிடிசி) ஒப்படைக்கப்பட்டு அதுவும் கட்டி முடித்து…

அரசு கொள்கையைக் குறைகூறியதற்காக ஹசான் அலி மன்னிப்பு கேட்டார்

முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையர் ஹசான் அலி, கட்சியின் சமூகநலக் கொள்கையைக் குறைகூறியதற்கு மன்னிப்புக் கேட்டதுடன் அவ்விவகாரம் தொடர்பில் தாம் கூறியதையெல்லாம் மீட்டுக்கொண்டிருக்கிறார். “பாஸ் உறுப்பினர் மற்றும் மத்திய செயல்குழு உறுப்பினர் என்ற முறையில், அவ்விவகாரம் தொடர்பில் கருத்துரைத்தபோது எல்லைமீறிவிட்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். “சமூகநல அரசு தொடர்பில் நான்…

தெண்டோங் சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் டாவுட் காலமானார்

பாஸ் தெண்டோங் சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் டாவுட் இன்று காலை மணி 12.55 அளவில் மாரடைப்பால் காலமானார். அச்செய்தியை பாஸ் ஆன்மீக தலைவர் நிக் அசிஸ் நிக் மாட் தமது பேஸ்புக்கில் இன்று அதிகாலையில் பதிவு செய்தார். அவரது சவ அடக்கம் இன்று பிற்பகல் நடைபெறும் என்று பாசிர்…

தண்டனை குற்றத்தைக் குறைக்காது; ஊக்குவிக்கும்

உங்கள் கருத்து: “இன்னொரு சிலாங்கூர் எம்பியான ஹருன் இட்ரிசுக்கு ஆறாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டில் நீதிமன்றம் தண்டனையைக் கூட்டும் என்று எதிர்பார்ப்போம்.” கீர் தோயோவுக்கு 12-மாதச் சிறை வீரா: குற்றவியல் சட்டம் பகுதி 165-இன்கீழ் கூடினபட்ச தண்டனை ஈராண்டுச் சிறையாகும். முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் டாக்டர்…