பொருளாதார நிலை சாதகமாக இருந்தால், 2027-ஆம் ஆண்டு மத்திய வரவு செலவுத் திட்டத்தில் சபா மாநிலத்திற்கான சிறப்பு மானியத்தை அதிகரிப்பதைக் குறித்து மத்திய அரசு பரிசீலிக்கத் தயாராக உள்ளது என்று முஸ்தபா சக்மூட் தெரிவித்தார். "பொருளாதார நிலை இடமளித்தால், சபாவுக்கான சிறப்பு மானியத்தை அதிகரிப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது…
டிஏபி: வான் அகமட் வாக்காளர்களை அவமதிக்கிறார்
பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பட வேண்டும் என மலேசியர்களில் 92 விழுக்காட்டினர் விரும்புவதாகக் கூறும் மெர்தேக்கா மய்ய ஆய்வு முடிவுகளை தேர்தல் ஆணையம் (இசி) நிராகரித்துள்ளது - அந்த அமைப்பு சுயேச்சையாக இயங்கவில்லை என்பதை மெய்பிப்பதாக டிஏபி கூறுகிறது. அந்த ஆய்வு முடிவுகளை 'அற்பமானவை' என…
உங்கள் கருத்து: அச்சத்தை மூட்டுவதும் மிரட்டுவதும் இனிமேல் வேலை செய்யாது
"அரசாங்கம் மருட்டுவதையும், கைது செய்வதையும் அடிப்பதையும் தொடர்ந்தால் அது தனது மரண ஒலையில் கையெழுத்திடுவதற்கு ஒப்பாகும்." பெர்சே பேரணிக்குப் பின்னர் அரசாங்கம் அச்சத்தை மூட்டி வருகிறது கைரோஸ்: அரசாங்கம் தொடங்கியுள்ள அச்சத்தை மூட்டும் மிரட்டும் இயக்கம் வெற்றி பெறப் போவதில்லை.சுதந்திரமான மனித உணர்வை நீங்கள் எப்படிக் கட்டுப்படுத்த முடியும் ?…
நஜிப்: பெர்சே 3.0 ஆல் சிறு கடைக்கார்களுக்கு “மில்லியன்” கணக்கில்…
ஏப்ரல் 28 இல் நடத்தப்பட்ட பெரும் பேரணியால் சிறு கடைக்காரர்களுக்கு "மில்லியன்" கணக்கில் நட்டம் ஏற்பட்டது என்று இன்றிரவு நஜிப் பெர்சே 3.0 ஐ கடுமையாகத் தாக்கிப் பேசினார். எந்த இடத்தில் பெர்சே 3.0 பேரணி நடப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதோ அதே இடத்தில் நின்றுகொண்டு சுமார் 10,000 சிறு…
எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்கு வழங்கப்பட்ட நிலத்தை மீட்கும் வரையில் உண்ணாவிரதம்
பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் அமைந்திருக்கும் எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்கு அப்பகுதி நில மேம்பாட்டாளர் வழங்கிய நிலத்தை பள்ளிகே மீட்கும் வரையில் உண்ணாவிரதம் இருக்கும் நடவடிக்கையை தமிழ்ப்பள்ளி நில மீட்பு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த எழுவர் மேற்கொண்டுள்ளனர். அக்குழுவைச் சேர்ந்த தில்லை அம்பலம், பாலகுமரன், பழனிவேலன், லோகநாதன், சுரேஷ்குமார், தமிழ்ராஜன்…
பக்காத்தான் நாடற்ற இந்தியர் பிரச்னை மீது செயல்படத் தொடங்கியுள்ளது
பக்காத்தான் ராக்யாட் இந்திய சமூகத்துக்கு உதவி செய்யத் தவறி விட்டதாக ஹிண்ட்ராப் தொடர்ந்து குறை கூறி வந்த போதிலும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் இந்த நாட்டில் பிறந்தும் நாடற்றவர்களாக இருக்கு நூற்றுக்கணக்கான மக்களை பதிவு செய்யும் நடவடிக்கையை இன்று தொடங்கியது. "அந்தப் பிரச்னை இனிமேலும் இந்தியர் பிரச்னை அல்ல.…
‘நாடற்ற இந்தியர்கள்’ பக்காத்தான் முன்னுரிமை கொடுக்கும் விஷயங்களில் அடங்கும்
பக்காத்தான் ராக்யாட் ஆட்சிக்கு வந்தால் அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் விஷயங்களில் நாடற்ற இந்தியர்கள் பிரச்னை ஒன்றாக இருக்கும் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று வாக்குறுதி அளித்துள்ளார். அவர் இன்று பிற்பகல் நடைபெற்ற இண்ட்ராப் 2.0 பேரணியில் பேசிய போது அந்த வாக்குறுதியை அளித்தார். இந்த நாட்டில்…


