நேற்று இரவு சிலாயாங் பாருவில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையில் மொத்தம் 843 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர்கள் கைது செய்யப்பட்டனர். குடியேற்றச் சட்டத்தின் கீழ் அவர்கள் பல்வேறு குற்றங்களைச் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. மாநில பாதுகாப்புக் குழுவின் தலைவரான சிலாங்கூர் மந்திரி புசார் அமிருதின் ஷாரி, கைது செய்யப்பட்டவர்களில் இந்தோனேசியா, பங்களாதேஷ், இந்தியா,…
போலீஸ் படையின் நேர்மை உயர்வுக்கு ரிம200 மில்லியன்
மலேசிய போலீஸ் படையின் நேர்மை உயர்த்தப்படுவதற்கு அரசாங்கம் ரிம200 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீட்டை அளிக்கும் என்று பிரதமர் நஜிப் நேற்று அவரது பட்ஜெட் உரையில் தெரிவித்தார். இதனுடன், 2012 ஆண்டில் போலீஸ் படையின் மேம்பாட்டு செலவிற்காக ரிம442 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.…
நஜிப் வரவு செலவுத் திட்டம் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு இல்லை என்கிறார்…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அதிக விளம்பரம் கொடுக்கப்பட்ட தமது "சீர்திருத்த" முயற்சிகளுக்கு 2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முதலிடம் கொடுக்கத் தவறி விட்டதாக பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறுகிறார். கடந்த ஏழு ஆண்டுகளில் அரசாங்கக் கடன்கள் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு கூடியிருப்பது…
மக்கள் கூட்டணியின் நிழல் பட்ஜெட் மக்களின் சுமையைக் குறைத்து பலனைக்…
இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசாங்கத்தின் வரவு செலவு அறிக்கைக்கு மாற்றாக மக்கள் கூட்டணி அறிமுகப்படுத்தியுள்ள நிழல் பட்ஜெட் மக்களின் தேவைகள் மற்றும் அதிகரித்துவரும் சுமைகள் ஆகியவற்றை அறிந்து அவர்களின் சுமையைக் குறைக்கவும் பலனைக் கூட்டவும் வழி செய்கிறது என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ…
அரசாங்கப்பள்ளிகளில் இலவசக் கல்வி
2012 ஆம் ஆண்டிலிருந்து நாட்டிலுள்ள அரசாங்க தொடக்க மற்றும் இடைநிலைப்பள்ளிகளில் கல்வி இலவசமாக்கப்படும் என்று பிரதமர் நஜிப் இன்று கூறினார். மலேசிய குழந்தைகளின் சமூக-பொருளாதார சூழ்நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தரமான மற்றும் பெற்றிருக்க வேண்டிய கல்வியை வழங்குவது இதன் நோக்கமாகும் என்று பிரதமர் தெரிவித்தார். "தற்போது,…
2012 வரவு செலவுத் திட்டத்தில் முக்கியமான அம்சங்கள் (தொடர்ச்சி)
அரசாங்கச் சேவை: -பிரிவுகளை பொறுத்து அரசாங்கச் சேவையில் உள்ளவர்களுக்கு 7 விழுக்காடு முதல் 13 விழுக்கடு வரையில் சம்பள உயர்வு. -ஒய்வு பெறும் வயது 58லிருந்து 60ஆக உயர்த்தப்படும். -600,000 அரசாங்க ஒய்வூதியக்காரர்களுக்கு கூடுதலாக ஆண்டுக்கு 2 விழுக்காடு ஓய்வூதியத் தொகை உயர்வு வழங்கப்படும். -ஒய்வூதியத்துக்கு தகுதியில்லாத 175,000…
2012 வரவு செலவுத் திட்டத்தில் முக்கியமான அம்சங்கள்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் அறிவித்த 2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ள முக்கியமான அம்சங்கள்: மொத்த வரவு செலவு -232.8 பில்லியன் ரிங்கிட், கூடுதல் 9.4%. நடைமுறைச் செலவுகள்- 181.6 பில்லியன் ரிங்கிட் கூடுதல் 11.5%. மேம்பாட்டுச் செலவுகள்- 51.2…
சுவாராம்: ஜுலை 9 “போலீஸ் முரட்டுத்தனத்துக்கு” மன்னிப்புக் கேட்க வேண்டும்
ஜுலை 9ம் தேதி அமைதியான பெர்சே 2.0 ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது 262 கண்ணீர் புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, போலீசார் முரட்டுத்தனத்துக்கு தக்க சான்று என சுவாராம் என்ற மனித உரிமைப் போராட்ட அமைப்பு கூறுகிறது. அதனால் அதிகாரிகள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அது வலியுறுத்தியது. பலத்தைப் பயன்படுத்தியதற்காக…
அரசாங்க ஊழியர்கள் சம்பள உயர்வு: கேள்வி எழுப்புகிறார் அரசாங்க பொருளாதார…
பொதுத் தேர்தல் வரப்போவதால், இன்று பின்னேரத்தில் 2012 க்கான வரவுசெலவு திட்டத்தில் (பட்ஜெட்) பிரதமர் நஜிப் நாட்டின் 1.2 மில்லியன் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பார் என்று ஊகிக்கப்படுகிறது. ஆனால், நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதில் இந்த நடவடிக்கை எந்த அளவிற்கு ஆற்றலுடையதாக இருக்கும்…
பிகேஆர்: பயன்படுத்தப்பட்ட கண்ணீர்ப் புகைக் குண்டுகள் அளவுக்கு அதிகமானவை
பெர்சே 2.0 பேரணி மீது வீசப்பட்ட 262 கண்ணீர் புகைக் குண்டுகள், அமைதியாக நடந்த ஒர் ஊர்வலத்தை சமாளிப்பதற்கு தேவைப்படும் உண்மையான பலத்துடன் ஒப்பிடுகையில் மிக அதிகம் என பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் கூறுகிறார். "அந்தப் பேரணி மிக அமைதியாக நடைபெற்றது என்பதைக் காட்டுவதற்கு மறுக்க…
கொள்ளையடித்ததாக எம்ஏசிசி மூவர் மீது குற்றம் சாட்டப்படும்
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பணமாற்று வணிகர் ஒருவரிடமிருந்து 900,000 ரிங்கிட் பெறும் அந்நிய நாணய நோட்டுக்களைத் திருடியதாக கூறப்படும் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் மூன்று அதிகாரிகள் மீது இன்று குற்றம் சாட்டப்படும். பண்டார் சாலாக் திங்கியில் உள்ள சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு அவர்கள்…
நெகிரி செம்பிலான் சொற்பொழிவுக் கூட்டம் ஒன்றில் சலசலப்பு
நேற்றிரவு நெகிரி செம்பிலான் ரெம்பாவில் எதிர்த்தரப்பு கூட்டம் நடத்திக் கொண்டிருந்த இடத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற முன்னாள் இராணுவ வீரர்களின் குழு ஒன்றை பக்காத்தான் ராக்யாட் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர். தேசிய வீரர்களை கௌரவிக்கும் இயக்கம் ( Gerakan Memartabatkan Pejuang Negara ) எனத் தன்னை அழைத்துக்…
“தீர்ப்பை திருடிய நீதிபதி” வழக்கு இருக்கிறது, முன்னாள் அமைச்சர் உறுதிப்படுத்தினார்
ஒரு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக தீர்ப்பை திருடியது பற்றி ஓர் அதிகாரப்பூர்வமான புகார் 2000 ஆண்டில் செய்யப்பட்டது என்பதை அப்போது சட்ட அமைச்சராக இருந்த ராயிஸ் யாத்திம் உறுதிப்படுத்தினார். "அன்றைக்கும் இன்றைக்கும் இடையில் நீண்ட காலம் கடந்து விட்டது. ஆனால், அவ்வழக்கு பற்றி எனக்குத் தெரியும்", என்று…
பெர்சே பற்றிய கருத்துக்காக பிஎஸ்சி தலைவர் கண்டிக்கப்பட்டார்
நாடாளுமன்ற தேர்தல் சிறப்புக்குழுவிடம் (பிஎஸ்சி) பரிந்துரைகள் வழங்க தடைசெய்யப்பட்டுள்ள பெர்சே 2.0 வரவேற்கப்படவில்லை என்று தன்னிச்சையாக அறிவித்த பிஎஸ்சின் தலைவர் மேக்சிமஸ் ஓங்கீலி பக்கத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சினத்திற்கு ஆளாகியுள்ளார். முடிவுகளை அவரே தானாக எடுப்பதாக இருந்தால், எல்லாவற்றையும் ஓங்கீலியே செய்யலாமே என்று அவரை பக்கத்தான் பிஎஸ்சி உறுப்பினர்கள்…
தெங்கு ரசாலி ‘வாக்களியுங்கள்- Undilah-’ என்ற வீடியோவை பாராட்டுகிறார்
வாக்காளர்களாக பதிந்து கொள்ளுமாறு மக்களைக் கேட்டுக் கொள்ளும் 'வாக்களியுங்கள்- Undilah-' என்ற வீடியோவை குவா மூசாங் எம்பி தெங்கு ரசாலி ஹம்சா பாராட்டியுள்ளார். அந்த வீடியோ ஒளிபரப்பப்படுவதைத் தடை செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை அவர் கேலி செய்தார். "அவர்கள் தடை செய்ய விரும்பினால் அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. அவர்கள்…
பினாங்கில் பாஹாசா மலேசியா பயன்பாடு தொடர்பில் ராயிஸ் மீது லிம்…
இந்த நாட்டின் தேசிய மொழியான பாஹாசா மலேசியாவின் பயன்பாட்டை பினாங்கு மாநிலம் புறக்கணிக்கிறதா என்பது மீது முதலமைச்சர் லிம் குவான் எங்-கிற்கும் தகவல், பண்பாடு, தொடர்பு அமைச்சர் ராயிஸ் யாத்திமுக்கும் இடையில் வாக்கு வாதம் தொடருகிறது. பினாங்கில் நிகழ்ந்த அந்த தனியார் நிகழ்வில் தாம் பாஹாசா மலேசியாவில் பேசியதை…
சுகாதார அமைச்சு: ‘புகைக் குண்டுகளை’ வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க…
துங் ஷின் மருத்துவமனை சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சுகாதார அமைச்சின் அறுவர் கொண்ட குழு, அந்த மருத்துவமனைக்கு அருகில் இருந்த மகப்பேறு மருத்துவமனைக்குள் புகைக் குண்டுகளை வீசிய போலீஸ் அதிகாரிகள் மீது உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. அத்தகைய சம்பவங்கள் மீண்டும்…
டாக்டர் மகாதீர்: 2020 இலட்சியத்தை அடைவதற்கு நடப்பு முறையைத் தொடருங்கள்
2020ல் வளர்ச்சி அடைந்த நாடு என்னும் இலட்சியத்தை நாடு அடைவதற்கு உதவியாக வளப்பத்தையும் அதிகாரத்தையும் பகிர்ந்து கொள்ளும் நடப்பு முறை தொடர வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார். அந்த முறை குறிப்பாக நாட்டின் முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அறிமுகம் செய்த…
பிஎஸ்சி தலைவருடைய ‘தன் மூப்பான முடிவை’ பக்காத்தான் சாடுகிறது
தடை செய்யப்பட்டுள்ள பெர்சே 2.0 அமைப்பு பரிந்துரைகளை வழங்குவதை பிஎஸ்சி என்னும் நாடாளுமன்றத் தேர்வுக் குழு வரவேற்காது என அந்தக் குழுவின் தலைவர் மாக்ஸிமுஸ் ஜானிட்டி ஒங்கிலி தன் மூப்பாக செய்துள்ள முடிவை பக்காத்தான் ராக்யாட் எம்பி-க்கள் கடுமையாக சாடியுள்ளனர். ஒங்கிலி சொந்தமாக அத்தகைய முடிவுகளை செய்யப் போகிறார்…
மோதிரமே, மோதிரமே என்னை ஏன் நீ அழைத்திருக்கக் கூடாது?
"அந்த மர்மத்துக்கு துல்லிதமான பதிலை யாரும் கொடுக்கவில்லை. அவர்கள் அனைவரும் பொய்யர்கள். அந்த 'மோதிரத்துக்கு' மட்டும்தான் உண்மை தெரியும் எனத் தோன்றுகிறது." அந்த ஒரு மோதிரம் நம் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது லூயிஸ்: மோதிரம் அதனை விற்றவருக்கே திருப்பி அனுப்பப்பட்டு விட்டது என்றால் பின் வரும் செலவுகளுக்கு யார் பணம்…
நஜிப், ரோஸ்மாவுக்கு அனுப்பப்பட்ட சப்பினாவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் குதப்புணர்ச்சி II வழக்கில் சாட்சியமளிக்க மாட்டார்கள். அன்வார் இப்ராஹிம் மீதான விசாரணையில் பிரதிவாதித் தரப்புச் சாட்சிகளாக சாட்சியமளிப்பதற்கு அனுப்பப்பட்ட சப்பினாவை கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் ஜபிடின் முகமட் டியா இன்று தள்ளுபடி செய்ததே அதற்குக்…
சாட்சிகள் இல்லை, அதனால் தவறு செய்த போலீஸ்காரர் மீது வழக்குப்…
ஜுலை 9ம் தேதி பெர்சே 2.0 பேரணியின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அதிகமான முரட்டுத்தனத்தைக் காட்டியதாக கூறப்படும் போலீஸ் அதிகாரியை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். தவறு செய்த அந்த அதிகாரி மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் சிஐடி தலைவர் கூ சின் வா நேற்று தொடர்பு கொள்ளப்பட்ட…


