பணிநீக்கம் செய்யப்பட்ட பள்ளி துப்புரவு தொழிலாளர்கள் ஐஆர்டி-யில் புகார்

சிலாங்கூரில், தங்களது முதலாளிகளால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் துப்புரவு தொழிலாளர்கள், சிலாங்கூர் தொழில்துறை தொடர்பு இலாகாவில் (ஐஆர்டி), தொழில்துறை தொடர்பு சட்டம் 20-ம் பிரிவின் கீழ், மனு தாக்கல் செய்தனர். நேற்று, 8 பள்ளிகளில், பல்வேறு ஒப்பந்த நிறுவனங்களால் பணிக்கமர்த்தப்பட்ட அந்த 35 தொழிலாளர்களும், கடந்த மே 31-ம்…

அமைச்சருடன் பல தடவை ‘தனித்திருந்தது’ உண்டு- ஹசிக்

சந்துபோங் பிகேஆர் தொகுதி இளைஞர் தலைவர் ஹசிக் அப்துல்லா அப்துல் ஹசிஸ், பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலியுடன் பல தடவை ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டது உண்டு என்று திரும்பவும் வலியுறுத்தியுள்ளார். இன்று காலை முகநூலில் பதிவிட்டிருந்த அவர் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அக்காணொளி பொய்யானது என்று குறிப்பிட்டிருப்பது…

போலீஸ் சிறப்புப் பிரிவு அரசாங்கத்தின் கைக்கருவியாக செயல்படாது- ஐஜிபி

போலீஸ் சிறப்புப் பிரிவு, முந்தைய அரசாங்கத்தில் எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதற்குப் பயன்பட்டதுபோல், அரசாங்கத்தின் கைக்கருவியாகச் செயல்பட ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோர் கூறினார். “சிறப்புப் பிரிவு குறைகூறல்களை அடக்கி வைக்கும் ஒரு கருவி அல்ல. அது அப்படிச் செயல்பட நான் அனுமதியேன்.…

ஒப்பந்தத் துப்புரவாளர்களின் பிரச்சனையைத் தீர்க்க அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்க,…

தனது அமைச்சின் கீழ் வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க, எதை வேண்டுமானாலும் செய்வோம் என்று கூறியுள்ள கல்வியமைச்சர் மஸ்லி மாலிக்-ஐ மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) பாராட்டியுள்ளது. இருப்பினும், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண, கல்வி அமைச்சர் மஸ்லி மாலேக் மட்டுமின்றி, நிதி அமைச்சர் லிம்…

கேமரன் மலை எம்பி: ஓராங் அஸ்லி இறப்புகள்மீது சிறப்பு விசாரணைக்…

குவா மூசாங், கோலா கோ-வில் ஓராங் அஸ்லி மக்கள் 14 பேர் இறந்ததற்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியைத் துரிதப்படுத்த சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அரசாங்கம் அமைக்க வேண்டும் என கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் ரம்லி முகம்மட் நோர் வலியுறுத்தினார். நாட்டின் முதலாவது ஓராங் அஸ்லி எம்பி…

செக்ஸ் வீடியோ பரப்பப்படுவதை நிறுத்துக_ பிகேஆர்

அமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் பாலியல் வீடியோ ஒன்றைச் சமூக ஊடகங்களில் பரப்புவதைப் பொதுமக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என பிகேஆர் கேட்டுக்கொண்டுள்ளது. இன்று ஓர் அறிக்கையில் பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், “சாக்கடை அரசியல்” நாட்டுக்கு எந்த விதத்தில் நன்மையளிக்காது என்றும் பிகேஆர் அதற்கு எதிரி…

‘அமைச்சருடன் ஒரே படுக்கையில் இருப்பது நானே’- ஆடவரின் அதிர்ச்சி வாக்குமூலம்

செக்ஸ் வீடியோ ஒன்றில் அமைச்சர்போல் தோற்றமளிக்கும் ஒருவருடன் ஒரே படுக்கையில் இருக்கும் ஆடவர் வாக்குமூலம் ஒன்றைப் பதிவேற்றி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். அந்தப் பாலியல் காணொளியில் காணப்படும் ஆடவர் தானே என்று கூறிக்கொண்ட முகம்மட் ஹவீஸ் அப்துல் அசீஸ், தன்னுடன் இருப்பவர் ஓர் அமைச்சர் என்றார். அமைச்சர்மீது எம்ஏசிசி விசாரணை…

செக்ஸ் வீடியோவைப் புறக்கணிப்பீர்: கைரி கோரிக்கை

செக்ஸ் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதை “அசிங்க” அரசியல் என்று குறிப்பிட்ட ரெம்பாவ் எம்பி ஜமாலுடின், அக்காணொளியைப் புறக்கணிக்குமாறு மலேசியர்களைக் கேட்டுக்கொண்டார். அக்காணொளி அமைச்சர் போல் தோற்றமளிக்கும் ஒருவர் இன்னொரு ஆடவருடன் ஒரே படுக்கையில் இருப்பதைக் அக்காணொளி காண்பிக்கிறது. “அரசியல் ஒரு கடுமையான தொழில். சில…

வட கொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் சிஐஏ-க்குத் தகவல் சொல்பவராம்

வட கொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரரும் 2017-இல் மலேசியாவில் கொலையுண்டவருமான கிம் ஜோங் உன், அமெரிக்க மத்திய உளவுத் துறை(சிஐஏ)க்குத் தகவல் சொல்லியாக இருந்து வந்தவர் என வால் ஸ்ட்ரிட் ஜர்னல் நேற்று கூறியது. “தகவல் அறிந்த ஒருவர்” இதைத் தெரிவித்ததாகக் கூறிய வால் ஸ்ட்ரிட் ஜரனல், ஆனால்,…

‘ஒரு சுறாவையும் விட்டுவிடக் கூடாது’ . கிட் சியாங்

டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் எந்த ஒரு “சூறா”வையும் நீதியின் கரங்களில் சிக்காமல் தப்பிவிடக் கூடாது என்று வலியுறுத்தினார். “இப்போது எம்ஏசிசி கைநிறைய வேலை இருப்பதால் முன்னாள் அரசாங்கத் தலைவர்கள் சிலரின்மீது அதனால் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கலாம் ஆனால், அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதிலிருந்து தப்பித்துக்கொள்ள…

மருத்துவமனையில் உள்ள ஓராங் அஸ்லிகளுக்கு லெப்டோஸ்பைரோசிஸ் , டிபி இல்லை-…

14 பேர்   இறந்துபோன குவா மூசாங், கம்போங் கோ-வில் உள்ள ஓராங் அஸ்லிகள் லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் காச நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கவில்லை இல்லை என சுகாதார அமைச்சு கூறியது. ஆனாலும் அந்த 14 பேரின் இறப்புக்குக் காரணம் என்னவென்பது இதுவரை தெரியவில்லை எனச் சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அஹமட்…

14 ஓராங் அஸ்லிகள் இறப்புக்கான காரணத்தைக் கண்டுபிடியுங்கள்! இயற்கையைப் பாழாக்கும்…

பிரதமர் துறை அமைச்சர் பொ வேதமூர்த்தி, சுகாதார அமைச்சுடன் இணைந்து, 14 ஓராங் அஸ்லிகளின் இறப்புக்கான காரணத்தை விரைந்து கண்டுபிடிக்க வேண்டுமென மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வலியுறுத்தியுள்ளது. குவா மூசாங், கோலா கோ-வில், மரணமுற்ற அந்த 14 ஓராங் அஸ்லிகளின் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிவதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்…

பினாங்கில் புதிய விமான நிலையமா? மாநில அரசுக்கே தெரியவில்லை

செபராங் பிறையில் ஒரு புதிய விமான நிலையம் அமைக்கும் இரண்டு பரிந்துரைகள் குறித்து பினாங்கு அரசுக்கே தெரியவில்லை. முதலைமைச்சர் செள கொன் இயோ மாநிலத்தில் அல்லது அவ்வட்டாரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதை வரவேற்றார். “ஆனால், த ஸ்டாரில் அறிவிக்கப்பட்டிருப்பதுபோல் புதிய விமான நிலையம் அமைக்கும் இரண்டு பரிந்துரைகள்…

ஓராங் அஸ்லிகளின் மரணம்மீது பணிக்குழு அமைப்பீர்: அமனா இளைஞர்கள் கோரிக்கை

குவா மூசாங், கோலா கோ-வில் பாத்தெக் பழங்குடியைச் சேர்ந்த 14 ஓராங் அஸ்லிகளின் மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய ஒரு பணிக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று அமனா இளைஞர் பகுதி வலியுறுத்துகிறது. அதன் சுற்றுச்சூழல் பிரிவின் தலைவர் அஸிம் அப்துல்லா, அவர்களின் மரணத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய ஒரு பணிக்குழு…

இந்தியாவில் ஜாகிர் நாய்க்குக்கு எதிராக கைது வாரண்ட் பெற முயற்சி

சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாகிர் நாய்க் இந்தியாவிடமே ஒப்புவிக்கப்படலாம் என்று த இந்து கூறியுள்ளது. இந்தியாவின் சட்ட அமலாக்க இயக்ககம்(இ.டி), மும்பாய் சிறப்பு நீதிமன்றம் ஒன்றில் பணச் சலவைச் சட்டத்தின்கீழ் தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஒரு வழக்கு தொடர்பாக ஜாகிர் நாய்க்குக்கும் வேறு சிலருக்கும் எதிராக பிடி ஆணை…

கரடிக் குட்டி வைத்திருந்த பாடகர் கைது

வனவிலங்கு மற்றும் தீவகற்ப மலேசியா தேசிய பூங்கா துறை(பெர்ஹிலிடான்) கோலாலும்பூர், டேசா பாண்டானில் ஒரு கொண்டோமினியத்தில் சூரியக் கரடிக் குட்டி ஒன்றை வைத்திருந்த பாடகி ஒருவரைக் கைது செய்தது. பொதுமக்கள் அளித்த தகவலை அடுத்து பெர்ஹிலிடான் அதிகாரிகள் அந்த 27-வயது பெண்ணை அவரது வீட்டில் கைது செய்தனர். விசாரணைக்காக…

சுக்ரி: பணிவிலகல் என் சொந்த முடிவு, யாரும் கட்டாயப்படுத்தவில்லை

முதன்முறையாக, மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் முகம்மட் சுக்ரி அப்துல், ஒப்பந்த காலம் முடியும் முன்னரே பணிவிலகியது ஏன் என்று விளக்கமளித்துள்ளர். பணி விலகியது சுயமாக எடுத்த முடிவு என்றாரவர். “என் ஒப்பந்த காலத்தைக் குறைத்துக்கொண்டது நானாக செய்த முடிவு. ஆனால், முக நூல் போன்ற சமூக…

நாடாளுமன்றக் குழுவிலிருந்து வெளியேறப் போவதாக மிரட்டுகிறார் அம்னோ உதவித் தலைவர்

அம்னோ உதவித் தலைவரும் பெரா எம்பியுமான இஸ்மாயில் சப்ரி யாக்கூப், ஹரி ராயா கொண்டாட்டங்களுக்குப் பின்னர் முக்கிய பதவி நியமனங்கள் மீதான நாடாளுமன்றச் சிறப்புத் தேர்வுக் குழுவிலிருந்து விலகப் போவதாகக் கூறினார். லத்திபா கோயாவை எம்ஏசிசி தலைவராக நியமிப்பதற்குமுன் அக்குழுவுடன் ஆலோசனை கலக்காதது புத்ரா ஜெயா அக்குழுவை வெறும்…

‘தூற்றினாலும் போற்றினாலும் என் கடமையைச் செய்வேன்’ -லத்திபா சூளுரை

லத்திபா கோயா, எம்ஏசிசி தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டதைப் பலர் குறை சொன்னாலும் அவரைப் பொறுத்தவரை மலேசியாவை ஊழலற்ற நாடாக மாற்றுவதில் உறுதியாக இருக்கிறார். “ஹரி ராயாவுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட என் நியமனம் குறித்து பலர் குறை கூறியுள்ளனர். கேள்வி கேட்கவும், குறை சொல்லவும் கருத்துக் கூறவும் எல்லாருக்கும் உரிமை…

அண்மைய நியமனங்கள் குறித்து பிரதமரிடம் விளக்கம் பெற விரும்புகிறது நாடாளுமன்றக்…

பொது நியமனங்கள்மீதான நாடாளுமன்றச் சிறப்புத் தேர்வுக்குழு பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைச் சந்திக்க அனுமதி கேட்டுக் கடிதம் எழுதும். அண்மையில் செய்யப்பட்ட மூன்று முக்கிய நியமனங்கள் குறித்தும் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என அத்தேர்வுக் குழுவின் தலைவர் வில்லியம் லியோங் கூறினார். அப்துல் ஹமிட் படோர் போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஜெனரலாகவும்…

உங்கள் கருத்து: ‘நன்றி சுக்ரி. இனி, லத்திபா சொன்னபடி செய்கிறாரா,…

மேற்கொண்ட பணி முடிந்து விட்டது- எம்ஏசிசியிலிருந்து விலகியபோது சுக்ரி கூறியது பெர்ட்டான்: எம்ஏசிசி-இன் முன்னாள் தலைவர் முகம்மட் சுக்ரி அப்துல் ஓராண்டு என்னும் குறுகிய காலத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். ஆனால், ஒப்பந்த காலம் முடிவதற்கு முன்பே அவரது திடீர் பணிவிலகல் ஏதோ ஒன்று இருப்பதாக எண்ண…

‘லத்திபா நியமனத்தில் நாடாளுமன்றக் குழுவுடன் கலந்தாலோசிக்காதது நியாயமல்ல’

மலேசிய வழக்குரைஞர் மன்றம், லத்திபா கோயா எம்ஏசிசி தலைவராக நியமனம் செய்யப்பட்ட விதத்தில் அதிருப்தி அடைந்துள்ளது. மனித உரிமைகளுக்காக போராடுவதில் பெயர்பெற்றுள்ள அவ்வழக்குரைஞருக்கு சட்ட அமலாக்கத் துறையில் போதிய அனுபவம் இல்லை, அவர் அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினரும் ஆவார். இந்நிலையில் அவரை அப்பதவிக்கு நியமித்தது சரிதானா என்றும்…

நான்கு ஆவாஸ் கேமராக்கள்தான் செயல்படுகின்றனவா? மறுக்கிறது ஆர்டிடி

ஒரு செய்தித்தளத்தில் நெடுஞ்சாலைகளில் சாலைப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ஆவாஸ் கேமராக்களில் நான்கு மட்டுமே வேலை செய்வதாக வெளிவந்த தகவலைச் சாலைப் போக்குவரத்துத் துறை (ஆர்டிடி) மறுக்கிறது. ஆர்டிடி நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் 41 ஆவாஸ் கேமராக்களும் நல்ல நிலையில் இருப்பதாகவும் எல்லாமே வேலை செய்வதாகவும் கூறிற்று. அந்த…