ஜாஹிட் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்

முன்னாள் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி நாளையும் நாளை மறுநாளும் நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டு அவர்மீது புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என எம்ஏஏசி கூறியது. அவர்மீது வழக்கு தொடுக்க ஏஜி அலுவலகத்திலிருந்து அனுமதி கிடைத்து விட்டதாக ஆணையம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது. “அம்னோ தலைவர் நாளை கோலாலும்பூர்…

எம்ஏஎஸ்-ஸை மீட்டெடுப்பதில் அரசாங்கம் கவனத்துடன் நடந்து கொள்ளும்

அரசாங்கம் மலேசிய விமான நிறுவனத்தை (எம்ஏஎஸ்) விற்பதற்குத் தயார், ஆனால் தேசிய விமான நிறுவனம் என்ற அதன் அடையாளர் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட வேண்டும் என்கிறார் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். அரசாங்கம் எம்ஏஎஸ்-ஸில் நிறைய மாற்றங்களை செய்து வந்துள்ளது. ஆனால், என்ன மாற்றம் செய்யப்பட்டாலும் அது தொடர்ந்து நட்டப்பட்டுக்…

மசீச: மெண்டரின்-எதிர்ப்பு பாஸ் தலைவர்மீது விசாரணை தேவை

தாய்மொழிப் பள்ளிகளை மூட வேண்டும் என்று முன்மொழிந்த ஒரு பாஸ் தலைவர்மீது தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மசீச விரும்புகிறது. அவரது பேச்சு இனச் சச்சரவுக்கு வழிகோலும் என மசீச மகளிர் தலைவர் ஹெங் சீய் கை கூறினார். “அவருடைய கருத்தில் தீவிரவாதம் தொனிக்கிறது,…

நச்சு வாயு கசிவு: ஒன்பது பாலர் பள்ளிகள் மூடப்பட்டன

ஜோகூர், பாசிர் கூடாங்கில் நச்சு வாயு கசிவினால் தேசிய ஒற்றுமைத் துறையின் ஒன்பது பாலர் பள்ளிகளை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பாலர் பள்ளி மாணவர்களின் நலன் கருதி அவை மூடப்பட்டன என்று பிரதமர்துறை துணை அமைச்சர் டாக்டர் முகம்மட் பாரிட் ரபிக் கூறினார். நேற்று தொடங்கி…

‘பொய்யான பாலியல்’ குற்றச்சாட்டுக்காக பதவி விலகுவது நமது வழக்கமல்ல -மகாதிர்

பாலியல் காணொளியுடன் இணைத்துப் பேசப்படும் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலிக்குத் தம் ஆதரவு என்றும் உண்டு என்பதைப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் மீண்டும் காட்டிக் கொண்டிருக்கிறார். அஸ்மின் பதவி விலக வேண்டிய அவசியமில்லை என்று கூறிய மகாதிர் பொய்யான அவதூறுக்காக பதவி விலகுவது மலேசியாவின் வழியல்ல…

மாட் சாபுவின் ஆங்கிலத்தைக் குறைகூறிய பாஸுக்கு செனட்டர் கண்டனம்

அமனா கட்சி செனட்டர் ராஜா கமருல் பாஹ்ரின் ஷா ராஜா அஹமட், அண்மையில் நடந்து முடிந்த பாஸ் மாநாட்டில் பேராளர் ஒருவர் அமனா தலைவர் மாட் சாபுவின் ஆங்கிலத்தைக் கிண்டல் செய்ததைக் கண்டித்தார். “அண்மையில் நடந்த பாஸ் முக்தாமார் மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களைச் சிறுமைப்படுத்தியுள்ளது. இதற்குமுன்பும் இப்படி நடந்தது…

ஜாஹிட்டிடம் எம்ஏசிசி விசாரணை

இன்று காலை முன்னாள் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி புத்ரா ஜெயாவில் உள்ள மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம் ஏசிசிசி) தலைமையகம் வந்தார். அம்னோ தலைவருமான அவரை வாக்குமூலம் பெறுவதற்காக அழைத்திருப்பதாக எம்ஏசிசி பேச்சாளர் ஒருவர் கூறினார். எந்த விவகாரம் தொடர்பில் அவர்மீது விசாரணை நடக்கிறது என்பது தெரியவில்லை.…

தடுத்து வைக்கப்பட்ட குடியேறிகளுக்கு உணவளிக்க மாதம் ரிம3.5 மில்லியன் செலவாகிறது

தடுப்பு முகாம்களில் உள்ள குடியேறிகளுக்கு உணவளிக்க ஒவ்வொரு மாதமும் ரிம3.5 மில்லியன் - அதாவது ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு ரிம12- செலவாகிறது எனக் குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர் கைருல் ட்ஸைமி டாவுட் கூறினார். நாடு முழுக்கக் குடிநுழைவுத் துறைக்குச் சொந்தமாக 14 முகாம்கள் உள்ளன. சட்டவிரோத குடியேறிகள்…

ஹாடி: அம்னோவைக் கிள்ளினால் பாஸுக்கு வலிக்கும் அம்னோவுக்கும் அப்படித்தான்

அம்னோ , பாஸின் வரலாறு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதாகக் குறிப்பிட்ட பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் ஒன்றைக் “கிள்ளினால்” மற்றொன்றுக்கு வலிக்கும் என்றார். “அம்னோ வலது தொடை என்றால் பாஸ் இடது தொடை. வலது தொடை கிள்ளப்பட்டால் இடது தொடைக்கு வலிக்கும் இடது தொடையைக் கிள்ளினால் வலது…

உச்ச மன்றம் கைது செய்வதில்லை என வாக்குறுதி அளித்தால் ஜாகிர்…

சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாகிர் நாய்க், தான் இந்தியா சென்று வழக்குகளை எதிர்நோக்க ஆயத்தமாக இருப்பதாகவும் அதற்கு இந்திய உச்ச நீதிமன்றத்திடமிருந்து கைது செய்வதில்லை, சிறையில் தள்ளுவதில்லை என்ற உத்தரவாதம் தேவை என்றும் கூறுகிறார். “குற்றவாளி என நிரூபிக்கப்படும்வரை நான் கைது செய்யப்பட மாட்டேன், சிறையில் அடைக்கப்பட மாட்டேன்…

நிலம் மாற்றிவிடப்பட்ட விவகாரம் தொடர்பில் ஹிஷாமுடின்மீது எம்ஏசிசி விசாரணை

தற்காப்பு அமைச்சுக்குச் சொந்தமான நிலங்கள் மாற்றிவிடப்பட்டது தொடர்பாக மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேனை விசாரிக்க விருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை ஹிஷாமுடின் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக எம்ஏசிசி துணைத் தலைமை ஆணையர் அஸாம் பாகி கூறினார்.. “நேற்று (முன்னாள் துணைப் பிரதமர்) அஹமட் ஜாஹிட் ஹமிடியிடம்…

அம்னோ அமைப்புவிதிகளில் திருத்தம் செய்ய நவம்பரில் அவசரக் கூட்டம்

அம்னோ உச்சமன்றம் நவம்பரில் அவசரக் கூட்டம் நடத்தி கட்சி அமைப்பு விதிகள் சிலவற்றுக்குத் திருத்தம் கொண்டுவர எண்ணுகிறது. “காலத்தின் தேவைக்கேற்ப கட்சியை ஒழுங்குபடுத்துவதே அதன் நோக்கம்”, எனத் தலைமைச் செயலாளர் அன்னுவார் மூசா கூறினார். திருத்தங்களைக் கொண்டுவருமுன்னர், உதவித் தலைவர் ஒருவரின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அது…

நூலாசிரியர்: அன்வாரிடம் நூலின் பதிப்புரிமையை விற்க முயன்றேன், மிரட்டிப் பணம்…

அன்வார் இப்ராகிம் ஏன் பிரதமராகும் தகுதியற்றவர் என்ற நூலை எழுதிய ஆசிரியர், அந்த நூலை வைத்து பிகேஆர் தலைவரை மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படுவதை மறுக்கிறார். அந்த நூலின் ஆசிரியரான யகாயா இஸ்மாயில். அந்நூலின் பதிப்புரையை வாங்குவதற்கு அன்வாருக்கும் சுங்கை பட்டானி எம்பி ஜொஹாரி அப்துலுக்கும் ஒரு…

மாநாட்டில் ஜம்ரி வினோத்தைப் பேச விட்டிருக்கக் கூடாது: பெர்லிஸ் பாஸ்…

நேற்று பாஸ் முக்தமார்(பேராளர் மாநாடு) தொடக்க விழாவில் சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாகிர் நாய்க்கின் மாணவர் முகம்மட் ஜம்ரி வினோத் காளிமுத்துவைச் சிறப்பு விருந்தினராக அழைத்துப் பேச வைத்ததைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பதை பெர்லிஸ் பாஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பெர்லிஸ் பாஸ் இளைஞர் பிரிவு பேராளர் முகம்மட்…

அல்டான்துயாபோல் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாராம் ஹசிக்

2006-இல் மங்கோலிய பெண்ணான அல்டான்துயா ஷரீபு ஷா ஆலம் காட்டுக்குள் வைத்து இரண்டு முறை சுடப்பட்டார். அத்துடன் நின்றுவிடவில்லை. அவரது உடலுக்கு வெடிவைத்து சுக்கு நூறாக தகர்க்கப்பட்டது. அக்கொலை தொடர்பில் போலீஸ் சிறப்பு நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த இருவர்மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால்,…

உணவு நச்சுத்தன்மையால் 110 மாணவர்கள் பாதிப்பு

சிலாங்கூர், காஜாங், பண்டார் ஸ்ரீ புத்ராவில் உள்ள ஒரு பல்கலைக்கழகக் கல்லூரியைச் சேர்ந்த 110 மாணவர்களுக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவற்றுக்காக செர்டாங் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஐயுறப்படுகிறது. 110 மாணவர்களில் 90 பேர் பெண்கள், 20 பேர்…

அன்வாரின் உதவியாளர் காணாமல் போகவில்லை, விடுப்பில் உள்ளார்- பேராக் பிகேஆர்…

பேராக் பிகேஆர் தலைவர் ஃபார்ஹாஷ் வாவா செல்வடோர் விடுப்பில் சென்றிருப்பதாகவும் அவர் எப்போதும் கட்சியுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் துணைத் தலைவர் எம் ஏ. தினகரன் கூறினார். பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் அரசியல் செயலாளருமான ஃபார்ஹாஷுடன் தான் எப்போதும் தொடர்பில் இருப்பதாகவும் தினகரன் கூறினார். “அவர் மாநில தலைமைத்துவத்தின்…

பாலியல் வீடியோ: கட்சியிலேயே நடக்கும் உள்குத்து வேலை – அஸ்மின்…

பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, அவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஆபாச காணொளிகள் கசியவிடப்பட்டது கட்சியில் உள்ள சிலரது கைங்கரியம் என்று உறுதியாக நம்புகிறார். ஆபாச காணொளி சமூக ஊடகங்களில் பரவலான பிறகு மாநில பிகேஆர் தலைவர் ஒருவரைக் காணவில்லை என்று செய்தி வெளிவந்திருப்பதை அடுத்து ஆபாச காணொளிகள்…

துணைப் பிரதமர், அன்வாருக்கு இடம்விட்டு பதவி துறக்க மாட்டார்

டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் துணைப் பிரதமர் பதவியை அவரின் கணவர் அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைத்துவிட்டு பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையைப் புறம் தள்ளினார். “அதற்கு அவசியமே இல்லை. டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமர். நான் துணைப் பிரதமர் என்பது நாங்கள் ஒப்புக்கொண்ட ஒன்று”, என…

இந்தக் காலத்தில் தட்டம்மையால் சாவு- நடக்கக்கூடாத ஒன்று: டாக்டர் சுப்ரா

கிளந்தானில் ஓராங் அஸ்லிகள் 15பேரின் திடீர் இறப்புக்கு வருத்தம் தெரிவித்த முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம், இப்படிப்பட்ட சாவு இக்காலத்தில் நடந்திருக்கக் கூடாது என்றார். குவா மூசாங், கம்போங் கோலா கோ-வில் பதேக் பூர்வ குடிமக்களைப் பாதித்த நோய் குறித்து முக நூலில் டாக்டர் சுப்ரமணியம் கருத்துத்…

யாருக்கு எரிபொருள் உதவித் தொகை? புரியாத நிலையில் பெட்ரோல் நிலையங்கள்

ஜூலையில் செயல்படுத்தப்படவுள்ள குறிப்பிட்ட தரப்பினருக்கானது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்ட எரிபொருள் உதவித் தொகைத் திட்டம் குறித்து தங்களுக்கு இன்னும் சரியான முறையில் விளக்கமளிக்கப்படவில்லை என்று பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் கூறுகின்றனர். அத்திட்டம் குறைந்த வருமானம் பெறுவோருக்கு எரிபொருள் உதவித் தொகை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால், அது எப்படிச்…

மூன்று வயது குழந்தை இறந்தது: ஓராங் அஸ்லி இறப்பு எண்ணிக்கை…

கோத்தா பாரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று வயது ஓராங் அஸ்லி குழந்தை நேற்று மாலை இறந்தது. “மருத்துவ மனை சவப் பரிசோதனை செய்து இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய முயலும்”, என பிரதமர்துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார். “இதனுடன் சேர்ந்து கோலா கோ-வில்…

ஆபாச காணொளி: பிகேஆர் ஒழுங்கு நடவடிக்கை வாரியம் விசாரணை நடத்த…

கட்சித் துணைத் தலைவர் அஸ்மின் அலி சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஆபாச காணொளிமீது பிகேஆர் ஒழுங்கு நடவடிக்கை வாரியம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஜோகூர் பிகேஆர் தலைவர் ஹசான் அப்துல் கரிம் வலியுறுத்தினார். குற்றம் சாட்டியவர், குற்றம் சாட்டப்பட்டவர் இருவருமே பிகேஆரைச் சேர்ந்தவர்கள் என்பதால் கட்சி விசாரணை செய்வதுதான்…