கேமரன் மலை இடைத்தேர்தல்: பிரச்சாரத்திற்கு அதிகமான கட்சித் தலைவர்கள் வருகிறார்கள்

  கேமரன் மலை இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிகமான கட்சி தலைவர்கள் இன்று தானா ராத்தாவுக்கு வருகிறார்கள். அவர்களில் அம்னோவின் கைரி ஜமாலுடின் மற்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஆகியோரும் அடங்குவர். இன்றிரவு சுங்கை கோயானில் நடைபெறும் பிஎன் செராமில் அவர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த செராமாவில் முகமட்…

குவான் எங்: யுஐஏஎம், யுஐஎம், இரண்டையும் போட்டுக் குழப்புகிறார் நஜிப்

நிதி அமைச்சர் லிம் குவான் எங், தம்மைக் குறைகூற வேண்டும் என்பதற்காகவே முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், யுனிவர்சிடி இஸ்லாம் மலேசியா(யுஐஎம்) வையும் யுனிவர்சிடி இஸ்லாம் அந்தாராபங்சா(யுஐஏம்)வையும் ஒன்றாக போட்டுக் குழப்புகிறார் என்றார். நஜிப், நியு இரா கல்லூரி, சதர்ன் யுனிவர்சிடி கல்லூரி, ஹான் சியாங் கல்லூரி…

முஸ்லிம்கள் மற்றும் மலேசியாவின் எதிர்காலம் அம்னோ-பாஸ் ஒத்துழைப்பை நம்பியுள்ளது :…

கேமரன் மலை இடைத் தேர்தல்:  இன்று காலை ஜெலாய், கம்போங் கெலடேக்கில் உரையாற்றிய முன்னாள் பிரதமரும் முன்னாள் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக், அம்னோவும் பாஸும் “அணுக்கமாகவும் நெருக்கமாகவும்” இருப்பதைப் பாராட்டினார். “முஸ்லிம்களின் எதிர்காலமும் நாட்டின் எதிர்காலமும் அம்னோ-பாஸ் ஒத்துழைப்பைத்தான் நம்பியுள்ளது”, என நஜிப் பாஸ் கட்சியின்…

பிரதமர்: தூதரக உறவு இல்லை எனவே இஸ்ரேலியர்கள் மலேசியாவுக்குள் வரக்…

இஸ்ரேலியர்கள் மலேசியாவுக்கு வரக் கூடாது என்பதைப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் வலியுறுத்தினார். ஏனென்றால் இரு நாடுகளுக்குமிடையில் தூதரக உறவுகள் இல்லை. சில நாட்டைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக, தீயச் செயல்களில் ஈடுபடுவோர் நாட்டுக்குள் வருவதைத் தடுக்கும் உரிமை மலேசியாவுக்கு உண்டு என்றாரவர். “இன்று பல நாடுகள் அயலார் வருவதை…

நஜிப் : பாரிசான் ஆட்சிகாலம், ஃபெல்டா-வின் பொற்காலம்

கேமரன் இடைத்தேர்தல் | முன்னாள் பிரதமர் நஜிப் ராசாக், தனது ஆட்சிகாலம் ஃபெல்டாவின் ‘பொற்காலம்’ என்று கூறினார். இன்று, கேமரன் மலை, ஃபெல்டா சுங்கை கோயானில், இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நஜிப், தான் பிரதமராக இருந்த மகத்தான நாட்களை நினைவுபடுத்தினார். “பிஎன் ஆட்சியில் இருந்தபோது உங்களுக்கெல்லாம் மாதந்தோறும் RM2000-RM3000…

நள்ளிரவிலிருந்து பெட்ரோல் விலை கூடுகிறது

  இன்று நள்ளிரவிலிருந்து எரிபொருள் விலை கூடுகிறது. ரோன்95 ஒரு லீட்டர் ரிம1.98-க்கும், ரோன்97 ஒரு லீட்டர் ரிம2.28-க்கும், டீசல் ஒரு லீட்டர் ரிம2.17-க்கும் விற்கப்படும் என்பதை நிதி அமைச்சு உறுதிப்படுத்தியது.

இந்திரா காந்தியின் முன்னாள் கணவரை போலீஸ் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறது, சிஐடி…

  கடந்த ஐந்து ஆண்டுகளில் பல தோல்விகளைக் கண்டிருந்த போதிலும் போலீஸ் இந்திரா காந்தியின் முன்னாள் கணவரை இன்னும் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறது. ஈப்போ உயர்நீதிமன்றம் விடுத்த உத்தரவின்படி கே. பத்மநாதன் என்ற முகமட் ரித்துவான் அப்துல்லாவை கைது செய்ய போலீஸ் கடந்த மே 30, 2014 -லிருந்து தேடிக்கொண்டிருக்கிறது…

கேமரன் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் டிவி-யில் விவாதம்

கேமரன் இடைத்தேர்தல் | எதிர்வரும் புதன்கிழமை இரவு, கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் விவாதம், தொலைக்காட்சியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளது. நம் நாட்டில் இதுபோன்று நடப்பது இதுவே முதல்முறையாகும். பெர்சே ஏற்பாட்டில், ‘கேமரன் மலைக்குத் தேவையான மாற்றம் என்ன?’ என்ற தலைப்பிலான இவ்விவாத மேடை, அஸ்ட்ரோ…

‘பிஎன்-ஆல் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற முடியும்’

கேமரன் இடைத்தேர்தல் | அம்னோ உச்சமன்ற உறுப்பினர், தாஜுட்டின் அப்துல் ரஹ்மான், கேமரன் மலை இடைத்தேர்தலில் பிஎன் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கடந்த பொதுத் தேர்தலைவிட, 3,000 வாக்குகள் பெரும்பான்மையில், பிஎன் வேட்பாளர் ரம்லி முகமட் நோர் வெற்றிபெறுவார் என்று நம்புவதாக அவர்…

பினாங்கு தைப்பூசம் : தேரை இழுக்க காளைகளைப் பயன்படுத்த தடை

எதிர்வரும் திங்கட்கிழமை கொண்டாடப்படவுள்ள தைப்பூசத் திருவிழாவில், தேர் இழுக்க காளைகளைப் பயன்படுத்த பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (பி.எச்.இ.பி) தடை விதித்துள்ளது. பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரும், பினாங்கு துணை முதல்வருமான பி இராமசாமி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னமே, பி.எச்.இ.பி.-யின் கீழ் உள்ள கோயில்களில், தேரை…

போலீசில் பதிவான வாக்குமூலங்களை வெளியிடுவீர்: அல்டான்துன்யா குடும்பத்தார் மனு தாக்கல்

கொலையுண்ட மங்கோலியப் பெண்ணான அல்டான்துன்யா ஷரீபுவின் குடும்பத்தார், அவரது கொலை தொடர்பில் போலீஸ் பதிவு செய்த வாக்குமூலங்கள் அனைத்தும் வெலியிடப்பட வேண்டும் எனச் சட்டத்துறைத் தலைவர் டாம்மி தாமசைக் கட்டாயப்படுத்தும் மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். போலீசார் பதிவு செய்த வாக்குமூலங்களில் அப்போது துணைப் பிரதமராக இருந்த…

செமினி-யில் பிஎன் போட்டியிடும், பாஸ் போட்டியிடாது

எதிர்வரும் செமினி இடைத் தேர்தலில் பிஎன்னுக்கு இடம்கொடுத்து ஒதுங்கிக்கொள்ள பாஸ் முடிவு செய்துள்ளது. “14வது பொதுத் தேர்தலில் பிஎன் பங்குக்குக் கிடைத்த வாக்குகள் அதிகம் என்பதால் பிஎன்னுக்கு வழிவிட்டு பாஸ் ஒதுங்கிக் கொள்ளும்”, என பாஸ் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார். பாஸ் எதிரணிப் பரப்புரைக்கு உதவும்…

‘ரம்லி வெற்றி பெற்று ஹரப்பானுக்குத் தாவக்கூடும்’

ஜனவரி 26 இடைத் தேர்தலில் பிஎன்னுக்கு வெற்றி கிடைத்தால்கூட கேமரன் மலை தொகுதி பக்கத்தான் ஹரப்பான் கைக்குச் செல்லும் வாய்ப்பு இருக்கிறது- பிஎன் வேட்பாளர் நம்லி முகம்மட் நோர் ஆளும் கட்சியில் சேரும் பட்சத்தில். ரம்லிக்காக பரப்புரைகளில் ஈடுபட்டு வரும் பிஎன் உறுப்புக் கட்சி ஒன்றில் உயர் இடத்தில்…

போலி தீயணைப்பு ஆடைகள் : யுகே தடயவியல் உதவியை எம்ஏசிசி…

2016-ஆம் ஆண்டு, தீயணைப்பு மற்றும் மீட்பு துறையால் வாங்கப்பட்ட RM13.5 மில்லியன் மதிப்புள்ள 6,000 தீ தடுப்பு ஆடைகளின் தரத்தை நிர்ணயிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரணை நடத்தி வருகிறது. அவ்வாடைகள், யுகே உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்பட்டது அல்ல என எம்ஏசிசி-க்குத் தகவல் கிடைத்துள்ளது. “அவை போலி…

விவசாயி, தி ஸ்டார், மசீச தேசியத் தலைவருக்கு எதிராக எ…

பேராக் சட்டமன்ற உறுப்பினர், எ சிவநேசன், விவசாயி ஒருவர், தி ஸ்டார் நாளிதழ், மசீச தேசியத் தலைவர், வீ கா சியோங் மீது அவதூறு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். கம்போங் கோலா பீகாமில், 76.9 ஏக்கர் நிலத்தில் இருந்த பழ மரங்களை, மணல் தோண்டும் நிறுவனம் ஒன்று…

‘பெட்ரோல் காசு’ கொடுத்த பெண்ணிடம் எம்ஏசிசி விசாரணை

கேமரன் மலை இடைத் தேர்தல்: ஒரு புகைப்படத்தில், பக்கத்தான் ஹரப்பான் டி-சட்டை அணிந்து கட்சித் தொண்டர்களுக்குப் பணம் கொடுப்பதாகக் காணப்படும் பெண்ணிடம் எம்ஏசிசி வாக்குமூலம் பதிவு செய்தது. அப்பெண் நேற்றிரவு ஏழு மணி தொடங்கி மூன்று மணி நேரம் தானா ராத்தா எம்ஏசிசி நடவடிக்கை மையத்தில் இருந்தார் என…

கடப்பிதழைத் திருப்பிக் கொடுப்பீர்: மூசாவுக்கு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் சாபா முதலமைச்சர் மூசா அமானின் கடப்பிதழ் அவரிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்ற செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவைக் கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் இரத்துச் செய்தது. கடந்த வாரம் செஷன்ஸ் நீதிமன்றம் வெளிநாடு சென்று சிகிச்சை பெறுவதற்காக மூசாவின் கடப்பிதழ் அவரிடம் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.…

‘உங்களுக்கு யார் உதவ முடியுமென்று நினைக்கிறீர்களோ அவருக்கே வாக்களியுங்கள்’- மனோகரன்

கேமரன் மலையில் இன்று ஐந்தாவது நாளாக இடைத் தேர்தலுக்கான பிரச்சார வேலைகள் மும்முரமாக நடக்கின்றன. பக்கத்தான் ஹரப்பானின் எம்.மனோகரன், பிஎன்னின் ரம்லி முகம்மட் நோர், சுயேச்சை வேட்பாளர்கள் வொங் செங் ஈ, சாலேஹுடின் அப் தாலிப் ஆகியோர் தொகுதியில் தீவிரமாக பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளனர் இன்று காலை மனோகரன் வாக்காளர்களைச்…

செமிஞ்சே சட்டமன்ற இடைத்தேர்தலில் பி.எஸ்.எம். போட்டியிடலாம்

மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.), செமிஞ்சே சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அக்கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர், எஸ் அருட்செல்வன், தான் அத்தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு உள்ளதாக இன்று தெரிவித்தார். “போட்டியிடும் வாய்ப்பு உள்ளது, செமிஞ்சே பி.எஸ்.எம். கிளையும் மத்தியமும் இதுபற்றி முடிவு செய்யும். அங்கு…

ஜனவரி 31-இல் பொது விடுமுறை இல்லை

ஜனவரி 31 பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுவதை அரசாங்கம் மறுக்கிறது. மாட்சிமை தங்கிய மாமன்னர் பதவியேற்பதை ஒட்டி பொது விடுமுறை அறிவிக்கப்படும் என்றொரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. ஜனவரி 31-இல் பேரரசர் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்வு மட்டும் நடைபெறும். அரியணை அமரும் சடங்கு…

பாகாங் எம்பி டிஓஎல் விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்-…

கேமரன் மலை இடைத் தேர்தலில் டிஏபி வேட்பாளராகக் களமிறங்கும் எம். மனோகரன் பகாங் மந்திரி புசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில், தற்காலிகக் குடியிறுப்பு உரிம(டிஓஎல்)த்துக்காக செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார். “நேற்று  மந்திரி புசார், மாநில விவகாரங்களில் பக்கத்தான் ஹரப்பான் தலையிடக்…

தெரு கூட்டுபவருக்கு நெகிரி மாநில விருது

தெரு கூட்டுபவரான சான் முன் தை தனக்கு மாநில விருது கொடுக்கப்படும் என்று கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால், திங்கள்கிழமை(ஜனவரி 14) நெகிரி செம்பிலான் யாங் டி பெர்துவான் புசார் துவாங்கு முக்ரிஸ் இப்னி அல்மர்கும் துவாங்கு முனாவிரின் 71வது பிறந்த நாள் விழாவை ஒட்டி கோலா பிலாவில்…

கேவியெஸ்: எவ்வளவோ விசுவாசமாக இருந்தும் பிஎன் மைபிபிக்குத் துரோகம் செய்துவிட்டது

பிஎன்னில்   இருந்த   அனுபவம்   வருத்தத்துக்குரியது  என  நேற்று பதிவு இரத்தான மைபிபிபி   கட்சித்  தலைவர் எம்.கேவியெஸ்   குறைப்பட்டுக் கொண்டார். 14வது பொதுத் தேர்தலில் செகாம்புட்டில் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதியைக் கொடுத்து பிஎன் மைபிபிபிக்குத் துரோகம் இழைத்தது என்று கேவியெஸ் கூறியதாக சினார் ஹரப்பான் செய்தி தெரிவித்தது. “எந்த…