‘நாங்கள் வேதாவை ஆதரிக்கிறோம்’ – சித்தி காசிம் பிரதமரிடம் மனு

இன்று காலை, சுமார் 50 பேர் கொண்ட குழு ஒன்று, வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் சித்தி காசிம் தலைமையில், புத்ரா ஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், ஒற்றுமை துறையமைச்சர் பொ வேதமூர்த்திக்கு ஆதரவு தெரிவித்து ஒரு குறிப்பாணையை ஒப்படைத்தது. பிரதமர் துறையமைச்சரான வேதாவுக்குத் தங்கள் ஆதரவைக் காட்ட,…

பத்து பிகேஆர் சர்ச்சையைத் தீர்த்து வைக்க முன்வந்தார் தியான் சுவா

பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, பத்து எம்பி பி.பிரபாகரனும் அத்தொகுதி பிகேஆர் உதவித் தலைவர் ரோசன் அஸனும் சர்ச்சையிடுவதை நிறுத்திக் கொண்டு ஒருவர் மற்றவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். பத்து பிகேஆர் தொகுதித் தலைவரான சுவா, அவ்விருவரும் பொதுவில் சர்ச்சையிட்டுக் கொள்வது தவறு என்றும்…

ரஃபிசி ஹராப்பானுக்கு உதவ வேண்டுமே ஒழிய, ஒதுக்கக்கூடாது

நாட்டை நிர்வகிப்பதில், ரஃபிசி ரம்லி பக்காத்தான் ஹராப்பானுக்கு உதவி செய்ய வேண்டுமே ஒழிய, அக்கூட்டணியை விமர்சிக்கக் கூடாது என தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் ரெட்ஷுவான் யூசோஃப் கூறியுள்ளார். "ரஃபிசி கெட்டிக்காரர், அவர் எங்களைத் தவறாக வழிநடத்தாது, ஒரு நல்ல திசையில் நாட்டை நிர்வகிக்க உதவ வேண்டும்," என…

பாஸ் சமயத் தலைவர்கள் இருவர், கிறிஸ்மஸ் தொடர்பாக இரு வேறு…

பாஸ் இளைஞர் தலைவர் முகம்மட் காலில் அப்துல் ஹாடி, முஸ்லிம்கள் நாளை கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று எச்சரித்துள்ளார். கிறிஸ்மஸ் இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரானது என்றாரவர். முஸ்லிம்கள் சமூக ஊடகங்களில் கிறிஸ்மஸ் வாழ்த்துகளைப் பதிவு செய்யவும் கூடாது. அது கிறிஸ்துவ சமயத்தை அங்கீகரிப்பதற்கு ஒப்பாகும் என்றும்…

‘பெர்சத்து, அம்னோ அகதிகளை எங்களின் உளமார்ந்த பரிசாக ஏற்றுக்கொள்ளுங்கள்’

அம்னோ துணைத் தலைவர் முகம்மட் கலீட் நோர்டின், முன்னாள் அம்னோ தலைவர்களை ஏற்றுக்கொண்ட பெரிபூமி பெர்சத்து மலேசியா கட்சிக்கு (பெர்சத்து) நன்றி தெரிவித்தார். இந்த ‘அம்னோ அகதிகள்’ வைரஸ் போன்றவர்கள், இதற்கு முன்னர் அம்னோவைச் சீரழித்தது போல, அவர்கள் பெர்சத்துவையும் அழிப்பார்கள் என்று அவர் கூறினார். "பெர்சத்து, நான்…

தேர்தல்வழி பிரதமரைக் கவிழ்க்கலாம்- மாட் சாபு

பிரதமராக இருப்பவரைக் கவிழ்க்க முயல்வது வழக்கான ஒன்றுதான் என்று கூறும் அமனா தலைவர் முகம்மட் சாபு, பக்கத்தான் ஹரப்பான் உறுப்பினர்கள் அப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபடுவது பற்றித் தமக்குத் தெரியாது என்கிறார். நேற்று ஜாசின் அமனா நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் கைருடின் அபு ஹசான், ஹரப்பானுக்குள்ளேயே டாக்டர் மகாதிர் முகம்மட்டைக் கவிழ்க்க…

சரவாக்கில் 5 வெட்டுமரக்காரர்கள், இந்தோனேசிய இராணுவத்தினரால் கடத்தப்பட்டனர்

கடந்த வாரம், சரவாக், செரியன்-கலிமந்தான் எல்லைக்கு அருகே, இந்தோனேசியத் துருப்புக்கள் என அடையாளம் கூறிக்கொண்டு, ஆயுதமேந்தியிருந்த ஒரு குழுவினரால், 5 மலேசிய வெட்டுமரக்காரர்கள் கடத்தப்பட்டனர். இச்சம்பவம், கடந்த டிசம்பர் 11-ம் தேதி, எல்லைக்குச் சுமார் 400 மீட்டரில், கம்போங் டானாவ் மெலிக்கின், வோங் ரங்காய் காட்டிற்கு அருகே நடந்துள்ளதாக…

இந்தோனேசிய சுனாமிக்குப் பலியானவர் எண்ணிக்கை 43ஆக உயர்ந்தது

இந்தோனேசிய பேரிடர் வாரியம், சனிக்கிழமை இரவு ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடைப்பட்ட பகுதியைத் தாக்கிய சுனாமியில் 43பேர் உயிரிழந்ததாகவும் 584பேர் காயமடைந்தனர் என்றும் கூறியது. “சுன்டா நீரிணையைக் குறிப்பாக செராங், பண்டெக்லாங், தெற்கு லம்போங் ஆகிய பகுதிகளைத் தாக்கிய ஆழிப் பேரலையின் பாதிப்புகளைக் கணக்கிட்டு வருகிறோம்”, என்று…

இன, மதத் தீயைப் பற்றவைப்பது சுலபம், அணைப்பது கடினம் –…

ஒருவருக்கொருவர் இடையே பகைமையை வளர்க்க வேண்டாம், குறிப்பாக மத, இனம் சம்பந்தப்பட்ட விஷயங்களில், அது இத்தனை ஆண்டுகள் கட்டிக்காக்கப்பட்ட சமாதானத்தைப் பாதிக்கும் என நாட்டு மக்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது. சண்டைக்கான தீயைப் பற்றவைப்பது எளிதானது, ஆனால் அதனை அணைக்க நீண்ட காலம் பிடிக்கும் எனத் தற்காப்பு அமைச்சர், முகமட் சாபு…

எண்ணெய் விலை யுஎஸ்$50-க்குக் கீழே குறைந்தால் பட்ஜெட் திருத்தப்படும்

கச்சா எண்ணெயின் சராசரி விலை பீப்பாய்க்கு யுஎஸ்50-க்குக் கீழே குறைந்தால் மட்டுமே அரசாங்கம் 2019 பட்ஜெட்டைத் திருத்தி வரையும் என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறினார். எண்ணெய் விலை யுஎஸ்70-ஆக இருக்கும் என்ற அடிப்படையில்தான் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சு தயாரித்தது. எண்ணெயின் சராசரி…

‘வேதாவைக் குற்றம் சொல்வது, சுசூகி கோப்பையை மலேசியா இழந்ததற்கு சைட்…

கடந்த மாதம், சுபாங் ஜெயாவில் உள்ள சீஃபீல்ட் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் கலவரம் தொடர்பில், ஒற்றுமை அமைச்சர் பி. வேதமூர்த்தி மீது முழு குற்றம் சாட்டுவது நியாயமல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் கூறியுள்ளார். அது, கடந்த வாரம் வியட்நாமில் நடைபெற்ற ஏ.ஃப்.ஃப். சுசூகி…

அன்வார்: குற்றம் சொல்வதை நிறுத்திவிட்டு, வாழ்க்கை செலவினங்கள் மீது கவனம்…

பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள், அறிக்கைகள் வழி ஒருவரையொருவர் பகிரங்கமாக விமர்சித்து வரும் வேளையில், அதன் தலைவர் அன்வார் இப்ராஹிம், சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு அழைப்பு விடுத்துள்ளார். "தலைவர்கள் சூழலை சரி செய்ய வேண்டும், எதிர்மறை அறிக்கைகள் விடுவதைத் தவிர்க்க வேண்டும். "கட்சிக்குள்ளோ அல்லது அவர்களுக்குள்ளாகவோ நடக்கும் பகிரங்க தகராறுகளை…

டாய்ம் : ஒவ்வொரு நாளும் ஹராப்பான் அமைச்சர்கள் கடனைப் பற்றியே…

நாட்டின் கடன்களைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறிதிகளை நிறைவேற்றுவதில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென டாய்ம் சைனுட்டின் கூறியுள்ளார். இன்று, பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அந்த முன்னாள் நிதியமைச்சர், அரசாங்கம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை மட்டும் எப்போதும் கேட்டுக்கொண்டிருந்தால், யாராக இருந்தாலும் சோர்வடைந்து போவார்கள்…

‘செடிக்’ ‘மித்ரா’வாக பெயர் மாறுகிறது

மலேசிய இந்திய சமுதாயத்திற்கு, குறிப்பாக அரசு சாரா இந்திய அமைப்புகளுக்கு அண்மைய ஆண்டுகளில் நன்கு அறிமுகமான ‘செடிக்’ அமைப்பு, ‘மித்ரா’ என்று பெயர் மாற்றம் காண்கிறது என்று அதன் தலைமை இயக்குநர் ச.லெட்சுமணன் அறிவித்துள்ளார். இந்திய சமுதாயத்தின் நலம் கருதி பிரதமர் துறையின்கீழ் உருவாக்கப்பட்ட ‘சமூக பொருளாதார மேம்பாட்டுப்…

நெகிரி ஆட்சியாளர் முஸ்லிம் சமூகப் பிரச்சனைகள், குற்றச்செயல்கள் குறித்து கவலை…

  நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் சமூகப் பிரச்சனைகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பது பற்றி நெகிரி செம்பிலான் யாங் டி-பெர்த்துவான் பெசார் துவாங்கு முகிரிஸ் துவாங்கு முனாவிர் இன்று ஆழ்ந்த கவலை தெரிவித்தார். புள்ளிவிபரங்கள் அடிப்படையில், போதைப் பொருள் விவகாரங்கள் சம்பந்தமாக கைது செய்யப்பட்டவர்களில் 90…

பிரதமருக்குச் சுமையாக இல்லாமல் பதவி விலகுவதே நல்லது: வேதாவுக்கு காடிர்…

மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின் பிரதமர்துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி பதவித் துறப்பதே நல்லது என்று வலியுறுத்தியுள்ளார் வேதமூர்த்தி தொடர்ந்து பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்குச் சுமையாக இருக்கக் கூடாது என்று பெர்சத்து உச்சமன்ற உறுப்பினருமான காடிர் இன்று ஒரு வலைப்பதிவில் வலியுறுத்தினார். “அவர் பிரிவினையை உண்டாக்கும் மனிதராகி விட்டார்.…

தீயணைப்பு வீரர் அடிப்பின் மரணம் தொடர்பில் நால்வரிடம் மீண்டும் விசாரணை

தீயணைப்பு வீரர் முகம்மட் அடிப் முகம்மட் காசிமின் இறப்பு கொலை என்று வகைப்படுத்தப்பட்டிருப்பதால் அவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட நால்வரிடம் மீண்டும் விசாரணை செய்யப்படும் என்று தெரிகிறது. அவ்வழக்கு தொடர்பில் மேலும் ஆதாரங்களைத் திரட்டும் பணியில் போலீஸ் இறங்கியிருப்பதாக துணை இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப்…

அம்னோவிருந்து வெளியேறியவர்களிடம் மனமாற்றம்- பங் மொக்தார்

சாபா அம்னோவிலிருந்து வெளியேறிய சட்டமன்ற உறுப்பினர்களிடம்   இப்போது மனம் மாற்றம்   ஏற்பட்டிருக்கிறதாம். சாபா அம்னோ தலைவர் பங் மொக்தார் ராடின் கூறுகிறார். அம்னோவிலிருந்து வெளியேறிய பலர், மீண்டும் அம்னோவுக்குத் திரும்பிவர விரும்புகிறார்கள் என கினாபாத்தாங்கான் எம்பி கூறினார். பெர்சத்து கட்சி சாபாவுக்கு விரிவுபடுத்தப்படுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்து…

லத்தீபா: அம்னோ-பாணி தந்திரங்கள் என்னிடம் பலிக்காது

பிகேஆர் உறுப்பினர் லத்தீபா கோயா, தனக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் புகாரைக் கண்டித்தார். “என் வாயைக் கட்டுவதற்குக் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோருவது ஒரு வெறுக்கத்தக்க அம்னோ தந்திரம்.அது வெற்றி பெறாது”, என்றவர் மலேசியாகினிக்கு அனுப்பிய அறிக்கை ஒன்றில் கூறினார். லத்தீபாமீது ஒழுங்கு…

லத்தீபா பகிரங்கமாக அன்வாரைக் குறைகூறியிருக்கக் கூடாது- பிகேஆர் அடிநிலை உறுப்பினர்கள்

வழக்குரைஞர் லத்தீபா கோயாவுக்கு எதிராக இன்று புகார் பதிவு செய்த பிகேஆர் அடிநிலை உறுப்பினர்கள், அவர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமைப் பகிரங்கமாகக் குறைகூறி இருக்கக் கூடாது என்றனர். “கருத்துகளைத் துணிச்சலாக சொல்லும் உரிமை அவருக்கு உண்டு. பிகேஆரில் யார் வேண்டுமானாலும் தலைமையைக் குறை சொல்லலாம். ஆனால் அதை…

மகாதிரின் முடிவை எதிர்ப்பதா? சைட் சாதிக்கைச் சாடினார் ராமசாமி

பி.வேதமூர்த்தியை அமைச்சர் பதவியிலிருந்து தூக்க வேண்டும் என்று பெர்சத்து இளைஞர் பிரிவு கோரிக்கை விடுத்திருப்பதன் தொடர்பில் அதன் தலைவர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மானைச் சாடினார் பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமி. அமைச்சர்களை நியமித்தவர் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். அவர் செய்த முடிவையே சைட் சாதிக்…

முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் உடனே சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள்- பெர்சத்து

பெர்சத்து தலைமைச் செயலாளர் மர்சுகி யாஹ்யா, அக்கட்சியில் சேர்வதற்கு மனுச் செய்யும் முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலைவர்களும் உடனே சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்றும் கூறினார். அவர்களைச் சேர்த்துக் கொள்வதா நிராகரிப்பதா என்பதை முடிவு செய்ய ஒரு…

பாஸ் எம்பி: குவான் எங்கைப் போல் குற்றங்களிலிருந்து விடுபட அம்னோ…

அம்னோ தலைவர்கள் பக்கத்தான் ஹரப்பானில் சேர்வதற்கு கூட்டம் கூட்டமாக ஓடுகிறார்கள். எதற்கு என்றால், தங்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதைத் தவிர்ப்பதற்குத்தான் என்கிறார் பாஸ் எம்பி சே அப்துல்லா மாட். அதே மூச்ச்சில் டிஏபி தலைவர் லிம் குவான் எங்கையும் ஜாடையாக சாடினார். “குற்றங்களிலிருந்து விடுபடவும் லிம் குவான் எங்கைப்…