வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை அரசாங்கம் அங்கீகரிக்கிறது, ஆனால் அதற்கான பதிலடித் திட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும் அளவிடப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். நாட்டின் நிதி நெருக்கடிகள், குறிப்பாக நிச்சயமற்ற உலகளாவிய சூழலுக்கு மத்தியில், அனைத்துப் பிரச்சினைகளையும் முழுமையாகத் தீர்க்க முடியாது என்பதால் இந்நிலை எடுக்கப்பட்டுள்ளதாக…
20,988 புதிய நேர்வுகள், 249 மரணங்கள்
கடந்த 24 மணி நேர நேரத்தில், 20,988 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கை விட அதிகமான நேர்வுகள், சரவாக்கிலும் சபாவிலும் பதிவாகியுள்ளன. சரவாக்கிலும் கிள்ளான் பள்ளத்தாக்கிலும் 60 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் முழு தடுப்பூசி பெற்ற நிலையில், சபாவில் 28.8 விழுக்காட்டினருக்கு…
‘திபிஎம் பதவி தேவையில்லை, பாதுகாப்பான பாதையைப் பிரதமர் விரும்புகிறார்’ –…
இஸ்மாயில் சப்ரி யாகோப், துணைப் பிரதமரை நியமிக்காத முஹைதீன் யாசினின் நடவடிக்கையைத் தொடர்வது, அரசாங்கத்திற்கு நீண்ட கால நல்ல நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இஸ்மாயில் சப்ரியின் நகர்வை விளக்கி, சில அரசியல் ஆய்வாளர்கள் இது சரியான நடவடிக்கை என்றும், தற்போதைய நிச்சயமற்ற அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றது என்றும் கருதுகின்றனர். மலேசியத்…
65.1 விழுக்காடு மக்கள் இரண்டு மருந்தளவு தடுப்பூசிகளை முடித்துள்ளனர் –…
மலேசியாவில், மொத்த மக்கள்தொகையில் 65.1 விழுக்காடு அல்லது 15,241,655 தனிநபர்கள், நேற்றைய நிலவரப்படி இரண்டு மருந்தளவு கோவிட்-19 தடுப்பூசி மருந்துகளை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் சிறப்பு குழு (ஜே.கே.ஜே.ஏ.வி.) தெரிவித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, மொத்தம் 19,932,137 பேர் அல்லது 85.1 விழுக்காட்டினர் முதல்…
கைரி : தடுப்பூசியால் இறப்புகள் இல்லை
அடுத்த வாரம் தொடங்கி, மலேசியாவில் கோவிட் -19 நிலைமை குறித்த விரிவான தரவுகளை அறிவிப்பதன் மூலம், வெளிப்படையான தகவல் பரிமாற்றத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் உறுதியளித்தார். கோவிட் -19 தடுப்பூசி பெற்றவர்கள் தெரிவிக்கும், "பாதகமான விளைவுகள்" பற்றிய அறிக்கைகளும் இதில் அடங்கும். அவர்களில் ஒரு…
கேஜே சரியான நடவடிக்கையுடன் தொடங்கியுள்ளார் – கிட் சியாங்
புதிய சுகாதார அமைச்சராக, கைரி ஜமாலுதீன், டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங்கின் பாராட்டைப் பெற்றார்; அந்த ரெம்பாவ் எம்.பி. "சரியான வழியில்" தனது நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார் என்று அவர் கூறியுள்ளார். இஸ்கண்டார் புத்ரி எம்.பி.யுமா லிம், கைரியின் வாக்குறுதி மிகவும் வெளிப்படையானது என்றும், கோவிட் -19…
12-வது மலேசியத் திட்டம் : செப்டம்பர் 27-ல் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்
செப்டம்பர் 27-ம் தேதி, மக்களவையில் 12-வது மலேசியத் திட்டத்தை (ஆர்.எம்.கே.-12) பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் விளக்குவார். பிரதமர் துறை (பொருளாதாரம்) அமைச்சர் முஸ்தபா முகமது, 12-வது மலேசியத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான முயற்சிகள் இப்போது கிட்டத்தட்ட 100 விழுக்காடு நிறைவடைந்துவிட்டதாகக் கூறினார். "பொருளாதாரத் திட்டப் பிரிவு (இபியு), ஆர்.எம்.கே.-12…
புதிய வாக்காளர் பதிவு விகிதம் – இந்த ஆண்டு கவலை…
இந்த ஆண்டின் முதல் காலாண்டு நிலவரப்படி, புதிய வாக்காளர் பதிவு செயல்முறை குறைந்த விகிதத்தைக் காட்டியுள்ளது, சில பகுதிகளில் சரிவைக் காட்டியுள்ளது என்று பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங் கூறினார். டிஏபி தேசிய அரசியல் கல்வி உதவி இயக்குநரான ஓங், தேர்தல் ஆணையத்தின் (எஸ்பிஆர்) பதிவின்…
ரோன்95, ரோன்97 மற்றும் டீசல் விலைகள் தக்க வைக்கப்படுகின்றன
நாளை தொடங்கி, செப்டம்பர் 8 வரை, ரோன்95, ரோன்97 பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகள் முறையே RM2.05, RM2.72 மற்றும் RM2.15 ஆக இருக்கும். தானியங்கி விலை பொறிமுறையைப் (ஏபிஎம்) பயன்படுத்தி, வாராந்திர அடிப்படையில் பெட்ரோலியப் பொருட்களின் சில்லறை விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று நிதி அமைச்சு இன்று…
சட்டமன்ற உறுப்பினருக்கான வேட்பாளர் வயது 18 – பினாங்கு மசோதாவை…
பினாங்கு மாநிலச் சட்டமன்றம், பினாங்கு மாநில அரசியலமைப்பு சட்டம் (திருத்தம்) மசோதா 2021, மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளர்களுக்கான வயது வரம்பை 21 -லிருந்து 18-ஆகக் குறைத்தது. மசோதாவைச் சமர்ப்பிக்கும் போது, மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு குழு தலைவர் சூன் லிப் சீ, உலகெங்கிலும் உள்ள சமூக…
கோவிட் -19 (செப்டம்பர் 1): 18,762 புதிய நேர்வுகள், கிளாந்தானில்…
மலேசிய சுகாதார அமைச்சகம் (MOH) இன்று 18,762 புதிய நேர்வுகளை பதிவு செய்துள்ளது. இது இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 1,765,016 ஆக உள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கில் தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் காட்டுகிறது. இருப்பினும், மற்ற மாநிலங்களின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது,…
சிலாங்கூர் எம்பி மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு – பிஎஸ்எம் பரிந்துரை
சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, கோல லங்காட் உத்தாரா வனக்காப்பு (எச்.எஸ்.கே.எல்.யூ.) விலக்குதலை இரத்து செய்ய தவறினால், சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரைப் பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டுமென மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) முன்மொழிந்துள்ளது. இன்று ஓர் அறிக்கையில், பிஎஸ்எம் சுற்றுச்சூழல் மற்றும்…
மருத்துவமனை தரையில் மரணம்: கோவிட் -19 நோயாளியின் குடும்பத்தினர் இந்த…
கெடாவின் சுங்கை பெட்டானியில் உள்ள சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையில் கோவிட் -19 வார்டில் நேற்று முன் தினம் இறந்த ஒரு முதியவரின் குடும்பம் - அவரது மரணத்திற்கான காரணத்தை போலீசார் விசாரிக்க வேண்டும் என்றனர். நேற்று காலை தாக்கல் செய்யப்பட்ட போலீஸ் அறிக்கையில், ஏகாம்பரம் வயது(74), அவருடைய…
திங்கள் முதல் பி.கே.சி. உதவிதொகை வழங்கப்படும் – பிரதமர்
கோவிட் -19 சிறப்பு உதவிதொகையின் (பி.கே.சி.) முதல் கட்ட தொகை, வரும் திங்கள்கிழமை முதல் செலுத்தப்படும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். செப்டம்பர் 6 -ம் தேதி தொடங்கி, கட்டங்கட்டமாகச் செலுத்தப்பட்டு, செப்டம்பர் 10 -ம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர். ஏழைகள்,…
20,897 புதிய நேர்வுகள், 282 மரணங்கள்
கடந்த 24 மணி நேர நேரத்தில், 20,897 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இன்று 282 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 16,664- ஆக உயர்த்தியுள்ளது. இதற்கிடையில் இன்று, 18,465 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.…
அன்வார் : மெர்டேக்கா காலனியர்களை மாற்றுவது மட்டுமல்ல, அதன் நடைமுறையும்…
மெர்டேக்காவின் பொருள் பிரிட்டிஷ் காலனித்துவ தலைமையை மாற்றுவது மட்டுமல்லாமல், அவர்களின் ஆட்சி முறையை இரத்து செய்வதும் ஆகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். அன்வார் தனது 64-வது மெர்டேக்கா தின உரையில், காலனித்துவவாதிகள் செய்தது போல், நாட்டைக் கொள்ளையடிக்கும் மற்றும் மக்களை ஒடுக்கும் பழக்கத்தைத் தொடராமல்…
Merdeka with a Hope! – K. Siladass
Today, 31st August 2021. It is Merdeka. We are threatened by Covid-19, therefore, there will be no public celebrations. But, we can, in the quietness of our homes, recall the past and think where were…
தாக்கப்பட்டு மரணமடைந்த பாதுகாவலர் வழக்கை, கொலை வழக்காக போலீசார் மறு…
கடந்தாண்டு டிசம்பர் மாதம், ஈப்போவில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் நீச்சல் குளத்தில், பணியில் இருந்தபோது தாக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமையன்று சுயநினைவு திரும்பாமலேயே இறந்துபோன பாதுகாவலர் வழக்கை, போலீசார் கொலை வழக்கு என்று மீண்டும் வகைப்படுத்தினர். பேராக் காவல்துறைத் தலைவர், மியோர் ஃபரிதலத்ராஷ் வாஹிட் கூறுகையில், சந்தேகநபர்…
‘பள்ளிகளைத் திறப்பதற்கு முன்னதாக பாதுகாப்பான சூழலை உருவாக்கவும்’ – பேஜ்
கல்விக்கான பெற்றோர் நடவடிக்கை குழுவின் (பேஜ்) தலைவர், நூர் அஸிமா அப்துல் ரஹீம், பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக பொருத்தமான செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்ஓபி) உருவாக்கி, பாதுகாப்பான சூழலை அமல்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். குழந்தைகள் பள்ளி படிப்பைக் கைவிடாமல் இருக்க, பள்ளிகளைத் திறப்பது மிகவும் முக்கியம்…
#லாவான் போராட்டத்தின் பின்னால் உள்ள முகங்கள்
வாக்களிக்கும் வயது வரம்பைக் குறைப்பதற்கான கோரிக்கையை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப் போவதாக, தேர்தல் ஆணையம் அறிவித்த இரண்டு நாள்களில், இளம் ஆர்வலர்கள் குழு ஒன்று நாடாளுமன்றத்தில் கூடியது. முஹைதீன் யாசின் இராஜினாமா செய்வதற்கான அழைப்புகள் உட்பட, இக்குழுவின் பல தொடர் நடவடிக்கைகளின் தொடக்கத்தை இது குறித்தது. [caption id="attachment_193897"…
19,268 புதிய நோய்த்தொற்றுகள், ஐந்து மாநிலங்களில் 2,000-க்கும் மேற்பட்ட புதிய…
இன்று நண்பகல் வரையிம், 19,268 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது மொத்த நேர்வுகளை 1,725,357-ஆகக் கொண்டு வந்தது. கிள்ளான் பள்ளத்தாக்கில் தினசரி நேர்வுகள், சிலாங்கூர் 3,567, கோலாலம்பூர் 672 எனக் குறைந்து வந்துள்ளன. இருப்பினும், மற்ற நான்கு மாநிலங்கள் - சபா, ஜொகூர், சரவாக்…
உயர்க்கல்வி அமைச்சராக மீண்டும் நொரைய்னி நியமனம் – யுஎம் மாணவர்…
பொதுப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் இயக்கம் ஒன்று, தேசியக் கூட்டணி (தே.கூ.) நிர்வாகத்தில், பதவியில் இருந்தபோது தோல்வியைக் கோடிட்டுக் காட்டிய உயர்க்கல்வி அமைச்சர் நொரைய்னி அகமது மீண்டும் நியமிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். மலாயா பல்கலைக்கழக மாணவர் சங்கம் (கே.எம்.யு.எம்.) 2021, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் நோரைய்னியை…
‘சுகாதார அமைச்சராக பதவியேற்றவுடன், கேஜே நிதியை அங்கீகரிக்க வேண்டும்’
கிள்ளான் பள்ளத்தாக்குக்கு வெளியே, கோவிட் -19 நேர்வுகள் அதிகரித்திருப்பதால், பல்வேறு மாநிலச் சுகாதாரத் துறைகள் தங்கள் திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது, ஆனால் அதற்கான நிதி போதியதாக இல்லை என்று பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங் கூறினார். எனவே, கைரி ஜமாலுடின் சுகாதார அமைச்சரானவுடன் செய்ய…
புதிய அமைச்சர்கள் இஸ்தானா நெகாராவில் பதவியேற்றனர், தனிமைபடுத்தல் காரணமாக இஸ்மாயில்…
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று தனது அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை. கோவிட் -19 நேர்மறை நேர்வுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இஸ்மாயில் இன்று முதல் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. பதவியேற்பு…
























